Archive for the ‘கருவறை போராட்டம்’ Category

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

மே 21, 2016

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhand. Photo- Virender Singh Negi-The Hinduசமீபத்தைய கோவில் நுழைவு போராட்டங்கள்: தருண் விஜய் என்ற பிஜேபி எம்.பி அதிக ஆர்வத்துடன் சில வேலைகளை செய்து வருவது தெரிந்த விசயமே. திருக்குறள் தேசிய நூல், திருவள்ளுவருக்கு சிலை என்றெல்லாம் அதிரடியாக வேலைகளை செய்து வந்தார். தமிழுக்கு ஆதரவாகவும் பாராளுமன்றத்தில் பேசிவந்தார். அவரது பேச்சுகள் மற்றும் காரியங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, அவருக்கு ஆர்வம் இருந்தாலும், அவருக்கு இவ்விசயங்களில் ஆலோசனை கூறுபவர்கள் சரிவர விவரங்களை சொல்வதில்லை என்றே தெரிகிறது. யாரும் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தடாலடியாக இருங்க முடியாது. குறிப்பாக இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை எதிர்த்து செயல்படும் காரியங்கள் பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையுள்ளது. மேலும், திருப்தி தேசாய் போன்றோர் செய்து வரும் கலாட்டாக்களுக்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் மற்றும் 24×7 பாணி-பிரச்சாரம் இவருக்கு செய்யப்படவில்லை. இப்பொழுது கூட பிடிஐ கொடுத்த செய்தியை, எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. திருப்தி தேசாய் பின்னால் ஓடிச் சென்று வீடியோ எடுத்து, டிவி-செனல்களில் போட்டு, வாத-விவாதங்களை வைத்து எதையும் செய்யவில்லை.

TARUN-VIJAY attacked by mob 20-05-2016கோவில் நுழைவு அனுமதி யாருக்கு மறுக்கப்படுகிறது?: டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சக்ரதா கிராமத்தில் உள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது[1]. இதேபோல, ஜவுன்சார் – பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, 20-05-2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார்[2]. பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது[3].  கோவிலில் நுழைய யாருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர் (Backward communities), தலித் (Dalit) என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன.

tarun-vijay-attacked_20-05-2016போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[4]: இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: “ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில் அருகே பந்தல் அமைத்துபண்டாரா‘ (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது. இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம்தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்?’ என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்”, என்றார் உயரதிகாரி[5].

Tarun Vijay attacked 20-05-2016தருண் விஜய் மீது தாக்குதல்[6]: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அவர் காயம் அடைந்ததுடன், அவரது காரும் நொறுக்கப்பட்டது. அவர் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tarun Vijay at Silgur Temple in Uttarakhand.20-05-2016கோவிலில் நுழைய தடை ஏன், என்ன நடந்தது?: கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை என்கிறார்கள். மேலும் தாக்குதல்-மோதல்-கல்வீச்சு முதலியவை ஏன் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்[7]. எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை[8]. கோவிலுக்கு செல்லும் முன்னர் அல்லது சென்று வெளியே வந்தபோது, வாக்குவாதம், கல்வீச்சு ஏற்பட்டன என்று இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. சமீபத்தில் பிஜேபி சாங்கிரஸ் ஆட்சி கவிக்க்க சில காரியங்கள் செய்ததும், பிறகு நீதி மன்றம் மூலம், விலக்கப்பட்ட முதலமைச்சர் மறுபடியும் அமர்த்தப்பட்டது முதலியவை நடந்துள்ளன என்பதால், ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமா என்றும் யோசிக்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.பி தலைவியுடன் கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளதால், உ.பி தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் வேலையா என்றும் நோக்கத்தக்கது. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்[9].

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhandவைரமுத்து கண்டனம்- தருண் விஜயை பெரியாரோடு ஒப்பிட்டது[10]: தருண் விஜய் எம்.பி. சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தருண் விஜய் மீதும், தலித்துகள் மீதும் நடந்த தாக்குதலை ரத்தம் கசியும் நெஞ்சோடு வன்மையாக கண்டிக்கிறேன். இது சமூக நீதியின் மீது விழுந்த காயம் என்று வருந்துகிறேன். கடவுள் மனிதனை படைத்தார் என்பது உண்மையானால், தலித்துகளையும் அவர் தான் படைத்திருப்பார். தலித்துகளை ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள். உத்தரகாண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூகநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு வன்முறை இனி நிகழாமல் காக்க வேண்டும். எனக்கு தோன்றுகிறது, வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். “வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, என்று சொன்னதால் பெரியார் பக்தர்கள், அத்தகைய ஒப்பீட்டை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

 21-05-2016

[1]    Indian Express, Mob attacks BJP MP Tarun Vijay in Dehradun, By: PTI, Dehradun, Updated: May 21, 2016 12:37 am

[2] http://indiatoday.intoday.in/story/ukhand-bjp-mp-tarun-vijay-attacked-by-mob/1/673715.html

[3] http://indianexpress.com/article/india/india-news-india/mob-attacks-bjp-mp-tarun-vijay-2811424/

[4] தினமணி, கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம், By  நமது நிருபர், டேராடூன் / புது தில்லி,; First Published : 21 May 2016 03:21 AM IST.

[5]http://www.dinamani.com/india/2016/05/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/article3443926.ece

[6] தினத்தந்தி, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார் கவிஞர் வைரமுத்து கண்டனம், மாற்றம் செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக எம்.பி. தருண் விஜய் படுகாயம், By: Karthikeyan, Published: Friday, May 20, 2016, 20:51 [IST].

[8] “What exactly happened remains unclear, but it is not a case of Dalits not being allowed in the temple. Had that been the case, the MP and Mr. Kunwar would not have been allowed into the temple. But they were attacked after they visited the temple,” Dehradun Superintendent of Police (Rural) T.D. Waila toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-tarun-vijay-injured-in-mob-attack-outside-temple-in-uttarakhand/article8627010.ece

[9] http://tamil.oneindia.com/news/india/bjp-mp-tarun-vijay-injured-after-scuffle-hospitalized-254222.html

[10] http://www.dailythanthi.com/News/India/2016/05/21001853/MP-Tarun-Vijay-in-attack-Was-injured.vpf

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

பிப்ரவரி 12, 2016

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

ஆதாம் ஏவாள், ஏசு நிர்வாண சித்திரம்

“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்?: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை? அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே? உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா? கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும்? ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே? அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை? கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா? இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம்! “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை?

Christian eroticaஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா?[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா? “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா? தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா? குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும்? “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே! அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே?

commandment God gives Adam and Eve in the Garden is to have sex- Pru vehravu, be fruitful and multiply.சமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.

Erotic Roman Bas Relief Sculpture of a man and woman having sex Pompeii. 1st Centசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].

Pan and Goat- Roman Mythical erotic sculpture from Pompeii.ஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.

ஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்?

Semi nude Joseph and Maryதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே!”, “அமைதியாக வரிசையில் வரலாமே!” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே!” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை!

என்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா? பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா!). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்? கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].

இந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.

எந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.

எனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!

© வேதபிரகாஷ்

12-02-12016

[1]  வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே?

[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[3]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[4] சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

கர்நாடகத்தில் சாமியார் சுடப்பட்டால் அலறும் ஊடகங்கள், தமிழகத்தில் அமைதி காக்கின்றனவே?

ஜூன் 1, 2010

கர்நாடகத்தில் சாமியார் சுடப்பட்டால் அலறும் ஊடகங்கள், தமிழகத்தில் அமைதி காக்கின்றனவே?

மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது!

http://atheismtemples.wordpress.com/2010/05/26/மதுரை-ஆதினத்திடம்-தகராறு/

முன்பு, முஸ்லீம்கள் மதுரை ஆதீனத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டினர்.

கிறிஸ்துவ-முஸ்லிம் மதங்களோடு மோதும் மதுரை ஆதீனம்!

http://tamilheritage.wordpress.com/2010/01/02/கிறிஸ்தவ-முஸ்லிம்-மதங்க/

சிலைகளைத் திருடும் பாதிரியார்!

சிலைகளைத் திருடும் பாதிரியார்!