Archive for the ‘உமிழ்நீர்’ Category

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

ஜூன் 18, 2016

ஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு!

jisha- poster - police looking at

28-04-2016லிருந்து 16-06-2016 வரை நடந்த முக்கிய நிகழ்சிகள்[1]: காலக்கிரமமாக இக்கொலை விசயத்தில் நடந்தவை கீழ் கொடுக்கப்பட்டுள்ளன:

ஏப்ரல் 28, 2016 அன்று கொலைசெய்யப்பட்ட ஜிஷா வழக்கு தேவையில்லாமல், அரசியல் ஆக்கப் பட்டு திசைத் திருப்பட்டது.

29-04-2016 அன்று போலீசார் வீட்டை சோதனையிட்டு, உடலை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். ஆலப்புழா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப் பட்டது.

மே.2, 2016லிருந்து, சமூக வலைதளங்களில் இக்கொலை விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டது.

03-05-2016 அன்று கேரள ஐஜி இக்கொலையில் ஒருவன் தான் சம்பந்தப் பட்டிருக்கிறான் என்கிறார்.

04-05-2016 அன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ஜிஷாவின் உடலில் 38 காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று தெரிய வந்தது.

05-05-2016 அன்று புலன் விசாரணை குழு மாற்றியமைக்கப்பட்டு, டி.எஸ்.பி ஏ.பி. ஜிஜிமோன் பொறுப்பேற்றார்.

06-05-2016 அன்று ADGP பத்மகுமார் புலன் விசாரணை முக்கியமாக நடந்து கொண்டிருப்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கேரள உயர்நீதி மன்றம் அறிவித்தது.

07-05-2016 அன்று கேரள மாநில பெண்கள் கமிஷன், கொலையைப்பற்றிய முக்கிய விவரத்தைக் கொடுத்ததால், தீபாவின் நண்பன் பற்றி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர்.

08-05-2016 அன்று பெங்களூரில் இருந்த ஒரு ஆளை பிடித்து கொண்டு வந்து, போலீஸ் பாதுகாப்பில் விசாரித்தனர்.

12—05-2016 அன்று கொலையாளிக்கு பற்களில் பிரச்சினை உள்ளது, பற்கள் சீராக இல்லை என்பதனை, மற்ற ஆதாரங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

13-05-2016 அன்று போலீஸார் உள்ளூர் அரசியல்வதியின் மீது, இக்கொலை விசயமாக ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

14-05-2016 அன்று ஜிஷா கொலை வழக்கை மூடி மறைக்க, பிரயத்தனம் நடக்கிறது, என்று ஜிஷாவின் உறவினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

15-05-2016 அன்று ஜிஷாவின் தந்தை, ஜிஷா ஒருவனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். அதுதான், அவளது கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.

25-05-2016 அன்று, LDF அரசு பதவிக்கு வந்தவுடன் போலீஸ், புலன் விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

26-05-2016 அன்று, ஆட்சிக்கு வந்த LDF அரசு, ADGP சந்தியா தலைமையில், புது குழுவை அமைத்தது.

30-05-2016 அன்று, புதிய SIT குழு அமைக்கப்பட்டிருப்பதனால், இவ்வழக்கு CBI விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.

02-06-2016 அன்று, விசாரணைக்குப் பிறகு, சந்தேகிக்கப் படும் கொலையாளியின் படம் வெளியிடப்பட்டது.

05-06-2016 அன்று புதிய DGP லோக்நாத் பெஹ்ரா ஜிஷாவின் வீட்டை சோதனையிட்டார்.

10-06-2016 அன்று ஜிஷா வீட்டின் அருகில் உள்ள ஒரு உரம் விற்பனை செய்யும் கடையிலிருந்து, CCTV வீடியோ பதிவு கிடைக்கப்பெற்றது. அதில் சந்தேகிக்கப் படும் கொலையாளி ஜிஷாவைப் பின்தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

11-06-2016 அன்று பி.பி.தங்கச்சன் என்பவரின் மகன் விசாரிக்கப்பட்டான்.

16-06-2016 அன்று அமிர் உல் இஸ்லாம் கைது செய்யப்பட்டான்.

Jisha murderer - Amir ul Islamஅரசியல் ஆக்கப்பட்ட ஜிஷா வழக்கு: தேர்தல் நேரத்தில் 28-04-2016 மற்றும் 03-05-2016 தேதிகளில் இரண்டு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், அதில் ஜிஷா கொலை செய்யப்பட்டாள். இரண்டிலுமே சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள். நிச்சயமாக, காங்கிரஸ், அது, நிர்பயா போல பெரிதாகி, தங்களது வெற்றியை பாதித்து விடும் என்று அமுக்கப் பார்த்தனர். அதனால், அந்நேரத்தில் வழக்கைக் குழப்பப் பார்த்தனர். ஜிஷா உறவினர்களை விசாரித்தது, தீபாவைப் பிடித்து வைத்தது போன்ற செயல்கள் மூலம் மிரட்டப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். கேரள சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் ஷிஜா கொலை வழக்கை கையில் எடுத்து அவர்கள் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமித்து குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்-மந்திரி பினராய் விஜயன், சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொலை வழக்கை விசாரிக்க போலீஸ் அதிகாரி சந்தியாவை நியமித்தார்.

Jisha murderer - Amir ul Islam- arrestedசந்தியா மறுவிசாரணை செய்து வழக்கை முடித்தது: சந்தியா ஜிஷாவின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகில் வசித்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களும் மறு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஷிஜாவின் உடல் அருகே ஒரு செருப்பு அனாதையாக கிடந்ததை கண்டுபிடித்தனர். அந்த செருப்பில் கான்கிரீட் கலவை கரையும், ரத்தக்கறையும் படிந்திருந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட போலீசார் செருப்பில் படிந்திருந்த ரத்தக்கறை, ஷிஜாவின் ரத்தம் என்பதை கண்டுபிடித்தனர்[2]. இதையடுத்து அந்த செருப்பு யாருடையது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்[3]. இதற்காக தனிப்படை அமைத்து அந்த பகுதியில் உள்ள அனைத்து செருப்பு கடைகளிலும் விசாரித்தனர். இதில் ஒரு செருப்பு கடையில் இருந்து அசாம் வாலிபர் ஒருவர் இந்த செருப்புகளை வாங்கி இருந்தது தெரியவந்தது[4]. இதைத்தொடர்ந்த அந்த அசாம் வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஷிஜாவை கற்பழித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை இன்று கைது செய்தனர். இது தமிழ் ஊடகங்கள் கொடுத்த சுருக்கமான விசயம்.

jisha_home4தமிழ் ஊடகங்கள் கதையை சுருக்கமாக வெளியிட்டது: கேரளாவில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் பொறி வைத்துப் பிடித்துள்ளனர்[5]. கைது செய்யப்பட்டுள்ள அமியுல் இஸ்லாம் (24) இரண்டு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த போது, தமிழக எல்லையில் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்[6]. அமியுல் இஸ்லாம், ஜிஷாவின் வீட்டுக்கு அருகே செயல்பட்டு வந்த ஹாலோ பிளாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலாத்காரக் கொலையை செய்துவிட்டு, அவர் அஸ்ஸாம் தப்பியோடிவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரும்பாவூரில் நடந்த இந்த படுபாதகச் செயலில் தனக்கு தொடர்பிருப்பதை இஸ்லாம் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது[7].

jisha_5DSP சந்தியா வழக்கை மறுபடியும் விசாரித்தது: தலித் வகுப்பைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான 29 வயது ஜிஷா கடந்த ஏப்ரல் 28ம் தேதி அவரது வீட்டில் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகள் ஜிஷாவுக்கு நன்று அறிமுகமானவர்கள் என்பது தெரிய வந்தது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி. சந்தியா தலைமையிலான தனிப்படையினர், அமியுல் இஸ்லாமின் நண்பர்களை கைது செய்து காவலில் வைத்திருந்தனர். அவர்கள் மூலமாக அமியுல் இஸ்லாமை தொடர்பு கொண்டு, ஜிஷா கொலை வழக்கு விசாரணை முடிந்து விட்டதாகக் கூறச் செய்தனர். இதை நம்பி, இஸ்லாமும் அஸ்ஸாமில் இருந்து புறப்பட்டு கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் கேரள எல்லையைத் தொடுவதற்குள் தமிழக எல்லையிலேயே வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

jisha-house-footwear- left by Amir ul Islamகட்டிட வேலை செய்பவன் தான் கொலையாளி என்று சோதனைகள் மூலம் தெரியவந்தது: ஆரம்பத்திலிருந்தே, வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்யும் ஆட்கள் மீது சந்தேகம் இருந்ததால், அவர்களை கண்காணித்து, விசாரித்து வந்தது[8]. ஜிஷா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கடையில் இருந்த படம் பிடிக்கும் கேமராவில் [CCTV], அவள் அடையாளம் தெரியாத, ஒரு ஆளுடன் செல்வது தெரியவந்தது. போலீசார் அது கொலைகாரனாக இருக்கலாம் என்று சந்தேகித்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் அத்தகைய ஒரு புதிய ஆளைப் பார்த்ததாக விசாரணையின் போது கூறினர். இருப்பினும் முகம் சரியாக தெரியவில்லை என்பதனால், அடையாளம் காண புலனாய்வு குழு ஆராய்ந்து வந்தது[9]. திருவனந்தபுரத்தில் இருக்கும் அரசு தடவியல் பரிசோதனைக் கூடத்தில், இருந்த ரத்தம், உமிழ்நீர் மற்றும் விந்து முதலியவற்றை ஆராய்ந்து அறிக்கையைக் கொடுத்தது. அதில், செருப்பின் மீதுள்ள ரத்தம் ஜிஷாவுடையது என்று கூறியது. செருப்பில் மேலும் இருந்த துகள்கள் முதலியவற்றை வைத்து, அதனை உபயோகப்படுத்தியவன், கட்டிட வேலை செய்பவன் என்று உறுதிபடுத்தியது[10]. பக்கத்தில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, ஒரு கட்டிட வேலை செய்பவன் தான் வாங்கியிருக்கிறான் என்றும் உறுதிபடுத்தியது.

jisha_suspect-caught by the police

DNA மாதிரிகள் ஊர்ஜிதம் கொலைகாரனை செய்தன: சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து[11] விசாரணை குழு கொச்சியில் இரண்டு தினங்களுக்கு முன் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்துள்ளது[12].  இந்த வழக்கில் மொத்தம் 3 சந்தேக நபர்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். இருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்கள் ஆவார். மற்றொருவர் அந்த பெண்ணின் மிக நெருங்கிய உறவினராவார்[13].  இஸ்லாமின் டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், அவை ஜிஷாவின் உடலில் இருந்த ரத்தம் மற்றும் எச்சில் மாதிரியுடன் ஒத்துப் போனதை அடுத்து, அமியுல் இஸ்லாம் குற்றவாளி என்பது நிரூபணமானது[14]. அதே மாதிரி, DNA மாதிரிகள் சோதனையியட்டபோது, அமிர் உல் இஸ்லாமின் மாதிரிகளுடன் ஒத்துப் போனதாலும், மற்ற ஆதாரங்களாலும், அவன் தான் கொலையாளி என்று தீர்மானிக்கப்பட்டது[15].காவல்துறை நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை இஸ்லாம் ஒப்புக் கொண்டுள்ளான். விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுகளை தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

18-06-2016

[1] http://english.mathrubhumi.com/news/kerala/jisha-murderer-held-confesses-to-crime-1.1135362

[2] http://english.mathrubhumi.com/news/kerala/a-pair-of-chappals-that-led-the-police-to-the-assailant-english-news-1.1135454

[3] மாலைமலர், திருவனந்தபுரம் சட்டக்கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற அசாம் வாலிபர் கைது, பதிவு: ஜூன் 16, 2016 09:59.

[4]கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. எனவே அவரை பலர் கூட்டாக கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/06/16095921/1019205/Thiruvananthapuram-law-student-molested-and-murder.vpf

[5] http://www.vikatan.com/news/india/65246-main-suspect-in-rape-murder-of-kerala-dalit-woman.art

[6] தினமணி, கேரள மாணவி ஜிஷா கொலை: முக்கியக் குற்றவாளியை சினிமா பாணியில் பொறி வைத்துப் பிடித்த காவல்துறை, By dn, First Published : 16 June 2016 03:12 PM

[7] http://www.dinamani.com/india/2016/06/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/article3485538.ece

[8] http://english.mathrubhumi.com/news/kerala/migrant-workers-were-under-suspicion-from-the-beginning-english-news-1.1135473

[9] http://www.newindianexpress.com/states/kerala/Jisha-murder-Cops-get-crucial-video-evidence/2016/06/11/article3476469.ece

[10] http://english.manoramaonline.com/news/just-in/bloodstains-footwear-jisha-house-matched-victim-kerala-murder.html

[11] தினத்தந்தி, கேரளாவில் தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 16,2016, 11:11 AM IST

[12] தமிழ்.வெப்துனியா, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா பலாத்கார கொலை வழக்கு: சந்தேக குற்றவாளி கைது!, வியாழன், 16 ஜூன் 2016 (11:21 IST)

[13] http://www.dailythanthi.com/News/India/2016/06/16111153/Kerala-Police-Arrest-First-Suspect-in-Jisha-RapeMurder.vpf

[14] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/jisha-murder-suspected-killer-nabbed-116061600020_1.html

[15] http://english.mathrubhumi.com/news/kerala/dna-results-confirm-assam-native-to-be-the-murderer-english-news-1.1135429