Archive for the ‘கோ’ Category

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

நவம்பர் 1, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (2)?

Beef politics - Kerala, WB and Delhi CMs

Beef politics – Kerala, WB and Delhi CMs

என்ன சொல்கிறது டெல்லி போலீஸ்?: இந்த சோதனை குறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஜடின் நர்வால் கூறும்போது, “இந்து சேனாவைச் சேர்ந்த விஷ்ணு குப்தா ஒரு புகார் அளித்தார். அதில், டெல்லியில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையான கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வருவதால் கேரளா இல்லத்துக்கு போலீஸ் படை விரைந்தது. இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீஸ் படைகள் அங்கு சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது” என்றார். போலீஸாரைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையினை செய்தார்கள் என்றுதான் ஆகிறது. கேரளா பவனில் போலீஸ் கூட அனுமதி பெற்றுதான் உள்ளே நுழைய வேண்டும் போன்ற வாதங்கள் அபத்தமாக உள்ளன.

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

kerala-mps-protest-outside-kerala-house-NDTV photo

கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து இருக்கிறார்களா?: கேரளாவில் பிஜேபி மற்றும் ஶ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தையும் நெருங்கி வர முயற்சியில் ஈடுபட்டுள்ள விஸ்வநாத் என்பவர் தான் இந்த விவகாரத்திற்கு காரணம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[1]. ஆனால், அவரோ “சில நண்பர்கள் ஒரு படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதனை நான் என் பேஸ்புக்கில் போட்டேன். அது இந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியாது. சிபிஎம் தலைவர் பினாராய் விஜயன் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான் எனக்குத் தெரியும். எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை”, என்கிறார்[2].  இப்பொழுது மார்க்சிஸ்ட் ஏம்.பிக்களும் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியென்றால், கேரளாக்காரர்கள், இதனை அரசியலாக்க தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது.

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

DYFI in Kerala protested against the recent ban on beef in Maharashtra by organizing Beef festival at Trivandrum March 2015

மூன்று மாநில முதல்வர்கள் பீப் பிரைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்[3]: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதற்கு கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்[4].  இம்மாநிலங்களில் தடையில்லை (கேசரிவால் தவிர) என்பதினால் இவர்கள் அவ்வாறு பேசியுள்ளனர் என்று தெரிகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில், போலீசார் முறையான நடைமுறையை கடைபிடிக்கவில்லை என்றும் கேரளா மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கேரளா பவனில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  “டெல்லியில் உள்ள கேரளா பவனில் நடைபெற்ற சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மக்களின் அடிப்படை உரிமையை கைப்பற்றுவதற்கான விவேகமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற முயற்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றையே இந்த நடவடிக்கை உணர்த்துகின்றது” என்று டுவிட்டரில் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந்தா காரத் இதுதொடர்பாக கூறுகையில், பாரதிய ஜனதாவின் அழுத்தம் காரணமாக கேரளா பவனில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை செய்து உள்ளனர். டெல்லியில் மாட்டிறைச்சிக்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “கேரளா பவனில் போலீசார் சோதனை செய்த சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன். கேரளா பவன் அரசால் கொண்டுவரப்பட்டது, ஓட்டல் கிடையாது என்ற கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கருத்தை நான் முழுமையாக ஏற்கின்றேன். டெல்லி போலீஸ் கேரளா பவனுக்குள் நுழையவேண்டிய தேவையே கிடையாது. இது அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். டெல்லி போலீசும் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா போன்று நடந்துக்கொள்கிறது. டெல்லி அரசு பவனில், கேரள மாநில முதல்-மந்திரி, மோடிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் பிடிக்காத பொருளை சாப்பிட்டார் என்றால், போலீசார் அவரை கைது செய்துவிடுவார்களா? என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் நாளை முதல் டெல்லி கேரளா பவனில் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது[5].

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

People eating beef at the party in Srinagar -Photo- Deccan Chronicle

பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம்[6]:  தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்து வருகின்றன. இந்த தடைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றன. இருப்பினும், இது பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியதுடன், அரசியலாக்கப்பட்டும் வருகிறது. மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு கடந்த மார்ச் மாதம் அம்மாநில அரசு தடை விதித்தது. இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக போராட்டமும் நடத்தப்பட்டது. இது பாஜ, அரசின் மறைமுக அடக்குமுறை; சைவ பயங்கரவாதம் எனவும் விமர்சிக்கப்பட்டது. இந்த தடையை காரணமாக வைத்து சிவசேனாவும், வழக்கம் போல் பா.ஜ.,வை விமர்சித்ததுடன், இறைச்சி தடையை அரசியலாக்கியது. இந்நிலையில், ஜெயின் மதத்தவர்களின் திருவிழா காலத்தை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஆட்டிறைச்சி, கோழி விற்பனைக்கும் மகாராஷ்டிர அரசு தடை விதித்துள்ளது. குஜராத்தும் தடை விதித்தது. ஏற்கனவே இருக்கும் பிரச்னையை இது மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

Beef eating party politics - Jammu-kashmir

Beef eating party politics – Jammu-kashmir

புலால் உண்பவர்களின் நிலை[7]: காஷ்மீர் அரசும் இறைச்சி, கோழி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினரும், பிரிவினைவாத இயக்கத்தினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் செப்., 11. 2015 அன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். சத்தீஸ்கர் அரசும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் துவங்கி விட்டதால் செப்டம்பர் 11 ம் தேதி முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் சத்தீஸ்கர் அரசு தெரிவித்தது. இந்த தடை அசைவ பிரியர்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த தடையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் பொதுவழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணையில் இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பை தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு சைவத்தையும் திணித்து வருவதாக அரசியல் கட்சிகள் புதிய தாக்குதலை துவக்கி உள்ளன.

Beef eating party politics- good or bad

Beef eating party politics- good or bad

மிருகவதை, ஜீவகாருண்யம், அஹிம்சை பற்றி பொய்யான விளக்கங்களைக் கொடுப்பது: பீப், பசுமாமிசம் உண்ணுவது பற்றி, அளவுக்கு அதிகமாக, அதன் உரிமை கோருபவர்கள், வெளிப்படையாக செய்து வருகிறார்கள். அதைப்பற்றி திரித்தும் எழுதி வருகிறார்கள்[8]. அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு, என்று அத்தகைய திரிபுவாதங்கள் கூருகின்றன. பௌத்தம் உயிர்க்கொலையை மறுக்கவில்லை, தடுக்கவில்லை. புத்தரே 81 வயதில் பன்றி கறி சாப்பிட்டதால் தான் உயிழக்க நேர்ந்தது[9]. பௌத்தர்களில் பெரும்பாலோர் மாமிசம் உண்பவர்களே. விவசாயம் இல்லாமல் இருந்திருந்தால், யாருக்கும் உணவு கிடைத்திருக்காது. இந்தியர்கள் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டவர்கள் என்ற சரித்திரத்தை மறைத்து இவர்கள்வைத்தகைய கதைகளைக் கட்டி வருகிறார்கள். டி. என். ஜா போன்றவர்களும் சரித்திர உண்மைகளை பாதியாக, அரைகுறையாக வெளியிட்டு குழப்பி வருகிறார்கள். அதனைத்தான் மற்ற சித்தாந்திகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்[10]. அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களின் உயிர்க்கொலைகளைப் பற்றி, அத்தகைய சடங்குகளைப் பற்றி பேசுவது-விவாதிப்பது-எழுதுவது கிடையாது.

© வேதபிரகாஷ்

31-10-2015

[1]  The New Indian Express, Friends sent me photo of Kerala House menu, I put it on Facebook Man who played role in BJP-SNDP tie-up now finds himself at centre of row, Written by Liz Mathew, Delhi,  Updated: October 28, 2015 5:18 am.

[2] http://indianexpress.com/article/cities/delhi/friends-sent-me-photo-of-kerala-house-menu-i-put-it-on-facebook/

[3] http://www.telegraphindia.com/1151028/jsp/frontpage/story_50068.jsp#.VjAtptIrJdg

[4] மாலைமலர், மாட்டிறைச்சி விவகாரம்: டெல்லி கேரளா பவனில் போலீசார் அதிரடி சோதனைஉம்மன் சாண்டி, மம்தா, கெஜ்ரிவால் கண்டனம், பதிவு செய்த நாள்: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 27, 4:24 PM IST

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டெல்லி கேரளா பவனில் நாளை முதல் பீப் ப்ரை வழக்கம் போல கிடைக்கும்..., Posted by: Mathi Updated: Tuesday, October 27, 2015, 19:34 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.htmlhttp://tamil.oneindia.com/news/india/kerala-house-drops-buffalo-meat-from-menu-238585.html

[6] தினமலர், இறைச்சி அரசியல்‘: பல மாநிலங்களில் தொடரும் தடை, செப்டம்பர்.11, 2015: 12.06. [IST].

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1339869

[8] http://www.vinavu.com/2015/04/15/beef-ban-brahminical-double-speak/

[9] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

Arthur Waley, Did Buddha die of eating pork?: with a note on Buddha’s
image
, Melanges Chinois et bouddhiques, Vol.1031-32, Juillet 1932, pp.
343-354.

[10] http://www.vinavu.com/2012/05/12/myth-of-the-holy-cow/