Archive for the ‘சி.வேலாயுதம்’ Category

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றி-தோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

மே 29, 2016

1996 முதல் 2016 வரை தமிழக பிஜேபியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் வெற்றிதோல்விகள் – பிஜேபி தோல்வி ஏன் (3)!

BJP prospects in Tamilnadu 2016

1996 முதல் 2016 வரை பிஜேபியின் வெற்றிதோல்விகள்: 1996-2016, இருபது ஆண்டு காலத்தில், தமிழக பிஜேபி கோஷ்டி-அரசியலில் ஈடுபட்டது. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டப் பேரவையில் இடம் பெற இயலவில்லை. கடைசியாக நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் அக்கட்சிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாததால் 13 நாள்களில் பதவியை ராஜிமாநா செய்தார் அக்கட்சியின் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். அதற்கு காரணம் ஜெயலலிதா என்று தெரிந்த விசயமே.

  1. அதே ஆண்டில்-1996ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று தமிழக சட்டப் பேரவைக்குள் முதல் முதலாக நுழைந்தது. அந்தகட்சியின் சார்பில் பத்மனாபபுரத்தில் போட்டியிட்ட வேலாயுதம், பாஜகவின் உறுப்பினராக தமிழக பேரவைக்குள் அடி எடுத்து வைத்தார். இவர்தான் பிஜேபியின் முதல் எம்.எல்,ஏ என்ற சிறப்பைப் பெற்றார். இந்த தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக02 சதவீதம் வாக்குகள் பெற்றது.
  1. 1998-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பா.ஜ.க. 3 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதியிலுமே வெற்றி பெற்றது. நீலகிரியில் மாஸ்டர் மதனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலமும் வெற்றி பெற்றார்கள்.
  1. இதையடுத்து 2001 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 21 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில்
  2. கே.என்.லட்சுமணன் (மயிலாப்பூர்),
  3. கே.வி.முரளிதரன் (தளி),
  4. ஜெக. வீரபாண்டியன் (மயிலாடுதுறை),
  5. எச்.ராஜா (காரைக்குடி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்[1].

இத்தேர்தலில் பாஜக 3.19 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

2006 Tamilnadu assembly result

  1. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க., மொத்தமாக 1,455,899 வாக்குகளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியவில்லை. இத்தேர்தலில் இதன் வாக்கு சதவிகிதம்1.
  1. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே பா.ஜ.க.வை புறக்கணித்ததால் 225 தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.
  1. 2009 நாடாளுமன்றத் தேர்தலில்3 சதவிகித வாக்குகளையே (711,790) பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. 2004 பொதுத் தேர்தலில் 5.1 சதவிகித வாக்குகளை வைத்திருந்து தற்போது 2.8 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது பா.ஜ.க.

அண்மையில் முடிவடைந்த தேர்தலில் பாஜக கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் கட்டாயம் வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. எனினும், அக்கட்சியால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் பாஜகவின் கனவு கானல் நீராகவே தொடர்கிறது[2].

தினமலர் - பிஜேபி கோஷ்டி பூசல் - படம்

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[3]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[4], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[5].

எஸ்.வி.சேகர் Vs கே.டி. ராகவன்.. தமிழக பாஜக அடிதடி2016லும் தொடர்ந்த கோஷ்டி பூசல் சமூகவலைதளங்களிலும் பரவியது: தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்கள் உச்சத்தை அடைந்தன. இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம், ஆர்.கே.ராகவன் என கோஷ்டிகளின் எண்ணிக்கை நீண்டதுடன் வேட்பாளர்களுடன் ஐக்கியமானது. ஆனால், இவர்கள் தான் கட்சிக்கே பிரச்னை என்று எடுத்துக் காட்டப்பட்டது. எல்லாருமே மோடியை விட, கூடுதலாக, தாங்கள் தகுதி படைத்துக் கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றும் இல்லாவிட்டாலும், மத்தியில் இருக்கும் ஆட்சியை வைத்து, நாலு காசாவது சம்பாதிக்கலாம் என, கட்சி பக்கம் ஆர்வமாக ஓடோடி வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட, ‘ஐயையோ… தெரியாத்தனமா முடிவெடுத்துட்டோமோ’ என, அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவரை பார்க்க வேண்டும் என்றால், இன்னொரு தலைவர் கோபித்துக் கொள்வார் என, பயந்து, போகக் கூடாத இடத்துக்கு சென்று, பார்க்க கூடாதவரை பார்த்ததைப் போல, பதுங்கி பம்மும் நிலை, ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டுள்ளது, என்றெல்லாம் ஊடகங்கள் விவரித்தன.

thamilisai-விமர்சித்து-முகிலன் - cartoon-விமர்சங்களை தவிர்க்காத பிஜேபி: திராவிட கட்சிகள் பிஜேபியை மதவாதி கட்சி என்ற முத்திரையக் குத்தியே பிரச்சாரம் செய்து வருகின்றன. திமுக கூட்டு வைத்துக் கொண்டாலும், தமிழகத்தைப் பொறுத்த வரையில், கருணாநிதி தனது விமர்சனத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 2016ல் நாஞ்சில் சம்பத். ‘தமிழகத்தில் கால் ஊன்ற போகின்றனராம்; கால் இருந்தால் தானே ஊன்ற முடியும்; கால் இல்லாத சப்பாணி அமைச்சர்களால் என்ன செய்ய முடியும்’ என்ற அவரின் நக்கலான பேச்சு, அ.தி.மு.க., நாளிதழில் பிரதான இடத்தை பிடித்தது[6]. அவர் சப்பாணி அமைச்சர்கள் என விளித்திருப்பது, நம்ம ஊரு பொன்னாரை மட்டுமல்ல; தமிழக பா.ஜ.,வை கரையேற்ற, மேலிடம் அனுப்பிய பியுஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன் போன்றோரையும் தான், என்று தினமலர் விளக்கமும் கொடுத்தது[7].

© வேதபிரகாஷ்

 28-05-2016

<aref=”#_ftnref1″ name=”_ftn1″>[1] தினமணி, கானல் நீராகும் பாஜகவின் எம்.எல்.. கனவு: தொடர்ந்து 3 பேரவைகளில் இடமில்லை, By சா.பெர்லின் மோசஸ் First Published : 21 May 2016 05:21 PM IST

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/05/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D./article3444609.ece

[3] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்: அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[5] http://sathiyamweekly.com/?p=5416

[6] தினமலர், சப்பாணி கட்சியா தமிழக பா..? , பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2016,21:16 IST.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1506593