Archive for the ‘கார்ல் பிரென்ட்’ Category

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

பிப்ரவரி 22, 2023

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

கொரியர் டெல்லா சேரா என்ற இத்தாலி நாளிதழில் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.

ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

22-02-2023.


[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்மனம் திறந்த ராகுல் காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.

[2] https://tamil.news18.com/news/national/rahul-gandhi-answers-about-his-marriage-plans-in-an-interview-to-italian-news-media-896290.html

[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.

[4] மாலைமலர், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM

[5] https://www.maalaimalar.com/news/national/why-not-married-yet-rahul-gandhi-answers-575262

[6] தமிழ்.வெப்.துனியா, குழந்தை பெற்று கொள்ள ஆசை…..ராகுல் காந்தி பேட்டி…!, செவ்வாய், 21 பிப்ரவரி, 2023 20:49 IST

[7] https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-says-about-marriage-and-child-123022100079_1.html

[8] தமிழ்.ஏபிபி.லைவ், Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” – மனம் திறந்த ராகுல் காந்தி!, By: ஆர்த்தி | Updated at : 22 Feb 2023 12:39 PM (IST), Published at : 22 Feb 2023 12:39 PM (IST)

[9] https://tamil.abplive.com/news/india/former-congress-president-rahul-gandhi-has-mentioned-in-an-interview-to-a-private-daily-that-he-is-not-married-but-wants-to-have-children-103132

[10] தினமணி, திருமணம் செய்யாதது விசித்திரம்! – ராகுல் காந்தி பேட்டி, By DIN  |   Published On : 22nd February 2023 12:26 AM  |   Last Updated : 22nd February 2023 12:26 AM

[11] https://www.dinamani.com/india/2023/feb/22/i-was-indian-grandmothers-favourite-priyanka-italian-grandmothers-rahul-4005068.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, குழந்தைகளை பிடிக்கும்திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு, By Mani Singh S, Published: Tuesday, February 21, 2023, 21:12 [IST.

[13] https://tamil.oneindia.com/news/delhi/i-would-like-to-have-children-rahul-gandhi-interview-to-the-italian-daily-499794.html