Archive for the ‘ஆல் இன்டியா ரேடியோ’ Category

அமீன் சயானி (1932-2024) இந்தி திரைப் படப் பாடல் தொகுப்பாளர் 91 வயதில் காலமானார்!

பிப்ரவரி 22, 2024

அமீன் சயானி (1932-2024) இந்தி திரைப்படப் பாடல் தொகுப்பாளர் 91 வயதில் காலமானார்!

அமீன் சயானி இந்தியத்துவத்தின் சின்னம் எனலாம்: ஆல் இன்டியா ரேடியோ கேட்பவர்களுக்கு, தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கு எப்படி சரோஜ் நாராயண் ஸ்வாமியைத் தெரிந்திருக்குமோ, அது போல, இந்திமொழி தெரிந்தவர்களுக்கு நிச்சயமாக அமீன் சயானியைத் தெரிந்திருக்கும். அமீன் சயானி (21 டிசம்பர் 1932 – 20 பிப்ரவரி 2024) ஒரு இந்திய வானொலி அறிவிப்பாளர் ஆவார். அமீன் சயானி 21 டிசம்பர் 1932 அன்று மும்பையில் குஜராத்தி பேசும் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் குல்சூம் மற்றும் ஜான் முகமது சயானி ஆவர். அவரது தாயார் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மகாத்மா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார், அதனால்தான் சயானி தன்னை ஒரு காந்தியவாதி என்று அழைத்தார். அவர் ஒரு காஷ்மீரி பண்டிட், அதாவது, இந்துவான ராம மாட்டுவை மணந்தார். வானொலி, டிவி வருவதற்கு முன்பாக, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால், கடிகாரம் இல்லாத வீடுகளில், வானொலி தான் கடிகாரமாக பயன் பட்டது. அதனால், ரேடியோவை ஆனில் வைத்து தான் 1950-1980களில் வேலை செய்து கொண்டிருப்பர். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது, வேலைக்குப் போவதெல்லாம் அப்படித்தான் நடந்து வந்தது.  டிரான்சிஸ்டர் வந்த பிறகு அது எல்லோருடைய ஆதாரணமான பொருளாகியது. ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருடத்திலும் இருந்தது.

ஹிந்தி திரைப்படப் பாடல் நிகழ்சியும், அமீன் சயானியும் பின்னிப் பிணைந்தது:  இந்தி மற்றும் வடவிந்திய மொழி பேசுபவர்களிடையே இவரைப் பற்றி தெரியாதவரே இல்லை எனாலாம்[1]. தேன்கிண்ணம் போன்று, “கீத் மாலா” கேட்க ஆவலமாகக் காத்திருப்பர்[2]. அமீன் சயானி பாரம்பரியமான “பையோ அவுர் பெஹ்னோ” க்கு [சகோதர-சகோதரிகளே] என்று ரசிகர்களை அழைப்பதற்கு பதிலாக, “பெஹ்னோ அவுர் பாய்யோ” (அதாவது “சகோதரிகள் மற்றும் சகோதரர்கள்”) என்று பார்வையாளர்களை உரையாற்றும் அவரது பாணி இன்னும் ஒரு மெல்லிசை தொடுதலுடன் ஒரு அறிவிப்பாக கருதப்படுகிறது. அக்குரலை காற்றில் ஒலியாக கோடானு கோடி மக்கள் கேட்டு ர்சித்துக் கொண்டிருந்தனர். சயானி அவரது தாயார் குல்சும் சயானிக்கு எடிட்டிங்கில் உதவினார்.

அமீன் சயானி மனைவி காந்தியவாதி: மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலின் கீழ், நவ-எழுத்தாளர்களுக்கான பதினைந்து வார இதழை வெளியிடுதல் மற்றும் அச்சிடுதல். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, RAHBER (1940 முதல் 1960 வரை), தேவநாக்ரி (ஹிந்தி), உருது மற்றும் குஜராத்தி எழுத்துக்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது – ஆனால் அனைத்தும் காந்தியால் ஊக்குவிக்கப்பட்ட எளிய “இந்துஸ்தானி” மொழியில் வெளியிடப்பட்டது. அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத ஒரு உண்மை என்னவென்றால் டாடா ஆயில் மில்ஸ் லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் துறை 1960-62 இல் பிராண்ட் எக்ஸிகியூட்டிவ் – முக்கியமாக அவர்களின் கழிப்பறை சோப்புகளை கவனித்துக்கொண்டது: ஹமாம் மற்றும் ஜெய். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் அமீன் சயானி.

அமீன் சயானி  சிறு வயது முதலே கலைத் துறையில் ஆர்வமிக்கவராக இருந்தார்: பன்மொழி குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே கலைத் துறையில் ஆர்வமிக்கவராக இருந்தார்[3]. அவரது தாய் நடத்தி வந்த பத்திரிகையில், 13 வயதிலேயே கட்டுரை எழுதத் துவங்கினார்[4]. பின், அப்போதைய பம்பாய் வானொலி நிலையத்தில், சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமின்றி தொகுத்தும் வழங்கினார். அவரது சகோதரர் ஹமீத் சயானியால் பம்பாய் அகில இந்திய வானொலியில் அமீன் சயானி அறிமுகப்படுத்தப்பட்டார்[5]. அவர், தனது வாழ்க்கையில் 54,000க்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[6].

1952ல் ஹிந்தி திரைப்படப் பாடல்களுக்கு தடை விதிக்கப் பட்டது: அனைத்திந்திய வானொலியில் பல ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1952ல் நம் நாட்டின் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த பி.வி.கேஸ்கர், ஹிந்தி திரைப்படப் பாடல்களில் ஆபாசம் நிறைந்திருப்பதால் அதை அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்ப தடை விதித்தார்[7]. மேற்கத்தைய தாக்கம் மட்டுமல்லாது, அளவுக்கு அதிகமான அத்தகைய இசைக்கருவிகள், நடனம், பாடல்கள் முதலிய திணிப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை[8]. 1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் “விவித் பாரதி” வர்த்தக ஒலிபரப்பில் பணியாற்றினார். 1957ல் அத்தடை நீக்கப் பட்டது. ரேடியோ சிலோனின் புகழ் இந்தியாவில் வளர்ந்ததால், கேஸ்கரின் செல்வாக்கு குறைந்து, அந்த நேரத்தில் தான், நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து ஒலிபரப்பான ரேடியோ சிலோன் பிரபலம் அடையத் துவங்கியது. இதையடுத்து, அமீன் சயானி அங்கு பணியில் சேர்ந்தார். இங்கு பிரபல ஹிந்தி திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கும் ‘பினாகா கீத்மாலா’ நிகழ்ச்சியை சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். இதனால், இலங்கை மட்டுமின்றி நம் நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

1957ல் தடை நீக்கப் பட்டது: அரசாங்கம் தடையை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1957 ஆம் ஆண்டில், இடைவிடாத திரைப்பட இசை ஒளிபரப்பை வழங்கும் AIR சேவையாக விவித் பாரதி கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. “விவித் பாரதி பாரம்பரியம் மற்றும் நவீனம், பரம்பரை மற்றும் பிரகதி ஆகியவற்றின் மிகப்பெரிய கலவையைக் கொண்டிருந்தது. இது விரைவில் மிகவும் பிரபலமடைந்தது,” என்று 2010 இன் நேர்காணலில் சயானி குறிப்பிட்டார். 1967 வாக்கில், விவித் பாரதி வணிக ரீதியாக மாறி விளம்பரங்களை ஏற்கத் தொடங்கினார். 1970களின் பிற்பகுதியில், இந்திய நகரங்களில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக செயல்பட்ட கலாச்சார பீடமாக மாறியது. .இந்த நிகழ்ச்சி, 1952 முதல் 1994 வரை இவரால் தொகுத்து வழங்கப்பட்டது.

2009ல் பத்மஶ்ரீ விருது கொடுக்கப் பட்டது: கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மும்பை தனியார் மருத்துவமனையில் அமீன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பால் நேற்று அவர் காலமானார். 2009ல் பத்மஶ்ரீ விருது கொடுக்கப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்[9]. புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்[10]. இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் அமீன் சயானி முக்கியப் பங்காற்றியதாகவும், தமது படைப்புகள் மூலம் நேயர்களிடையே சிறப்பான பிணைப்பை வளர்த்ததாகவும் திரு மோடி கூறினார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “வானொலியில் திரு அமீன் சயானியின் குரல் வசீகரம் மற்றும் இனிமையைக் கொண்டதாக இருந்தது. அந்தக் குரலை தலைமுறைகளைக் கடந்து மக்கள் நேசிக்கின்றனர். தமது பணியின் மூலம், இந்திய ஒலிபரப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். நேயர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் பிணைப்பை அவர் வளர்த்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நேயர்கள் மற்றும் அனைத்து வானொலி ஆர்வலர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்”.

© வேதபிரகாஷ்

22-02-2024


[1] Times of India, Ameen Sayani, golden voice of radio, falls silent, Avijit Ghosh / TNN / Updated: Feb 22, 2024, 02:56 IST.

[2] https://timesofindia.indiatimes.com/india/ameen-sayani-golden-voice-of-radio-falls-silent/articleshow/107893501.cms

[3] தினமலர், வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி காலமானார், பதிவு செய்த நாள்: பிப் 22,2024 01:50.

[4] https://m.dina malar.com/detail.php?id=3557316

[5] தினச்சுவடு, புகழ்பெற்ற வானொலி தொகுப்பாளர் மாரடைப்பால் காலமானார்.!, By கெளதம், Posted on February 21, 2024 |

[6] https://dinasuvadu.com/popular-radio-presenter-amin-sayani-91-passed-away/

[7] The Live Mint, In 1952, Hindi film songs were banned on All India Radio,, By Radhika Iyengar, LAST PUBLISHED, 13.07.2018  |  03:35 PM IST

[8] https://lifestyle.livemint.com/how-to-lounge/movies-tv/in-1952-hindi-film-songs-were-banned-on-all-india-radio-111644474070100.html

[9] ஊடக-செய்தித் துறை, புகழ்பெற்ற வானொலி ஆளுமை அமீன் சயானி மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார், 21 Feb, 2024 (Release ID: 2007619)
ANU/PKV/PLM/RS/KRS.

[10]https://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/?comment=disable