Archive for the ‘ஓலை’ Category

திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி? சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)

ஜூன் 24, 2017

திருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி? சமஸ்கிருததமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்புதிர் கருதுகோள்கள் (8)

Catholics and protestants call other serpant

ஓலைச்சுவடி புத்தகங்களின் அழிவும், நகல்கள் உருவாக்கமும், ஐரோப்பியர்களின் சேகரிப்பும்: காலின் மெகன்சி, டெயிலர், பிரௌன், கால்டுவெல் முதலியோர் சேகரிப்பில் பல தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருந்தன. அவற்றில் மருத்துவ நூல்களைப் பற்றி அதிகம் கவனம் செல்லுத்தினர். முகலாயர் / முகமதியர், அதாவது முஸ்லிம்கள் வடவிந்தியாவின் மீது படையெடுத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மடாலய பள்ளிகள், குருகுலங்கள் முதலியவற்றைத் தாக்கி, ஓலைச்சுவடி புத்தகங்களை சூரையாடினர், எரிக்கவும் செய்தனர். அப்பொழுது, ஓலைச்சுவடிகளுடன் திபெத், பர்மா, சயாம் முதலிய தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்னிந்தியா என்று எழுத்தாளர்கள், ஓலைச்சுவடி நகல் எடுப்பவர்கள் பரவினர். திபெத்தில் திபெத்தியம், தென்கிழக்காசிய நாடுகளில் சமஸ்கிருதம். தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில், மொழி பெயர்த்து எழுத ஆரம்பித்தனர். இதனை அறிந்து கொண்டு, ஐரோப்பியர் [பெரும்பாலோர் மிஷினரிகள்], அப்பகுதிகளுக்குச் சென்று ஒலைச்சுவடி புத்தகங்களை சேகரிக்க ஆரம்பித்தனர். அவற்றில் ஆயுர்வேத புத்தகங்கள் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தனர்.  அவசரமாக அபகரித்து கொண்டது, வாரிக்கொண்டு வந்தது, விலை கொடுத்து அல்லது மிரட்டி வாங்கியது போன்ற காரியங்களால், அவற்றில், கிடைக்காத அரைகுறை ஓலைச்சுவடி கட்டுகள் அதிகமாக இருந்தன[1].

F. W. Ellis, produced such literature, to encourage vaccination

மருத்துவ ஆராய்ச்சியில் போலி நூல்கள் உருவாக்கம், ஆயுர்வேத-சித்த மோதல்கள்: குறிப்பாக, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர், கிடைத்தவற்றையெல்லாம் வாரிக் கொண்டு வந்தனர். இதனால் தான் ஓலைச்சுவடிகள் தாறுமாறாகின. பல புத்தகங்களில், முன்பு-பின்பு என்று ஓலைச்சுவடிகள் காணாமல் இருந்தன / போயின. உதாரணத்திற்கு “கப்பற்சாத்திரம்” என்ற நூலின் இறுதியில் “சிற்பசாத்திரம்” பற்றி சில சுவரடிகள் இருந்தன. அதாவது, இரண்டு ஓலைச்சுவடி புத்தகங்களின் சுவடிகள் கலந்திருந்தன. திராவிட மொழிகள் தனி, சமஸ்கிருதத்திலிருந்து அவை வேறுபட்டவை என்று எடுத்துக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்து, திட்டமிட்டு செயல்பட்டபோது, சில படிப்புத்துறை நூல்கள் வேறு என்று எடுத்துக் காட்ட முயன்றனர். அந்நிலையில் தான் போலி சித்தர் நூல்கள் உருவாகின. முதலில், கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் எதிர்ப்பு அந்நூல்களில் இருந்தது. “கருநாக பாம்பின் விசக்கடிக்கு மருந்து” என்ற நூல் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்[2]. உண்மையில், இது மருத்துவ நூல் கிடையாது. கத்தோலிக்க மிஷனரிகள், தரங்கம்பாடியில் உள்ள புரொடெஸ்டென்ட் மிஷனரிகளை திட்டி, வசைபாடி எழுதிய குறும்புத்தகம் ஆகும். அதாவது, உள்ளூர் தமிழ் தெரிந்தவர்கள், தமிழாசிரியர்கள் முதலியவர்களை வைத்து இத்தகைய நூல்களை தயாரித்தனர். “பசு அம்மை” அவ்வாறுத்தான் உருவாக்கப்பட்டது[3]. அதனால் தான், சித்தர் பாடல்களில் விசயம் குறைவாக இருந்து, அதிகமாக சொன்னதையே திரும்ப-திரும்ப சொல்வது, அதிகமான தேவையில்லாத வர்ண்ணனை, பாடல்வரிகள், பாடல்கள் திரும்ப வருவது, முதலியவற்றைக் காணலாம். மேலும் 19-20ம் நூற்றாண்டு வழக்குச் சொற்கள், சொற்பிரயோகம் முதலியவை, அவற்றின் போலித்தன்மையினை எடுத்துக் காட்டுகின்றது.

Colin Mackanzies reserch on Jainism

“ஜைன” திட்டம் உருவானது எப்படி?: வள்ளுவரை வேற்று மதத்தினராகக் காட்டுவது என்ற குறிக்கோளில் செயல்பட்டபோது, இத்தகைய மோசடி ஆராய்ச்சிகள் எல்லீஸ் கூட்டம் மேற்கொண்டது. எல்லீஸ் மற்றும் போப் முதலியோருக்கு தாமஸ் கட்டுக்கதை நன்றாகவே தெரிந்திருப்பது, அவர்களின் குறிப்புகளிலிருந்து அறியலாம். அதனை, இதில் சேர்த்துக் கொள்ள முயன்றனர். அதனால் தான், வள்ளுவரைப் பற்றிய போலி நூல்களை / ஆவணங்களை உருவாக்கினர். அவர் நெசவாளி, பறையர் போன்ற கட்டுக்கதைகள் சேர்க்கப்பட்டன. “பதினன்கீழ்கணக்கு” நூல்களில் ஜைன தாக்கம் இருந்ததால், வள்ளுவரை ஜைனராக்கும் திட்டம் உண்டானது. அந்த ஜைன சங்கத்தை, “தமிழ் சங்கம்” என்றதும், உசுப்பிட்டது போலாயிற்று. ஜைனமத அகாலங்கன், முதலியோரை ஏலேல சிங்கன் என்றெல்லாம் மாற்றினர். தீபவம்சத்தின்படி, ஏலேர அல்லது ஏலேரன் 205-161 BCE [Elelar / Elalan] என்பவன் இலங்கையை ஆண்டதாகவுள்ளது. ஆனால், இவர்களே வள்ளுவர் காலத்தை 400 முதல் 1000 CE வரைத்தான் வைக்கிறார்கள். பிறகு, அக்கதை எப்படி பொறுந்தும்? பறையன் என்ற திரிபுவாதத்தை வைத்துக் கொண்டு, அவரை, ஆரியருக்கு எதிராகவும் சித்தரிக்க முயன்றனர். ஆனால், இத்தகைய விவகாரங்களில், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் ஏற்பட்டன.

Akalanka and kundakunda

எல்லீஸின் மிராசுதார், பள்ளர்பறையன் ஆராய்ச்சிகள்[4]: பள்ளர், பறையோர் போன்றோர் வேளாளர், பிள்ளை முதலியோர்களுக்கு அடிமையாக வேலை செய்து வந்தனர் என்று எல்லீஸ் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டார்[5]. அப்படியென்றால், அவர்கள் வேளாளர், பிள்ளைமார்கள் முதலியவர்களை எதிர்த்து தான் போராடியிருக்க வேண்டும். “அந்தணருக்கும்”, “புலைச்சிக்கும்” பிறந்தவர் என்பதற்குப் பதிலாக, வேளாளார் / பிள்ளைமார் தந்தைக்கும், புலைச்சிற்கும் பிறந்தவர் என்று கதையை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், “பார்ப்பனரை”ப் பிடித்துக் கொண்டனர்! இன்னொரு பக்கம் இத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது. காலுடுவெல்லுக்கு முன்னரே, “திராவிட” பிரயோகத்தை எல்லீஸ் உபயோகப் படுத்தினார். தமிழ் உக்ரோ-பீனிஸ் மொழிக்குடும்பத்திலிருந்து பிறந்தது என்று வில்லியம்ஸ் கருதுகோளுக்கு எதிராக, தனது வாதத்தை வைத்தார். சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது, எந்த விதத்திலும், தமிழ் சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருக்க வில்லை என்று, வில்சனின் சித்தாந்தத்தையும் எதிர்த்தார். பிறகு, கால்டுவெல், திருக்குறள் மற்றும் சிந்தாமணி நூல்கள்களுக்கு சமஸ்கிருதத்திற்கும் (ஏன் லத்தீனுக்கும்) சம்பந்தமே இல்லை என்றார்[6].

Jaina Valluvar also changes face

திருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன் முதலியோர் ஈடுபட்டனர். சிரவணபெலகோலாவிற்கு சென்று, அங்கிருந்த ஜைனதுறவியை வைத்துக் கொண்டு, தமது ஆராய்ச்சியை செய்தனர். வேதாந்திகளுக்கு முன்னர் ஜைனம் தென்னிந்தியாவில் இருந்தது என்பதை எல்லீஸ் மறுத்தார். சங்கரர், ராமானுஜர் முதலியோர்களால் தான், ஜைனம் தேய்ந்தது. முதல் நூற்றாண்டிலிருந்து, பழங்கால தமிழ் இலக்கிய புலவர்கள் எல்லோருமே ஜைனர்கள் தாம். பௌத்தம், ஜைனத்தின் ஒரு சாகை. ஜைனம் தாம், தென்னிந்தியாவின் மதமாக இருந்தது, ஆனால், பிராமணர்களால் அது குறைக்கப் பட்டது. எல்லீஸ் இவ்வாறு பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்[7].  மேலும், அதற்கேற்றப்படி, எழுத வைத்து ஆவணங்களை உருவாக்கினர். திருவள்ளுவரின் காலத்தைக் குறைக்க, குறளின் மீதான வேத-உபநிஷத தாக்கத்தை மறுக்க, வேதாந்தத்தின் முக்கியத்துவத்தை நீர்க்க, போலி நூல்களை உருவாக்கினர். திருவள்ளுவர் பெயரில், சித்தர் நூல்களை எழுதவித்தனர். கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiosyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

24-06-2017

18-kizh kanakku - Jaina influence

[1] மேலும் அவர்களுக்குப் படிக்கத் தெரியாதலால், அவ்வாறு நேர்ந்தது. ஒருநிலையில், உள்ளூர்காரர்களை வைத்து நகல்களையும் எடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில், ஐரோப்பாவில், அவற்றை அதிக விலைக் கொடுத்து வாங்குவதற்கு நிறைய பேர் இருந்தனர்.

[2] டி. என். ராமச்சந்திரன், தஞ்சாவூர் [சேக்கிழார் அடிப்பொடி] இதனை கண்டுபிடித்து, குறும்புத்தகமாக வெளியிட்டார்.

[3] http://rcsi.hypotheses.org/488

[4] Ellis, Francis Whyte. Replies to Seventeen Questions, Proposed by the Government of Fort St. George, Relative to Mírasí Right: With Two Appendices, Elucidatory of the Subject. Printed at the Government Gazette Office, 1818.

[5] Ahuja, Ravi. “Labour relations in an early colonial context: Madras, c. 1750–1800.” Modern Asian Studies 36.04 (2002): 793-826.

[6] The term Dravidian was not coined by Caldwell, but, it was F.W. Ellis, who invented the phraseology. Ellis tried to expound a new theory that Tamil was born of the Ugro – Finnish group of languages, to disapprove the theory of the linguist Sir William. He also tried to disprove the theory of Prof. Wilson that South Indian languages followed Sanskrit and the prominent literary treasures are either a translation or adoption of Sanskrit. Later, Caldwell identifies in his own way that Tirukkural and Cinthamani as having no connections with Sanskrit. Caldwell tried to establish that Tamil is not indebted to Sanskrit as English to Latin, this is refuted by Kamil Zvelebil.

[7] In his unpublished ‘Observations on Parswa Natha’, Ellis maintained that  Buddhism was a sect of Jainism (n.d.), although elsewhere it is clear that he was open to various possibilities with respect to the relationship between  Jainism  and  Buddhism. Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains.”, p.272.