Archive for the ‘ஸ்டாக்கிங்’ Category

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)

நவம்பர் 21, 2013

குஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (1)

Asish ketan anti-modi campaign2

குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா உத்தரவுப்படி அந்த மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையால் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது[1]. குஜராத் முதல்வரின் வலதுகரமாகச் செயல்பட்டவர் அமித் ஷா. போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் தற்போது புதிய விவகாரத்தில் சிக்கியுள்ளார். ஆதலால், அவருடைய பாஸ் மோடி என்பதால், மனித உரிமைகள் மீறிய குற்றத்திற்காக மோடி பதவி விலக வேண்டும், தேர்தலில் நிற்க அவருக்கு யோக்கியதை இல்லை, நிற்கக்கூடாது என்றெல்லாம் வாதங்கள் எழுந்துள்ளன. இனி இதன் பின்னணி என்ன என்பதனைப் பார்ப்போம். போலி என்கவுன்டர் விசயத்தில், உள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ எப்படி மோதவிடப் பட்டன என்பதை முன்னர் பார்த்தோம்.

Asish ketan anti-modi campaign

உள்துறையின் கீழ் வரும் சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ முதலியவை மோதவிட்டது:குஜராத்தைப் பொறுத்த வரையில், இஸ்ரத் ஜஹான் என்ற பெண் தன்னுடைய கேரளாவின் காதலுடன் மோடியைக் கொல்ல திட்டமிட்டு குஜராத்திற்கு வந்ததாகக் கருதப் பட்டு, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாள். இதனை “என்கவுன்டர்” என்று சொல்லப்பட்டு, பிறகு “போலி என்கவுன்டர்” ஆகி சர்ச்சைகளில் சிக்கியுள்ள விவகாரமாகி விட்டது. இதனால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், மற்றதுறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டதுறைகளின் மந்திரிகள், முதல் மந்திரி என்று அனைவரது மீதும் குற்றஞ்சாட்டப் பட்டது. வழக்குகள் நடந்து வருகின்றன. இருப்பினும் இடையிடையே, 2002 பிரச்சினை நேரிடையாகவும், மறைமுகமாகவும் கிளப்பப்படுகிறது.

Anti-modi-brigade

செக்யூலரிஸ போர்வையில் கம்யூனலிஸமாக்கப்படும் பிரச்சினை: 2002கிருந்து நடந்து வருவதால், இடையில் தேர்தல்களும் நடந்துள்ளதால், தொடர்ந்து காங்கிரஸ்-பிஜேபிக்கு மோதல்கள் வலுத்துள்ளதால், அதே நேரத்தில் மோடியே திரும்ப-திரும்ப வெற்றிப் பெற்று முதலமைச்சராகியுள்ளாதால், மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்-கூட்டணி சிபிஐ, என்.ஐ.ஏ, ஐ.ஏ.எஸ் போன்ற அதிகாரிகள் மோடிக்கு எதிராக செயல்பட வைத்துள்ளனர். இதனால், நீதித்துறை, போலீஸ்துறை, மற்றும் சிபிஐ, என்.ஐ.ஏ, உள்துறை முதலியவை அரசியல் மயமாக்கப் பட்டுவிட்டது. இப்பிரசினையில் முஸ்லிம்பிரச்சினையும் சேர்ந்துள்ளதால், ஓட்டுவங்கி அரசியலுக்காக தேர்தல் வரும் போதெல்லாம், அவ்வழக்குகளை தூசிதட்டு எடுக்கிறது, கோர்ட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி அதிரடி தீர்ப்புகள் கொடுக்க ஆணையிடுகிறது, இல்லை ஏதாவது ஒரு பழைய பிரச்சினையைக் கிளப்பி விட்டு அதனை 2002 கலவரத்துடன் சேர்த்து, மோடி முஸ்லிம்களைக் கொண்று விட்டார் என்ற பழையப் பாட்டைப் பாட ஆரம்பிக்கிறது. இதற்கு ஊடகங்கள் பெரும்பாலும் துணை போகின்றன.

Asish ketan anti-modi campaign3

பிரதீப்சர்மாமனுவில் மாறம் செய்தது: போலி என்கவுன்டர் பிரச்சினை உண்மையில் பல ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குள் சண்டையை மூட்டியுள்ளது. காங்கிரஸ் வேண்டுமென்றே இதற்கு நெருப்பூட்டி, எண்ணையினையும் ஊற்றி வருகிறது. இவ்விசயத்தில் பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி 1984வது பிரிவைச் சேர்ந்தவர், நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக சிலருக்கு ஒதுக்கீடு செய்தது, கட்ச் பகுதியில் உள்ள சில கம்பெனிகளுக்கு நிலத்தை கொடுத்தது போன்ற விசயங்களில் ஐந்து குற்றவியல் வழக்குகளில் சிக்க்யுள்ளார். கட்ச் பூகம்ப நிவாரண நிதி பட்டுவாடா விசயத்திலும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதால் ஜனவரி 6, 2010 அன்று கைது செய்யப்பட்டார். அப்பொழுது பாவ்நகர் முனிசிபல் கமிஷனராக இருந்தார்[2].யஆனால், அவரது குற்றங்களை, குற்றச்சாட்டுகளை அரசியலாக்கப் பார்க்கிறார். பிரதீப் சர்மா என்ற IAS அதிகாரி தான் 2002 கலவரங்களில் அரசின் பங்கு இருப்பதை வெளிப்படுத்தியதால் தான், தனது சகோதரன் குல்தீப் சர்மா என்பவரை தொந்தரவு படுத்துவதாக ஒரு மனு கொடுத்தார்.

G.L. Singhal, suspended IPS officer Photograph by Mayur Bhatt

பிரஷாந்த்பூஷண்என்றஆம்ஆத்மிகட்சிக்காரர்”இவருக்காக வாதாடுவது: முதலில் அவர் தனது மனுவில் ஆதாரமில்லாத குஜராத் அரசு ஒருபெண்ணை வேவு பார்த்ததாக சில டேப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் மே.12, 2013 அன்று அவருடைய வழக்கிற்கும், குறிப்பிடப் பட்ட டேப்புகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், எடுத்துவிடும் படி ஆணையிட்டது. அவ்வாறே அவரும் செய்தார். அதாவது மனு மாற்றி தாக்கல் செய்யப்பட்டது. இவருக்கு பிரஷாந்த் பூஷண் என்ற “ஆம் ஆத்மி கட்சிக்காரர்” வாதாடி வருகிறார். அரசுதரப்பில் வாதாடும் வக்கீல் துஷார் மெஹ்தா சர்மா தனது மனுவில் டேப்புகளைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். அந்நிலையில் உச்சநீதிமன்றம், பிரதீப் சர்மாவை ஒரு தன்னிலை விளக்க பிரமாணத்தைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

gl_singhal_amit Outlook representation

குறிப்பிட்ட ஊடகங்களின் வர்ணனை: பெங்களூரைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரை 2009-ம் ஆண்டில் காவல் துறையினரின் உதவியுடன் அமித் ஷா உளவு பார்த்துள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி ஜி.எல்.ஜிங்கால் தலைமையிலான போலீஸார் அந்தப் பெண்ணை, விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பின்தொடர்ந்துள்ளனர். வேவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் பெற்றோர் குஜராத்தின் அகமதாபாத் நகரில் வசிக்கின்றனர். அவர்களைப் பார்க்க அந்தப் பெண், பெங்களூரில் இருந்து அடிக்கடி அகமதாபாத் வந்து சென்றுள்ளார். 2005-ம் ஆண்டில் குஜராத்தின் பாவ்நகர் மாநகராட்சி விழாவில் முதல்வர் நரேந்திர மோடியும் அந்தப் பெண்ணும் சந்தித்ததாக கோப்ரா போஸ்ட் [Two investigative portals, Cobrapost and Gulail] இணையதளம் நவம்பர் 15, 2013 அன்று கூறுகிறது[3]. இதற்கு ஆதாரமாக அமித் ஷாவுக்கும் ஷிங்காலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலான இடங்களில், மேலிட உத்தரவின்பேரில் இந்த உளவுப் பணி நடைபெறுவதாக போலீஸ் அதிகாரியிடம் அமித் ஷா கூறுகிறார்[4]. இவைல்லாம் ஆஷிஷ் கேதான் மற்றும் ராஜா சௌத்ரி[5], [The Stalkers: Amit Shah’s Illegal Surveillance Exposed] என்ற வெளியிட்ட கட்டுரையின் மீது ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ள செய்தியாகும்[6]

 

சிபிஐயிடம் இருந்த் டேப்புகள் எப்படி ஆஷிஷ் கேதானிடம் வந்தன?: ஜி.எல். சிங்கால் என்ற போலீஸ் அதிகாரி வழக்குகள் சம்பந்தமாக சிபிஐயிடன் நூற்றுக் கணக்கான ஒலிநாடாக்களை ஒப்படைத்தார். அவையெல்லாம் மாநில குஜராத் அரசு தீவிரவாதிகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப் பட்ட ஆணைகள், உள்துறை அமைச்சர், மற்ற போலீஸ் அதிகாரிகளின் உறையாடல்கள் முதலியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால், அவற்றில் சிலவற்றில், ஒரு பெண்ணைக் கண்காணிக்கச் சொல்லதாக உள்ளன. அந்த போன் உரையாடல்களின் மூலம், எப்படி ஒரு பெண் கண்காணிக்கப்பட்டாள் என்று தெரிய வருகிறது. ஆனால், இவ்வாறு சிபிஐயிடம் உள்ள ஒலிநாடாக்கள் எப்படி தனியாரிடம் வந்தன, குறிப்பாக ஆஷிஷ் கேதான் போன்ற பிஜேபி-எதிர்பிரச்சாரக் காரர்களிடம் கிடைக்கபெற்றுள்ளன என்பதை யாரும் விவாதிப்பதாக இல்லை. அதாவது, சிபிஐ தன்னிடமுள்ள எந்த ஆதாரங்களையும் அதுமாதிரி வெளிப்படுத்த முடியாது. குறிப்பாக சம்பந்தப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இவ்வாறு பொதுமக்களிடம் விநியோகிக்கும் அளவில் கிடைக்க வாய்ப்பு கொடுக்காது. ஆனால், கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியென்றால் –

  1. சிபிஐக்கு யார் அவ்வாறு கொடுக்க ஆணையிட்டது?
  2. 2009லேயே தெரிந்த விசயத்தை, இப்பொழுது பிரச்சினையைக் கிளப்பலாம், அவற்றில் அமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பனவெல்லாம் தெரிந்து அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து எப்படி ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்பட்டன?
  3. அமித் ஷா பேசிய உரையாடல்கள் உள்ளன என்பது யாருக்குத் தெரியும்?
  4. அவர்கள் அதனை எப்படி தெரிந்து கொண்டார்கள்?
  5. குறிப்பாக ஒரு பெண் கண்காணிக்கப்பட்ட விசயம் உள்ளது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

ஆகவே, அந்த டேப்புகள் முழுவதும் போட்டுப் பார்த்து, கேட்டுத் தெளிந்து, இவ்விவகாரங்கள் உள்ளன, இவற்றை மோடிக்கு எதிராக உபயோகப் படுத்தலாம், அவற்றை இப்பொழுதுதான் கொடுக்க வேண்டும், ஆஷிஷ் கேதானிடம் கொடுக்கப்படவேண்டும் என்பனவற்றையெல்லாம் யாரோ தீர்மானித்துள்ளார் அல்லது தீர்மானிக்கப்பட்டுள்ள்து.

© வேதபிரகாஷ்


[2] Sharma, a 1984 batch IAS officer, is facing five criminal cases including a case for alleged irregularity in land allotment to private firms in Kutch district in 2008. In his petition, he had made references to the alleged surveillance on the woman. The court had on May 12, 2011 directed him to remove those charges. Sharma had deleted the references to the woman from his petition. Sharma, who last served as Bhavnagar municipal commissioner, was arrested on January 6, 2010 in a case involving alleged irregularities in Kutch earthquake rehabilitation.

http://timesofindia.indiatimes.com/india/SC-seeks-Gujarat-IAS-officers-affidavit-on-snooping/articleshow/26060200.cms

[5] Ashish Khetan is Editor, Gulail.com and Raja Chowdhury is Senior Correspondent, Cobrapost.com

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=roVZrT2_xuc

[6]  Ashish Khetan and Raja Chowdhury, The Stalkers: Amit Shah’s Illegal Surveillance Exposed, Updated: Nov 15, 2013 04:49 AM,  http://www.cobrapost.com/index.php/news-detail?nid=3969&cid=7