Archive for the ‘திருப்பதி’ Category

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)

மார்ச் 7, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (3)

 

பாலதுவாரகர்கள் திருமலை

பாலதுவாரகர்கள் திருமலை

திருமலையைத்  தாக்க  முஸ்லிம்கள்,   கிருத்துவர்கள்  பின்பற்றும்  திட்டங்கள்: கிருத்துவரான ஜகன் எப்படி தந்தையைப் போன்றே அடாவடியாக திருமலை கோவிலில் நுழைந்தார் மற்ற விவரங்கள் முதல் பதிவிலும்[1], YSR கிருத்துவக் குடும்பத்தினால், இந்துக்களுக்கு எப்படி தொந்தரவு, திருமலைக்கு கிருத்துவப் பிரச்சார பொருட்கள் வந்தது முதலியவை இரண்டாவது பதிவிலும் விளக்கியுள்ளேன்[2]. திருமலையைத் தாக்க கிருத்துவர்கள் திட்டமிட்டிருப்பது புதியதல்ல. போர்ச்சுகீசியர் இக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயன்றிருக்கின்றனர், ஆனால், எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதால் அவ்வாறு செய்யமுடியவில்லை. அப்பொழுதும் அவர்கள் மாறுவேடம் போட்டுக் கொண்டு கோவிலில் நுழைந்து விசயங்களை அறிந்திருக்கக் கூடும். ஏனெனில், அவர்களது ஆவணங்களில், குறிப்பாக ஜெசுவைட் எழுத்துகளில் விவரங்கள் காணப்படுகுகின்றன. முகமதியர், துலுக்கர் முதலியோரும் திட்டமிட்டனர், ஆனால், நெருங்க முடியவில்லை. இப்பொழுது 21ம் நூற்றாண்டில் அவர்களது வழிமுறைகள் காலத்திற்கேற்றபடி மாறியுள்ளன.

 

1000-pillared Mantap demolished at Tirumala in 2004

1000-pillared Mantap demolished at Tirumala in 2004 – In figure 100 has been mentioned wrongly.

சாமுவேல்  ராஜசேகரன்  2004  முதல்  2009 வரை: YSR 2004முதல் 2009 வரை ஆட்சியில் இருந்தாலும், இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை[3]. திரும்பக் கட்டினால்; ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருந்ததால், குறிப்பாக இந்த கிருத்துவ YSR டபாய்த்து வந்தார் என்று தெரிகிறது. திருமலைக்கு தவறாமல் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்தாலும்[4], இஸ்ரேலுக்குச் சென்று, கிருத்துவ புண்ணிய ஸ்தலங்களில் காங்கிரஸ்-சோனியா வெற்றிக்கு பிரார்த்தனை நன்றி-கடன் செய்ய குடும்பத்தோடு சென்றார் என்ற விசயம் சிறியதாகவே வந்தது[5]. இந்த கிருத்துவ தீர்த்த யாத்திரை இரண்டுமுறை 2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடந்துள்ளது. “வெய்யி கல்ல மண்டபம்” என்கின்ற 1000-கால் மண்டபத்தை “பெரிய திட்டம்” என்ற பெயரில் 2004ல் இம்மண்டபம் இடிக்கப்பட்டபோது பலர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர். ஊடகங்களில் இவை சாமர்த்தியமாக அமுக்கி வாசிக்கப்பட்டது, அதாவது “மாஸ்டர் பிளேன்” மூலம் பகதர்களுக்கு வசதி செய்துதரும் நிமித்தம் மேற்கொண்ட வேலைகளுக்காக, அம்மண்டபம் இடிக்கவேண்டியதாயிற்று[6] என்று “தி ஹிந்துவின்” பிரென்ட் லைன் வக்காலத்து வாங்கியது. விசயம் தெரிந்தவர்கள் வைகானச ஆகம முறைகள் மீறுவதாக குற்றம் சாட்டினர். ஆனால், செக்யூலரிஸ அரசு, வழக்கம் போல பண்டிதர்களைப் பிரிக்கும் போக்கில் ஈடுபட்டது. இதனால், “வைகானஸ தீக்ஷித சமக்ய” என்ற குழு 1000-கால் மண்டபம் இடிக்கப் பட்டதில் எந்த தவறுல் இல்லை என்ற வாதத்தை ஆகஸ்ட் 2004ல் வைத்தது[7]. அப்பொழுது ஏனிப்படி பண்டிதர்கள் முரண்படுகிறார்கள் அல்லது வைகனாஸ ஆகமம் எப்படி இரண்டுவிதமாக விதிமுறைகளை அறிவிக்கும் என்று கேள்வி கேட்கவில்லை. ஆனால், அதே போல சார்மினார் கட்டிடத்தையும் இடிப்பாயா என்று கேட்டதற்கு மௌனமாகி விட்டனர்[8]. இதிலிருந்தே, இவ்விசயத்தில் செக்யூலரிஸ அரசியல்வாதிகள் புகுந்து விளையாடியுள்ளார்கள் என்று தெரிகிறது.

 

Photo courtesy from  - irupati-balaji-photos-old-17

Photo courtesy from – irupati-balaji-photos-old-17

2012 வரை  மண்டபம்  கட்டப்  படவில்லை: ஶ்ரீ கோவிந்த ராமானுஜ என்ற இந்துமதத்துறவி, 1000-கால் மண்டபத்தை இடிப்பதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அவ்விவரங்கள் ஊடகங்களில் குறைவாகவே வெளி வந்தன. ஒருநிலையில் அவருக்கு அபாயம் என்ற நிலையில், உச்சநீதி மன்றத்தில் மனு போட்டார். அப்பொழுது அவருக்கு போதிய பாதுகாப்புக் கொடுக்க ஆணையிட்டது. ஆனால், இவ்விவரங்கள் வெளியே வரவில்லை[9], அம்மண்டபம் திரும்பக் கட்டப் படவேண்டும் என்று 2005ல் நீதிமன்றம் ஆணையிட்டும் திரும்ப வேறுஇடத்தில் [2012 வரை] கட்டப்படவில்லை[10].  “வெய்யி கல்ல மண்டபம்” 1472ல் கட்டப்பட்டதாகும்.  ரோஸைய்யா 2004ல் இடிக்கப்பட்ட அம்மண்டபத்தை 2007ல் அதனை திரும்ப கட்ட ஆணையிட்டார், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை[11]. பிப்ரவரி 2011ல் பூமி பூஜை நடத்தப்பட்டது என்றார்கள், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே, அந்த மண்டபத்தைக் கட்டத் தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. மேலும் உண்மை கிருத்துவர் தமது புண்ணியஸ்தலங்களுக்கு சென்றுவரும் வேளையில், இக்காரியத்தை செய்தால், ஒத்துவராது என்றும் நினைத்திருப்பார். மேலும் இவர் காலத்தில் திருப்பதி-திருமலை பகுதிகளில் கிருத்துவர்களின் சர்ச் கட்டுதல், பிரச்சாரம் முதலியவை ஆரம்பித்து விட்டதால், ஶ்ரீ கோவிந்த ராமானுஜ இந்துக்கள் [எஸ்.சி] மதம் மாற்றப்படுவதைத் தடுக்க “ஆதி இந்து பரிரக்ஷண சமிதி” என்ற இயக்கத்தினையும் அவர் தொடங்கிவைத்தார்[12].  அரசியலின் பின்னணியை அறிய இந்த YSR [1949-2009]ன் பின்னணியை, கடப்பா ரெட்டிகளின் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

 

Arrest Ezhumalaiyan an anti-Hindu website depiction

Arrest Ezhumalaiyan an anti-Hindu website depiction

கிருத்துவ  ரெட்டிகளின்  கிருதுவ  ராஜ்யம்,  மதப்பிரச்சாரம்,  முதலியன: இந்த கிருத்துவ ரெட்டிகள் கடப்பாவின் அரசர்களாகத்தான் இருந்து வாழ்ந்து வருகிறார்கள். பிரிடிஷர் காலத்திலேயே, இக்குடும்பம் கிருத்துவர்களாக மதம் மாறினார்கள். YSR [1949-2009] மூன்றவது தலைமுறை, இன்றைய ஜகன் நான்காவது தலைமுறையாக இருக்கிறார்கள். இவருக்கு ஜன்மோஹன் ரெட்டி, ஷர்மிளா மற்றும் வெரோனிகா அன்று சந்ததியர் உள்ளனர் ஜே. பி. லாரன்ஸ் [Reverend Dr P J Lawrence] என்ற கிருத்துவ பிஷப் [the bishop of the Church of South India’s Nandyal diocese] இந்த ரெட்டி குடும்பத்திற்கு வேண்டியவர். இவர் வைஹாயசி பி டேனியல் [Vaihayasi P Daniel] என்பவருக்கு கொடுத்த பேட்டியில் வெளியாகியுள்ள விவரங்கள்: “Dr YSR” என்று  அன்புடன் அழைக்கப்பட்ட இவர்  தென்னிந்திய  சர்ச்சின்  [ Church of South India]  உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தீவிரமான  விசுவாசமுள்ள  கிருத்துவர்  ஆவர்.   இவரது  தந்தையான  ராஜா  ரெட்டியும்  கிருத்தவர்தாம், அவரது  ஊரான  புலிவென்டுல [Pulivendula] உள்ள  சி.எஸ்.ஐ  சர்ச்சில்  வழிபட்டு  வந்தார். வொய்.எஸ்.ஆரும்  எப்பொழுதெல்லாம், தம்மூரில்  இருப்பாரோ, அப்பொழுதெல்லாம்  தவறாமல்  சர்ச்சுக்கு  வந்து  வழிபாடு  செய்வார்.  நானும் YSRம் பெல்லாரியிலுள்ள வீரசைவ  கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்”.

 

YSR devouted Christian Rediff.com cutting

YSR devouted Christian Rediff.com cutting

பெல்லாரிதொடர்பும், கனிமவளசுரண்டல்களில்கிருத்துவர்களின்பங்கும்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “இந்தபெல்லாரி  கிழக்குப்  பகுதியில்  ஆந்திராவுடன்  ஒட்டுயுள்ள  மாவட்டமாகும். எனக்கு  YSR-குடும்ப  கிருஸ்துமஸ்  விழா  கொண்டாட்டத்தில்  பங்கு  கொள்ளும்  வாய்ப்புக்  கிடைத்தது. அது  ஒரு   500  நெருங்கிய  உறவினர்கள்  கொண்ட  கூடுதல்  கொண்டாட்டம்  ஆகும்.   அதில்  பல  நெருங்கிய  உறவினர்களும்,   போதகர்கள்,   பிரச்சாரகர்களும்  இருந்தனர்.   YSR   பைபிளைப்  படித்து,  தினமும்  கிருத்துவமுறைப்படி சிரத்தையாக  வழிபாடு  செய்தார்.  அவரது  தாயாரும்  மிகசிறந்த  விசுவாசியாவார். அவர்  YSRன்  வெற்றிக்காக  மிகசிறந்த  முறையில்  பிராத்தனை  செய்துகொண்டார். YSRம்  எப்பொழுதும்  தனது  வெற்றிக்கான  காரணம், தனது  தாயாரின்  பிரார்த்தனையே  என்று  ஒப்புக்  கொண்டுள்ளார்”, என்று விவரித்தார். ஆனால், அந்த ரெட்டி சகோதர்களைப் போலவே, இந்த ரெட்டி குடும்பமும் பல ஊழல்களில் சிக்கியுள்ளது நோக்கத்தக்கது. இந்த கனிம-சுரண்டல் காரணத்தை வைத்துக் கொண்டு நியூரப்பா மற்றும் இந்த ரெட்டிகளை சோனியா தூகிக்கிய அரசியல் தந்திரத்தையும் நோக்கத்தக்கது.

 

இது கூட அந்த ஜகன் கூட்டத்திற்கு தெரியவில்லை என்றால் இந்துக்கள் நம்ப வேண்டுமாம்!

இது கூட அந்த ஜகன் கூட்டத்திற்கு தெரியவில்லை என்றால் இந்துக்கள் நம்ப வேண்டுமாம்!

கிருத்துவர்களுக்காகவே  உதவிய  ரெட்டிக்  கிருத்துவ  குடும்பம்: பிஷப் ஜே. பி. லாரன்ஸ் தொடர்கிறார், “நிச்சயமாக  YSR சுவர்க்கத்தில்  கடவுளின்  கூடத்தான்  இருக்கிறார்.   அவர்  மக்களை  விரும்பினார்,   மக்களும்  அவர்  மீது  அன்பை  பொழிந்தனர்.  அந்த  அன்புதான்  அவரை  முதன்மந்திரியாக்கியது,   இரண்டாவது  முறையாகவும்  அவ்வாறே  பதவிக்கு  வரச்செய்தது  [2004-2009].   மக்களது  நலனுக்காக  அவர்  பல  திட்டங்களை  செயல்படுத்தினார்.  அவர்  மக்களிடம்  உகந்த  கவர்ச்சிகரமான  அரசியல்வாதி  ஆவார்,   பெரிய  தலைவர்  மட்டுமல்ல,   ஒரு  சரித்திரமாகி  விட்டார்.   நான்  அவரை  பலமுறை  சந்தித்துள்ளேன்.   சமீபத்தில்   2009-செப்டம்பரில்  அவரை  எச்.பி.ஜி.  உயர்நிலைப்  பள்ளியின்   125வது  ஆண்டு  விழா   [ 125th anniversary of the SPG high school, Nandyal]   நிகழ்ச்சியில்  முக்கிய  விருந்தினராக  கலந்து  கொள்ள  வந்தபோதும்  நான்டியாவில்  சந்தித்தேன்.  அவர் கிருத்துவர்களுக்கு  நிறையவே  உதவி  செய்திருக்கிறார்,  குறிப்பாக  தலித்  கிருத்துவர்களுக்கு  தாராளமாக  உதவியிருக்கிறார்.  சமீபத்தில்  மற்ற  எஸ்.சிக்களுக்கு  என்ன  சலுகைகள்  உள்ளனவோ,  அவை  மதம்  மாறிய  தலித்  கிருத்துவர்களுக்கும்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று  விதிமுறையைக்  கொண்டு  வந்தார்.  இப்பொழுது, அவர்  இல்லாமல்  இருந்தாலும்,   மகன்  ஜகன்மோஹன்  ரெட்டியை  விட்டுச்  சென்றிருக்கிறார்.  அவர்  கடப்பாவின்  எம்.பி  ஆவார்.  YSRக்கு  ஒரு  மகளும்  இருக்கிறார்,  அவர்  அனில்குமாரை  திருமணம்   செய்து  கொண்டுள்ளார். அவர்  ஒரு  பிரபலமான  எவாஞ்சலிஸ்ட்  ஆவார்”,  என்று  விவரித்தார்.

 

திதிதே மூடவேண்டும் - ராஜபக்ஷே எதிர்ப்பு

திதிதே மூடவேண்டும் – ராஜபக்ஷே எதிர்ப்பு – கோவில்களை இடித்தவனை எதிர்க்கும் சாக்கில் திருமலை திருப்பது தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டம் என்று இந்த கூட்டம் ஆர்பாட்டம் செய்தது. இப்பொழுது கிருத்துவர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு இந்த போலிகள் என்ன செய்யும்?

செக்யூலரிஸ  இந்தியாவில்  இந்துக்கள்  தாக்கப்  படுவது: சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா செய்வது என்பது தனது அப்பனின் வழியைப் பின்பற்றுவது தான் என்பது ஊர்ஜிதமாகிறது. வெளியில் தங்களுக்கு “ஏடு கொண்டலவாடு, வெங்கடேஸ்வருடு” மேலே பக்தி உள்ளது என்று காட்டிக் கொண்டு, சாதாரண இந்துக்களின் மனங்களில் தங்களைப் பற்றி அத்தகைய எண்ணங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன், அதே நேரத்தில், “ஏய்  இந்துக்களே,  பாருங்கள், நாங்கள்  எப்படி  வேண்டுமானாலும்  உள்ளே  நுழைவோம், வருவோம், செல்வோம். ஆனால்,   நீங்கள்  அடிமைகள்  போல  காத்துக்  கிடக்கக்  வேண்டும். ஆட்சியாளர்களான  நாங்கள்  ஏற்படுத்தும்  சட்டதிட்டங்கள், விதிமுறைகள்  எல்லாம்  சாத்தான்களை  வழிபடும்  உங்களுக்குத்தான்  பொறுந்தும்,  ஆனால், எங்களுக்குக்   கிடையாது”, என்று அகம்பாவத்துடன், ஆணவத்துடன் வெளிப்படுத்திக் கொள்வதற்காகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள். முகமது கோரி, முகமது கஜினி, மாலிக்காபூர், ஔரங்கசீப் முதலிய துலுக்கர்கள் அவ்விதமாகத்தான் மதவெறியோடு இந்துகோவிலைத் தாக்கினர். மனங்களுக்குள் எல்லா கோவில்களையும் அழித்தொழித்து விடவேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது, ஆனால், லட்சக்கணக்கில் இந்துக்கள் அக்கோவில்களைச் சுற்றி வாழ்ந்து கொண்டு இருந்ததால், அவ்வாறு முழுவதுமாக செய்யமுடியவில்லை. அதனால் தான் சில ஆயிரம் கோவில்கள் தப்பித்தன, ஆனால் பல்லாயிரம் கோவில்கள் மறைந்தன. அக்கோவில்கள் தர்காக்களாக, மசூதிகளாக, சர்ச்சுகளாக மாற்றப் பட்டன.

 

இப்படித்தான் பக்தர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது

இப்படித்தான் பக்தர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது

 

திருமலை  தரிசனத்தின்  போது  பெண்கள்  பூவைத்துக்  கொள்ளக்  கூடாது: இப்படி கிருத்துவர்கள், முஸ்லிம்கள் திருமலை கோவிலில் நுழைவதால், இந்துக்களுக்கு பற்பல தொந்தரவுகள், இடைஞ்சல்கள், துன்பங்கள் ஏற்படுகின்றன. இப்பொழுது தீவிரவாதிகள் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்பதால், கீழ் திருப்பதி முதல் மேல் திருமலை செல்லும் வரை பல விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கோவிலின் பிரதம வாசல் வழியாக நுழைவதற்கு முன்னர் பக்தர்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகிறாகிறார்கள். அவர்கள் இரண்டுமுறை உடல் முழுவதும் தடவப் பட்டு சோதனைக்கு உள்ளாகிறார்கள். பெண்கள் பூ வைத்துக் கொள்ளாது என்ற விதிமுறை ஏற்படுத்தப் பட்டு, ஒருவேளை பெண்கள் பூ வைத்துக் கொண்டு வந்தாலும், அவற்றை பாதுகாப்பு-பெண்கள் வலுக்கட்டாயமாக எடுத்துவிடுகிறார்கள். பல பெண்களுக்கு இது மிக மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குளித்து, புத்தாடை அல்லது துவைத்த ஆடைகளை அணிந்து கொண்டு, பொட்டு-பூ வைத்துக் கொண்டு தரிசனத்திற்காக வரும் பெண்களை இவ்வாறு நடத்துவது அவர்களை அவமதிப்பதற்கு மேலான செயலாகும். அநாகரிகமான காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான காரியமாகும். ஆனால், பாதுகாப்பு என்ற போர்வையில் இது நடந்து வருகிறது.

 

பக்தர்கள் எங்கு தங்கினாலும் சுற்றி-சுற்றிதான் வரவேண்டும், ஆனால், ஜகன் போன்ற ஆட்கள் நேராகவே போய் விடுவார்கள்!

பக்தர்கள் எங்கு தங்கினாலும் சுற்றி-சுற்றிதான் வரவேண்டும், ஆனால், ஜகன் போன்ற ஆட்கள் நேராகவே போய் விடுவார்கள்!

பக்தர்கள்  அலைக்  கழிக்கப்  படுவது: தரிசனத்திற்குப் பிறகு, திரும்பி கோவில் வாசல் வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் மாடவீதிவழியாகச் சுற்றிக் கொண்டு, முன்பக்கம் வரவேண்டியுள்ளது. குறிப்பாக வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் இவ்வாறு சுற்றிக் கொண்டு வருவதில் கஷ்டப்படுகிறார்கள். இதுவும் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறுகிறது. மேலும், செருப்புகளை விட்ட இதத்திற்கு சென்று எடுத்து வரவும் சுற்றி வர வேண்டியுள்ளது. கோவிலின் பக்கம் இருந்த மண்டபம் இடிக்கப் பட்டு, புதிய பாதை படிகட்டுகளுடன் அமைக்கப் பட்டிருப்பதால், வைகுண்டம் கியூ வரிசைக்கு, தரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், YSR மற்றும் மகன் ஜகன் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல், ஆனால், கஷ்டப்பட்டு நின்று கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களைப் போல, எந்த சிரமும் படாமல், எந்த சோதனையும் இல்லாமல், கிருத்துவர்களாக இருந்தும் ராஜ மரியாதையோடு சென்று வந்துள்ளனர் எனும் போது, உண்மையான பக்தர்களுக்கு கோபம், வருத்தம், வெறுப்பு முதலியவை வரத்தான் செய்யும்.

 

கடைசியாக பக்தர்களுக்கு சாப்பாடு, ஆனால் அந்த பெரிய பக்தர்கள் இங்கு சாப்பிடுவதில்லை!!

கடைசியாக பக்தர்களுக்கு சாப்பாடு, ஆனால் அந்த பெரிய பக்தர்கள் இங்கு சாப்பிடுவதில்லை!!

கியூவரிசைகளில் தண்ணீர், உணவுகள் அனுமதிக்கப் படுவதில்லை: மேலும் வரிசைகளில் நிற்க உள்ளே செல்லும் போது, தண்ணீர் பாட்டில்கள் கூட எடுத்துச் செல்வது தடுக்கப் படுகிறது. கிட்டத்தட்ட ஏதோ விமனத்தில் பிரயாணம் செய்யும் போது, அனைத்தையும் பிடுங்கி வைத்துக் கொள்வது போல, இங்கும் கெடுபிடி நடக்கிறது. “ராம் பகீசா கெஸ்ட் ஹவுஸ்”சுக்குச் செல்பவர்கள், இப்பொழுது தங்களது பெட்டி-பைகளை சுமந்து கொண்டு தான் செல்லவேண்டும். வணிடிகள் அனுமதிக்கப்படுவதில்லை. வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டு, நடந்து தான் “வைகுண்டம் கியூ”விற்கு செல்லவேண்டும். இதுவும் வயோதிகர், கால்வலிக் கொண்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் மற்ற நரம்பியல் நோயாளிகள் முதலியோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.

© வேதபிரகாஷ்

07-03-2014


[3] The demolition of the thousand Pillar Mandapam at Tirumala that many believe. As the cause of down fall of Nara Chandrababu Naidu in 2004, will be built again. While disposing a writ petition filed by a devotee Justice C.V. Nagarjuna Reddy of AP high court has directed Tirumala Tirupati Devasthanams (TTD) to take steps to re buiild the ‘Maha Mandapam’, within three months and complete it quick. The TTD had adopted a resolution on October 24, 2005, for reconstruction of the Maha Mandapam soon after YSR government took charge.

http://www.telugumirchi.com/en/other-news/rebuild-550-yr-1000-pillar-mandapam-at-tirumala.html

[5]  Y.S.R, who took charge as AP C M for the second consecutive term last week [Wednesday, May 27, 2009 ], on Wednesday left for a pilgrimage to Israel along with his family members.YSR will visit Bethlehem and other holy places for Christians during the four-day visit. He will return to Hyderabad on May 31. YSR, a Christian by faith, is accompanied by his wife Vijayalakshmi, his son and daughter and their family members. His son Y.S. Jaganmohan Reddy was elected to the Lok Sabha from Kadapa in the just-concluded polls while his son-in-law Anil Kumar is an evangelist. The chief minister will offer thanks-giving prayers at the holy places for the victory of the Congress party, which won 156 seats in the 294-member State Assembly and 33 out of 42 Lok Sabha seats. This is YSR’s second pilgrimage to Israel. He first visited Bethlehem after coming to power in the State in 2004. http://www.hindu.com/thehindu/holnus/004200905271081.htm

[6] The acquisition of private land enabled the TTD to accelerate the implementation of its long-pending master plan, conceived with the twin objectives of decongesting the pilgrim-choked surroundings of the temple and augmenting security in the context of the deteriorating security atmosphere in the country. As part of the implementation of the master plan, the management took up the task of constructing the massive “maha prakaram” (ambulatory) at a budget outlay of Rs.70 crore and the widening of the mada streets at a cost of over Rs.5 crore. In the process, it had to demolish the centuries-old “Thousand-pillar Mandapam” located in front of the main temple complex.

http://www.frontline.in/static/html/fl2418/stories/20070921508310200.htm

[7] TIRUPATI, AUG. 31, 2004. The Vaikhanasa Deekshitha Samakhya owing allegiance to the Tirumala-Tirupati Devasthanams (TTD) today defended the demolition of the 1,000-pillar Mandapam at Tirumala and maintained that it did not see anything objectionable behind the demolition, as the Mandapam was not being used for the performance of any ritual or festival. http://www.hindu.com/2004/09/01/stories/2004090107060500.htm

[8] Though hypothetical, the a Tamil Nadu-based Srivaishnavaite organisation also raised a very sensitive question– whether Hyderabad’s `Charminar’ could be disturbed from its present location and re-located in some other place on the ground that it was also in a dilapidated condition and impeding the movement of traffic. http://www.hindu.com/2004/09/01/stories/2004090107060500.htm

[10] The  Tridandi Srimannarayana Chinna Jeeyar Swamy was particularly critical about the demolition of the ancient ‘Thousand Pillar Mandapam’ and other heritage structures at Tirumala and regretted that even seven years after the court ordered the re-location of the mandapam, neither the government nor the TTD had taken any concrete step towards it.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jeeyar-locks-horns-with-tirumala-archakas/article2859235.ece

[11]  ‘Bhoomi pooja’ was on Friday performed for the construction of the ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the main temple complex of Lord Venkateswara. Here it may be recalled that the TTD management was in the thick of controversy soon after the demolition of the thousand-pillar mandapam, popularly known as Veyyi Kalla Mandapam, in course of the implementation of its master plan envisaged at widening of the mada streets in Tirumala. It is a replacement for the demolished 1,000-pillar mandapam that the then TTD Board of Trustees, under the chairmanship of T. Subbarami Reddy, had resolved to construct a ‘Maha mandapam’ at the demolished site in October 2005. The TTD management is constructing the mandapam at an estimated Rs. 10.70 crore. http://www.hindu.com/2011/02/26/stories/2011022652310300.htm

[12] Dalit body formed: With a view to putting up a stiff resistance against deliberate attempts by vested interests to promote religious and sect conversions, a dalit body christened ‘Audi Hindu Parirakshana Samithi’ took shape in the presence of Sri Tridandi Srimannarayana Chinna Jeeyar Swamy here on Friday[TIRUPATI, February 4, 2012] . Members of the local Dalit community led by founder-president of the Samithi Kalluri Chengaiah visited the venue here where the Swamiji was presiding over the ‘Vishnu Sahasranama Parayanam’ and took his blessings signalling the emergence of the organisation. The Jeeyar Swamy appreciated the spirit of the Dalits behind their movement and said it would augur well for the propagation and protection of Hinduism and its values.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jeeyar-locks-horns-with-tirumala-archakas/article2859235.ece

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)

மார்ச் 6, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (1)

திருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014

திருமலையில் ஜகன் கலாட்டா 03-03-2014

ஞாயிற்றுக்கிழமை 03-03-2014 அன்று  திருமலையில்  ஜெகன்மோகன்  ரெட்டி  கலாட்டா:  ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஞாயிற்றுக் கிழமை 03-03-2014 அன்று, திருப்பதியில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். அன்று இரவு, திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை, ஏழுமலையானை தரிசிக்க சென்றார். மாலை 5:00 மணிக்கு, அவருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது TTD அதிகாரம் கிருத்துவரான ஜகனுக்கு VIP தரிசனம் ஞாயிற்றுக் கிழமை அன்று மிகக் கஷ்டப்பட்டு கொடுத்தது. பாராளுமன்றத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்த சிறப்பு சலுகைக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜகன் இந்துக்கள் அல்லாதவர்கள் கையெழுத்து போட்டுத் தரவேண்டிய படிவத்தைக் கொடுக்கவில்லை என்று TTD அதிகாரிகள் கூறுகின்றனர்[1]. 6.10க்கு ஜெகனும், அவரின் ஆதரவாளர்களும், வைகுண்டம் வரிசையில் நுழைந்தனர். ஜெகன், செருப்பு அணிந்தபடி நுழைய முயற்சித்தார்[2]. ஆரம்பத்திலேயே செருப்புகளை கழட்டி வைத்து வரவேண்டும் என்ற அறிப்புப் பலகைகள் பல இடங்களில் பல மொழிகளில் பெரியதாகவே வைக்கப் பட்டுள்ளன. மாடவீதிகளிலேயே செருப்புடன் வரக்கூடாது. எனவே, தெலுங்குக் காரர்களான இவர்களுக்கு இவையெல்லாம் தெரியாது என்பதில்லை.

ஜகஜால ஜகன் கலாட்டா 2014

ஜகஜால ஜகன் கலாட்டா 2014

விதிமுறைகளை  மீறி  கோவிலில்  நுழைந்த  கிருத்துவக்  கூட்டம்: வி.ஐ.பி.,க்கள் தரிசன விதிமுறைப்படி, வி.ஐ.பி.,யுடன், 15 பேர் மட்டுமே செல்ல முடியும். ஆனால், ஜெகனுடன், சுமார், 300 பேர் சென்றனர். டிக்கெட் பெறாத ஜெகனின் பாதுகாவலர்களை, போலீசார், வெளியேற்ற முயற்சித்தனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு, அராஜகத்துடன் அவர்கள், ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்[3]. இதனால் தான் ஜி. பானுபிரகாஷ ரெட்டி என்ற மாநில தலைவர், “VIPக்கள் திருமலைக்கு வரும்போது எந்தவிதமான சர்ச்சைகளையும் கிளப்பக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இது ஜனன்மோஹனின் கட்சி அலுவலகமோ அல்லது இடுபுலபய எஸ்டேட்டோ அல்ல, அதனால், இங்கு இவ்விதமாக முறைதவறி நடந்து கொண்டிருக்கக் கூடாது. செருப்புடன் தான் செல்வேன் என்று அடாவடி செய்திருக்கக் கூடாது. வண்டிகள் ஹாரன்கள் அடிக்க, ஆர்பாட்டம் செய்து கொண்டு, கத்திக் கொண்டு, 300க்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள் பாதுபாப்பு அதிகாரிகளைத் தள்ளிக் கொண்டு, கோவிலுக்குள் நுழைய முயற்சித்தது, புனிதத்தை கெடுத்த செயலாகும்”, என்றுவிளக்கினார்[4].

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்

தி.தி.தேவஸ்தான  டிரஸ்ட்  போர்டின்   முக்கிய  அதிகாரிகள்  முன்னிலையில்  நடந்த  அத்துமீறல்கள்: “ஶ்ரீ வெங்கடேஸ்வரர் எல்லோருக்கும் கடவுள் தான் (அந்தரிவாடு = அதாவது எல்லோருக்கும் இறைவன்)”, இருப்பினும் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். திருமதி விஜயம்மா தான் செல்கின்ற இடத்திற்கெல்லாம் பைபிளை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஆனால், படிவத்தில் கையெழுத்துப் போடவேண்டும் எனும்போது, அதெல்லாம் தேவையில்லை என்கிறார். இவர் அதனை எப்படி நியாயப்படுத்த முடியும்?”, அவர் மேலும் தொடர்ந்தார்[5]. பி. கருணாகர ரெட்டி மற்றும் பாஸ்கர் ரெட்டி முதலியோர் முன்னிலையில் இத்தகைய அத்துமூறல்கள் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும் என்று கூறி முடித்தார். இருவருமே தி.தி.தேவஸ்தான டிரஸ்ட் போர்டின் [TTD trust board] முக்கிய அதிகாரிகள் ஆவர். மேலும் உள்ளே நுழைந்தவர்கள் தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவில்லை[6], எந்த பாதுகாப்பு சோதனையிலும் உட்படுத்தப்படவில்லை.

ஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ

ஜகன் அத்துமீறல் தி இந்து போட்டோ

தடாலடியாக  கோவிலில்  நுழைந்த  மகனும், ஊழியம்  செய்யும்  மறுமகனும்: மே 2012லும் ஜகன் இதே மாதிரி அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது[7]. அப்பொழுது, “ஜெய் ஜகன்” என்று கத்திக் கொண்டு உள்ளே சென்றனர்[8].

Jagan, a Christian, along with his 60 followers, including former Tirumala Tirupati Devasthanams (TTD) trust board chairman Bhumana Karunakara Reddy, entered the temple through the Vaikuntham queue complex to have a VIP break darshan of Lord Venkateshwara.Though the TTD authorities tried to approach him with the declaration form, which he was supposed to sign stating that he has faith in the temple deity, Jagan ignored the authorities and went into the temple to have the darshan.

What was more shocking to the devotees was Jagan’s followers raising slogans of “Jai Jagan” as they were entering into the main temple complex. The other devotees raised a protest at this as Jagan passed by them, but he ignored them.

TTD executive officer L V Subrahmanyam, who ordered an inquiry into the incident following complaints by several devotees, said as per the rules, it was mandatory on the part of non-Hindus to sign a formal declaration for the darshan of Lord Venkateshwara saying they had complete faith in the Lord. Jagan, being a born Catholic Christian, should have signed the declaration form.

அப்பொழுதும் இதே மாதிரியாகத்தான்ஆவர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் எனும் போது, கோவிலுக்கு வந்து கலாட்டா செய்யும் இந்த அரசியல்வாதிகளை ஓட்டாளர்கள் கவனிக்க வேண்டும், அதிலும் இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்கள் அதிரடியாக, அத்துமீறல்களை செய்ய எப்படி அனுமதிக்கிறர்கள் என்று தெரியவில்லை.

சாமுவேலுக்கு நடக்கும்  கல்லறை சடங்கு, ஊழியம்

சாமுவேலுக்கு நடக்கும் கல்லறை சடங்கு, ஊழியம்

குடும்பமே  கத்தோலிக்கப்  பிரச்சாரத்தில்  ஈடுபட்டுள்ளது: கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த இக்குடும்பம் முன்னரே பற்பல வித மதரீதியிலான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. YSR பதவியில் இருக்கும் போது, இஸ்ரேலுக்கு தீர்த்தயாத்திரை போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, ரோத்ஸ்சைல்ட் [Rothschild controlled Jewish industrialists] என்ற தொழிலதிபரை சந்தித்து, அவரது வியாபாரத்தை ஆந்திராவிற்கு வரும்படி செய்தார், தனக்கும் வரும்படி வந்தது. கடப்பாவைச் சேர்ந்த இக்குடும்பம் மதமாற்றத்தை ஊக்குவிக்க குவாரிகளுக்கு ஒப்பந்தம் கொடுக்கும் போதே, ஏழைக் கிராமத்தினரை வேலைக்கு அமர்த்தும் சாக்கில் அவர்களை கிருத்துவத்தில் சேர்க்கிறார்கள். அதுமட்டுமல்லாது, சிறுசிறு குன்றுகளின் மீது சிலுவைகளை வைத்து ஆக்கிரமிப்பு வேலையை செய்து வருகிறார்கள். கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களை குடும்பம் மட்டுமல்லாது, உள்ளூர் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகளையும் வைத்துக் கொண்டு நடத்துகிறார்கள்[9]. YSRன் மகன் இப்படி கோவிலில் நுழைகிறான் என்றால், மறுமகனோ பிரபல ஊழியனாக இருந்து, மதம் மாற்றம் செய்து வருகிறார். அனில்குமார் என்ற மறுமகன் கடப்பா மற்றும் சுற்றுப்பகுதிகளில் மதம் மாற்றம் செய்து வருகிறார். சாமுவேலின் கல்லறை அவர்களது இடுபுலயபய [Idupulayapaya] என்ற கிராமத்தில் உள்ளது. அவருக்கு கிருத்துவமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டு கல்லறை கட்டப் பட்டு, சடங்குகளும் செய்யப்பட்டன[10]. சாமுவேலின் மனைவி விஜயம்மா பொட்டும், பூவாகத்தான் வலம் வருவார், ஆனால், கையில் எப்பொழுதும் பைபிளை வைத்திருப்பார். பிரச்சாரம் செய்து கொண்டே இருப்பார்.

YSR family

YSR family

கத்தோலிக்கர்களின் செக்யூலரிஸ நாடகங்கள்: திருப்பதியைப் பொறுத்த வரையில், YSR ஊக்குவிப்பினால் தால் கிருத்துவர்கள் திருப்பதியில் சர்ச் கட்டிக் கொண்டது, சென்னை-திருப்பதி சாலையில் சர்ச்சுகளைக் கட்டி வருவது, கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளை கொடுத்து வருவது, திருமலையிலேயே அவ்வாறு செய்தது என்ற பலவித செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து விட்டன. ஆனால், கிருத்துவப் பிரச்சார பீரங்கில்கல் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், கிருத்துவர்களை மதரீதியில் துபுறுத்தப்படுகிறார்கள் என்று பொய்களை அவிழ்த்து விட்டது[11]. “தி இந்துவும்” இந்து இயக்கங்கள் எதிர்த்ததைப் பற்றி செய்தி வெளியிட்டது[12]. ஆகவே, கிருத்துவர்கள் மிகவும் தீவிரமாக திருப்பதி-திருமலை புண்ணிய க்ஷேத்திரங்களின் மீது தாக்குதல் செய்ய தயாராகி விட்டார்கள் என்றே தெரிகிறது. ஒருபுறம் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரம் வருட காலத்தைய 100-கால் மண்டபம், மடங்கள் முதலியன அப்புறப்படுத்தப் பட்டன. ஆனால், மறுபுறம், இவ்வாறான பிரச்சார வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

© வேதபிரகாஷ்

06-03-2014


[1] TTD authorities granted VIP darshan to Jaganmohan Reddy, a Christian, in the wee hours of Sunday. But the TDP has alleged that the YSR Congress leader has violated the norms of visiting the temple by not signing the mandatory declaration.

http://www.deccanherald.com/content/389423/jagan039s-balaji-darshan-stirs-controversy.html

[2] Th, ஏழுமலையான்  கோவிலில்  ஜெகன்மோகன்  அராஜகம், 03-03-214, sennai

[4] Referring to the controversies that marked Jagan’s recent visit to Tirumala, party State spokesperson G. Bhanuprakash Reddy said it was unfortunate for the holy abode to witness such unpleasant incidents time and again and advised prominent personalities to steer clear of controversies. “We wish to remind Jagan that it is not his party office or Idupulapaya estate where he can behave the way he wants,” he said, disapproving of his reported act of walking with footwear up to the queue line. The indiscriminate blaring of horns, mobbing of his security men and around 300 of his followers gaining entry into the temple by force not only scared the devotees, but also vitiated the serene atmosphere at the temple, he charged. The party also took exception to Jagan not signing the declaration form meant for people of other faiths to indicate their belief in Lord Venkateswara.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-flays-jagan-for-sacrilege-at-tirumala/article5749607.ece

[5] “Though Sri Venkateswara is the ‘God of All’ (Andarivaadu), there are some established norms that ought to be followed. Ms. Vijayamma carries the Bible everywhere, but Jagan does not sign the declaration at Tirumala, saying there is no necessity. How does he explain it?” he questioned. He said that the occurrence of the incident in the very presence of B. Karunakar Reddy and Ch. Bhaskar Reddy, the ex-Chairman and the former ex-officio member respectively of the TTD trust board, was even more painful. He also flayed the TTD officials for succumbing to pressure and extending a welcome to Jagan that was grossly disproportionate to his protocol status.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-flays-jagan-for-sacrilege-at-tirumala/article5749607.ece