Archive for the ‘சித்தாந்தம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

ஒக்ரோபர் 26, 2022

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதேன்? இது மதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா? (2)

உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு முதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].

பாலியல் புகார்போக்சோவில் வழக்குப்பதிவுகைதான மடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மடாதிபதியை சந்தித்த ராகுல் காந்திஅடுத்த பிரதமராக ஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார்.  அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்கு வந்த இந்திரா காந்தி பிரதமரானார்; அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமரானார். தற்போது ராகுல் காந்தியும் வந்திருப்பதால் அவரும் நிச்சயம் பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.

05-09-2022 அன்று பசவலிங்க சுவாமி தற்கொலை செய்து கொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக‌ பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் தொடர்ந்து சைவ மடாதிபதிகள் தற்கொலை செய்து கொள்வதுமதப்பிரச்சினையா, உளவியல் குழப்பமா, அரசியல் அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2022.


[1] தினமலர், மடாதிபதி துாக்கிட்டு தற்கொலை மூன்று பக்க கடிதத்தில் பரபரப்பு, பதிவு செய்த நாள்: அக் 25,2022 00:02

[2] https://m.dinamalar.com/detail-amp.php?id=3153752

[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில் சாமியார் தூக்கிட்டு தற்கொலை.. பின்னணி என்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST

[4] https://tamil.news18.com/news/national/karnataka-lingayath-mutt-seer-basava-siddalinga-swami-dies-by-suicide-note-found-796801.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ரொம்ப மிரட்டுறாங்க.. கடிதம் எழுதி தூக்கிட்டு மடாதிபதி தற்கொலை.. கர்நாடகாவில் தொடரும் அதிர்ச்சி, By Nantha Kumar R, Updated: Tuesday, October 25, 2022, 15:30 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-kanchugal-bande-mutt-pontiff-basavalinga-swamy-suicide-after-writes-death-note-482143.html

[7] மாலை முரசு, ராகுல்காந்தி சந்தித்த மடாதிபதி போக்சோவில் கைது: மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் !!, Ramadevi, Sep 2, 2022 – 07:22; Updated: Sep 2, 2022 – 07:24

[8] https://www.malaimurasu.com/posts/india/Unidentified-person-entered-Indian-border

[9]  புதிய தலைமுறை, கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார்– 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு, 01-09-2022 01.29 PM

[10] https://www.puthiyathalaimurai.com/newsview/146435/Karnataka-Sex-complaint-against-abbot-7-days-to-file-report

[11] தமிழ்.இந்து, கர்நாடகாவின் இளம் மடாதிபதி பசவலிங்க சுவாமி தற்கொலை, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2022 07:59 AM, Last Updated : 06 Sep 2022 07:59 AM

[12] https://www.hindutamil.in/news/india/861893-basavalinga-swamy-a-young-abbot-of-karnataka-commits-suicide.html

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

National songs - initially sung by a group

தேசிய பாடல்கள் பாடப்பட்டது.

C. P. Radhakrishnan

பிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.

Stage-Karuppu, LG, Lakhsmanan

6.07 to 6.12 pm –இல கணேசன்:  இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.

Karuppu, Raja, LG, Amit Sha, Tamilisai, Pon.R,Muralidhar

6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.

09-07-2018 - Amit Shah Meeting- on stage

6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார்! பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற்றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……

LG, Amit Sha, Tamilisai, vgp stage

6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.

09-07-2016 - Amit Shah Meeting.speaker-1

6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Vansthi came with Amit Shah

6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….

09-07-2016 - Amit Shah Meeting

6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

Amit SHAH with others 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Meeting-LG, Amit Sha, Tamilisai, vgp stage

மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.

Amit SHAH meeting- 09-07-2018-5

மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:

திட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்
சிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820
மெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500
மோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350
3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45
வரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700
வார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100
பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200

இப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.

© வேதபிரகாஷ்

11-07-2018

Amit SHAH meeting- 09-07-2018-4

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்! (3)

2-stage-krishnaswamy-kasivelu-s-kalyanaraman-vedantham-sami-thyagarajan-s-ramachandran-k-v-ramakrishna-rao-g-p-srinivasan

சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில்  கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:

எண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்
1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்
2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.
3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.
4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.

தலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத்துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.

17-sami-thyagarajan-speaking

சாமி. தியாகராசன் பேச மறுத்ததேன்? [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது?” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்?” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா?” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார்.  இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.

Gauthaman outbursts

கௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன்? [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார்.  எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017

பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்?: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன?

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-2

2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன?: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு? மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது? இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா?

© வேதபிரகாஷ்

16-06-2017

Gauthaman question by Vedaprakash - no reply 09-06-2017-3

[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.

[2] http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3]  அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.

[4] http://vsrc.in/

[5] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-53-42

[6] http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/705-2016-06-17-07-14-45

[7] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker. When I told them that those who had come there were educated and elite and not of such category as apprehended. I told that the speaker was telling that Siva is not Indian god and so on. The officer retorted, “Is it so? How then that IAS officer Iravatham Mahadevan was keeping quite? He knows everything”. The police informed that they had not obtained permission to stage demonstration against the meeting. The officer added that every body has a right to demonstrate, but they should have obtained prior permission.

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ஒக்ரோபர் 16, 2016

 

கருவுவிலுருக்கும் சீதைகளை கொல்லும் ராவணர்களாக நாம் இருக்கிறோம் – நம்முள் இருக்கும் ராவணனை யார் அழிப்பது? – என்றேல்லாம் பேசிய மோடியின் பேச்சை எதிர்க்கிறார்களாம்!

ravana-balaya-sri-lanka-fundamentalist-groupராவண-ஆதரவு ஶ்ரீலங்கா குழுக்கள்: இராவணனை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[1] என்று ஏதோ இலங்கையே எதிர்ப்புத் தெரிவித்தது போல ஒரு ஶ்ரீலங்கா இணைதளம் செய்திகளை வெளியிட்டுள்ளது அபத்தமாகும். விஜயதசமியையொட்டி 11-10-2016 அன்று உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “முதன் முதலில் தீவிரபவாதத்தை எதிர்த்து போராடியது ஒரு ராணுவ வீரனோ அல்லது அரசியல்வாதியோ அல்ல, ஆனால், ஜடாயு என்ற பறவை தான் ராவணனுக்கு எதிராக சீதைக்காகப் போராடியது. பண்டைய காலத்திலிருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவில் வந்திருக்கிறான். அதன் பெயர்தான் பயங்கரவாதம்´ என்று கூறினார்[2]. மோடியின் இந்தப் பேச்சுக்கு இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பான ராவண பலய மூலம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது[3] என்று இன்னொரு ஶ்ரீலங்கா இணைதளம் கூறுகிறது. அப்படியென்றால், பௌத்தத்தில் எப்படி அடிப்படைவாதம் இருக்கும் என்பதும் நோக்கத்தக்கது. அஹிம்சையை போதிக்கும் பௌத்தர்கள் அடிப்படைவாதத்தைக் கடைபிடிக்கிறார்கள் என்றால், அது எத்தகையது என்பது கவனிக்க வேண்டும். இலங்கையில் இராவணனை கடவுளாக வழிபடும் பல்வேறு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும் கூட்டியுள்ளன அத்தளங்கள்.

psdhivu-sri-lanka-16-10-2016இட்டப்பனே சத்தாதிஸ்ளென்ற பௌத்தத் துறவி அரைகுறையாக புரிந்து கொண்டு அறிக்கை விட்டுள்ளது: இதுகுறித்து இராவண பலாய அமைப்பின் தலைவர் இட்டப்பனே சத்தாதிஸ்ஸ [Ittapane Saddhatissa] கூறியதாவது[4]:  “இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவண பலாய சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராமாயணத்தில் கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதுஇலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்மேலும், மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்,” என்றார்[5]. இதேபோல “ராவண சக்தி” என்ற அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது[6]. இந்தி நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன[7]. வித்தியாசத்தை எடுத்துக் காட்டியுள்ளன[8].

ravana-balaya-sri-lanka-fundamentalist-group-jatayuகருவிலேயே எத்தனையோ சீதைகளை நாம் ஏன் கொல்கிறோம்?: மோடியின் பேச்சை இவர்கள் அரைகுறையாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. ஊழல், அசிங்கம், கெட்ட குணம், நோய், கல்லாமை, மூடநம்பிக்கை இவையெல்லாம் மற்ற ராவணர்கள் ஆகும். ஆனால், ஆண்-பெண் குழந்தைகளில் ஏன் பேதம் காட்டுகிறோம். கருவிலேயே எத்தனையோ சீதைகளை ஏன் கொல்கிறோம்? என்று கேள்வி எழுப்பினார்[9]. உண்மையில் நாம் பெண் குழந்தை பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்றார். தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது, ராமர் மனித இனம் மற்றும் மனித நற்குணங்களின் சின்னமாகும். ஜடாயுதான் முதன் முதலில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடியது என்று ராமாயணம் கூறுகிறது., என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், முழுபேச்சை படிக்காமல், அங்கும்-இங்குமாக வெளியிட்டுள்ள ஆங்கில செய்திகளைப் படித்து இவ்வாறு எதிர்கருத்து கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

dusshera-modi-sonia-pranab-etcமோடி இந்தியில் பேசியதும், அதன் தமிழாக்கமும்[11]: “அமர் உஜாலா” என்ற நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளதை தமிழில் கொடுக்கப்படுகிறது[12].

प्रधानमंत्री नरेंद्र मोदी ने लखनऊ के ऐशबाग के रामलीला मैदान पर जय श्री राम के उद्घोष के साथ अपना भाषण शुरू किया। उन्होंने सभी को विजयादशमी की शुभकामनाएं दी। पीएम मोदी ने कहा कि यह मेरा सौभाग्य है कि मुझे अति प्राचीन कार्यक्रम में आने का सौभाग्य मिला। मुझे ने कहा कि विजयादशमी असत्य पर सत्य की विजय का त्यौहार है। हम रावण को हर वर्ष को जलाते हैं। रावण को जलाते समय हमें यह भी ध्यान रखना चाहिए कि हम अपने भीतर की व सामाजिक बुराइयों को भी खत्म करना चाहिए। விஜயதசமி என்பது வாய்மை, பொய்மையை வெற்றி கொள்ளும் விழாவாகும். நாம் வருடாவருடம் ராவணனை தண்டிக்க விழா எடுக்கிறோம். முதலில் நம்முள் இருக்கும் ராவணனை அழிக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் அழுக்கை அகற்றவேண்டும். சுத்தப்படுத்த வேண்டும்.
मोदी ने कहा कि इस बार रामलीला का विषय आतंकवाद है। आतंकवाद मानवता का दुश्मन है। भगवान श्रीराम मानवता का प्रतीक है, वो आदर्शों का पालन करते हैं। आतंकवाद के खिलाफ सबसे पहले लड़ाई जटायु ने लड़ी थी, उसने एक स्त्री के सम्मान के लिए अत्याचारी से लड़ाई लड़ी थी। जटायु आज भी अभयता का संदेश देते हैं। साथ ही उन्होंने यह भी संदेश ‌दिया कि आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे। தீவிரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது. ராமர் மனித குலம் மற்றும் நற்பண்புகளின் அடையாளம் ஆகும். சீதையின் மானத்தைக் காக்க, ஜடாயு என்ற பற்வை தான் போராடியது. ஜடாயு இன்றும் அந்த அர்த்தத்தை நமக்கு போதிக்கிறது.
मोदी बोले आज आतंकवाद के कारण पूरा विश्व तबाह हो रहा है। हम सीरिया की तबाही की तस्वीर देख रहे हैं। आज जरूरी है कि पूरा विश्व आतंकवाद के खिलाफ एक हो। आतंकवाद के खिलाफ पूरी दुनिया को एक होना ही होगा। தீவிரவாதத்தால் உலகமே பாதிப்படைந்துள்ளது. சிரியாவில் என்ன நடக்கிறது என்று நாம் பார்க்கிறோம். இன்று தீவிரவாதத்தை எதிர்த்து உலகமே ஒன்றாக உள்ளது.
प्रधानमंत्री ने कहा कि आज पूरा विश्व गर्ल चाइल्ड डे मना रहा है। जब रावण ने एक सीता का अपहरण किया था तो हम लोग हर साल उसे जलाते हैं लेकिन आज मां के गर्भ में बेटियों की हत्या की जा रही है। हमें इस बुराई को मारना होगा। उन्होंने कहा कि घर में बेटा पैदा होता है ‌तो जश्न मनाया जाता है, अगर बेटी पैदा हो तो उससे भी बड़ा जश्न मनाया जाना चाहिए। आज हमें महिलाओं को बराबरी का अधिकार देना होगा। இன்று சர்வதேச பெண்குழந்தை ஆண்டை கொண்டாடுகிறோம். வருடாவருடம் ராவணனை நாம் தண்டிக்கிறோம், ஆனால், நம்முள் இருக்கும் ராவணனை மறந்து விடுகிறோம். கர்ப்பத்தில் இருக்கும்சீதைகளைக் கொன்று, நாம் ராவணர்களாக உள்ளோம். ஆகவே, முதலில் நாம் பெண்களுக்கு சம உரிமைகள் கொடுக்க வேண்டும்.

satan-mara-evil-etcமாரா, சாத்தான், எதிர்கிருஸ்து, ராவணன் முதலியோர்: பௌத்தத்தில் “மாரா” என்ற பூதம், அரக்கன், ராக்ஷ்சன், எப்பொழுதுமே புத்தருக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருப்பான். ஆசை, காமம், மோகம், அழிவு, இறப்பு போன்றவற்றுடன் அவன் ஒப்பிடப்பட்டுள்ளான். புத்தரின் தோல்விகளுக்கு மாரா தான் காரணம் என்று விளக்கம் உள்ளது. அதாவது ஒவ்வொரு மதத்திலும், ஒட்டுமொத்த தீயசக்திகளுக்கு ஒரு உருவம் கொடுக்கப்பட்டிருக்கும். சாத்தான் (שָּׂטָן‎‎), எதிர்-கிருஸ்து [Anti-Christ, Lucifer, Devil, etc], சைத்தான் [ شيطان‎‎ ] என்று யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் கூறுகின்றன. ராவணனை ஆதரிக்கின்றனர் என்றால், அதேபோல சாத்தான், எதிர்-கிருஸ்து, சைத்தான், மாரா போன்றோரும் ஆதரிக்கப்படவேண்டும். பகுத்தறிவு, நாத்திக, கம்யூனிஸ, பௌத்த, ஜைன கோஷ்டிகள் அவ்வாறு ராவணனை ஆதரிக்கும் போது, இவையும் ஆதரிக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அத்தகைய நடுலையாளர்கள், பாரபட்சம் இல்லாதவர்கள், உண்மையான நாத்திகர்கள் முதலியோர் இல்லை. செக்யூலரிஸப் பழங்களாக இருப்பதனால், அவ்வாறான போலித்தனத்துடன் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

© வேதபிரகாஷ்

16-10-2016

stoning-satan-hajj-ritual

[1] பதிவு, மோடிக்கு எதிராகப் போராட்டம்! இராவண பலய அமைப்பு அறிவிப்பு, தமிழ்நாடன், சனி, அக்டோபர் 15, 2016. 09.00 மணி.

[2] http://www.pathivu.com/?p=90264

[3] அததெரண, இராவணனை பயங்கரவாதி என்பதா? மோடிக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு, October 15, 2016  10:41 am

[4] http://tamil.adaderana.lk/news.php?nid=84482

[5] Economic Times, PM Narendra Modi’s Ravana terrorism comment draws ire in Sri Lanka, PTI, Updated: Oct. 14, 2016, 06.27 pm.

[6] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-narendra-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka/articleshow/54853192.cms

[7] Nai Dunia, मोदी के बयान से श्रीलंका में रावण के अनुयायी नाराज, Published: Fri, 14 Oct 2016 10:39 PM (IST) | Updated: Fri, 14 Oct 2016 10:42 PM (IST)

[8] http://naidunia.jagran.com/world-modis-ravana-terrorism-comment-draws-ire-in-sri-lanka-835607

[9] The Hindu, Modi likens war on terror to killing of Ravan at Ramlila event, Updated: October 11, 2016 21:45 IST

[10] http://www.thehindu.com/news/national/other-states/live-modi-attends-ramlila-function-in-lucknow/article9208219.ece

[11] अमर उजाला, विजयदशमी पर बोले मोदी, आतंकवाद को पनाह देने वाले बख्शे नहीं जाएंगे, टीम डिजिटल – लखनऊ, , Updated Wed, 12 Oct 2016 05:19 PM IST

[12] http://www.amarujala.com/lucknow/prime-minister-narendra-modi-in-lucknow

சுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

ஜூலை 26, 2016

சுவாமி விவேகானந்தரை, கருணாநிதிவீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்?

விவேகானந்தர் - போலி நாத்திகம், சித்தாந்தம்

8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

DK Veeramani oppose Vvekananda Rath 25-07-0216தமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:

DK Veeramani oppose Vvekananda Rath 25-07-0216 -NIEஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு  சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.

  1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா?
  2. ஏற்கத் தகுந்ததுதானா?
  3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா?
  4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?
  5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?
  6. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா?
  7. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா?

எங்கே பார்ப்போம்!”, இவ்வாறு கூறியுள்ளார்[2].

பி.டி. வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது.  இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.

S Gurumurthys twitter about DK opposition.1எஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].

S Gurumurthys twitter about DK opposition.2வீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:

1.        இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? 1.        ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.
2.       ஏற்கத் தகுந்ததுதானா? 2.       ஆமாம்.
3.       மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? 3.       செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன?
4.       இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா? 4.       இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே?
5.        மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? 5.        இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.
6.       இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா? 6.       இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
7.        தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? 7.        150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.
8.       விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? 8.       மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே?

© வேதபிரகாஷ்

26-07-2016

 eknath-ranade-karunanidhi-02-09-1970

[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா?, திங்கள், 25 ஜூலை 2016 15:49.

[2] http://viduthalai.in/e-paper/126567.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/spritual-school-is-it-against-secular-government-asks-k-veeramani-258776.html

[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா? –கி.வீரமணி,  பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)

[6]  http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=169746

[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST

[8]http://www.dinamani.com/tamilnadu/2016/07/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/article3547501.ece

[9] New Indian Express, DK president gets it for opposing Ratha Yatras, By Express News Service, Published: 26th July 2016 06:39 AM, Last Updated: 26th July 2016 06:39 AM

[10] http://www.newindianexpress.com/cities/chennai/DK-president-gets-it-for-opposing-Ratha-Yatras/2016/07/26/article3547109.ece

[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா?கி.வீரமணி கண்டனம், Published: July 26, 2016 08:05 ISTUpdated: July 26, 2016 08:06 IST

[12]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8900224.ece

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)!

மே 29, 2016

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்னபிஜேபி தோல்வி ஏன் (6)!

மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்

தமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன?: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].

  1. திராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.
  1. அரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.
  1. மக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].
  1. பெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்

  1. இடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.
  1. எப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].
  1. தமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.
  1. வலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.
  1. இருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சேறை வாறி இறைத்தாலும் தாமரை மலரும்

  1. முதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.
  1. வீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.
  1. சமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.
  1. குறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்
  1. தீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.

மோடி ம்முன்னேற்றம், வளர்ச்சி

  1. குறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.
  1. இந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.
  1. “இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்- மேடைப் பேச்சு கலை-மோடி

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

[2]  தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.

[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.

[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

மே 29, 2016

தமிழக பாஜகவில் அடக்கம், கட்டுப்பாடு, முதலியவை தேவை, சுய-பரிசோதனையும் தேவை – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (5)!

TN 2016 BJP failed in alliance

பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம்[1]: பாஜகவில் அடக்கம், ஒழுக்கம் முதலியவை இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் அதன் இணைத்தளத்தில் காணப்பட்ட அறிக்கையே எடுத்துக் காட்டுகிறது[2], “பாரதிய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளாராக மனுதாக்கல் செய்த திரு. K.P. கந்தசாமி அவர்களின் வேட்புமனுவும் அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த திரு. K.E. முருகேசன் அவர்களின் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமான வேட்பாளர், மாற்று வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி ஆனது குறித்து விசாரிக்க அவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.  அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை           எடுக்கக் கூடாது என்று கேட்டு முறையாக அது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஒழுங்கு நடவடிக்கை விசாரணை தொடரும் இச்சமயம், திரு. K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளிலிருந்தும், கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட அவ்விருவரும் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்விருவருடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது”.

தமிழக பிஜேபி - தேர்தல் முடிவு -எச்.ராஜா - 2016இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா” – ஊடகங்களின் எதிர்பிஜேபி தன்மை: திநகர் தொகுதியில் 3வது இடத்தில் பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா இருக்கிறார். அவருக்கு வெறும் 4000 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. வாய்த் துடுக்காக பேசி வந்த எச். ராஜா 10 ஆயிரம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது[3]. அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையே தி.நகரில் காணப்படுகிறது. வணிகத்திற்குப் பெயர் போன தி.நகரில் எச். ராஜாவின் வாய் ஜாலம் போணியாகவில்லை! ஊடகங்களும் பிஜேபிக்கு எதிராக இருந்தன என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, “இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா”, என்று தலைப்பிட்டு, தமிழ்.ஒன்.இந்தியா இணைதளம் செய்தி வெளியிட்டது. இததெல்லாம்  பிஜேபி-எதிர்ப்பு வெளிப்பாடு என்பது தெரிகிறது. கட்சிக்குள் இருப்பவர்கள் செய்யும் குசும்பு வேலை என்றும் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

poll-of-exit-polls_NDTV 2016தேர்தல் தோல்வி குறித்து ஆராய்ச்சி: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. அதோடு, பல தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச் செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சில தொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்வி கண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதன்மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கிய காரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் 24-05-2016 அன்று திங்கள்கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் 25-05-2016 செவ்வாய்க்கிழமையும் அன்றும் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப் பெற கிராமப்புறங்களில் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது[4].

தமிழக பிஜேபி - ஜவடேகர் பிரச்சாரம்- 2016மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்[5]: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மே 26-இல் நடக்கிறது. அதையொட்டி, கட்சி தலைமை தமிழக மக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர். அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்த கௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமா பாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களை சந்திக்க உள்ளனர். அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

பிஜேபியின் கவர்ச்சி அரசியலும் தோற்றது - 2016தமிழக பாஜகவில் சுய-பரிசோதனையும் தேவை: பிஜேபி தோல்வி பற்றி ஊடகங்கள் கொடுக்கும் விளக்கம் 50% சரி, 50% பொய் என்ற நிலையில் உள்ளது. பிஜேபி தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்து ADMKவுக்கு சாதகமாக அமைந்தது, தலித்களிடையே, பாஜக நம்பக தன்மையை இழந்தது போன்ற வாதங்கள் பொய்யாகும், ஏனெனில், அதே ஊடகங்கள். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[6]. இந்நிலையில் பிஜேபிக்கு, குறிப்பாக புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலும், ஒரு குறிப்பிட்ட தலைவர் என்று முன்னிலைப் படுத்திக் கொண்டு, வேலை செய்து வருவதாலும், அந்நிலையில், ஏதோ பலன் கிடைக்கிறது என்ற ரீதியில் இருப்பதாலும், போட்டி மனப்பாங்கு ஏற்படுகிறது. அது, ஓரிடத்தில், குறிப்பாக பொது நிகழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வெளிப்படுகிறது. ஏனெனில், புதியதாக வந்து சேர்ந்துள்ளவர்களுக்கு பிஜேபி பாரம்பரியம், ஜன்சங்கம் ஒழுக்கம், ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாடு முதலியவைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பிஜேபி அரசியலுக்கும் அப்பாற்பட்ட கட்சி, இயக்கம் என்பதனை அறிந்து கொள்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழக பிஜேபி, K.P. கந்தசாமி மற்றும் திரு. K.E. முருகேசன் ஆகிய இருவரையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறோம்

[2] http://www.bjptn.org/event.php?id=47

[3] தமிழ்.ஒன்.இந்தியா, இப்படி ஆயி போச்சே ராசா.. வெறும் 4000 ஓட்டு வாங்கிய பாஜகவின் எச். ராஜா, By: Jayachitra, Updated: Thursday, May 19, 2016, 13:13 [IST]

http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-3rd-place-t-nagar-254060.html

[4] தினமணி, உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிறது பாஜக!, By சென்னை, First Published : 23 May 2016 03:14 AM IST

[5]http://www.dinamani.com/tamilnadu/2016/05/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF/article3446859.ece

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html