Archive for the ‘தங்கமுத்து’ Category

கிருஸ்துவை விடுத்து கிருஷ்ணனைத் தழுவினால் தேர்தல் வெற்றி நிச்சயம்!

செப்ரெம்பர் 8, 2010

கிருஸ்துவை விடுத்து கிருஷ்ணனைத் தழுவினால் தேர்தல் வெற்றி நிச்சயம்!

ஆதி திராவிட இந்துவா, கிருஸ்துவனா? எஸ்.சி / ஆதி திராவிட இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்று தெரிந்தும், கிருத்துவர்கள் வேண்டுமென்றே புதிய ஆவணங்களைக் காட்டி அல்லது தயாரித்து எடுத்து வந்துக் காட்டி, தேர்தலில் போட்டியிட வருகிறார்கள். அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ரிடேர்னிங் ஆஃபிஸர் நுணுக்கமாக பரிசோதித்தால், அப்பொழுதே அவர்கள் கிருத்துவர்கள் தாம், ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத்தான், தங்களை எஸ்.சி / ஆதி திராவிட இந்து என்று காட்டிக் கொள்கிறார்கள், அவ்விதமாகவே தஸ்ஜாவேஜுகளைத் தயாரித்துக் கொண்டு வந்து பதிவு செய்கிறார்கள், என்பதனைக் கண்டு பிடிக்கலாம். ஆனால் அவர்கள், வேண்டுமென்றே ஏற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் நடந்த பிறகு, இப்படி வழக்குப் போட்டு, உயர்நீதி மன்றம், பிறகு உச்சநீதி மன்றம் என்று செல்வதற்குள், வேண்டிய ஆவணங்கள் பெறப்படுகின்றன, அவர்கள் “இந்துக்கள்”தான் என்று மெய்ப்பிக்க, கோவில்-குளம் சுற்றி வந்து, விழக்களில் வங்கு கொண்டு, ……………..தமது ஜாதிக்காரர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று விளம்பரப்படுத்தி விடுகிறார்கள்.

சந்திரா மற்றும் தங்கமுத்து வழக்கு[1]: ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரா வெற்றி பெற்றது செல்லும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராஜபாளையம் தனி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், சந்திரா, தி.மு.க., சார்பில் வி.பி.ராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், சந்திரா 58 ஆயிரத்து 320 ஓட்டுகளும், ராஜன் 57 ஆயிரத்து 827 ஓட்டுகளும் பெற்றனர். தேர்தலில் சந்திரா வெற்றி பெற்றார். இவரது தேர்தலை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளர் தங்கமுத்து, என்பவர் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

1994லேயே கிருத்துவை விட்டுவிட்ட குளோரி சந்திரா:  முன்பு உயர்நீதி மன்றத்தில், இந்த வழக்கில் சந்திரா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 1994ம் ஆண்டே நான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். எனது கணவர் பெயர் முருகன். நான் தேவேந்திரகுல வேளாளர் சமுகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன்.  இந்து கோவில்கள் கட்டுவதற்கு நன்கொடைகள் வழங்கி உள்ளேன் என்று கூறியிருந்தார்[2]. ஆனால், அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சந்திரா தரப்பு வாதங்களை நிராகரித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், இந்து பள்ளர் என்பதற்கான ஆதாரத்தை சந்திரா தாக்கல் செய்யவில்லை. அவரது கணவர் பெயர் சூசை மாணிக்கம் என்பதற்கான ஆதாரம் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து கோவில்கள் கட்ட நன்கொடை வழங்கியிருப்பதாக சந்திரா கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்து பள்ளர் என்று கூறி சந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

டிசம்பர் 2008லேயே இடைக்கால தடை உத்தரவு வாங்கியது[3]: டிசம்பர் 2, 2008 அன்று உயர்நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன், உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு மனு போட்டு, டிசம்பர் 19, 2008ல் இடைக்காலத்தடை ஆணையைப் பெற்றுவிட்டனர். ஆக, இந்த விஷயத்தில் மட்டும், நீதி மன்றங்கள், இவ்வளவு வேகமாக வேலைசெய்வது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

குளோரி சந்திரா பள்ளர் சந்திரா ஆனது[4]: அதில், “ராஜபாளையம் தொகுதி ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திரா, கிறிஸ்தவ தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். அவரின் தந்தை கிறிஸ்தவர் என்பதால், சந்திராவை தாழ்த்தப்பட்டவராக கருத முடியாது. ராஜபாளையம் தொகுதியில், சந்திரா போட்டியிட முடியாது. ஆதிதிராவிடர், பள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர்[5] என பொய்யாகக் கூறி, சந்திரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில், சந்திரா தலித் கிறிஸ்தவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் தன்னை இந்து வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[6]. சந்திராவின் உண்மையான பெயர் குளோரி சந்திரா. சந்திராவின் பள்ளிச் சான்றிதழிலும் அவர் கிறிஸ்தவர் எனக் கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி நாகப்பன், “சந்திரா வெற்றி பெற்றது செல்லாது. மனுதாரருக்கு 5,000 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையை அவர் அளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டார். இதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று சந்திராவின் வெற்றி செல்லுபடியாகும் என தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதி மன்றத்தில் கிருஸ்துவர் என்றது உச்சநீதிமன்றத்தில் இந்துவாகியது! விசாரணையில் சந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சந்திரா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தான் ஹிந்து மதத்தை பின்பற்றிவருவதால் தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வாதிட்டார். இந்நிலையில் மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனர்[7]. அதாவது முன்னர் உயர் நீதிமன்றத்தில் தான் பள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர், கிருத்துவ மதத்தை விட்டு, இந்துவாக மறுபடியும் மாறிய பிறகு, தன்னை பள்ளர் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டனர் என்பதை மெய்ப்பிக்க முடியாததை, உச்சநீதி மன்றத்தில் மெய்ப்பித்து விட்டார். விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சந்திரா வெற்றிபெற்றது செல்லும் என உத்தரவிட்டனராம்[8]!

ராஜகோபால் முதல் சந்திரா வரை: 1967 லிருந்து, இப்படியாகத்தான், கிருத்துவர்கள், எஸ்.சிக்களை ஏமாற்றி வருகின்றனர். விவரங்களுக்கு கீழ்காணும் உச்சநீதி மன்ற தீர்ப்புகளைப் படித்துப் பார்க்கவும்:

a) THE PRINCIPAL, GUNTUR MEDICAL COLLEGE, GUNTUR AND OTHERS v. Y.MOHAN RAO ( AIR 1976 SUPREME COURT 1904),

b) KAILASH SONKAR v. SMT. MAYA DEVI (1984) 2 Supreme Court Cases 91),

c) S.ANBALAGAN v. B.DEVARAJAN AND OTHERS (1984) 2 Supreme Court Cases 112),

d) S.SWVIGARADOSS v. ZONAL MANAGER, F.C.I. (1996) 3 Supreme Court Cases 100),

e) LILLY KUTTY v. SCRUTINY COMMITTEE, S.C. & S.T. & ORS (AIR 2005 SUPREME COURT 4313),

சூசை மற்றும் இந்திய அரசு[9] – 1986 AIR 733; 1985 SCR Sup. (3) 242: இந்த உச்சநீதி மன்றம், கிருத்துவர்களுக்கு பேரிடியாக இருந்தது. ஏனெனில், எஸ்.சி என்றாலே இந்துக்கள்தாம், ஆக இந்துக்களுக்கான உரிமைகளை, சலுகைகளை, எஸ்.சிக்கள் மற்ற மதங்களைத் தழுவினால், அச்சலுகைகள், உரிமைகள் போய் விடும் என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பிறகு அதனை சுற்றி வளைக்க, மீறிவர பல வேலைகளை கிருத்துவர்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர்[10]. இருப்பினும் சட்டரீதியாக ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் என்று இப்படி வந்து விட்டால், கிருத்துவர்கல் இப்படி இரட்டைவேடம் போட வேண்டியிருக்கிறது. அரசு அலுவலகங்களில் லட்சக்கணக்காக இப்படி கிருத்துவர்கள், உண்மையான எஸ்.சிக்களின் சலுகைகளைப் பறித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அங்கு சக-ஊழியர்கள் ஒருவேளை போனால் போகட்டும் என்று விட்டுவிடுன்றனர் போலும். ஆனால், இங்கு தேர்தலில், கோடிகளில் புழலும் விஷயம் என்றதால் கோர்ட்டுக்கு வந்து விடுகின்றனர்.


[1] தினமணி, ராஜபாளையம் அதிமுக எம்.எல்.. வெற்றி செல்லும்: உச்ச நீதிமன்றம், First Published : 08 Sep 2010 02:32:29 AM IST

[2] http://thatstamil.oneindia.in/news/2008/12/02/tn-hc-quashes-election-of-admk-mla-chanra.html

[3] http://www.hindu.com/2008/12/20/stories/2008122060110800.htm

[4] The election petitioner has further averred in paragraph No.8 that the date of birth of the first respondent is 9.6.1974 and she studied in CSI High School, Batlagundu and her admission number is 1573 as on 10.6.1987 and as per her school records, she belongs to Indian Christian Pallan Community and these material facts were suppressed by her knowing fully well that if this is disclosed, she has no eligibility to contest the election in the Reserved Constituency.

M.Thangamuthu vs M.Chandra on 2 December, 2008; http://www.indiankanoon.org/doc/1505694/

[5] http://www.hindu.com/2010/09/08/stories/2010090857610100.htm

[6] http://thatstamil.oneindia.in/news/2010/09/07/sc-confirms-rajapalayam-admk-candidate-victory.html

[7] தினமலர், ராஜபாளையம் .தி.மு.., எம்.எல்.., சந்திரா வெற்றி செல்லும் : சுப்ரீம் கோர்ட், செப்டம்பர் 07, 2010 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=79715

[8] http://www.thehindu.com/news/cities/Chennai/article619736.ece

[9] Soosai Etc vs Union Of India And Others on 30 September, 1985, 1986 AIR 733, 1985 SCR Supl. (3) 242; http://indiankanoon.org/doc/1724190/

[10] பாராளுமன்றத்தில் இவர்கள் செய்யும் வேலை சொல்ல மாளாது. கோடிகளைக் கொட்டி, ஜனாதிபதி (செட்யூட்கேஸ்ட் ஆர்டர்) 1950 என்ற ஆணையைத்திருத்திவிட தாலிபானையும் விடத் தீவிரமாக போராடி வருகின்றனர். தலித் என்ற போர்வையில், இந்துக்களுக்கு எதிராக பல சதி வேலைகளை செய்து வருகின்றனர்.