Archive for the ‘ஜாதி’ Category

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

ஜூலை 10, 2016

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

BJP Villuppuram meeting clash 08-07-2016

வியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.

பாஜக சண்டை விழுப்புரம்

தங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4].  கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின.  மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

BJP Villuppuram - Dinathanthi photo- 08-07-2016

வாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.

BJP Villuppuram - backdrop torn - 08-07-2016

பாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

BJP Villuppuram - torn backdrop - 08-07-2016

வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

BJP Villuppuram - chairs broken - 08-07-2016

பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

பாஜக மோத-ல்1

செயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].

பாஜக மோத-1

அரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)

[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41

[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/37530/clash-in-bjp-executive-council-meeting-15-arrested

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=168768

[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST

[7] தினத்தந்தி, பா... செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559721

[9] தினமலர், பா.., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559715

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3519127.ece

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=229607

[13] http://www.dailythanthi.com/News/India/2016/07/08012724/BJP-Committee-meeting-of-the-factional-conflict.vpf

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

 

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

மே 21, 2016

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhand. Photo- Virender Singh Negi-The Hinduசமீபத்தைய கோவில் நுழைவு போராட்டங்கள்: தருண் விஜய் என்ற பிஜேபி எம்.பி அதிக ஆர்வத்துடன் சில வேலைகளை செய்து வருவது தெரிந்த விசயமே. திருக்குறள் தேசிய நூல், திருவள்ளுவருக்கு சிலை என்றெல்லாம் அதிரடியாக வேலைகளை செய்து வந்தார். தமிழுக்கு ஆதரவாகவும் பாராளுமன்றத்தில் பேசிவந்தார். அவரது பேச்சுகள் மற்றும் காரியங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, அவருக்கு ஆர்வம் இருந்தாலும், அவருக்கு இவ்விசயங்களில் ஆலோசனை கூறுபவர்கள் சரிவர விவரங்களை சொல்வதில்லை என்றே தெரிகிறது. யாரும் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தடாலடியாக இருங்க முடியாது. குறிப்பாக இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை எதிர்த்து செயல்படும் காரியங்கள் பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையுள்ளது. மேலும், திருப்தி தேசாய் போன்றோர் செய்து வரும் கலாட்டாக்களுக்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் மற்றும் 24×7 பாணி-பிரச்சாரம் இவருக்கு செய்யப்படவில்லை. இப்பொழுது கூட பிடிஐ கொடுத்த செய்தியை, எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. திருப்தி தேசாய் பின்னால் ஓடிச் சென்று வீடியோ எடுத்து, டிவி-செனல்களில் போட்டு, வாத-விவாதங்களை வைத்து எதையும் செய்யவில்லை.

TARUN-VIJAY attacked by mob 20-05-2016கோவில் நுழைவு அனுமதி யாருக்கு மறுக்கப்படுகிறது?: டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சக்ரதா கிராமத்தில் உள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது[1]. இதேபோல, ஜவுன்சார் – பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, 20-05-2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார்[2]. பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது[3].  கோவிலில் நுழைய யாருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர் (Backward communities), தலித் (Dalit) என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன.

tarun-vijay-attacked_20-05-2016போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[4]: இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: “ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில் அருகே பந்தல் அமைத்துபண்டாரா‘ (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது. இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம்தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்?’ என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்”, என்றார் உயரதிகாரி[5].

Tarun Vijay attacked 20-05-2016தருண் விஜய் மீது தாக்குதல்[6]: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அவர் காயம் அடைந்ததுடன், அவரது காரும் நொறுக்கப்பட்டது. அவர் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tarun Vijay at Silgur Temple in Uttarakhand.20-05-2016கோவிலில் நுழைய தடை ஏன், என்ன நடந்தது?: கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை என்கிறார்கள். மேலும் தாக்குதல்-மோதல்-கல்வீச்சு முதலியவை ஏன் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்[7]. எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை[8]. கோவிலுக்கு செல்லும் முன்னர் அல்லது சென்று வெளியே வந்தபோது, வாக்குவாதம், கல்வீச்சு ஏற்பட்டன என்று இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. சமீபத்தில் பிஜேபி சாங்கிரஸ் ஆட்சி கவிக்க்க சில காரியங்கள் செய்ததும், பிறகு நீதி மன்றம் மூலம், விலக்கப்பட்ட முதலமைச்சர் மறுபடியும் அமர்த்தப்பட்டது முதலியவை நடந்துள்ளன என்பதால், ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமா என்றும் யோசிக்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.பி தலைவியுடன் கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளதால், உ.பி தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் வேலையா என்றும் நோக்கத்தக்கது. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்[9].

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhandவைரமுத்து கண்டனம்- தருண் விஜயை பெரியாரோடு ஒப்பிட்டது[10]: தருண் விஜய் எம்.பி. சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தருண் விஜய் மீதும், தலித்துகள் மீதும் நடந்த தாக்குதலை ரத்தம் கசியும் நெஞ்சோடு வன்மையாக கண்டிக்கிறேன். இது சமூக நீதியின் மீது விழுந்த காயம் என்று வருந்துகிறேன். கடவுள் மனிதனை படைத்தார் என்பது உண்மையானால், தலித்துகளையும் அவர் தான் படைத்திருப்பார். தலித்துகளை ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள். உத்தரகாண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூகநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு வன்முறை இனி நிகழாமல் காக்க வேண்டும். எனக்கு தோன்றுகிறது, வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். “வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, என்று சொன்னதால் பெரியார் பக்தர்கள், அத்தகைய ஒப்பீட்டை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

 21-05-2016

[1]    Indian Express, Mob attacks BJP MP Tarun Vijay in Dehradun, By: PTI, Dehradun, Updated: May 21, 2016 12:37 am

[2] http://indiatoday.intoday.in/story/ukhand-bjp-mp-tarun-vijay-attacked-by-mob/1/673715.html

[3] http://indianexpress.com/article/india/india-news-india/mob-attacks-bjp-mp-tarun-vijay-2811424/

[4] தினமணி, கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம், By  நமது நிருபர், டேராடூன் / புது தில்லி,; First Published : 21 May 2016 03:21 AM IST.

[5]http://www.dinamani.com/india/2016/05/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/article3443926.ece

[6] தினத்தந்தி, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார் கவிஞர் வைரமுத்து கண்டனம், மாற்றம் செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக எம்.பி. தருண் விஜய் படுகாயம், By: Karthikeyan, Published: Friday, May 20, 2016, 20:51 [IST].

[8] “What exactly happened remains unclear, but it is not a case of Dalits not being allowed in the temple. Had that been the case, the MP and Mr. Kunwar would not have been allowed into the temple. But they were attacked after they visited the temple,” Dehradun Superintendent of Police (Rural) T.D. Waila toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-tarun-vijay-injured-in-mob-attack-outside-temple-in-uttarakhand/article8627010.ece

[9] http://tamil.oneindia.com/news/india/bjp-mp-tarun-vijay-injured-after-scuffle-hospitalized-254222.html

[10] http://www.dailythanthi.com/News/India/2016/05/21001853/MP-Tarun-Vijay-in-attack-Was-injured.vpf

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

நவம்பர் 9, 2013

ராகுலின் முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ., தொடர்பு பற்றிய பேச்சு, முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு, தேர்தல் கமிஷனில் புகார், ராகுலின் மறுப்பு!

Rahul hate speech at Churu, Rajasthan ISI etc

பாகிஸ்தான் உளவுப்படை முசபர்நகர்முஸ்லிம்களைசந்திக்கிறது: காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், ‘.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, .எஸ்.., தொடர்பு கொண்டு பேசியதுஎன்றார். ‘முசாபர்நகர் மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சந்தித்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக, வன்முறையில் ஈடுபட அவர்களை ஊக்குவித்ததாகவும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த மத கலவர தீயை பாஜ.தான் தூண்டி விட்டது. அதை காங்கிரஸ் அணைத்து வருகிறது என்று ராகுல் பேசினார். அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – ஜட்டுகள் இவர்களிடம் இப்படி அழவில்லை போலும்!

முஸ்லிம்தலைவர்களின்கண்டனம், எதிர்ப்புமுதலியன: முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத் மௌலானா மதனி என்ற உலிமா-இ-ஹிந்த் முஸ்லிம்மத தலைவர், “ராஹுல் மிகவும் பொறுப்பற்றமுறையில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. உண்மையில் அத்தகைய விசயங்கள் அரசியல் ஆக்கக் கூடாது. ஒருவேலை அத்தகைய விவரம் அவருக்குக் கிடைத்திருந்தாலும் இவ்வாறு வெளிப்படையாக அறிவிப்பது, முறையற்றதாகும்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[1]. மௌலானா கல்பே சாதிக் என்ற இன்னொரு முஸ்லிம்மத தலைவர் அதனைக் கண்டித்து, போடியின் கருத்தை ஆதரித்து, “மோடியிடத்தில் அம்மாதிரியான மாற்றத்தை நாங்கள் காண நேர்ந்தால், 2002ஐ மறந்துவிடும்படி, முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்வோம்”, என்றும் கூறியிருந்தார்[2]. ஆஸம் கானே, .எஸ். தொடர்பு கொண்ட முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா என்று கேட்டார்[3].  கே.எம். செரிப் என்ற பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியாவின் தலைவர், “காங்கிரஸ் தனது திட்டத்தின் மூலம், பிஜேபியையும் மிஞ்சுகிறது”, என்று கமென்ட் அடித்தார்[4]. உடுப்பியில் குலாம் மொஹம்மது என்ற ஜனதா தள் (செக்யூலர்) மாவட்டத் தலைவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்[5]. முஸ்லிம்களைப் பொறுத்த வரையிலும், ராகுலின் பேச்சு முஸ்லிம் சமுதாயத்தின் மீது சந்தேகத்தை இன்னும் அத்கப்படுத்துவதாக கவலைக் கொண்டுள்ளனர்[6].

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

குல்லா போட்டு, இப்படி கும்பிடுகிறேனே, இன்னுமா நம்பிக்கை வரவில்லை, யா அல்லா!

மோடியின்கேள்விகள்: மோடி, “இளவரசர் .எஸ். முஸ்லிம்களை தொடர்பு கொள்ளும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்? அதனை ஏன் தடுக்கவில்லை. மேலும் அவரிடத்தில் .எஸ். அவ்வாறு முஸ்லிம்களிடம் தொடர்பு கொண்டது என்று சொல்வதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறாதா?”, என்றும் கேட்டிருந்தார்[7]. அதுமட்டுமல்லாது, அரசில் எந்த பதவியும் வகிக்காமல்,வெறும் கட்சியின் துணைத்தலைவர் என்ற நிலையில் இருக்கும் போது, இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், எவ்வாறு அவரிடத்தில் அத்தகைய ரகசியமான தகவலை சொல்லமுடியும், அந்த முஸ்லிம் இளைஞர்களின் பெயர்களை வெளியிட முடியுமா, என்று கேட்டிருந்தார். இதற்குள் எதிர்பார்த்தபடி, உள்துறை அமைச்சகம் அதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டதாம்[8]. உத்திரபிரதேச அரசும் அவரது பேச்சை மறுத்து, பதிலுக்கு நூற்றுக் கணக்கான குஜராத்தியர் அங்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர் என்றது. இந்த கண்டுபிடிப்பை, பேனி பிரசாத் வர்மா என்பவர் செய்துள்ளார்[9].

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம் - சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம் – சோனியாவிற்கு கோபம் வந்து விட்டதோ!

தலைமைதேர்தல்கமிஷனில்புகார், நோட்டீஸ்: பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர். ‘சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிட கான்பூர் தலைமை மாஜிஸ்ட்ரேட் கோர்டில் சமஜ்வாடி கட்சி தலைவர் பர்ஹான் லரி, “ராகுலின் பேச்சு முஸ்லிம்களின் மனங்களை பாதிப்பதாக உள்ளது”, என்று பிரபுல்ல கமல், தலைமை மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் கொடுத்தார். இதுதவிடர வணிக சங்கத்தலைவர் ஞானேஸ் திவாரி மற்றும் சமூக சேவகர் மொஹம்மது இஸ்லாமுத்தீன் என்பவர்களும் அதே கோர்ட்டில் புகார் கொடுத்துள்ளனர்[10].  இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, ‘இது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த மாதம் 31ம் தேதி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நவம்பர் 4ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி கெடு விதித்தது.

சோனியா, ராகுல், மன்மோஹன் - செக்யூலரிஸ விஜயம்

சோனியா, ராகுல், மன்மோஹன் – செக்யூலரிஸ விஜயம்

ராகுல்பதில்அளிக்கமேலும்அவகாசம்கேட்டது: தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், ‘பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது[11].இந்த கெடுவை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கும்படி தேர்தல் ஆணையத்தை ராகுல் கேட்டு கொண்டார். அதை ஏற்ற தேர்தல் ஆணையம், நவம்பர் 8ம் தேதி காலை 11.30க்குள் விளக்கத்தை அனுப்பும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், 08-11-2013 காலை 11.30 மணி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக, ராகுல் அனுப்பிய விளக்க கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்தது[12].

Sonia angry

மதஉணர்வுகளைத்தூண்டவில்லை[13]: “ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களின்போது மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை” என்று காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அனுப்பியிருந்த நோட்டீசுக்கு வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ராகுல் காந்தி பதில் அனுப்பியுள்ளார். அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. யாருடைய மனதையோ மத உணர்வுகளையோ தூண்டும் வகையில் பேசவில்லை. வகுப்புவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. எனவே, அது தொடர்பான திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கிப் பேசினேன். எந்த இடத்திலும் மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் நான் பேசவில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். அதை நிராகரிக்க வேண்டும்‘ என்று ராகுல் காந்தி கடிதத்தில் கூறியுள்ளார்.

உரியநடவடிக்கைதேர்தல்ஆணையம்: ராகுல் காந்தியின் கடிதம் கிடைத்த தகவலை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். அவரது விளக்கத்தை ஆணையம் உரிய முறையில் பரிசீலித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று சம்பத் கூறினார். ஊடகக் காரர்கள் அக்கடிதத்தில் என்ன இருந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்ல மறுத்து விட்டார். ஏற்கெனவே என்.ஐ.ஏ, சிபிஐ முதலியவை காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்கிறது என்று பரந்த புகார் உள்ளது. இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் உண்மையில் செயல்படுவாரா இல்லையா என்று சந்தேகத்தில் தான் உள்ளது. ராகுலின் மீது நாட்டில் பல இடங்களில் மாஜிஸ்ட்ரேட் கோர்ட், போலீஸ் என்று புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் இப்புகாரை நிராகரித்து விட்டால், மற்ற குற்றப் புகார்களும் அடிபட்டு விடும். முன்பு இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலை, ராகுலுக்கு ஏற்படுமா, அவ்வாறு ஏற்பட சோனியா விட்டுவிடுவாரா என்று ஆராயத்தக்கது.

© வேதபிரகாஷ்

09-11-2013


[1] Criticising Rahul Gandhi for his ISI remark, Jamiat Ulema-e-Hind leader Maulana Madani said, “Rahul Gandhi’s statement was very irresponsible and we condemn it. Such issues must not be politicised. Even if he had any such information, it’s a reckless statement.”

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[2] While Rahul is being criticised by Muslim clerics, Modi got unexpected support from a top Muslim cleric, Maulana Kalbe Sadiq. “If we see a change in the attitude of Modi, we will try to convince Muslims to forget 2002. Such a thing has happened in the past,” Sadiq said.

http://ibnlive.in.com/news/muslim-clerics-fume-over-rahuls-isi-remark-modi-demands-apology/430534-37-64.html

[3] Khan also urged Rahul Gandhi to come forward with the names of the Muslim youth that were allegedly contacted by Pakistani agents to help the Samajwadi Party-led Uttar Pradesh to take action accordingly.

http://zeenews.india.com/news/nation/azam-khan-asks-rahul-gandhi-to-name-muslim-youth-approached-by-isi_885794.html

[7] Questioning Rahul’s Indore speech on ISI trying to recruit riot-affected victims in Uttar Pradesh’s Muzaffarnagar, the BJP leader asked what the Congress Vice President had done to address the issue. “What has the shahzada done to stop the ISI from reaching out to Muslims in Muzaffarnagar,” asked Modi while addressing a rally in Jhansi on Friday.His second question to Rahul was more direct. The Gujarat strongman questioned the credibility of Rahul’s statement on ISI. “Does shahzada have any proof of ISI reaching out to riot victims?” he said.

[9] The Uttar Pradesh Government on Saturday officially dismissed Congress vice-president Rahul Gandhi’s claims about Pakistan’s ISI being in touch with affected Muslim youth from riot-hit Muzaffarnagar even as Union Steel Minister Beni Prasad Verma added a new dimension, saying hundreds of people from Gujarat had come to Muzaffarnagar to indulge in rioting.

http://www.dailypioneer.com/sunday-edition/sunday-pioneer/nation/up-dismisses-rahuls-isi-in-touch-claim.html

[10] Samajwadi Party leader Farhan Lari, while alleging that Rahul had hurt the sentiments of the Muslim community, has lodged the complaint before the CMM Prafulla Kamal. Another case has been lodged by traders’ leader Gyanesh Tewari and social worker Mohammad Islamuddin in the same court. The duo too have maintained that the statement has posed serious threat to the country’s integrity.

http://www.hindustantimes.com/india-news/two-complaints-filed-against-rahul-gandhi-for-isi-statement/article1-1140912.aspx

[13] தினமணி, 09 November 2013 01:46 AM IST,

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (5)

 

07-09-2013 (சனிக்கிழமை): பாதிக்கப்பட்ட ஜட் என்கின்ற ஜாதி மக்கள் வழக்கம் போல பஞ்சாயத்து கூட்டினர். தொடர்ந்து அவர்களது பெண்கள் முஸ்லிம்களால் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்வது போன்ற நிகழ்சிகள் நடந்து வருவதால், “பேடி பசாவோ, பஹு பசாவோ அந்தோலன்” [Beti Bachao Bahoo Bachao panchayat] “மகளை காப்பாற்றுங்கள், மறுமகளை காப்பாற்றுங்கள்” என்று பஞ்சாயத்தைக் கூட்டினர். அது நிச்சயமாக தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதால், (முஸ்லிம்கள்) மஹாபஞ்சாயத்திற்கு செல்பவர்கள் தாக்கப்பட்டனர்[1]. அதாவது, இந்துக்களை முஸ்லிம்கள் தாக்குகின்றனர் என்றகிறது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, முன்னர் வால்மீகி சமுதாயத்தினருக்கும், முஸ்லிம்ளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறும் தொடர்பு படுத்தப் படுகிறது[2]. இதற்கும் இப்பொழுதைய பிரச்சினைக்கும் என்ன தொடர்பு என்று ஊடகங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இரு கும்பல்களும் எரியூட்டல் போன்ற காரியங்களில் இறங்கியதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த இடத்தை வீடியோ எடுக்க முயற்சித்தபோது ஐ.பி.ஏன்..7 டிவி.செனலின் நிருபர் ராஜேஸ் வர்மா கொல்லப்பட்டார். போலீசாரால் அமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் இஸ்ரர் வகீல் என்பவரும் கொல்லப்பட்டார்[3]. இது தவிர மற்றவர் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ராணுவம் அழைக்கப்பட்டது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

 

08-09-2013 (ஞாயிறு): ஆனால் கலவரம் நடந்து கொண்டிருந்தது. முசபர்நகரின் கொத்வால், நயீ மண்டி முதலிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமூல் படுத்தப்பட்டது. ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதற்குள் இறப்புகள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. உள்ளூர் போலீசாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாகிறது.

 

09—09-2013 (திங்கள்): இறப்புகள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் போர்க்களம்போல காட்சியளிக்கின்றன. கலவரம் மீண்டும் ஏற்படகூடும் என்ற பீதியில் பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறி விட்டனர்[4]. இதனால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு 10–க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[5]. சுமார் 20 பேரை காணவில்லை என்று உறவினர்கள் தேடி வருகிறார்கள். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. சில கிராம மக்கள் போலீஸ் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு சட்டம்-ஒழுங்கு நிலை முழுவதுமாக சீர்குலைந்ததால், மாநில கவர்னர் பி.எல். ஜோஷி மத்திய அரசிடம் மாநில அரசு தனது நிர்வாகத்தன்மை முதலியவற்றை இழந்தது, கலவரங்களை அடக்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

கலவரம்நடந்தபிறகுமேற்கொண்டநடவடிக்கைகள்: இதனால், வேறு வழியின்றி, உயர் பொலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைவர்கள் அந்த பகுதிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டது. மன்மோஹன் சிங் அகிலேஷ் யாதவுடன் போனில் கலவரத்தை அடக்க மேற்கொண்ட முயற்சிகள் பற்றி பேசினார். மத்திய உள்துறை செயலாளர், கேபினெட் செயலாளர் மற்றும் புலனாய்வுத் துறையுடன், முசபர்நகர் நிலவரம் பற்றி சந்தித்து பேசினர். இதுதவிட பேஸ்புக் தளமும் கண்கானிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு, சமஜ்வாடி அரசை நீக்க விரும்பவில்லை என்றாகிறது. இது காங்கிரஸ்- சமஜ்வாடி கட்சிகளின் கூட்டைத்தான் காண்பிக்கின்றது.

 

பாஜகவின்மீதுபழிமற்றும்நான்குஎம்.எல்.ஏக்கள்மீதுஎப்..ஆர்: இதற்கிடையே முசாபர் நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை பா.ஜ.க. தூண்டி விட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அவரது உத்தரவின் பேரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குகுமசிங், சுரேஷ் ரானா உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. ஒப்புக்கு ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பெயர் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கலவரப்பகுதியில் ஆய்வு நடத்த 3 பேர் குழுவை அனுப்பி உள்ளார். ஆனால், முச்லிம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலவ்சரம் தூன்டிய விதத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடரவில்லை.

 

பாரதீயஜனதா, பகுஜன்சமாஜ்கட்சிகள்சமஜ்வாடிகட்சிமீதுகுற்றம்சாட்டின: முசாபர் நகர் மாவட்டத்தில் அடிக்கடி சாதி கலவரம் ஏற்பட்டபடி உள்ளது. எனவே அதை தடுக்க உத்தரபிரதேச அரசு தவறி விட்டதாக பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அகிலேஷ் யாதவ் அசட்டையாக இருப்பதாகவும், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன. மாயாவதி பிஜேபிதான் காரணம் என்று சமஜ்வாதி கட்சி கூறுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்[7], ஏனென்றால், ஆகஸ்ட் 27ல் நடந்த நிகழ்ச்சியிலிருந்துதான் இவை ஆரம்பித்துள்ளன என்பது எலோருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்[8].

 

வழக்கம்போலஅதிரடிநடவடிக்கைகள், நிதியுதவிமுதலியவை: மத்திய ரிசர்வ் போலீசாரும் 1200 அதிரடிப் படை வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் முசாபர்நகர் எல்லைகளில் தடுப்பு அரண் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர உத்தரபிரதேச – உத்தரகாண்ட் எல்லை ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்துக்குள் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதல் – மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். பலியான பத்திரிகையாளர் ராஜேஸ் வர்மா குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது[9].

 

அகிலேஷ்தந்தைவழிபின்பற்றுகிறார்போலிருக்கிறதுஅப்பாமுல்லாஎன்றால்மகன்மௌலானா: மாநில முதலமைச்சர் எனும் போது, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று பாராமல் செயல்படவேண்டும். ஆனால், அகிலேஷ் யாதவ், முஸ்லிம் குல்லா அணிந்து கொண்டு, இந்த வேளையிலும், அடிப்படைவாதி முஸ்லிமான ஆஸம் கானுடன் சேர்ந்து கொண்டு உலவி வருகிறார். இது இந்துக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தாது. இப்பொழுது, இந்து-முஸ்லிம்கலவரம் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பிரிந்துதான் ஓட்டளிப்பார்கள். அப்படியென்றால், அடுத்தது, ஒரு ஜாதி கலவரத்தை ஏற்படுத்தினால், இந்து ஓட்டுகள் சிதறிவிடும் பிறகு, ஒட்டு மொத்த 30% முஸ்லிம் ஓட்டு எந்த கட்சிற்குக் கிடைக்கிறதோ, அக்கட்சிதான் ஜெயிக்கும். அதாவது, சமஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும். இவையெல்லாம், சோனியா இல்லாதபோது, நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[2] On Saturday, police and the district administration asserted that text messages were sent sent to both communities about incidents that had never taken place.” “We received calls from several people asking about certain stone-pelting incidents and killings that never occurred. It seems people were being egged on,” an officer said. Earlier this week, Ehsan, a resident of Kalander Shah, was killed in Shamli after he picked up a fight with Nandu, a Valmiki who had allegedly parked his garbage cart outside Ehsan’s house. “They had an argument over the garbage cart which led to a scuffle. A few hours later, Vamikis stoned a Muslim’s car. Matters flared up and Ehsan was shot dead. At least three houses were torched,” the officer said. He added that communal tension in Shamli had increased after the Kawaal incident. DGP Deo Raj Nagar said the government had formed a Special Task Force to investigate the Kawaal incident. “Some elements are trying to create communal tension in the region. The STF will help normalise the situation. No one will be allowed to breach peace in the area,” he said.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/3

[3] A freelance journalist associated with IBN7, Rajesh Verma, was shot dead in the Kotwali police station area. In another incident of violence, a photographer, Israr, who was hired by the police, was beaten to death in Thana Sikhera area. Both the media personnel were killed while covering the clashes. Read more at: http://www.firstpost.com/india/ibn7-journalist-killed-in-up-communal-riots-army-clamps-curfew-1092877.html?utm_source=ref_article

[7] . Mayawati also refuted the charge of the SP government that the BJP was behind the riots, and said that she did not buy this theory as the matter escalated from a trivial case on August 27. “The state government is trying to hide behind falsehood and trying to cover up its incompetence,” she added.

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்!

மே 9, 2013

ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

ஜனநாயக ரீதியில் கர்நாடக மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் சாரம் – ஒரே இடத்தில் ஊழல் கட்சியைத் தோற்கடிக்க முடியும், இன்னொரு மாபெரும் ஊழல் கட்சியை வெற்றிப் பெறச் செய்யவும் முடியும்.

“கம்யூனலிஸம்” பேசாமலேயே, ஆனால், அதனையே ஒரு பிரச்சார யுக்தியாக வைத்துக் கொண்டு, ஊடகங்களின் துணையோடு, சோனியா விளையாடியுள்ள சதி வெளிப்படுகிறது[1].

ஜாதி, ஜாதியம், மக்கள் வேற்றுமை, பிரிப்பு, பிரித்தாள்வது என்ற குறுகிய, அபாயகரமான விளையாட்டைத்தான் சோனியா செய்துள்ளார்[2].

ஆனால், அதே முறை மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப் போகிறோம் என்பதை முன்னமே சுட்டிக் கட்டப்பட்டது[3].

ஒரே நேரத்தில் உண்மையை மறைக்க, சீக்கியர்களின் அரசியலை குழப்ப, சோனியா-ராகுல் நாடகம் நன்றாகாவே அரங்கேறியுள்ளது[4]. அதற்கு கர்நாடகம் உதவியுள்ளது[5].

பெங்களூரு வெடிகுண்டு[6] – பிரச்சினை, கம்யூனலிஸமாக்கி, பிஜேபியே குண்டு வைத்தது என்று சொல்லி, பிறகு ஆர்.எஸ்.எஸ். வைத்தது[7] என்று சொல்லி பெரிய நாடகம் ஆடியுள்ளனர் சோனியா காங்கிரஸ்காரர்கள்[8].

இந்நாகத்தைக் கூரந்து கவனித்தால், ஒருவேளை காங்கிரஸுக்கே தொடர்பிள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது[9]. ஏனெனில், இப்பொழுது ஆதாயம் பெற்றது சோனியா காங்கிரஸ் தான்[10]. ஜிஹாதிகளுக்கும் சோனியா காங்கிரஸுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகம் எழுகின்றது[11].

பிறகு ஊழல் தோற்றதா, வெற்றிப் பெற்றதா என்று நோக்கினால், மக்கள் என்ன செய்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில் ஊழல் பேஜிபிஐ தனித்து வைத்தால், ஊழல் ஒழிந்து விடுமா அல்லது ஊழலில் உருவமாக, ஆணவத்துடன் பதவியில் இருந்து கொண்டு, இந்த வெற்றியும் எங்களது வெற்றியே என்று எக்காளமிட்டுக் கொண்டொருப்பது, அதனை சீராட்டுவதாகுமா?

ஊழலுக்கு, ஊழலுக்காக, ஊழல் செய்தே, ஊழலை வளர்க்கும் ஒரே கட்சி சோனியா கங்கிரஸ் தான், என்பதை அறிந்த பின்னும், ஊழலை மதிப்பதேன்?

“ஊழல் உலகெங்கிலும் உள்ள ஒரு பிரச்சினை” என்று மாமியார் நியாயப்படுத்தினார், மறுமகளோ, அது எங்கள் பிறப்புரிமை, பிறப்பிடம், என்றெல்லாம் மெய்பித்து, கீழுள்ள அடிவருடிகளையும் ஊழலில் திளைத்து வைத்துள்ள ஒரு மாபெரும் ஊழல் மகராணியாக மாறியுள்ளார்.

ஊழலை எதிர்ப்பவர்களே, ஊழல்காரர்களுக்கு ஓட்டுப் போடு வெற்றிப் பெறச் செய்தது – ஊழலுக்கு வெற்றியா அல்லது ஊழல் கட்சிக்கு வெற்றியா.

© வேதபிரகாஷ்

09-05-2013


சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html