Archive for the ‘கபட நாடகம்’ Category

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

நவம்பர் 1, 2022

கன்னூர் சுவாமி திட்டம், நீலாம்பிகாவின் ஹனி டிராப், வீடியோ, மிரட்டல் முதலியவை  பசவலிங்க சுவாமி தற்கொலையில் முடிந்துள்ளது! (3)

காஞ்சுக்கல் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலையில் மூவர் கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.

இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.

கன்னூர் மடாதிபதி வீடியோவை வைத்து காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –

  1. பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி  நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
  2. கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
  3. மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்

ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].

போன்களை கைப்பற்றி உரையாடல்களையும் கேட்டு வபுலன் விசாரணை நடத்தப் பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம்  மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வேதபிரகாஷ்

01-11-2022


[1] தினமலர், கர்நாடகா மடாதிபதி தற்கொலை விவகாரம்: கைதான கல்லூரி மாணவி குறித்துதிடுக், Updated : நவ 01, 2022  09:24 |  Added : நவ 01, 2022  09:21.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3159346

[3] தினத்தந்தி, மடாதிபதி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது, தினத்தந்தி அக்டோபர் 31, 2:59 am.

[4] https://www.dailythanthi.com/News/India/abbot-suicide-case3-people-including-a-college-student-were-arrested-826146

[5] தினத்தந்தி, ஆடையின்றி வீடியோ காலில் பேசிய சாமியார் உயிரை காவு வாங்கிய சபலம்இளம்பெண் பகீர் வாக்குமூலம், By தந்தி டிவி 31 அக்டோபர் 2022 2:16 PM

[6] https://www.thanthitv.com/latest-news/karnataka-bandemutt-swamiji-sucide-145746

[7] தினத்தந்தி கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல், நவம்பர் 2, 1:23 am (Updated: நவம்பர் 1, 10:18 am)

[8] https://www.dailythanthi.com/News/India/including-the-arrested-college-student3-people-in-police-custody-for-6-days-826808

[9] தமிழ்.ஒன்.இந்தியா, ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல், By Nantha Kumar R, Published: Sunday, October 30, 2022, 0:21 [IST].

[10] https://tamil.oneindia.com/news/bangalore/honeytrap-karnataka-lingayat-seer-suicide-case-bangalore-woman-and-2-others-arrested-by-police-482828.html

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

நவம்பர் 30, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)

இதன் முதல் பகுதி இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[1], இரண்டாவது பதிவை இங்கே காணலாம்[2].

Electioneering speech seriousness and humourகபில்சிபல்,   சிதம்பரம்  முதலியோர்  இவ்விசயத்தில்  கமென்ட்  அடித்தது: காங்கிரஸின் தலைவர்கள் பலர், இவ்விசயத்தில் தீவிரமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. வழக்கம் போல கபில்சிபல், தமக்கேயுரிய பாணியில் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், சிதம்பரம் இதில் கிண்டலடித்திருப்பது ஆச்சரியம் தான்[3]. இவரும் உள்துறை அமைச்சராக இருந்ததினால், உள்விசயங்கள் தெரிந்திருக்கும். அப்படியிருக்கும் போது, இவ்வாசாறு சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசியிருப்பது, காங்கிரஸ் தலைமை எப்படி இவர்களை ஆட்டி வைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரகாஷ் ஜவதேகர் என்ற பாஜக தலைவர், “தேவையில்லாமல், காங்கிரஸ் இவ்விசயத்தைப் பெரிதாக்கப் பார்க்கிறது. ஆனால், காங்கிரஸின் அலமாரிகளில் பல எலும்புக்கூடுகள் இருப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்”, என்று சொல்லியிருக்கிறார்[4]. ஊடகங்கள் “மோடி இதற்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்”, என்று எச்சரித்தார். ஆனால், ஊடகங்கள் பிடிவாதமாக செய்திகளைக் கொட்டுகின்றன[5].

In defense of Teesta Setalvadமம்தாசர்மா, சுசில்குமார்  ஷின்டே  முதலியோரது  சுருசுருப்பான  வேலைகள்: தேசிய மகளிர் கமிஷனின் தலைவி மம்தா சர்மா, 24 மணி நேரத்திலேயே, நோட்டீஸ் அனுப்பிவிட்டார். இவருக்கு ராஜஸ்தானில் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. மற்ற விசயங்களில் சுஷில் குமார் ஷின்டே போலத் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த பெண்மணி இப்பொழுது இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பட்டியலில் அவரது பெயர் இருப்பதனால், விசுவாசமாக வேலை செய்கிறார் போலும்[6]. ஷின்டேவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்[7]. சிபிஐயின் குற்றத்தை மறைக்க டெலிகாம் துறையை விசாரிக்கக் கூறியுள்ளது, காங்கிரஸின் விசமனத்தனத்தைத்தான் காட்டுகிறது[8]. முதலில் டேப்புகள் எப்படி தனிமனிதர்களின் கைவசம் சென்றது என்று அவர் விளக்கவில்லை.

Anti-modi campaign - nakkeeran-2013நம்பிராஜனை  அடுத்து  இந்த  ஸ்னூப்பிங்”,   “ஸ்டாகிங்”   விவகாரங்கள்: நம்பிராஜனின் குற்றச்சாட்டுகள் மற்றும் புத்தகம், எவ்வாறு கேரள போலீஸ், சிபிஐ, ஆட்சியாளர்கள், மத்திய அரசு, மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள் முதலியவை எவ்வாறு முரண்பட்டு, செயல்பட்டு, ஏதோ ஒரு காரணத்திற்காக நம்பிராஜன் பலிகடாவாக்கப்பட்டார், ஆனால், மற்றவர்கள் தப்பித்துக் கொண்டனர். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -awarded 2008குறிப்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி டி.ஜி.பி. ஆர்.பி.குமார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 19-11-2013 அன்று செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார். ISRO spying case - Teesta Setalvad -Srikumar -seminar  2010இவர் குஜராத்திற்கு வேண்டுமென்றே நியமனம் செய்யப்பட்டு, மோடிக்கு எதிராக செயல்பட வைத்தனர் என்றும் தெரிகிறது. மத்திய அரசு யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டு வருவதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வாறு அரசியல் ரீதியில் பயன்படுத்துவது ஒரு மிகத்தவறான முன்னோடியாக, உதாரணமாக இருக்கும். இப்படி எல்லாவிதங்களிலும் தாக்குதல்களில் குறியாக இருக்கப்படுபவர் நரேந்திர மோடிதான்!

© வேதபிரகாஷ்

21-11-2013


[8] The NCW chairperson’s comments coincided with home minister Sushil Kumar Shinde’s statement that the Centre could consider ordering a probe into violation of the woman’s privacy by Gujarat Police allegedly at Shah’s instance. According to sources, the Centre has already asked security agencies to look for evidence of the alleged “snooping” in the “interception records” that telecom service providers maintain.

http://timesofindia.indiatimes.com/india/Shinde-NCW-step-up-snoop-heat-on-Modi/articleshow/26116752.cms

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஏப்ரல் 20, 2013

பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.

ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!

பகுத்தறிவு தீவிரவாதம்

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

View original post 778 more words

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

ஏப்ரல் 20, 2013

இப்பொழுது, இவ்வழக்கு ஒன்றிற்கு உயிர் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அது எவ்விதம் நடத்தப் படும் என்ற சந்தேகம் உள்ளது.

சட்டத்தை மீறும் நீதிகள்

கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!

சங்க இலக்கியத்தில் எப்படி மனுநீதி சோழன் நீதி வழங்கினான் என்ற உண்மை விளக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் உருவகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

அதாவது அக்காலத்தில் நீதி, நேர்மை, நியாயம் அந்த அளவில் கடைபிடிக்கப்பட்டது.

குற்றஞ்செய்தது தன்மகனே என்றாலும், அதே மாதிரியான தண்டனைத் தானே அரசன் என்ற முறையில் நிறைவேற்றுகிறான்.

அங்கு அரசன், தந்தை என்ற நிலை தனித்தனியாகத்தான் மனுநீதிசோழன் பார்த்தான்.

மகனுக்காக சட்டத்தை வளைக்கவில்லை, நீதியை குழித்தோண்டி புதைக்கவில்லை. நேர்மையை மறுக்கவில்லை, நியாயத்தை மறக்கவில்லை.

அதனால்தான் அவனுடைய சிலை நீதிமன்றங்களில் இன்றும் வைக்கப்படுகின்றன.

ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்.

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது /…

View original post 285 more words

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

மார்ச் 28, 2013

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

 

சி.பி..  சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.

 

  1. தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
  2. சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
  3. அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].

 

சி.பி.அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

 

  1. லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
  2. மாயாவதி மீதான வழக்குகள்.
  3. முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
  4. ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்

 

ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].

 

முடிவை இரவே  எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்

 

அர்த்த ராத்திரியில் ரெய்ட்  ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?

 

டி.ஆர்.அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].

 

கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.

 

இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].

 

சி.பி.ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?

 

சி.பி.. என்னவிதமாக சுதந்திரமாக,  தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.

 

© வேதபிரகாஷ்

28-03-2013


[1]CBI’s clean chit to the Italian middleman Ottavio Quattrocchi in the Bofors case.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[2]  Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[5] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

 

[9] . Immigration officials had arrested Joseph when he arrived at Hyderabad airport from Dubai on November 6, 2011 with a fake passport.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[10] Among the vehicles under the CBI scanner are 11 allegedly being used by the India Cements group, belonging to BCCI president N. Srinivasan.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

மார்ச் 22, 2013

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு..வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.

விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் .அன்பழகன், பொருளாளர் மு..ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் .மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.

திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணுசொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.

“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.

Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.

“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin.

உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.

Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.

He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.

கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[11] Mr Radhakrishnan, Spokesperson of the DMK, told NDTV, “Mr Stalin has always played an important role. He even went to the Unite Nations with our MP Mr. TR Baalu and met Mr Naveneethan Pillai to present resolutions passed by the Tamil Eelam Supporters Organisation. He represented our Thalaivar’s memorandum there”.

http://www.ndtv.com/article/south/how-stalin-shaped-the-dmk-s-exit-from-government-345010

[13] Karunanidhi, sarcastically has said he believes a central minister (Chidambaram) when the central minister says the government didn’t know what was going on. Yes ! so do we !

http://www.business-standard.com/article/current-affairs/cbi-raid-at-stalin-s-house-who-s-calling-the-shots-113032100292_1.html

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

ஓகஸ்ட் 20, 2012

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].

The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]
The country belonged to all and people are free to live in any part of the country[3]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]

அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?

அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?

ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?

சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?


சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு!

ஓகஸ்ட் 9, 2012

சோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோனியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].

Initiating the discussion, Mr. Advani said UPA-II is illegitimate. “It has never happened in the history of India. Crores of rupees were never spent to get votes,” he said[2]. This evoked a sharp reaction from the Treasury Benches. UPA members were on their feet and demanded an apology from him.Intervening, Ms. Kumar said the word used by Mr. Advani had hurt the sentiments of everyone. “If you want, you can withdraw it,” she said. Or, she would go through the records and expunge any objectionable or unparliamentary word.

With the Congress MPs continuing their protest, the Speaker adjourned the House for lunch.

However, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government.

இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.

ஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.

அசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.


ஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:

  • அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.
  • ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.
  • அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].
  • சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
  • கலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.
  • சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].
  • அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.
  • இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
  • பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.
  • ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.
  • இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.

இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும்? அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.


சோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.

3 Congress ministers have orgainsed a relief camp for Assam victims. On the banner it is mentioned “ONLY FOR MUSLIMS”… Is this True “SECULARISM”. Y is it that congress calls BJP as “COMMUNAL”??? when Photographers clicked pics of banner, their cameras were broken into pieces..

http://www.facebook.com/photo.php?fbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்?
அத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.

அசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை?: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா? அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா?. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.

The 1985 accord signed between Rajiv Gandhi, the then prime minister, and Prafulla Mahanta, then chief minister of Assam, said that those immigrants who came to the state from Bangladesh till 1966 would be given citizenship, those who came between 1967 and 1971 would be allowed to settle down but not given voting rights and those who entered after 1971 would be deported.

 

1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி,  1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்!


 


[6] angrily turned around and signaled her party members to protest at the comments, made in connection with the cash-for-votes scam of 2008

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Angry-Sonia-makes-Advani-retract-words/Article1-910143.aspx