Archive for the ‘ஆட்டம்’ Category

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

மார்ச் 6, 2014

சாமுவேலின் மகன் ஜகன் திருமலையில் கலாட்டா – தடாலடியாக கோவிலில் நுழைந்த மகனும், ஊழியம் செய்யும் மறுமகனும் (2)

 

YSR Catholic Christian family

YSR Catholic Christian family

 

கிருத்துவத்திற்கு  எதிராக  செயல்படுகின்றனர்   என்று   ஆந்திர  மாநில  கிருத்துவ  கவுன்சில்  தடை  விதித்தது: YSR குடும்பம் இப்படி விசுவாசமாக ஊழியம், தொண்டு முதலியவற்றை செய்து வரும் போது, ஊழல் பிரச்சினை வந்தபோது, சோனியா-காங்கிரஸ் சொக்கத்தங்கம், சுத்தமான கட்சி என்றெல்லாம் காட்டிக் கொள்வதற்கு, கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது என்ற செய்தி வந்தது.

State Christian Political Awareness conference announced its decision to ban YS Vijayamma, Brother Anil and KA Paul for indulging in non-Christian activities while holding bible in their hands. While Vijayamma carried bible during campaigning in recent by-polls, there were allegations against Brother Anil and KA Paul for their involvement in corrupt practices. “As the three of them have insulted Christianity by using it for political gains, they were banned from the religion,” said a statement released by the organization[1]. ஆனால் கடந்த ஜனவரி 2013ல் விஜயம்மா மற்றும் சகோதரர் அனில்குமார் அதாவது மறுமகன் கிருத்துவத்திற்கு எதிராக செயல்படுகின்றனர் என்று ஆந்திர மாநில கிருத்துவ கவுன்சில் தடை விதித்தது[2]. இது வெறும் நாடகமே என்று தெரிகிறது.

ஜனவரி 2011ல் விஜயவாடாவில், 25 ஜோடிகளுக்கு, சிறுபான்மையினர் துறை பெயரில் / போர்வையில் கிருத்துவமுறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது[3].

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

கிருத்துவ திருமணம் சாமுவேலின் ஆட்சியில்

2011ல் தேர்தல் சமயத்தில் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் அதுமட்டுமல்லாது, சர்ச்சுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது[4].

இதற்கென

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

சர்ச்சுகளில் தேர்தல் பிரச்சாரம்

பேருந்துகளில் கிருத்துவ போதகர்கள், பாஸ்டர்கள் என்று கூட்டம் வரவழைக்கப் பட்டது. இவ்வாறு விசுவாசமாக இருக்கும் போது தடை விதிக்கப்பட்டது வெறும் நாடகமே, வேறு ஏதோ காரணம் உள்ளது என்பது புலனாகியது. ஆம்னாம், அதுதான் சுரங்க ஊழல்!

 

YSR family.extended

YSR family.extended

YSR  குடும்பத்தின்  கனிம  வள  சுரண்டல்: YSRன் தந்தை ராஜா ரெட்டியே பெரிய கனிமவல சுரண்டல் பேவழி என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் அவர் அந்த சட்டவிரோத சுரங்க தோண்டல், சுரண்டல் முதலிய வேலைகளில் ஈடுபட்டு கோடிகளை சம்பாதித்தார் என்கிறர்கள். தூமலப்பள்ளி என்ற கிராமத்தில் யுரேனிம் உள்ளது என்பதால், இஸ்ரேல் கம்பனிகளுக்கு ஆசை வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் நடக்கும் விவகாரம் என்பதை அறியலாம். தமிழகத்திலும் அத்தகைய விசேஷ கனிமங்கள் கிடைக்கின்றன என்பதினால், அப்பகுதிகளில் கிருத்துவ மதமாற்றம் அதிக இருப்பதை காணலாம். இப்பொழுது, அணுவுலை எதிர்ப்பு என்ற போர்வையில் கிருத்துவ சர்ச்சுகள், என்.ஜி.ஓக்கள் முதலியவை செயல்பட்டு வருவதை காணலாம். அதே முறைத்தான் ஆந்திராவிலும் இருப்பது, YSRன் பாரம்பரியம் எனலாம். அதனால் தான், YSR பய்யாராம் இரும்பு கனிம சுரங்க உரிமத்தை அனில்குமாருக்குக் கொடுத்தார். ரக்ஷா ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இவர் ஒரு கம்பெனியை வைத்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, மகனும் பல கம்பெனிகளை வைத்துள்ளார். Sandur Power, Saraswati Power, Carmel Asia Holdings, Bharathi Cement Corp, Kealawn Technologies Pvt Ltd, Marvel Infrastructure, Classic Realty, Silicon Builders, Swasti Power Engineering Ltd இப்படி இக்கம்பெனிகள் எல்லாமே கனிம சுரங்க வளங்களை சுரண்டும் வகையாக இருப்பதை காணலாம்.

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - நியூஸ் கட்டிங் - ஆங்கிலம்

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – நியூஸ் கட்டிங் – ஆங்கிலம்

சோனியா- YSRன் மோதல் – கத்தோலிக்க மோதல் அல்ல கத்தோலிக்க உள்-மோதலே: சோனியா YSRஐ கிருத்துவர் என்ற ஒரே காரணத்திற்காக பதவியைக் கொடுத்தார், ஆனால், YSR இறந்தபிறகு, பணபறிமாற்றம் விசயங்களில் பிரச்சினை ஏற்பட்டதால், மகன் ஜகனால் கருத்துவேறுபாடு தொடங்கிறது. கிருத்துவத்தலைவர்கள் பலமுறைகளில் ஈடுபட்டாலும், அது பெரிதாகி, பிளவில் முறிந்தது. YSR-காங்கிரஸ் தொடங்கியதும் இவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. சிபிஐ ரெய்டுகள், கைது, ஜெயில் வாசம் என்று தொடர்ந்ததன. சோனியா தான் காரணம் என்று ஜகன் வெளிப்படையாகவே கூறினார். ஆனால், இவையெல்லாமும் கிருத்துவ நாடகம் தான், ஏனெனில், இதே கனிமவள சுரண்டல் எல்லா மாநிலங்களிலும் சோனியா ஆதரவில் நடந்து வருவதால், ஆந்திராவில் அது அதிக அளவில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்தார். போதாகுறைக்கு கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் பிஜேபி-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு கமிஷன் கொடுத்து வருகிறார்கள். அதனால், ஊழலில் திளைத்த சோனியா எப்படியாவது திசைத்திருப்பத்தான் இந்த அதிரடி நடிவடிக்கைகள் என்றும் ஆந்திராவில் விவாதிக்கப் படுகின்றன[5].

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.2

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.2

திருப்பதி-திருமலை   அத்துமீறல்கள்  விசயங்களில்  மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன: இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்களான திருப்பதி-திருமலை கோவில்கள் விஷேசமானவை. இன்று கோடிகளைப் பெற்றுவரும் நிறுவனமாக செக்யூலரிஸ ஆட்கள் பார்க்கின்றனர். அப்பணத்தை எப்படி திசைத்திருப்பி அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். திருப்பதி-திருமலை அத்துமீறல்கள் அம்மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. அதனால் தான் இவ்விசயங்களில் மற்ற ஆந்திர கட்சிகளும் அமுக்கித்தான் வாசிக்கின்றன. TDP தலைவர் முட்டு கிருஷ்ண நாயுடு அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்காததால் ஜகன் விதிமுறைகளை மீறினார் என்று எடுத்துக் காட்டுகிறார். ஜகனின் தந்தையான சாமுவேல் ராஜசேகர ரெட்டியும் திருமலையில் தரிசனம் செய்துள்ளார். பிஜேபி ஜகன் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கேட்டுள்ளது[6]. ஆனால், வருடாவருடம் ஜகன் இப்படியே செய்து கொண்டிருப்பார், கட்சிகளும் அப்படியே எதிர்த்துக் கொண்டிருக்கும். ஆனால், பாதிக்கப்படுவது யார்?

 

அனில்குமார் மதப்பிரச்சாரகர் - புகைப்பட ஆதாரம்.3

அனில்குமார் மதப்பிரச்சாரகர் – புகைப்பட ஆதாரம்.3

2006  மற்றும்  2012  ஆண்டுகளில்  பிரச்சாரம்  முடிக்கி  விடப்பட்டது  ஏன்?[7]: கிருத்துவர்களைப் பொறுத்தவரையில் கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை என்று எதுவும் இல்லாமல், அவர்கள் செய்து வரும் அநியாயங்கள், அக்கிரமங்கள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து, அத்தகைய குற்றங்கள் செய்தவர்களை, “தியாகிகள்” என்றே திரித்து எழுதி வந்து பிரச்சாரம் செய்வது கேவலமானதாகும். போதாக்குறைக்கு “இந்து தீவிரவாதிகள்” கிருத்துவர்களைத் தாக்குகிறர்கள் என்றும் பொய்மாலங்களை வெட்கமில்லாமல் பரப்பி வருகிறார்கள்[8]. முதலில் கிருத்துவர்கள் க்ஷ்செய்து வரும் அயோக்கியத்தனத்தை இந்த மாய்மாலக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிநெது தெரியாதத் போல இவ்வாறு செய்வது என்பது குற்றங்களை உக்குவிப்பது, குற்றவாளிகளைத் தூண்டிவிடுவது, ஆதரிப்பது என்ற செயல்களுக்கு ஒப்பாகிறது. இதிலிருந்தே, இவர்களது யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் அமைதிக்கு ஊறுவிளைக்கும் காரியங்களாகும் என்றும் அறியப்படுகின்றது.

 

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

அனில்குமார் மதப்பிரச்சாரம். பேனர்

TTDயின் ஊழியர்களே இதில் சிக்கியுள்ளது: ஜூலை 2012ல், ஈஸ்வரைய்யா, கிருஷ்ணம்மா மற்றும் யசோதம்மா என்ற மூன்று TTDயின் சுகாரத்துறை [TTD’s Health Department] ஊழியர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, கிருத்துவ மிஷனரிகளின் கத்தை-கத்தையான பிரச்சார நோட்டீசுகள், சுவரொட்டிகள் மற்ற இதர பிரச்சார பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை, விஜிலென்ஸ் துறையின்சர் கண்டு பிடித்தனர்[9]. கைதும் செய்யப்பட்டனர்[10]. அவர்கள் வீடுகள் திருமலையில் TTDக்கு சொந்தமான குவாட்டர்ஸில் இருந்தன என்பதால், அவை எப்படி எல்லா சோதனைகளையும் மீறி இவை மலைக்கு மேல் ஏறிவந்தன என்று வியப்பாக உள்ளது. இவ்வாறு பொருட்கள், மனிதர்கள், அதாவது கிருத்துவப் பொருட்கள், கிருத்துவ மனிதர்கள், தாராளமாக மைக்கு மேலே வருகின்றன, கோவிலுக்கும் செல்கின்றார்கள் என்றால், நிச்சயமாக இவை பாதுகாப்பு வளையங்களை கடந்து செய்யப்படும் குற்றங்கள் ஆகும். அறிந்து செய்யும் சட்டமீறல்கள் ஆகும். இந்த மூவரும் தாங்கள் TTD யின் ஊழியர்களக இருந்தும் துரோகம் செய்துள்ளார்கள். அதேபோல, ஜகன் மற்றும் அந்த 50 மற்றும் 300 பேர்களில் உள்ள கிருத்துவர்கள் இந்துக்களின் புண்ணியத்தை, புனிதத்தை, பாரம்பரித்தை மதிக்காமல் இருக்கிறர்கள், தூஷிக்கிறார்கள் எனும் போது, அச்செயல்கள் இந்திய குற்றாவியல் சட்டங்கள் மற்றும் அர்சியல் நிர்ணய சட்டத்தின் பிரிவுகளையும் மீறுகின்றன. மேலும் செக்யூலரிஸத்தைப் பின்பற்றுகிறோம் என்றுள்ள இந்நாட்டின் அரசியல் மேதைகள், தலைவர்கள், முதலியோர் இத்தகைய சட்டமீறல்களுக்கு, அதே செக்யூலரிஸ போர்வையில் துணை போகிறார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது.

 

© வேதபிரகாஷ்

06-03-2014


[2] The ban imposed on YSR Congress honorary president YS Vijayamma and his son-in-law Brother Anil by a Christian organization came as a bitter shock to YSR family. In the conference, The members of the organization appealed to vote for only those who would strive for the betterment of Christian community. If few more organizations follow the same path, Jagan will be in big trouble and Christian community is the backbone of YSR Congress party.

http://www.gulte.com/news/17987/Christian-Organization-bans-Vijayamma-Br-Anil

[3]  the mass marriages were performed as part of the 15-point programme being implemented by the Central and State Governments. He said efforts would be made to provide reservation to Dalit Christian Minorities. The Minister presented wedding rings and ‘thali bottu’ to the couples. He also gave away some basic items of daily need for the couples to set up their new households. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/mass-marriages-performed/article1079913.ece

[5] உள்ளூர் தெலுங்குப் பத்திரிக்கைகள், நாளிதழ்களில் வந்துள்ள விவரங்களின் தொகுப்பாக இவ்விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

[7] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced ……….

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[9] After lying low for some time, the problem of proselytisation has reared up its ugly head once again at Tirumala, the abode of Lord Venkateswara. The issue which rocked the TTD about six years ago, has erupted again as evidenced by the fact that in a raid conducted by the TTD’s Vigilance and Security personnel on three houses in the TTD staff quarters at Tirumala late on Monday night following a tip-off, bundles of religious publications, wall-posters and such other propaganda material belonging to Christian missionaries were reportedly recovered.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/article3679380.ece

[10] TTD staff propagating Christian faith in Tirumala arrested, Published on 24 Jul 2012

http://www.youtube.com/watch?v=cQ1VMAp0gLQ

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

மே 11, 2013

ஊழல் அமைச்சர் ராஜினாமா – சோனியாவின் பிரமாதமான நாடகம் (2)

ரெயில்வேதுறைமீது கண் வைக்கும் கட்சிகள்: ரெயில்வேதுறை எந்த அளவிற்கு லஞ்சம் மலிந்த துறையாக உள்ளது என்பதனை பவன் குமார் பன்சால் வெளிப்படுத்தி விட்டார். இதனால், முந்தைய ரெயில்வே அமைச்சர்கள் இவரை சபித்துக் கொண்டிருப்பர் என்பது திண்ணம். கட்சிகள் மாறி-மாறி இத்துறைக்கு வந்து கொள்ளையிட்டுள்ளதும் தெரிகிறது. ராம் விலாஸ் பாஷ்வன், நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ்[1], மம்தா பானர்ஜி[2], இப்படி பெயர் சொன்னாலே போது என்ற அளவிற்கு இருந்துள்ளார்கள்.

ஊழலில்திளைக்குரெயில்வேயும், பாதிக்கப்படும்மக்களும்: ஒரு கான்ட்ராக்ட், ஆர்டர், டெண்டர் கிடைக்கவேண்டுமானால், கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றால், கொடுப்பவர் எந்த அளவிற்கு அந்த வேலையிலிருந்து சம்பாதிப்பார் என்பதும் வெளிப்படுகிறது. முடிவு தரக்குறைவான பொருட்கள், சேவைகள் தாம் அந்த லஞ்ச-ஊழல் பேர்வழிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் முடிவாக பாதிக்கப் படுவது, நுகர்வோர்கள் தாம் – அதாவது கோடிக்கணக்கில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர வர்க்கத்து இந்தியர்கள்தாம்[3].

சோனியாஏன்மன்மோஹன்வீட்டிற்குச்செல்லவேண்டும்?: ஊடகங்கள் தான் தான் தலைவி – பாஸ் என்று மெய்பித்து விட்டார்[4], சோனியா சொல்கிறார்-மன்மோஹன் செய்கிறார்[5] என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருந்தன. ஆனால், சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்றார் என்பதில் தான் நாடகம் வெளிப்படுகிறது. “வா” என்றால், வந்து கும்பிடு போடும் மன்மோஹனுக்கு அப்படியென்ன முக்கியத்துவம், தைடரியம் அல்லது வேறேதோ ஒன்று வந்து விட்டது? பெரிய பதவிக்கான நியமனம் பி.எம்.ஒ.அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், பிரதம மந்திரியின் தொடர்பும் உள்ளது, அதாவது, பொம்மையை ஆட்டிவைக்கும் சோனியாவின் பங்குதான் முடிவாக உள்ளது.

ஊடகங்களின்மழுப்பல்பன்சால்பதவிநீக்கம்செய்யப்பட்டார்என்றது, பிறகுஅறிவித்ததுராஜினாமா!: ஊடகங்களின் மழுப்பல் – பன்சால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றன[6], பிறகு அறிவித்தது ராஜினாமா என்றன. சோனியா மன்மோஹன் வீட்டிற்குச் சென்ற சில நிமிடங்களில் ஊழல் மந்திரி பன்சால் தூக்கப்பட்டார்[7], கோணியில் போடப்பட்டார்[8], தூக்கியெறியப்பட்டார், என்றெல்லாம் ஆங்கிலத்தில் வர்ணித்துக் கொண்டிருந்தன. ஆனால், பிறகோ அல்லது அதே செய்தியிலோ, பன்சால் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யத் தூண்டப்பட்டார், செய்து விட்டார் என்று கூட்டிச் சொல்லின[9].

பதவிநீக்கம்செய்தபிறகு, அலுவகத்திற்குவந்து, கோப்புகளில்கையெழுத்துப்போட்டுசென்றாராம்: பதவி நீக்கம் செய்தபிறகு, அலுவகத்திற்கு வந்து, கோப்புகளில் கையெழுத்துப் போட்டு சென்றாராம்! அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். சர்ச்சையில் சிக்கியதால் 2 நாட்களாக ரெயில்வே துறை அலுவலகத்திற்கு வராமல் இருந்தாராம், பன்சால் வெள்ளிக்கிழமையன்று திடீரென வந்தாராம், பரபரப்பு ஏற்பட்டதாம், அலுவலகம் வந்ததும், அவசரம் அவசரமாக நிலுவையில் இருந்த கோப்புகள் அனைத்திலும் கையெழுத்து போட்டாராம், பைசல் செய்தாராம், பின்னர் பதவியை ராஜினாமா செய்தாராம்[10]. முன்னதாக அவர் அமைச்சரவையில் இருந்து பிரதமரால் நீக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன[11]. அப்படியென்றால், முந்தய நாட்கள் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார் என்றாகிறது. பிறகு, இதெல்லாம், சொல்லிவைத்து தானே அரங்கேற்றம் செய்கிறார்கள்.

லஞ்சத்தைவிதைத்துஅறுவடைசெய்வதில்கில்லாடியானகுடும்பம்: பதவி உயர்வு, இடமாற்றம், நன்றாக காசு கிடைக்கு இடத்திற்கு மாற்றம், முதலியவற்றிற்கு கோடிகளில் லஞ்சம் பெற்று செய்து அந்த பணத்தை வைத்துக் கொண்டு கம்பெனிகளை உருவாக்கி, அதற்கும், கடன் என்ற பெயரில், வங்கிகளினின்று பணம் வாங்கி, அப்பணத்தை மறுபடியும் மறுமகன் மூலமாக பன்சாலுக்கே கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, லஞ்சத்தை விதைத்து லஞ்சத்தை அறுவடை செய்து, லஞ்சத்தை முதலீட்டாக்கி, லஞ்சத்தை முதலீட்டாக மாற்றி, லஞ்சத்தை லாபமாக பெறும் கில்லாடியான குடும்பமாக பன்சால் குடும்பம் இருக்கிறது. அது கீழ்கண்ட கம்பெனிகளை வைத்துக் கொண்டு, லஞ்சப்பணம் பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தது.

  1. தியோன் பார்மேசுகல்ஸ் லிமிடெட் (Theon Pharmaceuticals Limited),
  2. ஐவா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (Iva Healthcare Private Limited),
  3. சிசிஸ் பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் (Isis Packaging Pvt Ltd) மற்றும்
  4. பன்சி ரௌனக் எனர்ஜி குரூப் லிமிடெட் (Bansi Raunaq Energy group Limited).

நிலமாகக்கொடுக்கப்படும் / பெறப்படும்லஞ்சம்: குறிப்பிட்ட நபர், தனது 21.26 ஏக்கர் நிலத்தை 33 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 30,000/- தருவதாக ஒப்பொக்கொண்டு, குத்தகைக்கு என்று மித்தன் லால் சிங்க்லா (விஜய்சிங்க்லாவின் தந்தை) மற்றும் இத்ர உறவினர்களுக்கு எழுதி வைத்தார். ஆனால், பத்திரப்பதிவு செய்யப்பட்டபோது, “33 வருடங்கள்” என்பது “99 வருடங்கள்” என்று மாற்றப்பட்டிருந்தது கண்டு திகைத்துப் போய் விட்டார். வெளியே சொல்ல பயந்ததால், யாரோ ஒருவர் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளார். அதாவது, “33 வருடங்கள்” என்பதை “99 வருடங்கள்” என்று ஆவணங்களில் திருத்தியிருக்கிறார்கள் என்பது திண்ணம்[12].

சோனியா, மன்மோஹன்சிங், ஊழல்: சோனியாதான் தலைவி-பாஸ், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ஊழலில் திளைத்தும், சந்தோஷமாக பவனி வந்து கொண்டிருக்கிறார் என்றால், அவரது திறமை அலாதியானது தான். மன்மோஹனை கைப்பாவையாக வைத்து ஆட்டி வைக்கும் போது, கால்வருடி அடிமையாக செயல்படும் போது, அவர்தான் சோனியா வீட்டிற்கு வந்து சலாம் போட்டிருப்பார். ஆனால், ஊழலையும் “கார்பரேட்” பாணியில் லாவகமாக செய்து வரும் அவர், தனக்கு நல்ல பெயர் உண்டாக்கிக் கொள்ளவே அப்படி இடம் மாறி சென்று நாடகம் ஆடியுள்ளார். இது 2ஜி, 3ஜி போன்ற ஊழல்களையும் மிஞ்சியது, ஆட்சிக்கே உலை வைப்பது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அரசாங்க்சத்தில் இதைப் பற்றிய ஆவணங்கள் ஏகப்பட்டர்து இருக்கும். அனைத்தையும் ஒழித்து புனிதராக வேண்டும் என்றால், சிறிது காலம் தேவைப்படும். தமது ஆட்களை வைத்துக் கொண்டே சுத்தப்படுத்துவது சுலபம். அதைத்தான் சோனியா செய்து வருகிறார். சோனியாவின் நாடகம்[13] பலே, பலே!

© வேதபிரகாஷ்

11-05-2013


[1] மாட்டுத்தீவனத்திலேயே கோடிகளை அள்ளிய, இவருக்கு காங்கிரஸ் இப்பதவியை அளித்தது. கேட்க வேண்டுமா, பீகாரிகள் தேர்வு எழுத இந்தியா முழுவதும் ரெயில்களில் சென்று வர பாஸ் கொடுத்தாராம், இன்று அரசு அலுவலகங்களில் பீகாரிகள் பெரும்பாலும் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

[2] மம்தாவின் ஊழல் மேற்கு வங்காள சிட்டுக் கம்பெனி ஊழலில் நாறுகிறது. அப்பாவி மக்களைக் கொன்று வருகிறது, அதாவது, பணம் போட்ட ஏழை மக்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். இருப்பினும், மம்தாவிற்கு இரக்கமே இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டு வருகிறார்.

[3] “அந்நியன்” படத்தில் வர்வது போன்று, எத்தனை “அம்பிகள்” வந்தாலும், இந்த ஊழல் கொம்பன்களை ஒன்றும் செய்யமுடியாது, இந்த விஷயத்தில் தான், சோனியா அனைவரையும் மிஞ்சிவிட்டார் எனலாம்.

[6] PK Bansal sacked after TIMES NOW expose10 May 2013, 2040 hrs IST, TIMES NOW — Union Railway Minister Pawan Kumar Bansal’s nephew arrest – was just the tip of the iceberg – TIMES NOW’s investigation team, knew there was much more to Railgate – slowly but steadily our investigations led us to Bansal’s doorstep. First we – exposed the meteoric rise of Bansal family fortunes along with his political ascent. Then – after thorough research and painstaking investigation – we raised a clear case of conflict of interest against the Railway Minister. And what seems to have sealed Bansal’s fate, is his first, clear, direct link to Railgate exposed first on TIME NOW . By Friday morning – TIMES NOW’s investigation team laying its hands on the critical details of super explosive tapes – which contained sensational details of Minister’s direct link. And within minutes of TIMES NOW’s expose, Sonia Gandhi heading towards Prime Minister’s residence – the decision was conveyed – Bansal had to go.

http://www.timesnow.tv/INDIA/PK-Bansal-sacked-after-TIMES-NOW-expose/videoshow/4427166.cms

[9] Railway Minister Pawan Kumar Bansal and Law Minister Ashwani Kumar were on Friday night forced to resign by the Congress and the Prime Minister as the government’s image continued to take a severe battering over allegations of corruption and interference with graft probe.

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.