Archive for the ‘பிங்க்’ Category

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து!

நவம்பர் 5, 2015

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும் – மாட்டிறைச்சி விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் கூத்து!

pramod-mutalik-sent-pork-to-siddaramaiah

pramod-mutalik-sent-pork-to-siddaramaiah

சித்தராமையா கலவரமூட்டும் பேச்சை ஏன் சோனியா கண்டிக்கவில்லை?: மாட்டிறைச்சி சாப்பிட்டால் க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக்கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்[1]. முதல் கட்டமாக அந்த அமைப்பினர் முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல் 03-11-2015 அன்று அனுப்பியுள்ளனர்[2]. முன்னதாக, சித்தராமையா, தான் இதுவரை பன்றி இறைச்சி சாப்பிட்டதில்லை என்றும், இருப்பினும் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்[3] [ಗೋಮಾಂಸ ಹೇಳಿಕೆ: ಮಾತು ಬದಲಿಸಿದ ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ – ಹಂದಿ ಮಾಂಸ ತಿಂದಿಲ್ಲ, ಇನ್ನು ಮುಂದೆ ಹಂದಿ ಮಾಂಸವನ್ನೂ ತಿನ್ನುತ್ತೇನೆ: ಸಿದ್ದರಾಮಯ್ಯ]. இத்தகைய பேச்சுகள் உள்ள நிலையை மோசமாக்கும் என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. சோனியா இது பற்றி ஏன் ஒன்றும் பேசவில்லை, என்று யாரும் கேட்கவில்லை. ஊடகக்காரர்களும், இதனை பொறுட்படுத்தவில்லை. ஆனால், தி இந்து இச்செயலை அத்துமீறல் என்று குறிப்பிட்டு, ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்? என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, நீதிபதி போல அத்துமீறல் என்று தீர்மானித்து, கைது செய்யவும் தீர்மானித்து விட்டது போலும்!

Siddharamaiah with Muslims eating.2

Siddharamaiah with Muslims eating.2

பசு மாமிசம் சாப்பிடுவேன் என்றார் ஒருவர், இன்னொருவர் அப்படி சாப்பிட்டால் தலையை வெட்டுவேன் என்கிறார்!: கர்நாடக முதல்வர் சித்தரமையா கடந்த வாரம் த‌னக்கு பிடித்தால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். அதனை யாரும் தடுக்க முடியாது [“Till date I have never eaten cow meat. But if it suits my palette and if I want to eat beef, I will eat it. Nobody can stop me,” he said] என கூறியிருந்தார்[4]. சிலர் இப்பேச்சைக் கண்டித்தும், அவர் கவலைப்படவில்லை. உணவைப் பற்றி அரசியல் நிர்ணய சட்டம் என்ன சொல்கிறது என்று தனக்கு நன்றாகத் தெரியும் என்பதனால், எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்[5]. இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கர்நாடகாவில் பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்[6]. இதனிடையே பாஜகவை சேர்ந்த ஷிமோகா மாவட்ட செயலாளரும், மூத்த தலைவருமான சென்ன பசப்பா, ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டை வெட்டி சாப்பிட்டால் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன். அவரது தலையில் கால்பந்து விளையாடவும் தயங்க மாட்டேன்’’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து ஷிமோகா போலீஸார் சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்[7].

Siddharamaiah with Muslims eating.3

Siddharamaiah with Muslims eating.3

பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா?: இந்நிலையில் கர்நாடக மாநிலம் பீஜாப்பூரில் ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், ‘‘இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவேன் எனக்கூறி, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். இதற்காக சித்தராமையா இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு என் மீது 90 வழக்குகளை தொடுத்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர் கொண்டாலும், அரசியல் ரீதியாக தக்க பதிலடி கொடுப்பேன். மாட்டின் இறைச்சியை சாப்பிடும் சித்தராமையா, பன்றியின் இறைச்சியை சாப்பிடுவாரா? பன்றி இறைச்சியை சாப்பிடுவேன் என்று வெளிப்படையாக அறிவிக்க சித்தராமையாவுக்கு தைரியம் இருக்கிறதா?”என கேள்வி எழுப்பினார்[8]. மங்களூர் பப் விவகாரத்திலிருந்து, இவருக்கு அரசு கெடுபிடிகள் போட்டுள்ளது.

Pink panty Muthalik 2009

Pink panty Muthalik 2009

பிங் ஜட்டி பார்சலும், பன்றி கறி பார்சலும்: இப்பிரச்சினைத் தொடர்ந்து பீஜாப்பூர் மாவட்ட‌ ஸ்ரீராமசேனா அமைப்பின் சார்பாக சித்தராமையாவுக்கு ஒரு கிலோ பன்றிக்கறி பார்சல் மூலமாக அதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் அனுப்பி வைத்தார். இதே போல மாநிலம் முழுவதிலும் இருந்து சித்தராமையாவுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பினர் பன்றி இறைச்சி பார்சல் அனுப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். உடனே இச்செயலை உடகங்கள் குறை கூற ஆரம்பித்துள்ளன. சென்னபசப்பா கைது செய்யப் பட்டதைப் போல, பிரமோத் முத்தாலிக்கும் ஸ்ரீராம் சேனா அமைப்பினரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[9] என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், சித்தராமையா பேச்சும் கலவரம் உண்டாக்கும் விதத்தில் தானே உள்ளது? கருத்துரிமை, பேச்சுரிமை என்று வரும்போது, அவை எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுத்தப் படுவதில்லை. அருந்ததி ராய், பல திராவிடத் தலைவர்கள், காஷ்மீர் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அடிக்கடி பேசித்தான் வருகிறார்கள், வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருமுறையாவது, நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. மங்களூர் பப் விவகாரத்தில் பிரமோத் முத்தாலிக்கு பல பெண்கள் பிங் கலர் ஜட்டிகளை பார்சலாக அனுப்பி வைத்தனர்[10]. அதாவது, குடிப்பது மட்டுமல்ல, உடலுறவு கொள்வது கூட எங்கள் உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது என்பதை வலியுறுத்த அவ்வாறு செய்தனர். என்ன, கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல், இவ்வாறு செய்கிறீர்களே என்று, அப்பெண்மணிகளை யாரும் கேட்கவில்லை, கண்டிக்கவில்லை. மாறாக செய்திகளை பெருமையாக வெளியிட்டார்கள்.

Pink panty Muthalik 2009.2

Pink panty Muthalik 2009.2

பிரமோத் முத்தாலிக் கர்நாடகத்தில் சென்று வர தடை: ஒருவருக்கு, இந்தியாவில், கர்நாடகத்தில், எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் தடையுள்ளது என்றால், யாராவது நம்புவார்களா? ஆனால், பிரமோத் முத்தாலிக்  தனது மாநிலத்தில் சென்று வர தடையுள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் நுழைய முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய பாகல்கோட்டை மாவட்ட நிர்வாகம், மத கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பிரமோத் முத்தாலிக் ஒரு மாதத்துக்கு பாகல்கோட்டை மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது[11]. கடந்த செப்டம்பர்.23ம் தேதி, விநாயகர் சிலைகள் விமர்ஜனம் ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதால், இத்தடை விதிக்கப்பட்டுள்ளது[12].

© வேதபிரகாஷ்

05-11-2015

[1] http://vijaykarnataka.indiatimes.com/district/vijayapura/1-kg-pork-parcel-to-cm-siddaramaiah/articleshow/49647982.cms

[2]  http://www.indian24news.com/india/mutalik-barred-from-entering-mudhol-from-november-23/62073-news

தி இந்து / இரா.வினோத், கர்நாடகாவில் இந்துத்வா அமைப்பினர் அத்துமீறல்: முதல்வருக்கு பன்றிக்கறி பார்சல்ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கைதாகிறார்?, Published: November 5, 2015 07:44 ISTUpdated: November 5, 2015 07:46 IST.

[3] http://www.kannadaprabha.com/top-news/i-have-not-had-pork-but-i-will-eat-says-siddaramaiah/262450.html

[4] http://timesofindia.indiatimes.com/india/Nobody-can-stop-me-from-eating-beef-if-I-want-to-Karnataka-CM-Siddaramaiah/articleshow/49584012.cms

[5] http://www.coastaldigest.com/index.php/news/80802-cm-sticks-to-his-beef-statement-refuses-to-comment-on-pejawars-pork-remark

[6] தினமணி, சித்தராமையாவுக்கு பன்றிக்கறி பார்சல்: ஸ்ரீராம் சேனா அமைப்பு, By DN, பெங்களூர், First Published : 05 November 2015 11:49 AM IST.

[7]http://www.dinamani.com/india/2015/11/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/article3114834.ece

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என்ற சித்தராமையாவுக்கு 1 கிலோ பன்றிக்கறி பார்சல் அனுப்பிய முத்தாலிக்!, Posted by: Veera Kumar Updated: Wednesday, November 4, 2015, 16:21 [IST]

[9]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article7844925.ece

[10] http://www.swannet.org/node/1378

[11] http://tamil.oneindia.com/news/india/pramod-mutalik-sent-one-kg-parcel-pork-meat-to-siddaramaiah-239207.html

[12] http://www.thehindu.com/news/national/karnataka/mutalik-barred-from-entering-mudhol-from-november-23/article7844266.ece