Archive for the ‘ஆர்பாட்டம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

National songs - initially sung by a group

தேசிய பாடல்கள் பாடப்பட்டது.

C. P. Radhakrishnan

பிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.

Stage-Karuppu, LG, Lakhsmanan

6.07 to 6.12 pm –இல கணேசன்:  இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.

Karuppu, Raja, LG, Amit Sha, Tamilisai, Pon.R,Muralidhar

6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.

09-07-2018 - Amit Shah Meeting- on stage

6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார்! பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற்றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……

LG, Amit Sha, Tamilisai, vgp stage

6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.

09-07-2016 - Amit Shah Meeting.speaker-1

6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Vansthi came with Amit Shah

6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….

09-07-2016 - Amit Shah Meeting

6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

Amit SHAH with others 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Meeting-LG, Amit Sha, Tamilisai, vgp stage

மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.

Amit SHAH meeting- 09-07-2018-5

மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:

திட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்
சிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820
மெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500
மோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350
3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45
வரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700
வார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100
பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200

இப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.

© வேதபிரகாஷ்

11-07-2018

Amit SHAH meeting- 09-07-2018-4

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (1)

Molesting a woman, taking bath etc

என் கையைப் பிடித்து இழுத்தான்என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது: தமிழக கவர்னர்களில், இப்பொழுது நியமனம் செய்து பதவியில் உள்ளவர், உண்மையில் “கவர்னர்” போல செயல்படுகிறார். ஆனால், பிஜேபி-நாமினி மற்றும் ஆர்.எஸ்.எஸ்காரர் என்று தமிழக ஊடகங்கள் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருகின்றன. தமிழக ஊடகங்களில் உள்ளோர் பெரும்பாலோனோர் இடதுசாரி, ஒட்டு மொத்த கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட சித்தாந்த வாதிகள் என்பது தெரிந்த விசயம். அவர்களில் கிருத்துவர்-முஸ்லிம்களும் கனிசமாக இருக்கின்றனர். அவ்வாறு இருப்பது என்பது தவறில்லை, ஆனால், செய்தி சேகரிப்பு, தொகுப்பு, வெளியிடுதல், புலன்-விசாரணை ஜார்னலிஸம் [Investigation Journalism] போன்றவற்றில் உள்ள பாரபட்சம் அதிகமாகவே இருக்கிறது. பிஜேபி-எதிர்ப்பு, மோடி-தாக்குதல், பார்ப்பனீய-வெறுப்பு என்ற ரீதியில் இறுதியில் இலக்காக அமைந்துள்ளது இந்துமதம், இந்து நம்பிக்கைகள், இந்துக்கள் என்று முடிவதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்பொழுது, கவர்னர் விசயத்தில், “என் கையைப் பிடித்து இழுத்தான்” என்று ஒரு பெண் புகார் கொடுத்த ரீதியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Molesting a woman, taking bath etc-police action

தாக்கப்படுவது கவர்னரா, சித்தாந்தமா, பெண்மையா?: தினம்-தினம் தமிழகத்தில் கற்பழிப்பு, தாலியறுப்பு, பாலியல் வன்மங்கள், கொடூரங்கள் என்று நடத்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பாதிக்கப்படுவது பெண்கள், பெண்மை. பெண் எல்லாவிதங்களிலும் பாதிக்கப் படுகிறாள். ஆனால், ஊடகக்காரர்கள், அவற்றை செய்திகளாகப் போடும் போது, ஏதோ பரபரப்பு, ஜனரஞ்சகமான ரீதியில் தான் போட்டு வருகிறார்கள். அவற்றை எப்படி, எவ்வாறு, ஏன் தடுக்கப்பட வேண்டும் போன்றவற்றை அலசுவதில்லை. திராவிட சித்தாந்தம் முதலியவற்றால், அவை கொச்சைப்படுத்தப்படுகின்றன. “விஜய்” போன்ற டிவிக்கள் தாலி போன்ற சமூக-பாரம்பரிய விசயங்களைக் கேவலப்படுத்தியதாலும், திராவிட சித்தாந்திகள் தாலியறுப்பு போன்ற நிகழ்ச்சிகளினாலும், தாலியறுப்பு திருடர் கூட்டங்கள் வலுப்பெற்று, தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். இன்ற்றைக்கு கம்மலை திருடுபவன், காதோடு அறுத்துச் சென்றுள்ளான். இத்தகைய ஆபாசமான, கேவலமான, தூஷிக்கும் போக்குள்ள செய்திகளால் சட்டமீறல்கள் அதிகமாகின்றன. ஆனால், வக்கிர சித்தாந்தவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஊடகத்துறையில் இத்தகைய போக்கு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பெண்மை பாதிக்கப் படுகின்ற விசயங்களில், எல்லோரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Governor visit to Caddalore- 15-12-2017-Vikatan

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,”: “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு நேரம் சரியில்லை போல!,” என்று விகடன் கதை ஆரம்பித்துள்ள்தே, ஏற்லெனவே தீர்மானித்து எழுதிய நிலையைக் காட்டுகிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்றவருக்கு சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது,” என்று மேலும் வர்ணிப்பது தமாஷுதான், ஆனால், விவகாரமானது. விகடன் தொடர்கிறது. “கடலுாரில் ஆய்வுக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குச் சோதனைக்கு மேல் சோதனையாக அமைந்துவிட்டது. துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு 15-12-2017 அன்று பயணமானார் ஆளுநர். அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதுவும் “பெண்ணின் கை பிடித்து இழுத கதை போன்றது” என்பதை அறிந்து கொள்ளலாம். போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர்.

Governor before bathroom-

பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்”  போன்றது செய்தியா, கதையா?:  அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில்  கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்[1]. “தடாலடியாக” திறந்தார் என்றால், என்ன என்பதை அந்த மெத்தப்படித்த, நவநாகரிமுள்ள நிருபர் தான் விளக்க வேண்டும். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார்[2]. ஆனால், படத்தில் போட்டிருப்பது கற்களால், சிமென்டால் கட்டப்பட்ட கட்டிடம் தான் காண்பிக்கப் பட்டுள்ளது. “திடீரென…………கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார்” இதிலுள்ள சொற்பிரயோகமே, நடந்ததநறிவிப்பதை விட, ஏதோ உசுப்பிவிடும் போக்கில் எழுதியது தெரிகிறது. ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தால், அல்லது கவர்னருடன் ஒரு கூட்டமே வந்து கொண்டிருக்கும் போது, அப்பெண்ணிற்கு எப்படி தெரியாமல் போகும்? இல்லை வேண்டுமென்றே அப்பெண்ணை அங்கு இருக்க செய்தனரா? இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்[3].

Governor before bathroom-Gowri clarifies

இச்செய்தியை எழுதியவர் யார், அவரது மனப்பாங்கு என்ன?: சரி இதை எழுதியுள்ளவர் யார் என்று பார்த்தால், “அ. சையது அபுதாஹிர்” என்றுள்ளது. இவர் முஸ்லிம் என்று கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்றாலும், எழுதியுள்ள தோரணை விசமத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் முஸ்லிமாக இருந்து, செக்யூலரிஸ முகமூடி போட்டுக் கொண்டு, இந்துவிரோதியாக செயல்படுவது, தமிழகத்தில் காணலாம். “பெரியாரிஸம்” பேசி, இந்துக்களை திட்டலாம், ஆனால், அதே பகுத்தறிவுடன், எந்த துலுக்கனும், கிருத்துவனும், இஸ்லாம் அல்லது கிருத்துவத்தை விமர்சிப்பதில்லை. இந்த பாரபட்ச செக்யூலரிஸத்தைத்தான் போலித்தனம் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. நடுநிலமையில் இருந்திருந்தால், அந்த விசமமும் வக்கிரமாக மாறியிருக்காது. எனவே, கவர்னர் விசயத்தில், இவ்வாறு கேவலமாக செய்திகளை வெளியிடும் எண்ணமே அவர்களுடைய வக்கிரத்தைக் காட்டுகிறது. “தமிழ்.வெப்துனியா,” தனக்கேயுரிய பாணியில், “governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom” என்று லிங்கில், ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதும் அவர்களின் அசிங்கமான மனங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

Suba veerapandi-twitter on governor visit

பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்: சமூக வலைதளங்களில் ஆளுநருக்கு கடுமையான கண்டங்கள் குவிந்துவருகின்றன[4]. உண்மையா-பொய்யா என்று பார்க்கும் போக்கில்லாத பெரும்பாலோருக்கு, இது கையான கலையாகி விட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘பெண் குளிக்கும்போது, ஆளுநர் பாத்ரூம் கதவை திறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது இழிவானது மற்றும் தவறானது[5]. கடலூர் மாவட்டத்தில், ஸ்வட்ச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை பார்வையிட ஆளுநர் சென்றிருந்தார். திருமதி.கௌரி என்பவரது வீட்டின் கழிவறையை முதலில், பெண் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார். பிறகு, மாவட்ட ஆட்சித் தலைவர், கழிவறையை பார்வையிட்டார். அதன்பிறகுதான், காலியாக இருந்த கழிவறையை ஆளுநர் பார்வையிட்டார்[6]. ஆனால், தொலைக்காட்சிகளில் இதுதொடர்பாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடலூரில் இருந்து சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே ஆளுநரின் கான்வாய் வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் மாவட்ட காவல் துறை வாகனமே விபத்தை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளது[7]. வரும் காலங்களில், ஆளுநர் தொடர்பான விவகாரங்களை, ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்த பிறகே வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

16-12-2017

IE-Governor, bathroom, caddalore

[1] விகடன், சோகத்தில் முடிந்த ஆளுநரின் ஆய்வு!, அ. சையது அபுதாஹிர், Posted Date : 18:20 (15/12/2017); Last updated : 18:39 (15/12/2017)

[2] https://www.vikatan.com/news/tamilnadu/110903-tragedy-of-governor-visit.html

[3] தமிழ்.வெப்துனியா, பெண் குளிப்பதை பார்க்கவில்லையாம்ஆளுநர் தரப்பு விளக்கம்!!, வெள்ளி, 15 டிசம்பர் 2017.

[4] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/governor-side-states-that-governor-did-not-peep-into-women-bathroom-117121500060_1.html

 

[5] விகடன், கடலூரில் ஆளுநர் ஆய்வு சர்ச்சை விவகாரம்..! ஆளுநர் மாளிகை விளக்கம், கார்த்திக்.சி, Posted Date : 01:22 (16/12/2017); Last updated : 01:22 (16/12/2017)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/110931-governor-house-denies-cuddalore-incident.html

[7] பத்திரிக்கை.காம், பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம், Posted on December 15, 2017 at 9:26 pm by சுகுமார்.

[8] https://patrikai.com/news-that-the-governor-had-seen-women-bathing-in-the-bathroom-was-not-true-additional-chief-secretary-explained/

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜூலை 3, 2016

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010-1

உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து,  பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.  இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.

Evening_view_of_Har-ki-Pauri,_Haridwar

தருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்?

திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர்.  திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[3].  ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர்.  ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6].  இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.

Sanaracharya statue - valluvar - Tarun issue

சிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா?

உண்மையில் நடந்தது என்ன?: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.

Sadhus oppose Tarun efforts for politicization

திடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்

இரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன?: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.

திருவள்ளுவர் கங்கை சிலை.அவசரம்பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11].  ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்! – சாதுக்கள் எழுப்பிய சர்ச்சை, Posted Date : 18:11 (29/06/2016).

[3] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்புதற்காலிக இடத்தில் சிலை திறப்பு!, By: Karthikeyan, Updated: Thursday, June 30, 2016, 0:14 [IST].

http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[5] http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809        

[7] However, the project had been opposed by the Ganga Sabha and Akhil Bharatiya Teerth Purohit Mahasabha, another body of priests in Haridwar. “If one such statue is allowed to be installed, there will be a number of others queuing up for it, for so many other people and organisations will insist on having statues of their choice put on the Ganga banks,” Ganga Sabha office bearers argued. “Ganga is a goddess herself. Why have other gods or great men on her banks?” said Ganga Sabha president Purushottam Sharma Gandhiwadi.

The Times of India, Thiruvalluvar statue opening deferred after Haridwar ascetics protest, Sheo S Jaiswal| TNN | Jun 29, 2016, 10.36 PM IST

[8] https://www.youtube.com/watch?v=Dpypnlzqh_8

[9] However, as soon as the statue was installed at the spot on Tuesday night, ascetics from various akharas and ashrams arrived and began protesting, on the grounds that with the staue of Adi Shankara already at the spot, there was no need for a statue of “someone else”. District magistrate Harbans Singh Chugh said a fresh date for its unveiling will be fixed after an appropriate place to install it is decided.

http://timesofindia.indiatimes.com/city/dehradun/Thiruvalluvar-statue-opening-deferred-after-Haridwar-ascetics-protest/articleshow/52978525.cms

[10] https://www.youtube.com/watch?v=WQWuS45nH0w

[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை!, June 29, 2016.

[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.

http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94913

[13] http://ns7.tv/ta/thiruvalluvar-statue-not-installed-ganga-banks.html

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)!

நவம்பர் 18, 2015

பிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடிஎதிர்ப்பு, இந்தியவிரோதம்இந்தியர்களுக்கு ஆபத்தானது (1)!

Anti-Modi demonstration -UK

Anti-Modi demonstration -UK

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம்[1]: 13-11-2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள டவ்னிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன[2] என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல செய்திகளை வெளியிட்டன. அப்படியென்றால், அவ்வாறு ஏற்பாடு செய்பவர்கள் யார்? மூன்று நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக லண்டன் நகரில் உள்ள 10-வது டவ்னிங் ஸ்டிரீட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[3]. சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி ஆகிய சமூகத்தின் பிரநிதிகள் மோடியின் இங்கிலாந்துக்கு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “மோடி திரும்பிப்போ” என்று கோஷமிட்டனர்[4], என்றும் சந்தோஷமாகத்தான் செய்திகளைக் கூட்டியது. ஆனால், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்பதனைக் குறிப்பிடவில்லை.

Gujaratis, Kashmiris, Tamils united against Modi

Gujaratis, Kashmiris, Tamils united against Modi

நூற்றுக்கணக்கோனோர் இந்தியாவின் பெயரைக் கெடுத்துவிட முடியுமா?: “இந்துத்துவா இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவில் மத அடக்குமுறையை நிறுத்துங்கள்” ஆகிய வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டக்காரர்கள் வைத்திருந்தனர்.  மோடியின் வருகையின் போது நாள் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அமைப்புகள் 13-11-2015 அன்று அறிவித்தன. இதில் ஜிராஜ் காலோவே என்பவர் உட்பட [London Mayoral candidate George Galloway] சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்[5]. இவ்வாறு “இந்திய செக்யூலரிஸம்” லண்டனில் எப்படி விசுவாசமாக வேலை செய்கிறது என்று அறிந்து முழிக்க வேண்டியுள்ளது. இப்படி 100-500 ஆட்கள் லண்டனில் எதிர்ப்புத் தெரிவிப்பதால், இந்தியாவுக்கு என்ன வரப்போகிறது அல்லது வராமல் போய்விடப்போகிறது?  முதலீடு செய்பவர்கள் இவர்களை ஆலோசித்துதான் செய்கிறார்களா? பிறகு, எதற்கு இந்த ஆர்பாட்டம்? சரி, அந்த 60,000 பேர் வந்தார்களே[6], அதைப்பற்றி தமிழ் ஊடகங்கள் ஏன் மௌனமாகி விட்டன? அதில் எத்தனை பேர் சீக்கியர்கள், தமிழ், காஷ்மீரி, குஜராத்தி, நேபாளி என்றெல்லாம் பார்க்கவில்லையா?

Awaaaz propaganda against Modi

Awaaaz propaganda against Modi

 “அவாஸ் நெட்வொர்க்கும், அதன் பின்னணியும்: மோடிக்கு எதிரான இந்த போராட்டங்களை “அவாஸ் நெட்வொர்க்” [Awaaz Network] என்ற அமைப்பு தலைமையேற்று நடத்தியது[7] என்று செய்தி வெளியானது. தனக்கு எந்த கட்சியுடனும் தொடர்பில்லை, யாரிடமும் சம்பந்தமில்லை என்றேல்லாம் அறிவித்துக் கொண்டாலும், இது ஆரம்பத்திலிருந்தே, இந்திய விரோதமாக செயல்பட்டு வருகின்றது, என்பது, அதன் இணைதளத்திலிருந்தே தெரிய வருகிறது. செக்யூலரிஸத்தை காட்டிக் கொண்டாலும், இடதுசாரி ஆதரவு வெளிப்படுகிறது. மனித உரிமைகள், தனிநாடு கோரும் உரிமை, பிரிவினைவாதம், சிறுபான்மையினர், தலித் என்று பலவிசயங்களை சேர்த்துக் கொண்டு, குறிபிட்ட எதிரியை உருவாக்கி ஐத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பது என்று பிரச்சார ரீதியில் செயல்பட்டு வருகின்றன. “தெற்காசிய குடிமகன்களின் இணைதளம்” இதன் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறது[8]. இதன் ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் என்று ஒரு பட்டியல்கொடுத்துள்ளது[9]:

Supporting organizations of Awaaz – South Asia Watch include:

Aaj Kay Naam

Asian Women’s Refuge

Friends of India / All-India Christian Council (UK)

Campaign Against Racism and Fascism (CARF)

Cambridge South Asia Forum

Dalit Forum for Social Justice (UK)

Dalit Solidarity Network (UK)

India Forum

Indian Muslim Federation (UK)

Indian Workers Association (GB)

Muslim Parliament

National Civil Rights Movement (NCRM)

Oxford South Asia Forum

People’s Empowerment Alliance

People’s Unity

Southall Black Sisters

Southall Monitoring Group

Sutton for Peace and Justice

Voice of Dalit International

இவையெல்லாமே, வெவ்வேறு அமைப்புகள் போல காட்டிக் கொண்டாலும், அலவிசயங்களில் ஒன்றாகவே செயல்படுகின்றன. நடத்தப்படும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கூட்டங்கள் இவற்றில் செக்யூலரிஸம், இடதுசாரி சித்தாந்தம், முஸ்லிம்-ஆதரவு போன்ற விசயங்களை அலசுகிறார்கள். அதற்கேற்றபடி சித்தாந்த இத்தாந்த வல்லுனர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவற்றின் செயல்பாடுகள் எப்படியுள்ளன என்று பார்த்தால், இந்து-விரோத போக்காகத்தான் உள்ளது. “மோடி-எதிர்ப்பு” முகமூடி அல்லது போர்வை இவற்றிற்கு சாதகமாக உபயோகப்படுகின்றன, அதுதான் இணைப்பு காரணியாக இருக்கின்றது, அவ்வளவுதான்! ஆனால், அவை இந்திய-விரோதமாகவும், இந்து-விரோதமாகவும் செய்ல்படுவதை கவனிக்க வேண்டும்.

BRITAIN-INDIA-DIPLOMACY

Protestors demonstrating against Indian Prime Minister Narendra Modi hold placards and chant outside Downing Street in central London on November 12, 2015. India’s Prime Minister Narendra Modi today began a three-day visit to London focused on trade deals and connecting with the diaspora as critics warned of a “rising climate of fear” under his rule. AFP PHOTO / LEON NEAL

சித்தாந்த ரீதியில் ஒன்று பட்டு எதிர்ப்பது யாரை?: மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்த இவை, ஆட்சிக்கு வந்த பிறகும், அதே தோரணையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனது. உதாரணத்திற்கு, மே 2014ல் இந்துத்துவ தடுப்பு, நீதி மற்றும் மனித உரிமைகள் ஆதரிப்பு என்ற கூடுதலில் பங்கு கொண்டவர்கள்[10]:

  • சுரேஷ் குரோவர் – Suresh Grover, Director, The Monitoring Group,
  • பிரஞ்னா படேல் – Pragna Patel, Director, Southall Black Sisters,
  • கௌதம் அப்பா – Professor Gautam Appa, Academic and Human Rights activist,
  • இருந்தா குரோவர் – Vrinda Grover, Lawyer, Researcher and Human Rights activist,
  • அனீஸ் கபூர் – Sir Anish Kapoor, CBE RA Sculptor
  • சேதன் பகத் – Chetan Bhatt, Director of the Centre for the Study of Human Rights at the London School of Economics,
  • மைக் வுட் – Mike Wood MP and
  • ஹெலினா கென்னடி – Baroness Helena Kennedy, QC FRSA Barrister, human rights defender and peer

பிறகு நரேந்தர மோடி எதிர்ப்பிலும் ஒன்றாக இருக்கிறார்கள்[11]. மோடியுடன், பாசிஸம் வளர்கிறது என்றெல்லாம் பேசி-எழுதப்படுகின்ற பின்னணியிலும் இவர்கள் தாம், மாறி- மாறி இருந்து செயல்படுகிறார்கள்[12]. லெஸ்லி உட்வின், நிர்மலா ராஜசிங்கம், விரிந்தா குரோவர், தீஸ்தா செதல்வாத், கவிதா கிருஷ்ணன், முதலியோர் கீழ் கண்ட விசயங்களில் ஒன்று படுகிறார்கள் – கருத்துரிமை போராட்டம், புனே கல்லூரி, சாகித்திய விருதுகள் திரும்பக்கொடுத்தல், லௌ-ஜிஹாத் சித்தாந்த ஆதரிப்பு[13], இந்துத்துவா எதிர்ப்பு[14], மோடி-எதிர்ப்பு, முஸ்லிம் அடிப்படைவாத ஆதரிப்பு, செக்யூலரிஸ போர்வையில் இந்து-எதிர்ப்பு….. லெஸ்லி உட்வின் ஆதரிப்பு, தீஸ்தா செதல்வாத் ஆதரிப்பு[15],………..முதலியவையும் உண்டு…………இப்படி பரஸ்பர ஆதரவு, அழைப்பு, உபசரிப்பு முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இறுதியாக இந்துக்களை எதிர்க்கும் இவர்கள், அவர்களது உரிமைகளை ஏன் மதிப்பதில்லை. இத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தத்தினை என்ன பெயட்ரிட்டு அழைப்பது?

Leslee Udwin, Nirmala Rajasingam, Vrinda Grover, Teesta Setalvad, Kavita Krishnan, Indira Jaising

Leslee Udwin, Nirmala Rajasingam, Vrinda Grover, Teesta Setalvad, Kavita Krishnan, Indira Jaising

© வேதபிரகாஷ்

18-11-2015

[1] மாலைமலர், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, நவம்பர் 12, 11:05 PM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் வெடித்த உக்கிர போராட்டங்கள்!, Posted by: Mathi, Updated: Friday, November 13, 2015, 12:25 [IST].

[3] http://www.inneram.com/news/india/5288-protest-against-modi-in-england.html

[4] இந்நேரம்.காம், மோடி திரும்பிப் போ: இங்கிலாந்தில் மோடிக்கு கடும் எதிர்ப்பு!, வெள்ளிக்கிழமை, 13 November 2015 16:54.

[5] http://www.ibtimes.co.uk/narendra-modi-uk-visit-indian-prime-minister-faces-protests-during-meeting-downing-street-1528449

http://www.ibtimes.co.uk/modi-uk-visit-british-indians-protest-indian-prime-minister-projection-onto-parliament-1527815

[6] http://www.dailymail.co.uk/news/article-3317137/Modi-s-come-Wembley-Tens-thousands-Indians-arrive-prime-minister-s-big-speech-fireworks-extravaganza.html

[7] You can contact us at  AWAAZ, the London Civil Rights and Art Centre, Upper Floors, 37 Museum Street,  London WC1A 1LQ, Alternatively  you can email –admin@awaaz-uk.org  at editor@awaaz-uk.org  for more information about this website –

http://awaaz-uk.org/wp-content/uploads/2014/04/awaaz_in_bad_faith.pdf

[8] http://www.sacw.net/

[9] http://awaaz-uk.org/supporting-organisations/

[10] http://www.southallblacksisters.org.uk/campaigns/campaign-against-narendra-modi-hindutva-politics/

[11] http://www.southallblacksisters.org.uk/reports/Narendra-Modi-Exposed-Report/

[12] http://www.southallblacksisters.org.uk/narendra-modi-rise-hindu-fascism/

[13] http://muslimmirror.com/eng/woman-activists-flay-bjps-campaign-on-so-called-love-jihad-warn-of-serious-consequences/

[14] http://www.milligazette.com/news/10508-narendra-modi-threat-to-human-rights

[15] http://www.prokerala.com/news/photos/new-delhi-additional-solicitor-general-indira-271156.html

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

ஓகஸ்ட் 22, 2015

புனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (2)

U R Ananathmurthy and his christian wife Esther

U R Ananathmurthy and his christian wife Esther

யு.ஆர். அனந்தமூர்த்தி (2005-2011): யு.ஆர். அனந்தமூர்த்தி எஸ்தர் என்ற கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார், இதனால், பல பிரச்சினைகள் ஏற்பட்டன[1]. தனது தனிமனித வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகளை, “பிராமண விரோதம்” மூலம்  முரண்பட்ட தூஷணமாக கருத்துகளை-எழுத்துகளை வெளிப்படுத்தினார். பிஜேபிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி முதலிய இயக்கங்களைக் கடுமையாக விமர்சித்து வந்தார். 2013ல் மகாபாரத்தில் பிராமணர் பசு மாமிசம் உண்டார்கள் என்று குறிப்புள்ளது என்றார், ஆனால், உடுப்பி மட விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் இல்லை என்று எடுத்துக் காட்டினார். நரேந்திர மோடி ஆளும் இந்தியாவில் தான் வாழமாட்டேன் என்றெல்லாம் பேசியுள்ளார். ஆனால், இவர் நன்றாக குடிப்பார் என்ற விவரங்களை யாரும் குறிப்பிடவில்லை[2]. விஸ்கி போட்டால் தான் மூட் வரும் போன்றிருந்தவர் என்று யாரும் எடுத்துக் காட்டவில்லை[3]. இவ்வாறு முரண்பட்ட இலக்கிவாதியைப் பற்றியும் யாரும் விமர்சிக்கவில்லை. இரண்டுமுறை அப்பதவியை வகித்துள்ளார்.

Saeed-Akhtar-Mirza

Saeed-Akhtar-Mirza

சயீத் அக்தர் மீர்ஜா (2011-14): ஜெனிபர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகன்கள் சப்தர் மற்றும் ஜஹீர் நியூ யார்க் மற்றும் துபாயில் வேலை செய்கின்றனர். 1989ல் “சலீம் லங்டே பே மத் ரோ” என்ற சலீம் என்ற திருடன் மற்றும் குண்டாவின் வாழ்க்கையினை விவரிப்பது போல படத்தில் “இந்துத்துவா” பற்றிய விமர்சனத்தை வைத்தார். இஸ்லாமிய சமூகத்தில் எப்படி சட்டத்தீர்குப் புறாம்பான செயல்கள் மற்றும் குற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேலைகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பதனை, இந்துத்த்வ தாக்கத்தில் எடுத்துக் காட்டினாராம்[4]. 1995ல் நஸிம் என்ற படத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு முன்பு, மும்பையில் எப்படி இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பதட்டமான நிலை இருந்தது, பிறகு மும்பைத்தெருக்களில் கலவரமாக மாறியது பற்றி விளக்கியுள்ளார்[5]. இதனால், புகழ் பெற்றார். இத்தகைய படங்கள். அவற்றில் வசனங்கள் முதலியன அவர்களது சித்தாந்த சார்பு, விரோதம் மற்ற பாரபட்சம் கொண்ட நோக்கு முதலியவற்றைத்தான் காட்டுகின்றன. அதே நேரத்தில் ரோஜா, பாம்பே போன்ற படங்கள் முஸ்லிம்களினால் எதிர்க்கப்பட்டன என்பது நோக்கத்தக்கது.

Saeed aktar mirza, babar and masjid

Saeed aktar mirza, babar and masjid

கஜேந்திர சௌஹான் ஒருபுரோன் ஏக்டர்” (Porn actor): சௌஹான் விசயத்தில், டைம்ஸ்நௌ டிவிசெனலில் ஒரு விவாதத்தை வைத்து, அவருக்கு தகுதியில்லை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது[6]. இதில் அர்னவ் கோஷ்வாமி வழக்கம் போல, தானே குற்றஞ்சாட்டுவதில் ஈடுபட்டு, விவாதத்தில் ஈடுபட்டவர்களை சௌஹானுக்கு எதிராக பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்து, திசைத்திருப்பினார். அரசியல்-சார்பு என்பது பிரச்சினை இல்லை, ஆனால், அவருக்கு தகுதி இல்லை என்பதுதான் முக்கியமான விசயம் என்று முன்னமே தீர்மானித்தது போன்று விவாதம் தொடர்ந்தது. அனுபம் கேர், அவரை ஒரு “புரோன் ஏக்டர்” (Porn actor) என்றே குறிப்பிடுகிறார். அப்படியென்றால், மேலே எடுத்துக் காட்டப்பட்ட முந்தைய தலைவர்களின் விவரங்களை வைத்துக் கொண்டு பார்த்தால் அவர்களை எவ்விதத்தில் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். என்னத்தான் சினிமாத்துறையைத் தூக்கி வைத்துக் கொண்டு, இவர்களையெல்லாம் பெரிய மகாத்மாக்கள் போல சித்தெரித்துக் கொண்டாலும், இவர்களால் சமூகம் சீரழிகிறது என்பதனை நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவிருப்பதனால், இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களே சாக்கடையில் உழலும் புழுக்களாக இருக்கும் போது, இன்னொரு புழு வந்துள்ளது என்பதா, இல்லை எல்லா புழுக்களும் தக்கக்கம்பிகள் என்று அவரவர் சித்தாந்தத்தை வைத்து அளவிட முடியுமா என்பதனை மக்கள் தான் சொல்லவேண்டும்.

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

Saeed aktar mirza, babar and masjid exploiting Muslim sentiments

தகுதிதராதரம்பாண்டித்யம் முதலியன எவ்வாறு எடைபோடுவது?: பர்ஸ்ட்-போஸ்ட் இதழில் இவர் லாயக்கற்றவர் என்ற தோரணையில் கட்டுரையை, செய்தியாகவே வெளியிட்டது[7]. “அறிவுஜீவித்தனம் அற்றவர்கள் மோடி அரசாங்கத்தில் தடுக்கமுடியாத அளவிற்கு உயர்ந்த பதவிகளுக்கு வருகிறார்கள்” என்றே தலைப்பிட்டு அதனை வெளியிட்டது[8]. இதற்கு முன்னால், பிஸ்வநாத் கோஷ் என்பவரின், இதே தோரணையில் “தி ஹிந்துவில்” ஒரு கட்டுரை “சித்தாந்தமும், பாண்டித்யமும்” என்ற தலிப்பில் வெளிவந்தது. அதிலும் அந்த “குலி கிடிகி” படத்தை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட்டது[9]. விளக்கேந்தும் பையனை, படம் டைரக்ட் செய்யச் சொல்வது போலுள்ளது, அந்த பையன் கூட விசயத்தைப் புரிந்து கொண்டால், சென்று விடுவான், ஆனால் மந்தமாக இருக்கும் இவர் என்ன செய்வாரோ என்று முடிக்கிறார்[10]. நடுநிலையாக ஒருசில கட்டுரைகளே வெளிவந்தன. யு.ஆர். அனந்தமூர்த்திக்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம் இருந்தது, அவர் திரையுலகத்தில் எதை சாதித்தார், என்ன பங்கிருந்தது என்று யாரும் எதிர்க்கவில்லையே, ஒரு மதிக்கப்பட்ட இலக்கிய எழுத்தாளர் என்றுதானே தேர்ந்தெடிக்கப்பட்டார் என்று விவேக் தேஷ்பாண்டே என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்[11]. சௌஹானைப் பொறுத்த வரையில், அவரைப் பற்றி எந்த பொய்யான விவரங்களும் இல்லை. தன்னுடைய நிலையை அவர் நன்றாகவே உணர்ந்துள்ளார். விவாதங்களில் நிச்சயமாக அவரால் வெல்லமுடியாது, ஆனால், அவர் தோற்கவும் இல்லை. அவரை வேலைசெய்ய விட்டால் தான், அவரது லாயக்கான தன்மை அல்லது லாயக்கற்ற தன்மை வெளிப்படும் என்று முடித்தார்[12].

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

Saeed-Akhtar-Mirza- Salim Langde pe mat ro

ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியுமா?: ஆர்.எஸ்.எஸ் தொடர்பினால் தான் ஆர்.எஸ்.எஸ் தேர்ந்தெடுத்து கஜேந்திர சௌஜ்ஹான் நியமிக்கப்பட்டார்[13]. மற்ற இமயம் போன்றவர்களையெல்லாம் பிந்தள்ளிவிட்டு, இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதெல்லாம் இருக்கும் நிறுவனங்களை காவிமயமாக்கும் திட்டம் தான். என்று அச்செய்தி முடித்தது[14]. ஒரு “சி” கிரேட் நடிகர் என்று தலைப்பிட்டு, அவர் நடித்த படங்களின் போஸ்டர்களுடன் “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தி வெளியிட்டது[15]. பொதுவாக அவர் படங்களில் இவ்வாறான “நெகட்டிவ் ரோல்களில்” தான் நடித்துள்ளார், தேடியும் வேறெதுவும் கிடைக்கவில்லை என்று அக்கட்டுரை செய்தி முடித்தது[16]. இவ்வாறு ஜூலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட அவருக்கு எதிரான பிரச்சாரம், அவரது மனிதத்தன்மையினை தூஷிப்பது என்ற முடிவான நோக்கத்துடன் செயல்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தொடர்பிருந்தால் பதவிக்கு வரமுடியும் என்பதெல்லாம் கூட ஒரு மாயை எனலாம். பிஜேபியிலேயே பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உள்ளது. பிஜேபியில் பலர் பதவிகளில் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இல்லை. இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல் எனலாம். கம்யூனிஸ்டுகள், மற்ற இடதுசாரி சித்தாந்திகள் போல வலதுசாரி மற்றும்  இந்துத்துவசித்தாந்திகள் அந்த அளவிற்கு திறமைசாலிகள் அல்லர். இருந்திருந்தால், கஜேந்தர சௌஹான் என்றோ, இப்பிரச்சினையிலிருந்து வெளிவந்திருப்பார் அல்லது பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும்! இனி தமிழ் ஊடகங்களின் விம்ர்சனம், செய்தி வெளியீடு முதலியவற்றைப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

22-08-2015

[1] He married a Christian lady, Esther, and faced many problems for his inter-religious wedding. http://www.firstpost.com/living/ur-ananthamurthy-pioneer-kannada-literatures-navya-movement-1677817.html

[2] http://scroll.in/article/675713/kannada-writer-ananthamurthy-loved-whiskey-and-a-good-argument

[3] . On the first day of class, a seminar on Indian mythology, he looked around at his ten or so students, and said, “Why don’t we go to my house, and continue the class over dinner and whiskey?” And so we abandoned the classroom for the rest of the term, and met at his house every week. The classes, fueled by good Scotch and his wife Esther’s tamarind rice, went on until one in the morning.

Suketu Mehta, Kannada writer Ananthamurthy loved whiskey and a good argument- A former student pays tribute to the towering writer who passed away on Friday, aged 81.,  Aug 23, 2014 · 07:46 am

[4] http://parallelcinema.blogspot.in/2005/08/salim-langde-pe-mat-rodont-cry-for.html

[5] The delicate relationship between a 15-year-old girl and her grandfather is used to describe how the growing political tensions between Muslems and Hindus in 1992 led to the destruction of a medieval Muslim mosque and subsequently, violent rioting in the streets of Bombay.

[6]In a debate moderated by TIMES NOW’s Editor-in-Chief Arnab Goswami, panelists — Gajendra Chauhan, Chairman, FTII, Paintal, Actor; Uday Shankar Pani, Filmmaker & Alumni FTII; Narendra Pathak, Member, FTII; Anupam Kher, Actor; Vinay Shukla, Filmmaker and Writer; Aruna Raje Patil, Filmmaker; Prateek Vats, Alumni, FTII; Saurabh Shukla, Actor; and Vikas Urs, Student, FTII (Cinematography).

 http://www.timesnow.tv/Debate-FTIIMahabharat-Bollywood-fights-Yudhisthira/videoshow/4478061.cms

[7] http://www.firstpost.com/politics/gajendra-chauhan-to-pahlaj-nihalani-the-unstoppable-rise-of-the-anti-intellectuals-under-modi-govt-2376458.html

[8] Rishi Majumder, Gajendra Chauhan to Pahlaj Nihalani: The unstoppable rise of the anti-intellectuals under Modi govt, Aug 3, 2015 15:44 IST.

[9] http://www.thehindu.com/features/magazine/bishwanath-ghosh-gajendra-chauhans-appointment-as-ftii-chairman/article7460395.ece

[10] Biswanath Ghosh, Ideology vs stature, Updated: July 26, 2015 01:14 IST

[11] Vivek Deshpande, The problem with Gajendra Chauhan -Debate over the appointment of the FTII chairman has acquired an elitist hue,   Updated: July 16, 2015 12:26 am.

[12] http://indianexpress.com/article/opinion/columns/the-problem-with-gajendra-chauhan/

[13] Mohua Chatterjee & Himanshi Dhawan, Chauhan was RSS pick for top job at FTII, TNN | Jul 11, 2015, 12.08 AM IST

[14] http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Chauhan-was-RSS-pick-for-top-job-at-FTII/articleshow/48025610.cms

[15] Deeptiman Tiwary, Gajendra Chauhan: A 34-year veteran of C-grade exploits, TNN | Jul 11, 2015, 01.19 AM IST

[16]  http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Gajendra-Chauhan-A-34-year-veteran-of-C-grade-exploits/articleshow/48026077.cms