Archive for the ‘வானதி’ Category

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

மே 29, 2016

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

பிஜேபியை கிண்டல் அடிக்கும் எஸ்.வி.சேகர்

சமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.

துக்ளக் - அட்டைப்படம் - பிஜேபி பற்றிகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].

  1. கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.
  1. கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. இதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. அதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.
  1. குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].

தமிழக பிஜேபியில் பொறாமை, போட்டி, கோஷ்டி-அரசியல் என்ற நிலை மாற வேண்டும்50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது.  அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].

தமிழக பிஜேபி - தேர்தல் 50 லட்சம் உறுப்பினர் - 2016செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது.  அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5].  இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].

Ramesh BJP Tamil Nadu

Ramesh BJP Tamil Nadu

தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக? 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்!, By: Veera Kumar, Updated: Thursday, May 19, 2016, 19:11 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

[3]http://www.dinamani.com/editorial_articles/2016/05/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/article3448002.ece

[4] தினமலர், மிஸ்டு கால்உறுப்பினர்கள் பா..,வில்மிஸ்சிங்ஏன்?, மே.21. 2016.02.08.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1526288

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shaw-bjp-cheating-tamilnadu-116052100023_1.html

[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷாவுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா!, By: Sutha, Updated: Tuesday, May 10, 2016, 11:06 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-amit-shah-upset-over-the-affairs-tn-bjp-253270.html