Archive for the ‘கூட்டுக்கொலை’ Category

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

மே 4, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)

 

ராஜிவ்காந்திதூண்டிவிட்டகலவரம்: அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[1]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[2]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[3]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[4].

 

29 வருடம்கழித்துநீதிமன்றம்சஜ்ஜன்குமாரைவிடிவித்தது: 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

 

சோனியாவீடுமுன்புகொடும்பாவிஎரிப்பு: இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட மான்சிங் சாலை அருகே தில்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக், சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சீக்கியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்[6]. அதையொட்டி அக்பர் சாலை-மான்சிங் சாலை சந்திப்பில் போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும், போலீஸாரை தள்ளிவிட்டு, தடுப்புகள் மீது ஏறி குதித்து அக்பர் சாலையில் பலர் நுழைந்தனர். அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனங்களில் ஏறிய சிலர் சோனியா ஒழிக, காங்கிரஸ் அரசு ஒழிக என்று கோஷம் எழுப்பினர். சோனியா வீட்டு முன்பாக சஜ்ஜன் குமாரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்[7]. அதனால், சுமார் இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், போலீஸ் உயரதிகாரிகள் சீக்கிய குருத்வாரா பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

உள்துறைஅமைச்சர்வீட்டின்முன்பும்ஆர்பாட்டம்: இதற்கிடையே, ஒரு பிரிவு சீக்கியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே இல்லம் அமைந்துள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதிக்குச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். இதை அறிந்த போலீஸார், அந்தச் சாலையை இணைக்கும் அனைத்துச் சந்திப்புகளிலும் தடுப்புகளை அமைத்தனர். கிருஷ்ண மேனன் மார்கில்தான் முன்னால் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களின் இல்லம் அமைந்துள்ளது. அதனால், அப்பகுதி வழியாக நாடாளுமன்றச் சாலை, இந்தியா கேட் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

 

பிந்தரன்வாலேமரணஅறிவிப்பு 25 ஆண்டாகியும்வெளியாகவில்லை: பொற்கோவிலில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை வெளியேற்றுவதற்காக ராணுவம் மேற்கொண்ட “ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கையின் போது, பிந்தரன்வாலே கொல்லப்பட்டது தொடர்பாக அரசு தரப்பிலோ, அதிகாரப்பூர்வமாக, 25 ஆண்டுக்கு பிறகும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை[8]. அப்போதைய டம்டாமி தக்சல் தலைவராக இருந்த பிந்தரன்வாலேயின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தும் கூட, அவரது மரணம் குறித்து அரசு பகிங்கர அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், பொற்கோவில் நடவடிக்கையில் பிந்தரன்வாலே தப்பித்து, பாகிஸ்தான் சென்றுவிட்டதாக வதந்திகள் கூட உலவின.

 

பிந்தரன்வாலேஇறக்கவில்லை: சீக்கிய மதத்தவர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், குறிப்பாக கிராமப்புரத்தை சேர்ந்தவர்கள் மத்தியில், பிந்தரன்வாலே இன்னும் இறக்கவில்லை என்றும், அவர் தகுந்த நேரத்தில் திரும்பி வருவார் என்றும் நம்பிக்கை நிலவியது. பிந்தரன்வாலே மரணத்தை அவர் தலைமை வகித்த தக்சல் அமைப்பும் கூட, அவரது மரணத்தை அங்கீகரிக்கவில்லை. இதன் புதிய தலைவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்வரை நியமிக்கப்படாமலேயே இருந்தார்.

 

பிந்தரன்வாலேஇறந்ததைஏற்றுக்கொண்டபப்பர்கல்சா:  பிந்தரன்வாலே இறந்ததை ஏற்றுக் கொண்ட ஒரே அமைப்பு பப்பர் கல்சா அமைப்பு மட்டுமே. 1989ம் ஆண்டு இதை அங்கீகரித்த இந்த அமைப்பு, பிந்தரன்வாலேவை வீரதியாகியாக அறிவிக்கும்படி வலியுறுத்தியது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, பிந்தரன்வாலே, 1984ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி கொல்லப்பட்டார். அவரது உடல், ஜூன் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் போலீஸ் குழுவினரால், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம், ராம்பாக் போலீஸ் நிலைய துணை எஸ்.ஐ., மூலம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், துப்பாக்கி குண்டுகளின் காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக பிந்தரன்வாலே இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள அனைத்து 14 காயங்களும் துப்பாக்கி குண்டுகளால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அது தவிர விலா எலும்புகளில் இரண்டு உடைந்திருந்தன. பிந்தரன்வாலேயின் உடல், அவரது கூட்டாளியின் உடலுடன், ஜூன் 8ம் தேதி அமிர்தசரசில் குருதுவாரா சகீதா தகன மைதானத்தில் எரிக்கப்பட்டது. 203 பேரின் சாம்பல்களுடன், பிந்தரன்வாலேயின் சாம்பலும், ரோபர் மாவட்டத்தில் உள்ள கிரட்பூர் சாகிப்புக்கு எடுத்து செல்லப்பட்டு, சட்லஜ் நதியில், அமிர்தசரஸ் ஜில்லா பரிஷத் செயலர், மற்றும் நிர்வாகி மாஸ்டிரேட் ஆகியோரால் கலக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையின்போது, பிந்தரன் வாலே இறந்து போனதாக அவரது குடும்பத்தினர் கூட எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எஸ்.ஜி.பி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்தபிறகு, பிந்தரன்வாலேயின் மரண சான்றிதழ் கோரி, அவரது மகன் இஷார் சிங், மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.

 

சோனியாவின்அரசியல் நாடகம் ஆபத்தானது: சீக்கியர்கள் இப்படி தன் வீட்டின் முன்பாக ஆர்பாட்டம் செய்யும் வேளையில், சோனியா தந்திரமாக கர்நாடகத்திற்கு வந்து, தேர்தல் கூட்டங்களில், பிஜேபியைக் கடுமைகயாகப் பேசி வருகிறார். புதன்கிழமை அன்று ரெய்ச்சூரில் பேசினார்[9]. கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், வரும், 23ம் தேதி முதல், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கின்றனர்.கர்நாடகாவில், அடுத்த மாதம், 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம், ஏற்கனவே, சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. வரும், 25ம் தேதி, சிக்மகளூர் மற்றும் மங்களூரிலும்; ஏப்ரல், 30ல், குல்பர்க்கா மற்றும் பெல்காமிலும்; மே, 2ம் தேதி, மைசூரு மற்றும் பெங்களூருவிலும், சோனியாவின் பிரசாரம் செய்கிறார்.வரும், 23ம் தேதி, ராய்ச்சூர் மற்றும் பீஜப்பூர் மாவட்டங்களிலும், வரும், 26ல், கோலார், தும்கூர் மற்றும் ஹாவேரி மாவட்டங்களிலும், மாண்டியா, ஹசன் மற்றும் ஷிமோகா மாவட்டங்களில், மே, 1ம் தேதியும், ராகுல் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மன்மோகன் சிங், 29ம் தேதி, ஹூப்ளி மற்றும் பெங்களூரில் பிரசாரம் செய்கிறார்[10]. பெங்களூரு பேலஸ் மைதானத்தில் சோனியா 02-05-2013 அன்று பேசியபோது, நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன[11].

 

வேதபிரகாஷ்

04-05-2013


[1]. According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[2] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[4] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

ஏப்ரல் 11, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)

PHOTO CAPTION

சோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].

PHOTO CAPTION

105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.

PHOTO CAPTION

அன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].

Sonia attending Lingayat conference April.3

இதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.

Sonia honoured by Lingayat - but a woman was shut down by police forcefully

கிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா?

Sonia attending Lingayat conference Aprl 2012

என்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.

PHOTO CAPTION

சாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்

Sonia attending Lingayat conference April.2

அட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள்? சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்

PHOTO CAPTION

ஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது

PHOTO CAPTION

இவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க

பலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].

PHOTO CAPTION

சோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.

லிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா?: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

PHOTO CAPTION

வெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.

வேதபிரகாஷ்

11-04-2013


[1] The Congress, which is ridden by factionalism in Karnataka, is hoping for a revival through Sonia Gandhi, who is on a two-day visit to the state. With just a year for the assembly elections, Sonia made the right beginning by participating in the Guruvandana programme of Shivakumara Swami, the pontiff of the Sri Siddaganga Mutt, the most powerful institution of Lingayats, the largest community in the state. Her visit is seen as a move by the Congress to woo the Lingayats, who were rallying behind former CM B.S. Yeddyurappa and the BJP for the last one decade.

Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2136817/Sonia-makes-poll-point-pontiffs.html#ixzz2Q9TGX71i
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[5]  A woman was beaten up by police today for showing black flag to the Congress President Sonia Gandhi in Tumkur, during the birthday celebration of Siddaganga Math head. A young woman tried to disrupt Mrs Gandhi’s speech during the ceremony. As she began her speech, the woman, seated among the audience, suddenly rose and waved a black flag demanding Scheduled Caste (SC) status for her community Madiga Dandora. The police immediately swung into action and beat her up. She was then taken away from the venue even as some of her supporters shouted slogans.

http://www.ndtv.com/article/india/woman-beaten-by-cops-after-trying-to-disrupt-sonia-gandhi-s-rally-in-karnataka-203518

[6] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece

[7] Members of the vedike, who along with leaders of the Karnataka Rajya Dalit Mahasabha and Christian and Muslim organisations, staged a protest here on Wednesday, alleged that attempts were being made to hush-up the incident.

http://www.thehindu.com/todays-paper/tp-national/cbi-probe-sought-into-suicides-at-chowli-math/article4604721.ece