Archive for the ‘வைத்தியராமத் தெரு’ Category

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

ஒக்ரோபர் 19, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் – ஆதரிப்பவர்களின் பின்னணி, செக்யூலரிஸ ஊடகங்கள், சித்தாந்திகளின் முகமூடிகள்!

Modi releasing the book of Arun Shourie

சென்னையில் மோடி எதிப்பு: சென்னைக்கு மோடி வருவதும், போவதும், முஸ்லிம் அமைப்புகள் மற்ற முகமூடிகள் அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், சென்னைவாசிகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அவர் வந்து கொண்டே இருக்கிறார், சென்று கொண்டே இருக்கிறார், கலாட்டா செய்பவர்கள், செய்து கொண்டே இருக்கிறார்கள். “துக்ளக்” விழாக்களுக்கு வந்தபோது, முஸ்லிம் பெண்கள் “கம்யூனிஸ” போர்வையில் கலந்து கொண்டது அந்நாட்களில் பேருந்துகளில் சென்றவர்களுக்கு தெரிய வந்தது. இருப்பினும் 18-10-2013 அன்று வந்தபோது, நிச்சயமாக பலருக்கு “மோடி சென்னைக்கு வந்திருக்கிறார்” என்று தெரியவந்துள்ளது, ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகக் கண்டு கொள்ளாமல் இருந்த பொது மக்கள் கூட, “மோடி எதிர்ப்பு” என்பதில் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதை உணர வைப்பதாக உள்ளது. ஏதோ சில மாணவர்கள் உள்நோக்கத்தோடு எதிர்ப்பு தெரிவித்ததை வைத்துக் கொண்டு, “தி ஹிந்து” செய்திகளை பாரபட்சமாக வெளியிட்டுள்ளதை படித்தவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனெனில், ஆதரவாகக் கூட மாணவ-மாணவியர் இத்தகைய ஆர்பாட்டங்களை நடத்தலாம். ஆனால், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வன்முறைகளை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Cho receiving a copy of the book released 2014

“மதவெறி” மோடியை எதிர்த்து “செக்யூலரிஸ” முகமூடிகளின் எதிர்ப்பு மனு:  தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தங்க தமிழ் வேளன் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச் முன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் மதசார்பின்மையைக் கட்டிக் காக்க மோடியின் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மற்றும் உரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கும், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, விசாரித்த நீதிபதிகள் மதிவாணன், கே.பி.கே. வாசுகி ஆகியோர், முறையான வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மனுக்களை தாக்கல் செய்வதால் விசாரணைக்கு ஏற்க இயலாது என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர்[1]. நரேந்திரமோடி நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போது எந்த கலவரமும் ஏற்படாமல் சென்னை போலீசார் பார்த்து கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக சில நாளிதழ்கள் குறிப்பிட்டுள்ளன[2].

Modi - Madras University visit 18-10-2014

கிரிமினல்வழக்கைசந்திக்கும்ஒருநபர்ஒருதனியார்அறக்கட்டளைக்காகபல்கலைக்கழகத்துக்குள்வந்துஉரையாற்றுவதுஏற்கத்தக்கதல்ல: முன்னதாக தங்கத் தமிழ்வேலன் சென்னை மாநகர கமிஷ்னரிடமும் ஒரு மனு அளித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பது முறையற்றது. குஜராத் மதக்கலவரத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது அங்கு மோடி உரையாற்றுவது பல்கலைக்கழகத்தின் மதசார்பற்ற நிலைக்கே அபாயத்தை ஏற்படுத்திவிடும். கிரிமினல் வழக்கை சந்திக்கும் ஒரு நபர் ஒரு தனியார் அறக்கட்டளைக்காக பல்கலைக்கழகத்துக்குள் வந்து உரையாற்றுவது ஏற்கத்தக்கதல்ல[3]. எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட வேண்டும். இதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இஸ்லாமிய அறிஞரான அமினா வதூத் [ Amina Wadud, an Islamic scholar] உரையாற்றுவதற்கு இதே பல்கலைக்கழகத்துக்கு தமிழக போலீசார் அறிவுறுத்தி, இந்த உரையை நிறுத்தியதை நினைவுகூர்கிறேன் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்வேலன்[4].

Modi opposing radical Communist students

மோடி கூட்டம் நடைபெற்றதே இவையெல்லாம் நாடகங்கள் என்றாகி விட்டன: சட்டப்படி, நீதிப்படி என்று பேசுகின்ற நிலையில், அவையெல்லாம் எல்லோருக்கும் பொறுந்து என்பதை, இதே சித்தாந்திகள் மறந்து விடுகிறார்கள் அல்லது அறிந்தும் அறியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் வேலையில் சன்-நியூஸ் தொலைக் காட்சியில் விவாதம் நடந்து கொண்டிருப்பதில் கம்யூனிஸம், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சிந்தாதிகள் எவ்வாறு பிஜேபிக்கு எதிராக பொய்களை பேசிக் கொண்டு பிரச்சார ரீதியில் செய்து வருகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஊழலைப் பற்றி, பிஜேபி-அல்லாத கட்சிகளின் மத-சார்பற்ற நிலையைப் பற்றி உண்மை நிலையை மறைத்து, பிஜேபியை தொடர்ந்து மதவாத கட்சி என்று சொல்லிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே “செக்யூலரிஸ” சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகத்தையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

Narendra Modi received at Chennai Airport.1சென்னையின் மீது “நமோவின் தாக்கம்: பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பாடுபட்டு எல்லா ஏற்பாடுகளையும், அமைப்புகளை செய்துள்ளனர். திருச்சியில் 26ம் தேதி நடக்கவிடருக்கும் பொது கூட்டத்திற்கு முன்னதாக இந்த வரவிருப்பதால், அதனை முழு அளவில் உபயோகித்துக் கொள்ள வேலை செய்துள்ளனர்[5]. அன்றைய நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அருண் ஷோரி எழுதிய Self-deception: India’s China Policies என்ற புத்தகத்தை மோடி வெளியிட்டார். “தி ஹிந்து” போன்ற நாளிதழ்கள் வழக்கம் போல “கைது, டிராபிக் ஜாம், மக்களுக்கு தொந்தரவு” என்றெல்லாம் செய்திகளைக் கொடுத்துள்ளது[6]. “எதிர்ப்பு-சித்தாந்தம்” ரீதியில் கம்யூனிஸ சார்புள்ள ஊடகங்கள் இவ்வாறு, ஜனநாயகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நடுநிலையில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த முயற்சிகள் வெளிப்பட்டன. தமிழக அரசு மோடி விஜயம் தொடர்பாக பாதுகாப்பு உரிய முறையில் செய்துள்ளது[7]. ஏற்கெனவே, அத்வானி கொலை முயற்சி வழக்கில் பல தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், இந்த பாதுகாப்பு தேவையாகிறது என்று போலீசார் கூறியுள்ளனர்[8].

Narendra Modi received at Chennai Airport.2புரட்சிகர மாணவர்,  இளைஞர் முன்னணி,  இந்திய மாணவர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முதலியோரின் எதிர்ப்பு: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள்[9]. சுமார் 6,000 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டனர். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர்[10].

Narendra Modi received at Chennai Airport.3பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம்: அக்.18 வெள்ளிக்கிழமைஇன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் “இந்தியாவும் உலகமும்” என்ற தலைப்பில் சென்னையில் நானே பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார் குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி[11]. நானே பல்கிவாலா அமைப்பின் மூலம் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய நிகழ்ச்சியில், பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவும், தொடர்ந்து நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Narendra Modi received at Chennai Airport.4மோடியின் விமர்சனம்: அப்போது மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். ரூபாயின் மதிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளது என்று கூறிய அவர், சிதம்பரத்தை தமிழக மக்கள் ஏன் டெல்லிக்கு அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்[12].சென்னை விமான நிலையத்தில் மோடி பேசுகையில், தமிழகத்தில் மாற்றத்தின் அலை நிலவுகிறது. ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கலவில்லை. காங். அல்லாத இந்தியாவை மக்கள் விரும்புகின்றனர்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது[13]. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது[14]. சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல், உபி.யில் தங்க புதையலை தோண்ட உத்தரவிடுகிறது மத்திய அரசு[15]. மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைந்தால் தமிழக மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம்.,’ என்று கூறினார்[16].

Narendra Modi received at Chennai Airport.5தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய முறை: தீவிரவாதத்தைப் பொறுத்த வரைக்கும், இந்தியா தான் உலகில் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. இப்பொழுதைய யுத்தமுறைகள் மாறியுள்ளதால், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு முறையும் மாற்றிக் கொள்ளப் படவேண்டும். சைபர்வெளியில் நிறைய “நெருப்பு சுவர்கள்” இருக்கின்றன. சைபர் உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும், அதற்கு “நெருப்பு சுவர்கள்” தேவையில்லை, ஆனால், “மனித இதயங்கள்” தாம் தேவைப்படுகின்றன[17].

Narendra Modi received at Chennai Airport.6மோடியைகடவுள்அனுப்பிவைத்திருக்கிறார்: தற்போதைய சூழலில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் அருண் ஷோரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பத்திரிகையாளர் சோ ராமசாமி, மோடியை நமக்காக கடவுள் அனுப்பி வைத்திருக்கிறார். தற்போதைய தேர்தல் நரேந்திர மோடியை மையமாக வைத்து நடைபெறுகிறது- எங்களது 2 நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டிருக்கிறார்.. எங்களிடத்தில் மிகுந்த அன்பை மோடி வைத்திருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் துக்ளக்கில் எழுதினால் அவர் உடனே எங்களுக்குப் போன் செய்து நன்றி தெரிவிப்பார் என்றார்.

அருண்ஷோரியின் உரை: இந்நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் அருண் ஷோரி, இது நரேந்திர மோடியில் இளைஞர் கல்வி முகாம். என்னுடைய புத்தகத்தை நரேந்திர மோடி வெளியிடுவதன் மூலம் என்னுடைய புத்தகம் அதிக விற்பனையாகும் என்பதை நான் அறிவேன். நரேந்திர மோடிதான் நமக்கு புதிய நம்பிக்கை.. புதிய பாதை.. நம்முன் உள்ள உடனடி பிரச்சனை பாகிஸ்தான்தான். ஆனால் அதை எதிர்கொள்ளலாம். சீனாதான் இந்தியாவுக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியதுடன் சீனா எப்படியெல்லாம் நமக்கு எதிராக இருக்கிறது என்று விவரித்தார்[18].

மோடிவிழாதடுக்கமனுக்கள்போடும்எதைக்காட்டுகிறது?: சென்னையில் மோடி எதிப்பு விசயமாக மனு தாக்கல் செய்தது போன்ற போக்கு மற்ற இடங்களில் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நாளை பாஜக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள 127 விவசாயிகள் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி விழாவிற்கு தடைவிதிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது[19].

© வேதபிரகாஷ்

19-10-2013


[8] The Crime Branch CID of the Tamil Nadu police has developed a computer-aided portrait of Abubakar Siddique, the alleged brain behind the plot to blow up the convoy of senior BJP leader L.K. Advani near Madurai in 2011. Since the police have only a very old photo of Siddique, investigators took the assistance of other suspects arrested in the case and developed his portrait from different angles, agency sources said. Besides the images of Siddique, other absconding accused persons wanted in extremist activities in the State were circulated to police personnel deployed at the venue, airport, railway stations, bus stands etc. Several teams of the Special Investigation Division of the CBCID have also been deployed as part of the security arrangements, the sources said.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/security-blanket-over-chennai-for-modis-visit/article5244322.ece?ref=relatedNews

[9] Their protest was part of a series of agitations involving over 300 persons belonging to the Democratic Youth Federation of India(DYFI), Students Federation of India(SFI), All India Democratic Women’s Association(AIDWA), and Revolutionary Students Youth Federation(RSYF) at various locations in the city.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/modis-visit-to-chennai-faces-protest/article5247862.ece

[17] “Terrorism needs a special mention. No country has suffered more than India. It is central to foreign policy as it is driven from abroad,” he said. Modi also emphasised that modern warfare will be fought in the cyber world. “We need to have strong walls against it. Firewalls are not going to be enough. Walls made up of human hearts are going to be needed,” he said.

http://www.indianexpress.com/news/cant-allow-china-to-dominate-india-narendra-modi/1184413/