Archive for the ‘கூடாரம்’ Category

“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)

நவம்பர் 30, 2013

“குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (4)

 Modi with Mathuri and the police officer 2013

இப்பிரச்சினை பெரியதாகும் என்று நினைத்து, முன்பு, “குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)” என்ற தலைப்பில் ஒரு 21-11-2013 அன்று பதிவையிட்டிருந்தேன்[1]. இதன் இரண்டாவது[2] மற்றும் மூன்றாவது[3] பதிவை இங்கே காணலாம்.

Modi riding on a cart at the Kutch Ustav

உளவு  பார்க்கப்பட்ட  இளம்பெண்ணை  நரேந்திரமோடி  சந்தித்ததாக   கூறப்படும்  படங்கள்: ஊக்குவிக்கும், போதையேற்றும், பித்தர்களாக்கும் செய்திகள் போன்று இன்று புலனாய்வு செய்திகள் என்று வெளியிடப்படுகின்றன. உளவு பார்க்கப்பட்ட இளம்பெண்ணை நரேந்திர மோடி சந்தித்ததாக கூறப்படும் படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[4], என்று தமிழ் ஊடகங்கள் பின்னணியை ஆராயாமல் வெளியிட்டுள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா பதவியில் இருந்தபோது, குறிப்பிட்ட ஒரு இளம்பெண்ணை கண்காணிக்கும்படி போலீஸ் அதிகாரி ஜிங்காலுக்கு உத்தரவிட்டதாகவும், அதன்படி அந்த பெண்ணின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மோடியோ, அமித் ஷாவோ நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் பா.ஜ.கவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என காங்கிரஸ் பிரமுகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதை பாஜ திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

Modi, Sharma at Kutch Ustav.2

காங்கிரஸின்  அழுத்தற்குட்பட்டு  விசாரணை  கமிட்டு  ஏற்படுத்தியது: இதற்குள் தருண் தேஜ்பால் விவகாரம் வெடித்து புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தின. இதில் காங்கிரஸ்-பாஜக நேரிடையாகவே மோதிகொள்ள ஆரம்பித்தன. ஆனால், அதிலும் மாட்டிக் கொண்டது மோடிதான்! பெண் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் “விகாஷா நெறிமுறைகளை”ப் பின்பற்ற வேண்டும் என்றுள்ளதால், ஒருவேளை பிரசினையைத் தவிர்க்க பாஜக அவ்வாறு விசாரணை கமிட்டியை நியமித்திருக்கலாம். இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் தேதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது[5].  ஆனால், காங்கிரஸ்காரர்கள் அதனையும் குறை கூறினார்கள். வழக்கம் போல சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார்கள்.

Modi, Sharma at Kutch Ustav

கட்ச்  ஷ்ரத்  உஸ்தவ்”   நடந்த   போது   எடுக்கப் பட்ட   புகைப்படங்கள்  (2005): அக்டோபர் 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த “கட்ச் ஷ்ரத் உஸ்தவ்” (कच्छ शरद उत्सव) விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை “குலைல்” என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டுள்ளது[6]டீது தவிர 13 படங்களை வெளியிட்டுள்ளது[7]. அந்த பெண்ணின் பெயர் மாதுரி (உண்மையான பெயர் அல்ல) என்று கூறியுள்ள “குலைல்”, அவருடைய முகத்தை தெளிவாக காட்டாமல் மறைத்து வெளியிட்டு இருக்கிறது. மோடி, சர்மா மற்றும் அந்த பெண் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது போலிருக்கிறது[8].

The post in the website reads: “These pictures raise a serious question mark about the credibility of the explanation put forth both by Madhuri’s father Premlal Soni and the BJP that only Premalal was known to Modi and it was he who had requested the CM to ‘take care’ of his daughter in 2009 when the illegal snooping operation was mounted. The pictures show that Modi knew Madhuri for at least five years before his state machinery mounted an illegal round the clock vigil on the young woman in August 2009.””It also confirms that part of the affidavit filed by Sharma in the Supreme Court in which he had alleged that Madhurihad visited Modi when he came to inaugurate the ‘Sharad Utsav’ in October 2005.  Sharma served as the collector of Kachchh district between 2003 and 2005,” the post further said[9].

மோடி இரவில் ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது, இப்பெண்ணும் அங்கிருந்தார் என்று சர்மா சொல்வதாக, இந்த இணைதளம் வெளியிட்டுள்ளது[10]. ஆனால், மோடி, சர்மா முதலியோர் பேசிக் கொண்டதன் உண்மைத்தன்மைப் பற்றி தமக்குத் தெரியாது என்றும் ஒப்புக்கொண்டுள்ளது[11]. இதன் பின்னணியில் பாதி உண்மை – பாதி பொய் என அரசியல் உள்நோக்கங்களுடன் வதந்திகள் உலா வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது[12].

Asish ketan anti-modi campaign

புகைப்படங்கள், பிரதீப்சர்மா, ஆசி  ஸ்கேத்தான், சங்கர்  சிங்  வகேலா  தொரடர்புகள்: ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மா கட்சில் பணிசெய்து கொண்டிருந்ததால், அவ்விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள அங்கு இருந்திருப்பார். பணி ரீதியில் அங்கு நடக்கும் நிகழ்சிகளையும் கவனித்துக் கொண்டிருப்பார். அப்படங்களிலும் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆகவே, அப்பொழுதே பிரதீப் சர்மா உள்நோக்கத்தோடு செயல்பட்டு, அப்புகைப்படங்களின் பிரதிகளை எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அவற்றை இந்த “குலைல்” இணைதளத்திற்கு கொடுத்து பிரச்சினை ஏற்படுத்த பிரதீப் சர்மா பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.  “பாஞ்ச-ஜன்யம்” என்ற சங்கப்பரிவார் பத்திரிக்கை[13] மற்றும் உள்ளூர் பத்திரிக்கைகள்-நாளிதழ்களிலேயே இப்புகைப் படங்கள் வந்துள்ளன.

சங்கர்  சிங்  வகேலா  போன்ற  முந்தைய  சங்கப்பரிவார்  தலைவர்கள்,   ஆனால்,   பிஜேபிவிரோதிகள்: குஜராத்தில் காங்கிரஸ் பல ஆண்டுகளுகாக ஆட்சி செய்து வந்தமையாலும், ஆர்.எஸ்.எஸ் காரரான சங்கர் சிங் வகேலா பொன்றோர் காங்கிரஸில் இருப்பதாலும், காங்கிரஸ் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளை ஊக்குவித்து, தொடர்ந்து இப்படி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவது நன்றாகவே தெரிகிறது. சங்கர் சிங் வகேலா ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்து காங்கிரசில் சென்றுள்ளதால் அவருக்கும் பிஜேபிஐப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே தெரிந்திரிக்கும்.  அதனால், பிரச்சினைக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்.

ஆசிஸ்  கேத்தான்  –  தெஹல்கா    யுக்திகள்: ஆசிஸ் கேத்தான் என்ற முந்தைய தெஹல்கா ஆள் தான் இப்பொழுது, “குலைல்” என்ற இணைதளத்திற்கு செய்திகளைக் கொடுத்து வருகிறார். முன்னர் 2002 விசயங்களைப் பற்றி அதிரடியாக “பொய்-மெய் கலந்து குழப்பமான” வீடீயோக்களை என்டி-டிவி செனல்களில் வெளியிடப்பட்டன. அப்பொழுது, இவரும் அவரது நண்பரும் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள், இந்துக்கள், இந்து-ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, ஆராய்ச்சி செய்கிறோம் என்ற போர்வையில் பேட்டி கண்டு, போட்டோ-வீடியோ எடுத்து விசயங்களை சேகரித்தனர். பிறகு, வீடியோ-மிக்ஸிங் செய்து, சப்தங்களை, ஒலிகளை சேர்த்து பொய்யாக வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டார்கள். அவற்றில் சங்கப்பரிவார் தலைவர்களே தாங்கள் கலவரங்களை ஏற்படுத்தியாத ஒப்புக் கொள்கின்றமாதிரி இருந்தன. ஆனால், அவையெல்லாம் “போலியாக உருவாக்கப்பட்டவை” என்றாகியது.  சிறிது காலமாக அடங்கியிருந்த கேத்தான், இப்பொழுது குறிப்பாக தெஹல்கா சிக்கல்களில் இருக்கும் போது, வேறு இணைதலங்களில் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதீப்  சர்மாவின்  புரட்டுகள், ஆசிஸ்  கேத்தானின்  உளவுத்  தன்மைகள்: அந்த படங்களில் மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் சர்மாவும் இருக்கிறார்[14].  இளம்பெண்  மோடி விவகாரம் பற்றி முதலில் சர்ச்சையை கிளப்பியதும் சர்மாதான். தற்போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் குஜராத் அரசு இவரை சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், “மலைத் தோட்ட திட்டம் தொடர்பாகநான் கலெக்டராக இருந்தபோது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்தேன் அந்த பெண்ணுடன் மோடி அடிக்கடி இமெயிலில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த பெண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் என்ற செய்தி நிறுவனம் கொடுத்துள்ளதை அப்படியே மற்ற நாளிதழ்கள் தங்களது இணைதளங்களில் வெளியிட்டுள்ளன[15]. “இந்தியா டுடே – ஆஜ்தக்” இணைதளம்[16] மற்றும் டிவிசெனல்களில் இதைபற்றிய ஒரு கார்ட்டூனையும் தொடர்ந்து ஒளி-ஒளிபரப்பி வருகிறது, இணைதலத்திலேயும் போட்டிருக்கிறது[17]. “Facebook” தளங்களிலும் இதனை விரசமாகவே பிரச்சார ரீதியில் வெளியிட்டுள்ளார்கள்[18]. தேஜ்பாலை கைது செய்த பிறகு ஊடகங்கள் இனி இவ்விசயத்தை வைத்துக் கொண்டு ஒரு வாரம்-பத்து நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்று தெரிகிறது.

© வேதபிரகாஷ்

30-11-2013


[8] The pictures were taken during the first edition of the ‘KutchSharad Utsav’ in October 2005, the website claimed.

In one of the pictures, Modi is engaged in animated conversation with IAS officer Pradeep Sharma and the woman with her face blurred.

http://www.business-standard.com/article/news-ani/snooping-row-web-portal-releases-pictures-of-modi-with-woman-113112900535_1.html

[10] According to Sharma, Madhuri was also present in one of the tents on the night Modi was there, the website claims. Pradeep Sharma, who got suspended by the Gujarat government, had tried to corner the CM alleging that the phone of the woman was being tapped illegally at his behest.

http://www.asianage.com/india/web-portal-releases-picture-narendra-modi-madhuri-557

[11] The website has refrained from attesting to the veracity of the conversations.

http://timesofindia.indiatimes.com/india/Website-releases-photos-of-Narendra-Modi-with-woman/articleshow/26543237.cms?

[12] மாலைமலர், சர்ச்சைக்குரியஇளம்பெண்ணுடன்மோடிஇருக்கும்படம்: செய்திஇணையதளம்வெளியிட்டது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 1:24 AM IST