Archive for the ‘முலாயம்’ Category

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

செப்ரெம்பர் 13, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (4)

 

பாரபட்சமாக வழக்குகள் பதிவு செய்யப் பட்ட விதம்: 27-08-2013 அன்ற நிகழ்சி தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கொலையுண்ட பெற்றொர்களின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது[1]. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் சம்பவ்வம் நடந்தபோது கூட அங்கில்லை. ஆனால், பெண்ணை மானபங்கம் செய்ததற்காக, இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதற்காக எந்த எப்.ஐ.ஆரும் போடப்படவில்லை[2]. இது நிச்சயமாக இந்துக்களுக்கு அதிருப்தியையும், வெறுப்பையும் ஏபடுத்தியது. இது தவிர கவால் பஞ்சாயத்திற்கு போட்டியாக இன்னொரு பஞ்சாயத்து கலாப்பூர் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், தலைவர்கள் தைரியம் இருந்தால் ஆகஸ்ட் 31ம் தேதி, அதே நேரத்தில் கூட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டனர்[3]. இவர்களில் பெர்ம்பாலோர் முஸ்லிம்கள் என்று குறிப்பிடத் தக்கது. இதனால், முன்னரே அவர்கள் பஞ்சாயத்து கூட்டினர் போலும். எதிர்பார்த்தபடி கூட்டம் வரவில்லை, 40,000 பேர்கள் வந்திருந்தனர். இதனால், செப்.7ம் தேதி தள்ளி வைத்தனர். ஆனால், கலைந்து செல்லும் போது, பஸி என்ற கிரமத்தில், ஷாபூர் போலீஸ் நிலையம் அருகில் கத்திகளால் தாக்கப்பட்டனர்[4]. இப்பொழுது போலீசார் 7 இந்துக்கள் மீதும், ஒரு முஸ்லிம் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[5]. இங்கும் பாரபட்சம் காட்டப் படுகிறது. இது “செக்யூலார் ஜுடிசியலிஸம்” [மதசார்பற்ற நீதிசெயல்படுத்தும் முறை] போலுள்ளது. அதாவது, எதிர்மறையாக செயல்ப்டும் முறையாகி விட்டது. முதலில் முஸ்லிம்கள் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை. இங்கோ ஏதோ 7:1 விகிதத்தில் வழக்குப் பதிவு செய்தது போலுள்ளது. இதனால், கலவரம் அருகிலுள்ள ஷம்லி, மீரட் போன்ற பகுதிகளில் பரவியது.

 

30-08-2013 (வெள்ளிக்கிழமை): ஷஹீத் சௌக் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, பெருளவில் கூடினர். முஸ்லிம் தலைவர்கள் தூண்டிவிடும் விதத்தில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் பாஜக தவிர மற்ற எல்லா கட்சியிகளின் முஸ்லிம் தலைவர்களும் மோசமாக, தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளனர்[6]. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக செயல்படுவதும் வெளிப்படுகிறது. அதாவது அம்மாவட்டம், பஞ்சாயத்து தொகுதிகளில் முஸ்லிம்கள் பதவிக்ளில் இருந்தாலும், அவர்கள் எல்லா பிரஜைகளின் நலன்களையும் கவனிக்க  வேண்டும் என்ற கடமையை மறந்து, முஸ்லிம்கள் என்ற எண்ணத்திலேயே, செயல்பட்டுள்ளனர், பேசியுள்ளனர். கலவரம் பெரிதானதற்கு இதுதான் காரணம் எனலாம் (பிறகு ஊடகங்கள் அவ்வாறு வெளியிடுகின்றன). குறிப்பாக, முஸ்லிம்கள் தூண்டிவிடும் போக்கில் இருந்தது. ஆஸம்கான் வழக்கம் போல, பஞ்சாயத்தில் யாரோ முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் என்று பேசியதாக கூறினார்[7]. வழக்கம் போல, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு கலவரம் நடத்துதல் என்பது, பல கமிஷன்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமல்லாது, இன்று தான், போலி வீடியோ என்று சொல்லப்படும், வீடியோ இணைதளத்தில் ஏற்றப்பட்டது. இரண்டு இளைஞர்களை ஒரு கும்பல் தாக்கப்படுவது போல காட்சிகள் இருந்தன. ஆனால், அது இரண்டு வருடங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதாகும்[8]. சியால்கோடில் (பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது) என்றும் செய்திகள் வந்துள்ளன[9]. அப்படியென்றால், அதனை சுற்றுக்குள் விட்டது, யார் என்று ஆராயவேண்டியுள்ளது. அரசு எங்கிருந்து அந்த வீடியோ வந்தது என்று கண்டுபிடிக்க உத்தாவு இட்டுள்ளது[10]. ஏற்கெனவே சங்கீத் சிங் சோம் என்ற பிஜேபி எம்.எல்.ஏ இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதற்காக, அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது[11].

 

31-08-2013 (சனிக்கிழமை): அந்த இரண்டு இளைஞர்களும் ஜட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி நியாயம் கேட்டனர். பாரபட்சமாக நடந்து கொண்ட ஷம்லி மாகாணத்தின் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட்டை விலக்குமாறு கோரிக்கை வைத்தனர். இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால், அவர்களே செய்யலில் இறங்கவேண்டியிருக்கும் என்று பேசினர்[12]. 07-09-2013 அன்று நக்லா மண்டூர் என்ற இடத்தில் “மஹா பஞ்சாயத்தை” கூட்ட முடிவு செய்தனர். கலைந்து செல்லும் போது, ஒரு கார் மடக்கப் பட்டு, காரில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.

 

01-09-2013 (ஞாயிறு): ஷஹீத் சௌக் (முஸ்லிம்கள்) மற்றும் நக்லா மண்டூர் (இந்துக்கள்) இடங்களில் பேசியவர்களின் மீது, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. அதாவது, உள்ளூர் போலீசார், அப்படி நடந்து கொண்டுள்ளது.

 

02-09-2013 (திங்கள்): கூட்டம் சஞ்ஷக் மற்றும் கவல் என்ற இடங்களில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களை தாக்கியது. இதனால் பிஜேபி பந்தை அறிவித்தது. இதிலிருந்து, முஸ்லிம்கள் கோவில்களை தாக்கியுள்ளனர் என்றாகிறது. இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

 

03-09-2013 (செவ்வாய்): சங்கீத் சோம் என்ற எம்.எல்.ஏ மீது கவல் நிகழ்ச்சி பற்றி போலியான விடியோ பரப்பியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஷம்லியில் கலவரம்.

 

04-09-2013 (புதன்கிழமை): முசாபர்நகர் பகுதிகளில் கலவரம் பரவியது.

 

05-09-2013 (வியாழக்கிழமை): மஹாபஞ்சாயத்திற்கான அழைப்பு விடப்பட்டது.

 

06-09-2013 (வெள்ளிக்கிழமை): பாரதீய கிஷான் யூனியன் ஆட்கள், நங்க்லா மந்தௌத் ஜெயிலில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அப்படியென்றால், அவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றாகிறது. பாரதீய கிஷான் யூனியன் உத்திரபிரதேசத்தில் உள்ள கட்சி சார்பற்ற விவசாய சங்கம் ஆகும். ஒரு காலகட்டத்தில், சரண் சிங்கிற்கு ஆதரவாக இருந்தது. அவர் காலமாகிய பிறகு, அவரது மகன் அஜித் சிங்கிற்கு ஆதரவாக உள்ளது. ஆனால், அரசியல் செல்வாக்கு ஒன்றும் இல்லை எனலாம். பஞ்சாயத்தில் கலந்து கொண்ட திகாயத் சகோதர்களின் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 13-09-2013


[1] Sources said police registered the first information report (FIR) against the parents of the girl who were not present on the spot. The inclusion of parents’ names in the FIR did not go down well with the majority community of the area, following which the sympathisers of the girl’s family announced a panchayat in Kawaal Aug 31. The rival community opposed the plan.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[3] Opposing the Kawaal panchayat, a parallel panchayat was planned in Khalapar area of the city. At this, the government representatives, including members of parliament and state legislature, and local leaders dared the Kawaal panchayat organisers to hold it at the appointed time on Aug 31.

http://indiatoday.intoday.in/story/stalkers-death-triggered-muzaffarnagar-conflagration/1/308991.html

[4] A huge gathering of about 40,000 people turned out but the Kawaal panchayat organisers called off the proceedings and announced the assembly again Sep 7. But when the participants of the – ‘Beti Bachao Bahoo Bachao panchayat’ – were returning to their homes they were attacked by swords at Basi village under Shahpur police station.

http://www.hindustantimes.com/India-news/UttarPradesh/Stalker-s-death-triggered-sectarian-violence-in-Muzaffarnagar/Article1-1119594.aspx

[5] The police booked under the National Security Act (NSA) eight people, of whom seven people were from the majority community and one person was from the minority community. The riot quickly spread to the neighbouring areas falling under Shamli and Meerut districts.

 

[6] இதை 11-09-2013 அன்று தான் “ஹெட்லைன்ஸ் டுடே” செனல் வெளியிடுகிறது. அதாவது, ஒரு பிஜேபி எம்.எல்.ஏ பிறகு பேசியதை முன்னால் காட்டி, முன்னால் தூண்டிவிட்டு முஸ்லிம்கள் பேசியதை பின்னால் காட்டுகிறார்கள். இதுதான் செக்யூலரிஸ ஊடகங்களின் தலைகீழ் செய்தி வெளியீடும் யுக்தி.

[7] The state’s minority welfare minister, Mohammad Azam Khan, said some at the meeting gave provocative speeches calling for Muslims to be killed.

http://www.washingtonpost.com/world/asia_pacific/troops-deployed-to-quell-deadly-communal-clashes-between-hindus-muslims-in-north-india/2013/09/08/66e33f48-1854-11e3-961c-f22d3aaf19ab_story.html

[8] “The video shows a group of men lynching two boys. It went viral, particularly among the Jats. But we found out that the video was made at least two years ago and had been shot in either Pakistan or Afghanistan,” the officer said. He said the police managed to block the video, but by then several people had downloaded the clip on their mobile phones.

http://www.indianexpress.com/news/communal-clashes-in-western-up-town-reporter-among-six-killed/1166240/2

[9] Police said DVDs and CDs of the maha-panchayat remain in circulation and have surfaced in east and central UP as well. The hunt for BJP MLA Sangeet Som and 228 others for distributing the malicious morphed video of the Sialkot riots continues. The police plan bulk SMSes to counter rumour-mongering. Gupta said fly-by-night computer centres making the CDs are on their radar as well.

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

ஒக்ரோபர் 3, 2010

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

 

உத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.

மௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

பைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.