Archive for the ‘என் ராம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

Mathoru bagan compromise -Novel controversy

Mathoru bagan compromise -Novel controversy

பொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தை விற்க யுக்தியா

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா?

பெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

கொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம்   தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ளஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

ரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமலர், திசைமாறும்மாதொரு பாகன்நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.

[2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html

[3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece

[4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/opinion/interview/people-are-looking-to-settle-scores-with-me-perumal-murugan/article6778030.ece?ref=relatedNews

[8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in

[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”

தமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.

[10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article6772652.ece

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு – தொடர்ச்சி!

ஜூன் 21, 2013

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு  – தொடர்ச்சி!

Two anti-Hindus together Karu-Ramமவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கிண்டலடித்த ஆளிடமே காட்டிப் பெருமைக் கொள்ளும் ராம்!

இந்துவிரோத திராவிட சித்தாந்தம்: “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது, என்று முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது[1]. ஜூலை 2010ல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது சட்டமுன்மாதிரியான நிலை ஏற்படுத்தப்பட்டது. அதற்கான நிலையை கருணாநிதியே உருவாக்கிக் கொண்டாரா என்பது வாதத்திற்குரியது, ஆனால், சாத்தியமானதுதான். திராவிட பரம்பரையில் சட்டத்தை வளைப்பது என்பதெல்லாம் வாடிக்கையான கலைதான். ஈ. வே. ராமசாமி நாயக்கர் – பெரியார் எப்படி வழக்குகளை சந்தித்தார், அதாவது டபாய்த்தார் / ஏமாற்றினார் என்று முன்னம் ஒரு பதிவில் எடுத்துக் காட்டியுள்ளேன்[2].

Periyar statue in front of Sri Rangam Gopuramகோவிலுக்கு முன்னால் சிலைவைத்தால், சாதிப்பதாக ஆகிவிடுமா? திகவினரின் சிறுமைத்தனம் – ஏனெனில் அவர்களுக்கு ஒரு மசூதி அல்லது சர்ச் முன்பு அவாறூ வைக்க வக்கில்லை, துப்பில்லை!

அதேமாதிரி முறையை கருணாநிதியும் பின்பற்றி வருகிறார்:

  1. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவது.
  2. தன் மீதுள்ள வழக்குகளை, தானே அரசாணைப் பிறப்பித்து திரும்பப்பெறுவது.
  3. அதற்கேற்றபடி, நீதிமன்றங்கள், நீதிபதிகள் ஒத்துழைப்பது.
  4. அதற்கான ஏற்பாடுகளை அரசியல் செல்வாக்கு முதலியவற்றை உபயோகித்து செயல்படுத்துவது………
  5. மனுதாரர்களுக்கு, மாற்றங்களை அறிவிக்கப்படாமல் செய்வது, நோட்டீஸுகள் காலதாமதமாக சென்றடையுமாறு செய்வது,
  6. நண்பர்கள் / வக்கீல்கள் மூலம் மிரட்டி, பயமுறுத்தி கோர்ட்டுக்கு வராமல் தடுப்பது,
  7. அரசுதரப்பில் தாமதம் செய்வது,
  8. சாட்சிகள் வராமல்-வரவிடாமல் செய்வது…………….
  9. ஊடகங்கள் மற்ற வழக்குகளைப் பற்றியெல்லாம் பிரமாதமாக செய்திகள் வெளியிட்டு, அலசி விவாதிக்கும் போது, இதைப் பற்று மூச்சுக்கூட விடாமல் இருக்கச்செய்வது / இருப்பது.
  10. ஃபைல்கட்டுகள் கொடுக்காமல் இருப்பது, தாமதிப்பது, காணாமல் போவது………………
  11. சில அவணங்கள் தாக்குதல் செய்யப்படாமல் இருப்பது…………………………..
  12. கருணாநிதியே, தமது அந்தஸ்த்தை உபயோகித்து கோர்ட்டில் ஆஜராகமல் தவிர்ப்பது…………….

இப்படி, எத்தனையோ விஷயங்களைப் பட்டியிலிட்டுக் காட்டலாம். ஆனால், இவர்கள்தாம் நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா, நீதிபதிகளா, சட்டங்களா………………………..என்றெல்லாம் பேசுவார்கள்[3]. ஆனால், வழக்கு என்றதும் ஓடிமறைவார்கள்[4].

Two anti-Hindus together Karu-Ram- Raja also“மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” ஆசிவேண்டி நிற்கிறது போலும்! அருகில் விஷ்ணு ஸ்டாலின் நிற்பதும், ஊழல் ராஜா நிற்பதும் காலத்தின் கோலமே!

தேர்தலின் மீது கருணாநிதியின் தன் மீது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று அவரே தனது தன்னிலை விளக்க சமர்ப்பண மனுவில், கீழ்கண்டவாறு பட்டியல் போட்டு காண்பிரித்திருந்தார்[5]:

No. Of Cases pending

Case No

Name of the Court

Date of the court for ordering enquiry

The details of offence, Sections violated

Details of the volations, for which the cases filed

1 CC.No. 29/2003 Additional magistrate III 16-06-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
2 CC.No. 91/2003 Additional magistrate III 01-12-2003 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
3 CC.No. 5/2004 Additional magistrate VII 27-01-2004 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
4 CC.No.12/2005 Additional magistrate V 10-06-2005 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
5 CC.No. 1/2006 Additional magistrate VII 06-01-2006 S.500 and 501 of Indian Penal Act To defame, intention to defame etc
6 CC.No. 3156/2006 Additional magistrate XIV 03-03-2006 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings
7 CC.No. 15522/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
8 CC.No. 15523/2005 Additional magistrate, Egmore 16-11-2005 S.5 of TESMA Speaking supporting strike
9 CC.No. 4495/2005 XVII Criminl Court, Saidapet 16-06-2005 S.295A and 298 of Indian Penal Act To hurt the religious feelings

அரசியல் ரீதியில், அரசியல் கட்சிவாரியாக, நீதித்துறையில் நியமனங்கள் பங்கிடப் படுகின்றன. சட்டம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட துறைகளில் கட்சிகளிலன் சார்பாகத்தான் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று நியமிக்கப்படுகிறார்கள்[6]. அவ்வாறிருக்கும் போது, தமது எஜமானன், நண்பர், வேண்டியவர் …………………..என்று வரும் போது அவர்கள் எப்படி நடுநிலையோடு, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்கள். போலீஸ் துறையும் அவ்வாறே உள்ளது[7] அதாவது அங்கும் நியமனங்கள் கட்சிவாரியாகத்தான் உள்ளது.

Hindu thief - dinamani23-04-2013 அன்று என்ன நடக்கும்?: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி தமிழகத்தில் ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

  • திராவிட சித்தாந்தத்தில் கட்டுண்டு,
  • திராவிட மாய வலையில் சிக்குண்டு,
  • பகுத்தறிவில் உழன்று,
  • சாதியில் மூழ்கி,

ஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,

  • தொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,
  • மனசாட்சியை நிர்வாணமாக்கி,
  • மரத்துப் போக செய்ததில்

இத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே,  23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –

  • கருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்காது.
  • சென்றாலும் கண்டு கொள்ளமாட்டார்.
  • கண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.
  • அதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.
  • இல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.

இந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன என்று இருந்து விடுவார்களா என்று பார்ப்போம், என்று 20-04-2013 அன்று பதிவு செய்திருந்தேன்[8].

Hindu thief - dinamani- Headingகௌதமனின் புகாரும், கருணாநிதி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரமும்: தமிழக அரசு கடந்த 2002-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை தொடர்ந்து எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் சிறுபான்மை அமைப்பு கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.  இதில், கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று அர்த்தம் என பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி மீது சென்னை மாம்பலம் போலீசில் கவுதமன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2002ம் ஆண்டு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதமன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மாம்பலம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

Hindu thief - Indian expressஇரண்டு மாதங்கள் கழித்து கொடுக்கப்பட்டுள்ள பதில்: இதையடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது[9]: “நான் 5 முறை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறேன். வி.பி.சிங், தேவேகவுடா, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளேன்[10]. பத்திரிக்கையில் வந்த செய்தி அடிப்படையில் கவுதமன் என் மீது கிரிமினல் புகார் கொடுத்துள்ளார்[11]. நான் பேசியதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்[12] சுயவிளம்பரத்துக்காகவும், உள்நோக்கத்தோடும் என் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்”, இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

Karunanidhi with Christiansபாவம் இந்துக்கள் – நிலைமையை அறியாமல் வெற்றிவிழா கொண்டாடினார்கள்: நிலைமை அறியாமல், கௌதம் ஒரு கூட்டம் போட்டு, விளக்கினாரம். அவரது நண்பர்களும், “வெற்றி” என்று இணைதளத்தில் மகிழ்சியை பரிமாறிக்கொண்டனர். ஆனால், சட்டத்தின் நிலையை அவர்கள் அறியவில்லை. இந்துக்கள் இதனால்தான், நல்ல வழக்குகளை இழக்கின்றனர். சட்டப்பிரிவில் சொல்லியிருக்கின்றபடி, சட்டமீறல்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து, அவற்றை விளக்க வேண்டும். அதை விடுத்து, நாளிதழ்கள் இப்படி அறிவித்தன என்று அவற்றின்மீது ஆதாரமாக வழக்குத் தொடர்ந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் என்று காட்டி வாதிக்க வேண்டும்.

Karunanidhi with Muslims

வேதபிரகாஷ்

© 21-06-2-13


[1] வேதபிரகாஷ், “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறுபேசியவழக்கு தள்ளுபடியானது,

http://lawisanass.wordpress.com/2010/07/14/case-hindu-thief-karunanidhi-dismissed/

[6] மாஜிஸ்ட்ரேட் கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் முதலியவை; சாலிசிடர் ஜேன்ரல், ஸ்டேன்டிங் கவுன்சில், செயலாளர் என்ற அனைத்து பதவிகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பி.எல் என்ற பட்டம் வைத்துக் கொண்டிருந்தால் போதும், சட்டத்தைப் பற்றிய அறிவுகூட வேண்டாம். பதவிகள் வந்து கொண்டிருக்கும், குறிப்பிட்ட காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி, வாழ்வு எல்லாம் பெருகிக்கொண்டே போகும். நிலைமையே மாறிவிடும்.

[7] வேதபிரகாஷ், கருணாநிதியின்மீதுநிலுவையில்உள்ளவழக்குகளும், அவைநடத்தப்படும் விதமும்!,

http://lawisanass.wordpress.com/2010/07/14/the-cases-pending-against-karunanidhi-and-the-courts-judges/

[10] அதாவது எனக்குத் தெரியாத சட்டத்தையா, நீ எனக்கு சொல்லிக் கொடுக்கிறாய் என்பது போல சொல்லொயிருக்கிறார்.

[11] அதாவது அதைத்தவிர வேறு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

[12] “உள்ளங்கவரும் கள்வன்” என்று வேறு விளக்கம் கொடுத்துள்ளேன் என்று சுட்டிக் காட்டுகிறார்.