Archive for the ‘துப்பாக்கி’ Category

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

ஜனவரி 17, 2016

மால்டா திருட்டுத் துப்பாக்கித் தொழிற்சாலை – சகல வெடிப்பொருட்கள் கொண்ட ரசாயன கோடவுன், எடுத்துச் செல்ல பெண்களை அமர்த்துதல், ஜிஹாதிகளின் தொடர்புகள்!

The arms seized by Malda police being displayed outside the Englishbazar all-womens station on Sunday. Picture by Surajit Roy- Jan.2015

மால்டாவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை (ஜனவரி.2015): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாபவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த துப்பாக்கித் தொழிற்சாலை காவல்துறையினரால் கண்டறியப்பட்டது. மர்ம நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பதந்துலி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், கிராமத்திற்கு அருகே துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்குவதை கண்டுபிடித்தனர்[1].  அந்த இடத்தை சுற்றி வளைத்து தொழிற்சாலையில் இருந்த மொஹம்மது நஜ்ருல் [Md Nazrul] என்பவரை போலீசார் கைது செய்தனர்[2]. விசாரணையின் போது பீகார் மாநிலத்தில் உள்ள முங்கரில் இருந்து வந்த நஜ்ருல், அங்கு துப்பாக்கி தயாரிப்பது தெரிய வந்தது[3]. அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன[4]. போலீஸார் தெரிவித்தது: “மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக் கிராமத்தில் துப்பாக்கிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் அந்த ஆலை சட்டவிரோதமாக இயங்கி வந்தது கண்யறியப்பட்டது. அங்கிருந்து 30 சிறு கைத்துப்பாக்கிகளும், துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உற்பத்தில் நிலையில் இருந்த 150 துப்பாக்கிகளும், துப்பாக்கி செய்யத் தேவையான மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன மேலும், இதில் தொடர்புடைய காலியாசக் கல்லூரி மாணவன் காதிர், என்பவனிடமும் விசாரணை நடைபெற்றது”, என்று போலீஸார் தெரிவித்தனர்[5]. மால்டா கல்லூரி மாணவர்களின் தொடர்பு நோக்கத்தக்கது.

தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை

மால்டா கள்ளநோட்டு கும்பல்: கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில், குற்றவாளிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, திருப்பூர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருப்பூர் தெற்கு போலீசாருக்கு, கருவம்பாளையம் பகுதியில் கள்ளநோட்டு புழக்கம் இருப்பதாக, தகவல் கிடைத்தது. 2010, அக்., 31ல், அப்பகுதியில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் கள்ளநோட்டு வைத்திருந்த, மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அஸ்ரபு ஷேக் 34, முகமது சதாவுல், அப்துல் ரகீப் ஆகியோர் பிடிபட்டனர்[6]. அவர்களிடம் இருந்த, 2.46 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், 53 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு (கள்ளநோட்டு தடுப்பு பிரிவு) மாற்றப்பட்டது. திருப்பூர் சப்-கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை நீதிபதி நவமூர்த்தி விசாரித்து, முகமது அஸ்ரபு ஷேக்குக்கு நான்கு ஆண்டு, எட்டு மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்[7]. மற்ற குற்றவாளிகளான முகமது சதாவுல், அப்துல் ரகீப் இருவரும், ஜாமினில் வெளிவந்த போது தலைமறைவாகினர். அவர்களை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். அதாவது பாகிஸ்ஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ளநோட்டுகள் மால்டா மூலம் இந்தியாவில் விநியோகிப்பது வியப்பாக இருக்கிறது[8]. இந்தியாவில் ஆண்டொன்றிற்கு ரூ.1500 கோடி கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுகின்றன. இது மால்டாவில் சிலரை கைது செய்து விசாரித்ததில் தெரிய வந்தது[9]. இதுதவிர, குண்டுகள், துப்பாக்கிகள், ரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட கைதுகள் ஏராளம். 2015ம் ஆண்டு கண்டுபிடித்த சில உதாரணங்கள், கைதுகள்.

மால்டா துப்பாக்கி தொழிர்சாலை 2015

மார்ச்.14, 2015: எல்லைத்தாண்டிய ஜிஹாதி தொடர்புகள் பர்துவான் குண்டுவெடிப்பில் தெரிய வந்தது. இதனால், எல்லைப்புற ஊர்களில் பி.எஸ்.எப் மற்றும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். எல்லாதுறைகளிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி மார்க்சிஸ்ட்டுகளில் தலையீடுகள் இருப்பதினால், சில விசயங்கள் வெளிவருகின்றன, பல மறைக்கப்படுகின்றன. அத்தகைய சோதனையில் பர்த்வான் மாவட்டத்தில், பெல்சோர் கிராமத்தில் 200 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டன். அக்டோபர்.2, 2014 குண்டுவெடுப்பிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா என்று விசாரணை நடக்கிறது[10].

மால்டா - முங்கர், பீஹார் தொடர்புகள்

மார்ச்.14, 2015:  போங்கௌன் பேருந்து நிலையம், 24-பர்கானாவில் அப்துல் ரௌப் மண்டல் மற்றும் ரஹிமா மண்டல் என்ற இருவர் 10 கைத்துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் ரசாயபொருட்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இதில் ரஹீமா ஒரு பெண். பீஹாரில் முங்கர் மாவட்டத்தில் ஜமால்பூரிலிருந்து அவற்றைப் பெற்றதாக ரஹீமா தெரிவித்தாள். ஜனவரியில் கைது செய்யப்பட்ட மொஹம்மது நஜ்ருல் என்பவனும் இதே இடத்தில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடத்தக்கது[11]. முங்கர் மாவோயிஸ்டுகளின் இடமாகவும் இருக்கிறது, அங்கும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன[12]. இங்கு ரகசியமாக உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள் இந்தியாவில் உள்ள பல தீவிரவாத கோஷ்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது[13]. இங்குள்ள அத்தகைய துப்பாக்கி தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலியோர் மெத்தனமாகவே இருந்து வருகிறார்கள்[14]. இவ்வாறு பிஹார், ஜார்கென்ட், மேற்கு வங்காளம் மற்றும் பங்காளதேசம் முதலிய மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள், தீவிரவாத செயல்களுக்கு உதவுவது தெரிகிறது.

Munger arms manufacturers, who are adept at churning out all sorts of sophisticated firearms, pictured at an illegal factory

ஏப்ரல்.20, 2015: ரடௌ பஜார் (மால்டா) பகுதியில், போலீஸார் சொதனையிட்டதில் ஒருவனிடத்தில் கள்ளநோட்டுகளும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது[15]. அதாவது, கள்ளநோட்டு விநியோகம் மற்றும் ஆயுத விநியோகம், பரிமாற்றம் முதலியன சேர்ந்தே நடைபெறுகின்றன என்று தெரிகிறது.

Munger has evolved to make modern firearms now

மே.9.2015 – பர்துவான்: பெகுன்கோலா கிராமத்தில் (பர்துவான்) ஒரு வீட்டில் திடீரென்று குண்டுவெடித்ததில் இரண்டு பெண்கள் காயமடைந்தன. சோதனையிட்டதில், அவ்வீட்டில் வ்ர்டிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது[16]. இவ்வாறு தொடர்ந்து பெண்களின் தொடர்பு குற்றங்களை மறைக்க என்று தெரிகிறது. முஸ்லிம் பெண்களை முன்னிருத்தி, இத்தகைய தேசவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. முச்லிம் பெண்கள் வீட்டில் இருந்தால், சோதனை செய்ய கலாட்டா செய்வர் என்பது அறிந்த விசயமே. இப்படி பெண்கள் அதிக அளவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தால், அவர்கள் எப்படி குழந்தைகளை கவனிக்க முடியும். இதனால் தான், ஒருவேளை குழந்தைகளை மற்றவர்களிடம் விட்டு விடுகின்றனர் போலும். அவ்வாறு சரியான அன்பு, பராமரிப்பு, ஆரோக்கியம் முதலியவை கிடைக்காததால் தான் குழந்தைகள் இறக்கின்றன போலும். அல்லது அவை தங்களது ஜிஹாடி வேலைகளுக்குத் தொந்தரவாக இருக்கின்றனவா?

Reach of MUNGER_WEAPONS_

அக்டோபர்.14, 2015 – பர்துவான்: ஒரு வீட்டில் சோதனையிட்டபோது, வெடிகுண்டு மருந்து, குண்டு தயாரிக்க உதவும் ஜெல், பிக்ரிக் அமிலம், காரீய அஸைட், மெக்னீயம் பொடி, யுரீயா நைட்ரேட், இரும்பு ஆக்ஸைட், அம்மோனியம் நட்ரேட், பொட்டாசியம் நைரேட், கந்தகம், மீதைல் ஆல்கஹால், எத்னால், நைட்ரோ பென்ஸீன், பேரியம் பெராக்ஸைட், காரீய நைட்ரேட், வெடிக்க உதவும் கருவிகள் (டீடோனேடர்கள்), வயர், டைமர் என்று சகல பொருட்களும் பரிமுதல் செய்யப்பட்டன[17]. போலீஸாருக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “இப்படி எல்லா வெடிமருந்து ரசாயனங்கள், வெடிமருந்துகள் மற்றும் குண்டுகள் தயாரிக்க வேண்டிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இதுதான் முதல் முறை”, என்று கூறினர்.

© வேதபிரகாஷ்

17-01-2016

[1] மாலைமலர், மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமான துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 11, 4:44 PM IST.

[2] http://www.indiatvnews.com/crime/news/illegal-mini-gun-factory-found-7421.html

[3] http://www.maalaimalar.com/2015/01/11164420/Illegal-mini-gun-factory-found.html

[4] தினமணி, மேற்குவங்கத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை, First Published: Jan 12, 2015 2:24 AM Last Updated: Jan 12, 2015 2:24 AM.

[5]http://www.dinamani.com/india/2015/01/12/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/article2615537.ece?service=print

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1293570&Print=1

[7] தினமலர், கள்ளநோட்டு வைத்திருந்தவருக்கு 4 ஆண்டு சிறை,ஜூலை.11, 2015, 01.14.

[8] http://www.oneindia.com/india/why-does-fake-currency-come-from-west-bengal-1788096.html

[9] http://www.oneindia.com/india/fake-currency-rs-1500-crore-pumped-into-india-in-one-year-1756998.html

[10] Bardhaman District. Two people were arrested and a huge cache of crude bombs and some firearms seized in Bardhaman District of West Bengal. During a combing operation Police made the seizures from a hideout in Belsore village. “We have seized around 200 crude bombs and a few country-made guns. Two people have been arrested,” a Police Officer said. The Police are examining if the incident has any links to the October 2, 2014 Bardhaman blast incident.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[11] Bongaon bus stand / North 24-Parganas District. A joint operation by the BSF and West Bengal Police led to the arrest of two persons, identified as Abdul Rauf Mandal and Rahima Mandal, and seizure of 10 country-made pistols, ammunition and a suspicious looking chemical from their possession at the Bongaon bus stand of North 24-Parganas District in West Bengal. The suspects have been arrested and a search is on for the man who was to collect the consignment from them. The white chemical found with the guns and ammunition has been sent for analysis. Officers suspect that it is some variety of low-grade explosive that was to be used to make crude bombs. Later during interrogation, Rahima told interrogators that she had received the consignment from a person in Jamalpur area of Munger District in the State of Bihar and was returning to Patkilpota to hand it over to one Taleb Mondal. A search has been launched for Taleb as he could tell authorities to who he planned to hand over the weapons and suspected explosive.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[12] http://www.deccanherald.com/content/444165/naxal-arms-factory-busted-bihar.html

[13] Illegal weapons manufactured in Munger in Bihar have found their way to various terror groups and criminal gangs in several parts of the country as well as to Bangladesh, officials have said.http://www.thehindu.com/news/national/munger-pistols-a-headache-for-police/article4775278.ece

[14] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2374215/Need-loan-gun-factory-Just-ask-Government-Police-reveal-illegal-pistol-makers-Munger-financed-PMRY-grants.html

[15] Malda District. Acting on a tip off Police raided Ratua Bazaar area in Malda District of West Bengal and arrested a man on charge of carrying FICN. A Police official said FICN with face value INR 50,000 and a country made hand gun was confiscated from that man.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[16] May.9,2015 Bardhaman District Two women were injured in an explosion inside a house in Bardhaman District of West Bengal. According to the Police, the house was used to stock crude bombs. “The house is located in Begunkhola village. It collapsed from the impact of the blast, leaving two women injured,” Bardhaman SP Kunal Agarwal said. A senior police official said the house belonged to one Sanjoy Ghosh who was arrested from Katwa in the same District in connection to a criminal case a few days ago.

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

[17] October.14. BURDWAN . The NIA officials were surprised by the variety of explosives and chemicals found at the blast site in Burdwan leading them to suspect a foreign link with the accused. The list of explosives seized includes gun powder, power gel, picric acid, lead azide, magnesium powder, urea nitrate, potassium nitrate, sulphur, ammonium nitrate, iron oxide, methyl alcohol, ethanol, nitrobenzene, barium peroxide, sodium hydroxide and lead nitrate purified. Besides, detonators, wires and timer devices were also seized. An officer said “This is the first time such a variety of chemicals and explosives were found at a single place related to blast suspects.”

http://www.satp.org/satporgtp/countries/india/database/westbengal.htm

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

ஜனவரி 17, 2016

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 2012

2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்?

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 25-01-2012குழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:

  1. மால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.
  2. ஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
  3. பர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
  4. ஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.
  5. முஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.
  6. இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.
  7. மேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.
  8. ஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.
  9. பழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].
  10. ஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].

ஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.

Malda Kaliachak polic stationசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன?: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது? சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா?

Malda map, IHC, poppy cultivationமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.

14-ramjanmabhumi-naya-mandir-pillars-are-readyபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்?: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது? இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா? அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

© வேதபிரகாஷ்

17-01-2016

[1]  Soudhriti Bhabani, Dreams die young in horror hospital where 37 children have died in less than a week, UPDATED: 09:17 GMT, 25 January 2012.

[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.

[3] http://www.maalaimalar.com/2014/06/07130751/8-children-die-in-West-Bengal.html

[4] Sources said women in labour were admitted to the Malda hospital from the block healthcare units and from neighbouring states, such as Jharkhand and Bihar, and even Bangladesh.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2091391/Malda-crib-deaths-37-children-died-West-Bengal-hospital-week.html

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Unripe-litchis-harmful-for-children-Bengal-minister-says-after-Malda-deaths/articleshow/36401764.cms

[6] Even as West Bengal Chief Minister Mamata Banerjee recently called the spurt in infant death cases  in state hospitals a “rumour”, 10 more children were reported dead in Malda sub-divisional government hospital in the last 48 hours.

http://indiatoday.intoday.in/story/infant-deaths-continue-in-malda-hospital-10-more-die-in-48-hours/1/171845.html

[7] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

[8] http://ayodhyatourism.com/karsevak-puram/

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece