Archive for the ‘கிருஷ்ணமூர்த்தி’ Category

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

ஜூன் 19, 2016

சிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்!

சிலை மாறிய மர்மம்

இந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:

இந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:

  • ஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா?
  • இந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா?
  • இறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன?

உண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.

 Siva, Radhakrishnan,....., Raja, Tarun etc

செக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.

சிலை அரசியல், திராவிட ஆதரவு - வைரமுத்துஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும்! ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.

திருவாள்ளுவர் கழகம் - முத்துக்குமாரசாமி தம்பிரான், திருக்குறள், பிஜேபி, தருண் விஜய்

திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.

© வேதபிரகாஷ்

19-06-2016


Tarun Vijay, his wife at Chennai airport 15-06-2016

[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம்!, பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.

[2]http://www.dhinasari.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/9353-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html

[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/article7556712.ece

[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவமாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST

[6] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..

https://www.facebook.com/search/results.php?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&init=public

[8]http://www.dinamani.com/india/2015/08/23/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5/article2988276.ece?service=print

[9] http://www.dailythanthi.com/News/India/2015/12/18033815/In-ParliamentThirukkuralFestival.vpf

[10]https://rationalisterrorism.wordpress.com/2010/02/14/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.

கண்ணுதல், பொதுமறை குறள்தான் குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531