Archive for the ‘தன்னிலை பிரமாணப் பத்திரம்’ Category

தீஸ்தா செதல்வாத்-ஜாவித் ஆனந்த் செக்யூலரிஸ தம்பதியரின் இந்துத்துவ எதிர்ப்பு காட்டும் உண்மைகள் என்ன?

பிப்ரவரி 13, 2015

தீஸ்தா செதல்வாத்ஜாவித் ஆனந்த் செக்யூலரிஸ தம்பதியரின் இந்துத்துவ எதிர்ப்பு காட்டும் உண்மைகள் என்ன?

தீஸ்தா செதல்வாத்-ஜாவித் ஆனந்த் செக்யூலரிஸ தம்பதியரின் இந்துத்துவ எதிர்ப்பு

தீஸ்தா செதல்வாத்-ஜாவித் ஆனந்த் செக்யூலரிஸ தம்பதியரின் இந்துத்துவ எதிர்ப்பு

ரூ 15 மில்லியன்கள் / 1.51 கோடிகள் கையாடல் பற்றிய புகார்: குல்பர்கா சொசைடி வீடுகளில் இருந்தவர்கள் மற்றும் 2002 கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்கள், அயல்நாடுகளில் இருந்து தமக்கு அளிக்கப் பட்ட நன்கொடைப் பணமான ரூ 15 மில்லியன்கள் / 1.51 கோடிகளை, தீஸ்தா செதல்வாதே தமக்குக் கொடுக்காமல் கையாடி விட்டார் என்று ஜனவரி 5. 2014ல் போலீஸாரிடம் புகார் கொடுத்தனர்[1]. குறிப்பாக அப்பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான் சைத்கான் பதான் [Firozkhan Saidkhan Pathan] என்பவர் 2013லேயே புகார் கொடுத்துள்ளார். நீதி மற்றும் அமைதிக்கான சங்கம் [the Citizens for Justice and Peace] பெயரில் ரூ, 63 லட்சங்கள் மற்றும் சபரங் டிரஸ்ட் பெயரில் [Sabrang Trust] ரூ. 88 லட்சங்களும் வசூல் செய்யப்பட்டன[2]. முதலில் அப்பணத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதாக இருந்தது, ஆனால், பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. பிறகு “2002 கலவரத்தை” விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைப்போம் என்றார்கள். ஆனால், அது இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அதிகமாக்கும் என்று முஸ்லிம்களே எதிர்த்ததால் அத்திட்டமும் கைவிடப் பட்டது. ஆனால், தங்களது பெயரில் வசூலித்தப் பணத்தை அவரே வைத்துக் கொண்டுவிட்டார் என்பது தான் குல்பர்கா சொசைடிவாசிகளின் புகார். புகாரின் மீது முதல் போலீஸாரால் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Teesta way of rioting riot

Teesta way of rioting riot

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்காதது, கைதுலிருந்து தப்பிக்க மனு போட்டது (2014): போலீஸார் விசாரணை செய்ய ஆரம்பித்தனர். ஆனால், தம்பதியர் விவரங்களைக் கொடுக்காமல் தட்டிக் கழித்து வந்தனர். நாங்கள் சொல்லவேண்டியதெல்லாம், எங்களதுஇ தன்னிலை விளாக்கப் பிரமஆணங்களிலே உள்ளது, அவற்றைப் பார்த்துக் கொள்ளூங்கள் என்று அலட்சியமாக பதில் கூறினர். நேரில் ஆஜராக உத்தரவிட்டபோதிலும் ஆஜராகாமல் இருந்தனர். போலீஸார் இதனால் அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று நீதிமன்றத்தில் மனு போட்டது. அவரை கைது செய்யுமாறு குஜராத் நீதிமன்றம் ஆணையிட்டது. நீதிபதி ஜே. பி. பர்டிவாலா தீஸ்தா செதல்வாத் மற்றும் அவரது கணவர் ஜேவித் ஆனந்த் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். போலீஸார் எப்பொழுது விவரங்கள் கேட்டாலும், அவையெல்லாம் தான் தாக்கல் செய்ட்துள்ள தன்னிலை பிரமாணப் பத்திரத்தில் உள்ளது என்று தட்டிக் கழித்து வருகிறார், என்று போலீஸார் எடுத்துக் காட்டியுள்ளனர்[3]. இதனால், கணவன் – மனைவி இருவரும் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்கள் கொடுத்து திசைத்திருப்புகிறார்கள் என்றும் எடுத்துக் காட்டப் பட்டது[4]. பிப்ரவரி 19, 2014 அன்று அஹமதாபாத் குற்றவியல் பிரிவு போபீஸ் அலுவகத்தில் ஆஜராகச் சொன்னபோதும், ஆஜராகவில்லை.  பிப்ரவரி 2014லேயே, குஜராத் நீதிமன்றம் அவர்களது கைது செய்யும் முன் தப்பித்துக் கொள்ள முன் ஜாமீன் கேட்டு போட்ட மனுவை நிராகரித்து விட்டது. இதனால், உச்சநீதி மன்றத்திற்கு சென்றபோது, ஏப்ரல் 2014 வரை ஒத்திவைத்தது[5]. இதற்குல், தேர்தல், ஆட்சி மாற்றம் மோடி குஜராத்தின் முதல் மந்திரி விடுத்து, பிரதம மந்திரி ஆதல் முதலியவை நடந்தன.

Zakia Jafri and Teesta Setalvad visit her Gulbarg Society hom

Zakia Jafri and Teesta Setalvad visit her Gulbarg Society hom

சட்டமீறல்களை செக்யூலரிஸ விவாதத்தில் நுழைத்தது (ஜனவரி முதல் ஏபரல் வரை 2014): மோடி-எதிர்ப்பு விசயத்தை செக்யூலரிஸ்டுக்கள் என்று அழைத்துக் கொள்பவர்கள் இவ்விசயத்தை, சட்டமீறல் என்றதையும் மறந்து, மறைத்து செக்யூலரிஸ விசயம் போல வண்ணம் பூச, இதெல்லாம் மோடியின் சதி, பழிவாங்கும் போகு என்ற ரீதியில் பேச ஆரம்பித்தனர். தேர்தல் நேரத்தில் இதனை மோடிக்கு எதிரான பிரச்சாரத்தில் உபயோகப் படுத்திக் கொள்ளப் பார்த்தனர். உடனே மோடி அரசு பழிவாங்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது என்று மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி [The Communist Party of India (Marxist)] கடுமையாகக் கண்டித்தது[6]. அதை தொடர்ந்து வழக்கம் போல ரோமிலா தாபர் முதல் மற்றவர்கள் எல்லோரும் கையெத்துப் போட்டு போலீஸாருக்கு எதிராக அறிக்கை விடுத்தனர்[7].

  • ரோமிலா தாபர் – Romila Thapar (Professor Emerita of History, Jawaharlal Nehru University);
  • பி. என். ஶ்ரீகிருஷ்ணா, முந்தைய உச்சநீதி மன்றத்தின் நீதிபதி – Justice B.N. Srikrishna (former judge of the Supreme Court of India);
  • தீபக் நாயர், தில்லி பல்கலைக்கழகத்தின் முந்தைய துணைவேந்தர் – Deepak Nayyar (distinguished economist, and former Vice-Chancellor of the University of Delhi);
  • பி. பி. சவந்த், முந்தைய உச்சநீதி மன்றத்தின் நீதிபதி மற்றும் பிரஸ் கவுன்சிலின் சேர்மேன் – Justice P.B. Sawant (former judge of the Supreme Court and former chairman of the Press Council of India);
  • குல்திப் நாயர், பத்திரிக்கையாளர் – Kuldip Nayar (senior columnist and author);
  • நிருபம் சென், ஐக்கிய நாடுகளுக்கான முந்தைய தூதுவர் – Nirupam Sen (former Indian ambassador to the United Nations); and
  • பி, ஜி, கோஸ்லா, முந்தைய மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி – Justice B.G. Kolse Patil (former judge of the Bombay High Court).

“எமினென்ட் ஹிஸ்டாரியன்ஸ்” என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் இப்படி அடிக்கடி பற்பல விவகாரங்களில் நுழைகிறார்கள் என்று தெரியவில்லைதீதில் என்ன வேடிக்கை என்றால், அறிக்கை வெளியிட்டார்கள் என்று ஊடகங்களில் செய்தி வரும், ஆனால், பிறகு, அவர்கள் ஆதரித்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகும் போது, தங்களது நிலை என்ன என்பதை அவர்கள் சொன்னது அல்லது சொல்ல மறுத்தது போன்ற விசயங்களை ஊடகங்கள் வெளியிடுவதில்லை.

Teesta Setalvad, speaking at 10th anniversary of Karnataka Komu Souhardha Vedike in Mangalore . Photo. R.Eswarraj

Teesta Setalvad, speaking at 10th anniversary of Karnataka Komu Souhardha Vedike in Mangalore . Photo. R.Eswarraj

தீஸ்தா செதல்வாதின் பிரச்சார ரீதியிலான பேச்சுகளும், “தி ஹிந்துஅவருக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவமும்: மே 2014ல் பிஜேபி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைந்ததும், “நாம் எல்லோரும் ஒரு பாசிஸ ஆட்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்”, என்று பேசிய பேச்சுகளை “தி ஹிந்து” தாராளமாக வெளியிட்டது[8]. கார்புரேட் முதலாளிகள் அரசியல் பொருளாஹாரத்தைக் கைப்பற்றும் போது பாசிஸம் உருவாகிறது. நாம் எல்லோரும் செக்யூலரிஸ குடிமக்கள் என்று அறிவித்துக் கொண்டால் ஒழிய, நமக்கு யார் செக்யூலரிஸவாதி, மதவாதி என்று தெரியாமலேயே இருக்கும், என்று விளக்கத்தையும் அளித்தார்[9]. மோடி நேபாளத்திற்கு சென்றிருந்த போது, ரூ.4 கோடி மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை பசுபதிநாத கோவிலுக்கு தானமாக அளித்தார். அதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்டார். அதாவது, தனது மீதே ரூ 15 மில்லியன்கள் கையாடல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, இப்படி அடுத்தர் மீது துவேசத்துடன் கேள்வி கேட்கிறாரே என்று அவருக்கும் மற்றும் “தி ஹிந்து”வுக்கும் தெரியவில்லை போலும்.

போலீஸாருக்கு எதிராக அறிக்கை - செதல்வாத் ஆதரவு 2014

போலீஸாருக்கு எதிராக அறிக்கை – செதல்வாத் ஆதரவு 2014

2014 முன்ஜாமீன் நாடகம் 2015லும் தொடர்கிறது: இக்கதை 2015லும் தொடர்கிறது. மறுபடியும் கைதிலிருந்து தப்பித்துக் கொள்ள முன்ஜாமீன் மனு போட்டனர். அதனால், குஜராத் நீதிமன்றம் அவர்களது கைது செய்யும் முன் தப்பித்துக் கொள்ள முன் ஜாமீன் கேட்டு போட்ட மனுவை நிராகரித்து விட்டது[10]. இதனால், கீழ்கண்டவர்கள் கைது செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது:

  1. தீஸ்தா செதல்வாத் (Teesta Setalvad),
  2. ஜேவித் ஆனந்த் (her husband Javed Anand),
  3. தன்வீர் – முந்தைய காங்கிரஸ் எம்.பியின் மகன் (former MPEhsan Jafri’s son Tanvir)
  4. சலீம்பாய் சந்தி, முந்தைய குல்பர்கா சொசைடியின் உறுப்பினர் (Salimbhai Sandhi – office bearer of the Gulberg society)
  5. பெரோஸ் குல்ஸார், முந்தைய குல்பர்கா சொசைடியின் உறுப்பினர் (Firoz Gulzar –  office bearer of the Gulberg society).

உடனே, அதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மனு தாக்குதல் செய்யப்பட்ட உடனே, வெள்ளிக்கிழமை வரை கைது செய்யவேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது[11]. ஆனால், அப்படி உடனடியாக ஒரே மணி நேரத்தில் மனு போட்டவர் யார் என்று பார்த்தால், திருவாளர் கபில் சிபல் தான்[12].

Teesta Setalvad-rioting the riot

Teesta Setalvad-rioting the riot

செக்யூலரிஸ தம்பதியரின் இந்துத்துவ் எதிர்ப்பு போக்கு காட்டுவது என்ன?: தீஸ்தா செதல்வாத் அடுல் செதல்வாத மற்றும் சீதா செதல்வாத் தம்பதியருக்கு 1962ல் பிறந்தவர்.  ஜாவித் ஆனந்த் என்பரைத் திருமணம் செய்து கொண்டார். நீதி மற்றும் அமைதிக்கான சங்கம் [the Citizens for Justice and Peace] 01-04-2002ல் ஆரம்பிக்கப்பட்டது. ஜாவித் ஆனந்த் என்ற முஸ்லிம் “கம்யூனலிஸம் காம்பேட்” [Communalism Combat] அதாவது மதவாத எதிர்ப்பு என்ற வாரப்பத்திரிக்கை நடத்தி வருகிறார். 2007ல் காங்கிரஸ் அரசு தீஸ்தாவிற்கு பத்ம பூஸன் விருதும் கொடுத்தது[13]. இவர்கள் பொதுவாக இந்து-முஸ்லிம் அடிப்படைவாதங்களை எதிர்த்து வந்தாலும், அதிக அளவில் இந்துத்துவவாதிகளை எதிர்த்து வருகின்றனர். அத்தகைய இந்துத்துவவாத எதிர்ப்பு போக்கில், இந்துமதத்தை அளவிற்கு அதிகமாகவே தூஷித்து வருவதாக இந்துக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அந்த அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம், தீவிரவாதம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் செயல்பாடுகள், இந்திய முஜாஹித்தீன், காஷ்மீர் தீவிரவாதிகள் போன்றவற்றை எதிர்ப்பதில்லை. இந்த பாரபட்சம், தப்பெண்ணங்களை உருவாக்கும் முறை, இந்துக்கள்-எதிப்பு முதலியன அவர்களது பேச்சுகள், எழுத்துகள் மற்றும் செயல்களில் அதிகமாகவே தெரிந்துள்ளன.

© வேதபிரகாஷ்

13-02-2015

[1] The Gulbarg Society victims have accused Ms. Setalwad and her husband Javed Anand of collecting foreign funds for riot victims but not using them. Twelve 12 Gulbarg victims served notice on her and lodged a complaint with the police commissioner who asked the Crime Branch to inquire into it.

http://www.thehindu.com/news/national/fir-against-teesta-for-alleged-misuse-of-foreign-funds/article5542321.ece?ref=relatedNews

[2]  The complainants said she collected a donation of Rs. 63 lakh for the Citizens for Justice and Peace, of which she is secretary, and Rs. 88 lakh for Sabrang Trust; but nothing was passed on to the members.

[3] http://www.livemint.com/Politics/r02XzeNN2qva37P7sAv6qM/Gulbarg-fund-case-Setalvads-bail-plea-rejected-by-HC.html

[4] http://www.thehindu.com/news/national/other-states/teesta-husband-misleading-courts-giving-false-info/article5773966.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/sc-rejects-anticipatory-bail-to-teesta-but-stays-arrest-till-april/article5722356.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/other-states/cpim-slams-modi-govt-after-police-file-case-against-teesta/article5545733.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/news/national/other-states/gujarat-polices-move-condemned/article5568583.ece?ref=relatedNews

[8] http://www.thehindu.com/news/cities/kolkata/we-are-headed-towards-a-fascist-regime-says-teesta/article6675168.ece?ref=relatedNews

[9] Questioning the secular nature of the present Bharatiya Janata Party (BJP)-led government at the Centre, noted civil rights activist and journalist Teesta Setalvad said here on Monday that we are heading towards a fascist regime. “Fascism occurs when corporate capitals capture the political economy. Unless we assert ourselves as secular citizens, we will keep on wondering who is truly secular and who is not,” Ms. Setalvad said.

[10] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/gujarat-high-court-rejects-teesta-setalvads-anticipatory-bail-plea-in-riot-fund-embezzlement-case/articleshow/46211417.cms

[11] http://www.thehindu.com/news/national/other-states/gujarat-high-court-rejects-teestas-anticipatory-bail-plea/article6886250.ece

[12] Just an hour after the Gujarat High Court dismissed the couple’s plea for anticipatory bail plea in the case, senior advocate Kapil Sibal made an urgent oral plea on their behalf before a Bench led by Chief Justice of India H.L. Dattu. Noting that his clients were met with an “extraordinary situation”, Mr. Sibal sought the court’s protection from arrest and to hear them on Friday.

http://www.thehindu.com/news/national/other-states/gujarat-high-court-rejects-teestas-anticipatory-bail-plea/article6886250.ece

[13] https://secularsim.wordpress.com/2013/11/10/1158-the-politics-of-padma-awards-given-for-yes-boss-categories/