Archive for the ‘முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789