Archive for the ‘ஆர்.எஸ்.எஸ்,’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?

ஜூன் 4, 2023

எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர்இதன் அர்த்தம் என்ன?

அறிவுரை யாரை நோக்கி சொல்லப் பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.

இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்[1]. வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன[2]. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

இந்தியர்கள் அந்நியர்களின் கலப்பினை மறந்து ஒன்றுபட வேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]

வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன, ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும். இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும்.இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது.

இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம்[5]. ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம். ஒன்றாக வாழ்வதற்கும், நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும்[6].

புறத்தோற்றங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை, இந்தியர்களே: நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும். இது தான் நமது தாய்நாடு.

நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது.பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை.

இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது.

ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது:நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம். இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம்.

ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்[7].இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம்.

நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது[8]. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது[9]. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தினமலர், இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஜூன் 02,2023 13:33;

[2] https://m.dinamalar.com/detail.php?id=3337052

[3] காமதேனு, எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!, Updated on : 2 Jun, 2023, 1:40 pm

[4] https://kamadenu.hindutamil.in/politics/outsiders-have-gone-now-everyone-is-insider-rss-chief-mohan-bhagwat

[5] Indian Express, ‘Where is Islam safe other than India?: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.

[6] https://indianexpress.com/article/cities/mumbai/where-is-islam-safe-other-than-india-rss-chief-mohan-bhagwat-in-nagpur-8642270/

[7] தினத்தந்தி, எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம்ஆர்.எஸ்.எஸ். தலைவர், தினத்தந்தி Jun 2, 8:42 am

[8] https://www.dailythanthi.com/News/India/fighting-among-ourselves-instead-of-showing-strength-to-enemies-at-border-rss-chief-mohan-bhagwat-977491

[9] Hindustan Times, ‘Islam is safe in India…forget foreign connections’: RSS chief Mohan Bhagwat, By HT News Desk, Jun 02, 2023 10:52 AM IST

[10] https://www.hindustantimes.com/india-news/islam-is-safe-in-india-forget-foreign-connections-rss-chief-mohan-bhagwat-101685676872813.html