கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

Karu-sonia-affair-over

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

Sonia Karu alliance broken

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்புசெய்யும்சோனியாபாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்?

Karu-sonia-affair-over2

அர்த்தராத்திரியில்ரெய்ட்ஆரம்பித்ததுஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].

Karu-sonia-alliance-broken

விவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

dmk-full-page-banners-ads-posters-sonia-dmk

© வேதபிரகாஷ்

21-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!”

 1. vedaprakash Says:

  ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை: பிரதமர்-சோனியா அதிருப்தி
  பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 21, 5:29 PM IST
  http://www.maalaimalar.com/2013/03/21172934/cbi-raid-mkstalin-house-manm.html

  புதுடெல்லி, மார்ச் 21, 2013-

  சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதையடுத்து இந்த சோதனை நடந்ததால், மத்திய அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

  இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் கூறியதாவது:-

  மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது அதிருப்தி அளிக்கிறது. இந்த சோதனையில் அரசு எதுவும் செய்யவில்லை என்று உறுதியாக கூறுகிறேன். இதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்போம். இந்த சோதனையை நடத்தியிருக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில் சோதனை நடத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதேபோல் ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், மத்திய இணை மந்திரி நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 2. vedaprakash Says:

  யாரையும் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை : சிபிஐ விளக்கம்
  By dn, புது தில்லி
  First Published : 21 March 2013 02:47 PM IST
  http://dinamani.com/latest_news/article1511085.ece

  ஸ்டாலின் வீட்டில் இன்று சோதனை செய்தது, வழக்கு விசாரணையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமே, இதில் தனிப்பட்ட யாரையும் குறிவைத்து செய்யவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

  சென்னையில், திமுக பொருளாளர் ஸ்டாலினின் வீடு உள்ளிட்ட 19 இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

  இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில், சோதனையை பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து விளக்கம் அளித்த சிபிஐ, சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றவியல், மோசடி, ஏமாற்றுதல், சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த 17 பேரின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.இதில் 17 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது வழக்கின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை தானேத் தவிர, எந்த ஒரு தனி நபரையும் குறி வைத்து நடத்தப்பட்ட சோதனை அல்ல. இதில் யாரது தலையீடும் இருக்கவில்லை என்று கூறியுள்ளது.

  • M. K. Mahalakshmi Says:

   ரெய்டு வருபவர்கள் எப்படி பாதியிலேயே திரும்புவார்கள்?

   தொட்டிலையும் கிள்ளி விட்டு ஆட்டுகிறார்களா?

   தாலாட்டுப் பாடுகிறார்களா?

 3. vedaprakash Says:

  உதயநிதியின் வெளிநாட்டு காரால் ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்திய சிபிஐ!
  Posted by: Mathi Updated: Thursday, March 21, 2013, 15:28 [IST]
  http://tamil.oneindia.in/news/2013/03/21/tamilnadu-cbi-raids-mk-stalin-residence-171906.html

  சென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு, அவரது நண்பர் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

  வெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.

  இப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  இதில் முறைகேடு நடந்ததாக 3 ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறையி்ன் புலனாய்விப் பிரிவான, Department of revenue intelligence, விவகாரத்தைக் கிளப்பியது. அப்போதே அதற்கான விளக்கத்தை ஸ்டாலின் தரப்பு தந்துவிட்டது.

  இந் நிலையில் கார் இறக்குமதி நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மு.க. ஸ்டாலின் வீட்டிலும் அவரது நண்பர் ராஜா வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

  இதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  ஸ்டாலின் வீட்டில் விசாரணை தான்.. சிபிஐ:
  இந்த ரெய்ட் குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டீலர் அலெக்ஸ் ஜோசப். வரி மோசடி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை ஹைதராபாத் விமான நிலையத்தில் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்தோம்.

  அவர் 33 கார்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இதில் 19 கார்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காரை வாங்கி இருக்கிறார்.
  இதில் ஜோசப் பல்வேறு வகையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இது தொடர்பாகவே மு.க.ஸ்டாலின் வீட்டில் ‘விசாரணை’ நடத்தப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 19 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வருவாய் புலனாய்வு உயர் அதிகாரி மற்றும் 2 அதிகாரிகள் மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

  கார் இறக்குமதியில் ரூ. 20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
  மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், ஈரோடு, போடி உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 4. M. K. Mahalakshmi Says:

  அரசியலில் இதெல்லாம் சகஜம் அப்பா!

 5. சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல் | Indian Secularism Says:

  […] [3] https://secularsim.wordpress.com/2013/03/21/cbi-raid-in-stalin-houses-for-illegal-import-of-cars-etc/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: