Archive for the ‘காஜி’ Category

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்?

செப்ரெம்பர் 16, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (9) – மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவதேன்?

தேசிய  பாதுகாப்புச்  சட்டத்தின்  கீழ்  வழக்குப்  பதிவு  செய்யப் பட்டு   நடவடிக்கை எடுக்கப் படும்: நேற்றுவரை, ஊடல் கொண்ட ஆசம் கானுடன் குல்லா போட்டுக் கொண்டு சுற்றி வந்த மௌலானா அகிலேஷ் குல்லா இல்லாமல் இப்பொழுது சுற்றுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. முல்லாயமின் மகன் மௌலானா என்று ஊடகங்களே விமர்சிக்கும் வகையில் வேடமிட்டு அலையும் இந்த செக்யூலரிஸ பழங்களைக் கண்டு, மெய் சிலிர்க்கிறது எனலாம். இப்பொழுது 17 நாட்களுக்குப் பிறகு கலவரம் நடந்த பகுதிகளுக்கு விஜயம் செய்து[1], குற்றம் புரிந்தவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நடவடிக்கை எடுப்பேன் என்று சூளுரைத்துள்ளாராம்[2]. ஏன் அந்த வீரம் ஆகஸ்ட் 27ம் தேதியே வந்திருக்கலாமே?

முதலில்  முஸ்லிம்களை  சந்தித்து,   பிறகு   “ஜட்”களை  சந்தித்து  ஆறுதல்   கூறினாராம்: முதலில் கவால் என்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். அப்பொழுது கோபமடைந்த மக்கள் கருப்புக் கொடி காட்டி, கோஷங்கள் போட்டனர்[3]. முன்பு வராமல், இப்பொழுது ஏன் வருகிறீர்கள் என்று கத்தினர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. இதிலும் வேடிக்கை என்னவென்றால், மானபங்கம் செய்யப் பட்ட பெண் மற்றும் அவளது கொல்லப்பட்ட சகோதரர் முதலிய இழப்புகளுக்காக அவளையோ அல்லது அவளது பெற்றோர்களையோ சென்று பார்க்கவில்லை. மாறாக, “முதலில் ஜட் மக்களால் கொல்லப்பட்ட பையனின் தந்தையைச் சென்று பார்த்துள்ளாராம்[4].  பிறகு சச்சின் மற்றும் கௌரவ் பெற்றோர்களைச் சென்று பார்த்துள்ளாராம்[5]. இப்படியே ஷாபூர், மலக்பூர், மீர்பூர், கண்லா ஈத்கா மற்றும் கொத்வாலி போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளுக்கும் செறு பார்த்துள்ளார். பிரத்யேகமாக கொல்லப்பட்ட ராஜேஷ் வர்மாவின் இல்லத்திற்குச் சென்று விசாரித்துள்ளார். ரூ. 15 லட்சம் நிதி அளித்துள்ளார். மற்ர கொல்லப்பட்டவர்களு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குகூட “ஜட் / ஜட் பாய்ஸ் / ஜட் மக்கள்” என்றும் “முஸ்லிம்கள்” என்றுதான் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, முஸ்லிம்கள் முதல், பிறகு தான் இந்துக்கள். இங்கும் அப்பெண்ணின் நிலை பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஊடகக்காரர்களின் புகைப்படங்கள் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் போன்று காண்பிக்கப் படுகிறார்கள், இந்துக்களின் பாதிப்புகளைக் காட்டவில்லை. இதுவும் செக்யூலரிஸத்தின் கொள்கை போலும்!

முசபர்பூரின்  உயர்  போலீஸ்  அதிகாரி  சஸ்பென்ட்: சுபாஷ் சந்திர தூபே என்ற சீனியர் சூப்ப்ரென்டென்ட் ஆப் போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் செய்துள்ளாராம்[6]. முன்னர் இவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீதுள்ள குற்றத்தை விசாரணை கமிஷன் நியமிக்கப் பட்டு அறியப்படும் என்று கூறியுள்ளாராம்[7]. என்.டி.டிவியும் இத்தனை நாட்களுக்குப் பிறகு, கலவரம் எப்படி ஆரம்பித்தது என்று ஆராய்ச்சி செய்துள்ளது[8]. எப்.ஐ.ஆர். போட்டதில் கூட குழப்பம் இருக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறது, அதாவது இரண்டு[9] போடப்பட்டிருக்கிறதாம்! அப்படியென்றால், அவ்வாறு செய்த போலீசாரை சஸ்பென்ட் செய்வது தானே? செய்யவில்லையே? சுபாஷ் சந்திர தூபேவைத் தானே இடம் மாற்றம் செய்யப்பட்டு, பிறகு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

குல்லா  மாட்டி – கழட்டி  அரசியல்  செய்யும்  “இளைஞரான  முதலமைச்சர்”: சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக இருந்திருந்தால், ஆரம்பத்திலேயே, அப்பெண் போலீசாரிடம் புகார் கொடுத்தபோதே, எடுத்திருந்தால், எல்லாமே நடந்திருக்காது. ஆனால், கொன்றது முஸ்லீம்கள் என்று பார்த்து, போக்கிலேயே விட்டு குளிர் காய்ந்ததால், கலவரத்தில் முடிந்திட்டு விட்டது. இனி அரசியல் செய்வது என்று தீர்மானமாக உள்ள நில்லையில் தான் “இளைஞரான முதலமைச்சர்” என்று வர்ணிக்கப்படும் இந்த மௌலானா இப்படி பேசுகிறார். ஆசம் கானுடன் வரவில்லை என்பதும் நோக்கத்தக்கது. அதாவது இந்துக்களை தாஜா செய்யலாம் என்ற எண்ணத்தில் குல்லாவைக் கழட்டி வைத்து விட்டு முல்லாயமின் மகன் மௌலானா வரமுடியும். ஆனால், ஆசம் கான் வரமாட்டார். இதுதான் உண்மை.

சமாஜ்வாடிகாங்கிரஸ்  கலவரத்தால்  ஆதாயம்  தேடு ம்  போக்கு: கலவரம் ஏற்படுத்தி, உயிர்ச்சேதம், பொருட்சேததம் உண்டாக்கி, பிறகு பாதுகாப்புக் கொடுக்கிறோம், சலுகைகள் கொடுக்கிறோம் என்று வழக்கமான சடங்கை செய்து வந்தால், மக்கள் எவ்வளவு நாள் பொருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும்.  ஏற்கெனவே, மன்மோஹன் சிங் பிரதம மந்திரி நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க அறிவித்து விட்டார். இனி பணத்தைக் கொடுக்கும் சாக்கில் நாளைக்கே கூட்டம் போடுவார்கள், கூட்டணியோடு வருவார்கள், விழாவும் நடத்துவார்கள்.

சமாஜ்வாடி கட்சி  வெளிப்படையாக  ஜாதிமதவேற்று  பாராட்டும்  அரசியல்,  ஓட்டுவங்கி  வியாபாரம்: மேலும் சமாஜ்வாடி கட்சி வெளிப்படையாக இத்தகைய இந்து-முஸ்லிம் பிரிவுகள், வேறுபாடுகள், குழப்பங்கள், கலவரங்களை வைத்துக் கொண்டே அரசியல் வியாபாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களை குல்லாப் போடு, சங்கப்பரிவார் ஆட்களை அடக்கி, கைது செய்து, பிரச்சினை வளர்த்து, மறுபக்கம் ஜாதிய ரீதியில் ஓட்டுகளைப் பெற்று வருகிறது. வேண்டும் போது, பிராமணர்களையும் தாஜா செய்வதில் இக்கட்சிகள் தயங்குவதில்லை. இதனால், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டுகள் சிதறி வருகின்றன. அதனால் தான், பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு முறை கூட்டு வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்தும் மாயாவதி ஏமாற்றியதால் ஆட்சி கவிழ்ந்து, முல்லாயம் திரும்ப ஆட்சிக்கு வந்தார்.

முல்லாயம் சிங் யாதவின் பிரதமர் ஆகும் கனவு: இப்பொழுது, காங்கிரஸ்-பிஜேபி ஓட்டுகளை உடைத்து, உபியில் கணிசமான எம்பிக்களைப் பெற்றுவிட்டால், மூன்றாவது கூட்டணி உருவாக சாத்தியமாகும், அப்பொழுது தான் பிரதம மந்திரி ஆகிவிடலாம் என்ற கனவு முல்லாயம் சிங் யாதவுக்கு இருக்கிறது. 2012லிருந்தே அவர் அதனை வெளிப்படையாகவும் சொல்லி வருகிறார். நான் ஒன்றும் முற்ரும் துறந்த முனிவன் அல்ல என்று சென்ற வருடம் செப்டம்பர் 2012ல் கூறியுள்ளார்[10]. உபி தவிர, மத்தியபிரதேசம், ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் போட்டியிடுவோம். எண்ணிக்கையை வைத்துக் கொண்ட்டு திட்டமிடுவோம், என்றார். இந்த ஆகஸ்டில் (2013) மாயாவதி கட்சிக்காரர் ஒருவர், இவர் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய திட்டமிடுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்[11]. காங்கிரஸும் இதனைத் தெரிந்து வைத்துக் கொண்டே இவருடன் ஜாக்கிரதையாக அணுகி வருகிறது. ஒரு வருடகாலத்தில் பதவியில் நீடித்தால் தான், அரசு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி விளம்பரம் சம்பஆதித்துக் கொள்ளலாம், தங்களது செலவும் மிச்சமாகும் என்ற எண்ணத்துடன் தான், காங்கிரஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை குறைந்த இடங்கள் கிடைத்தாலும், பிஜேபியைப் பதவிக்கு வரவிடாமல், முல்லாயத்தை வைத்து, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து ஒரு-இடண்டு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மாற்று எண்ணமும் காங்கிரஸின் திட்டத்தில் உள்ளது.

வேதபிரகாஷ்

© 14-09-2013


[4] Yadav first visited Kawal village, where three persons were killed on August 27 over an eveteasing incident after which tension has been running high in the district.  The CM met the father of the boy who was killed by Jat men from the neighbouring Malikpura village.

http://zeenews.india.com/news/uttar-pradesh/akhilesh-yadav-to-visit-violence-hit-muzaffarnagar-amid-tight-security_876585.html

[5] Later, the Chief Minister left for Malikpura and Kandhla to meet family members of victims.  “I went to both the villages and met the families of Shahnawaz as well as Sachin and Gaurav. There is grief and we understand that… I appeal for calm,” the 40-year-old CM said.

http://zeenews.india.com/news/uttar-pradesh/akhilesh-yadav-to-visit-violence-hit-muzaffarnagar-amid-tight-security_876585.html

[9] Two separate FIRs were registered. According to the FIR for Sachin and Gaurav’s death, registered by Gaurav’s father, Ravinder Kumar, he says his son had a bike accident with someone called Mujassim, which led to the altercation. The other accused, apart from Mujassim, are Mujibulla, Furqan, Jehangir, Afzal, Nadeem and Kalua. The FIR for Shahnawaz’s death names Gaurav, Sachin, Prahlad, Vishan, Tendu, Devendra, Yogender and Jitendra. It says all the accused came to Kawwal, forcibly entered Shahnawaz’s house and took him out. They were armed with knives and swords. They injured him and left him half-dead. He died later on the way to the hospital.

[11] BSP today charged Mulayam Singh Yadav with playing “cheap politics” over the VHP’s yatra, and alleged that the SP chief was not averse to vitiate atmosphere of UP to fulfil his ambition of becoming prime minister.

http://articles.economictimes.indiatimes.com/2013-08-26/news/41455444_1_bsp-leader-sp-chief-swami-prasad-maurya