Archive for the ‘தேவர்’ Category

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

மே 28, 2016

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

தமிழக பிஜேபி தலைவர்கள்

பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாதுபோன்ற கோஷங்கள்: தமிழக பிஜேபியினர் ஒரு மாயையான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தனர் என்பது அவர்களது பிரச்சாரம், பேச்சு, அறிக்கைகள் முதலியன இருந்தன. “பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது”, என்ற அளவுக்கு அறிக்கைக்கைகள் விடப்பட்டன[1]. திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், அதில், பிஜேபி தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து, முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை இல்லை. இல. கணேசன் மற்றும் தமிழிசை பேச்சுகளில் இது வெளிப்பட்டது[2]. பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள் வேறு உசுப்பிவிடும் நிலையில் பொய்களை சொல்லி, சதோஷப்படுத்தி வந்தனர். 100 இடங்களைப் பிடித்து விடலாம் என்றெல்லாம் கணக்குக் காட்டினர். வதந்திகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கினர். ஜெயாவைப் பொறுத்த வரையில், மோடி-ரேஞ்சில் உள்ளவர்களுடன் தான் பேசுவார், மற்ற மத்திய அமைச்சர்களுடன் பேசமாட்டர். ஆனால், தேவையில்லாமல் மற்ற பிஜெபிக்காரர்கள் கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர். ஜி.எஸ்.டி விவகாரத்தில் மோடி, அருண் ஜெயிட்லி ஜெயாவுடன் பேசிப்பார்த்தாலும் உடன்படவில்லை. இதனால், மேலிடம் ஜெயாவுடன் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை[3]. ஆனால், தமிழகத்தலைவர்கள் மாறி-மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெங்கைய்ய நாயுடு, ராஜா, மோடி, தமிழிசை சென்னை. வொய்.எம்.சி.மைதானம்

காங்கிரஸ்திமுக கூட்டணி பிஜேபியை தனியாக ஒதுக்கியது – 2016 தேர்தலில் தனித்து விடப்பட்ட பிஜேபி:: காங்கிரஸ் திமுகவோடு சேர்ந்தவுடன், நிலைமை மாறிவிட்டது. “ஊழல் ஊழலோடு சேர்ந்து விட்டது” என்பதை விட மற்ற பேரங்கள் பின்னணியில் இருந்தன. விஜய்காந்தின் பேரம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் வெற்றிப் பெறாதலால்[4], வேறு கூட்டணி உருவாக்க திட்டமிட்டார். அந்நிலையில் தான் அந்த மக்கள் கூட்டணி உருவானது. பாமக தனியாக நிற்க திட்டமிட்டதாலும், ஜெயலலிதா தனியாக நிற்பது என்று உறுதியாக இருந்ததாலும், பிஜேபி தனியாகத் தள்ளப்பட்டது. அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுடன் மோதி வெல்வது என்பது நடக்காத காரியம் என்றுணர்ந்த போதிலும், தேர்தலில் குதித்தது. முகநூலிலும் நேரிடையாக, வேட்பாளர்கள் மற்றும் மறைமுகமாக அவர்களது நண்பர்கள் முதலியோரின் பிரச்சாரம் அதிரடியாக இருந்தாலும், நிதர்சனமாக இல்லை[5]. ஆகாசத்தில் கோட்டையைக் கட்டும் ரீதியில் தான் இருந்தது. விசுவாசமான தொண்டர்கள் (உண்மையானவர், பிரிவினைக் கூட்டத்தவர், நொந்து போனவர்கள் உட்பட), புதியதாக சேர்ந்துள்ள இளைஞர்கள் (விசுவாசம் மிக்கவர், ஆர்வத்துடன் இருப்பவர் மற்ற வகையறாக்கள்) முதலியோர் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று அவர்களுக்கேத் தெரிந்தது. இங்கு தினமலரின் அலசல் ஓரளவுக்கு சரியாக இருப்பதால், அது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அருண் ஜெயிட்லி, ஜயலலிதா

பிஜேபி-அதிமுக பாராளுமன்ற லடாய்கள்[6]: தினமலர் சொல்வது, “நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா..,வுடன் நல் முகம் காட்டிய, .தி.மு.., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, .தி.மு.., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார். ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், .தி.மு.., – பா..,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்களும் தமிழகம் வந்து சென்றனர். இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், .தி.மு.., தலைமை, ‘ரியாக்ட்செய்யவில்லை[7].

பிஜேபி- அதிமுக லடாய் 2016 தேர்தல்

வெள்ளம் புரட்டிப் போட்ட கூட்டணி[8]: தினமலர் தொடர்கிறது, “கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார். பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், .தி.மு..,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. .தி.மு..,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.., முக்கிய தலைவர் பேசினார்மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, .தி.மு.., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா..,வால் எந்த நன்மையும் இல்லைகடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டிஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா[9].

modi-jayalalitha

பனிப்போரை சமாளித்த ஜெயா: தினமலர் தொடர்கிறது, “இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு, ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம்.  ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல், ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது,  தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு, கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல். இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] http://www.bjptn.org/event.php?id=32

[2] தினமலர், தேர்தல் களம், தமிழிசையின் பேட்டி, ஏப்ரல்.4, 2016.

[3]  மோடி ராஜினாமா, ஜெயா கவிழ்ப்பு, ஒரு ஓட்டு வித்தியாசம் முதலியவற்றை விசுவசமான பிஜேபிக்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

[4] பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள், இதிலும் விளையாடியுள்ளனர்.  வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தேமுதிக நிர்வாகிகள், தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்தன. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக – பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி என தெரிவித்தார்.

http://www.dinamani.com/tn-election-2016/2016/03/08/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article3316506.ece

[5] https://www.facebook.com/TamilnaduBJP/?fref=nf

[6] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489

[8] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489