Archive for the ‘சென்’ Category

எரிக்கா மென்டஸ் “அவன் முஸ்லிம் என்று நம்பியதால் தள்ளி விட்டேன்”, என்றதன் மர்மம் என்ன – இந்தியனைக் கொன்ற அமெரிக்கப் பெண்ணுக்கு 24 வருட சிறைத்தண்டனை!

மே 22, 2015

எரிக்கா மென்டஸ் “அவன் முஸ்லிம் என்று நம்பியதால் தள்ளி விட்டேன்”, என்றதன் மர்மம் என்ன – இந்தியனைக் கொன்ற அமெரிக்கப் பெண்ணுக்கு 24 வருட சிறைத்தண்டனை!

எரிகா மென்டிஸ் - அமெரிக்கப் பெண் - சென்னைக் கொன்றவள் - காரணம் சொல்கிறாள்

எரிகா மென்டிஸ் – அமெரிக்கப் பெண் – சென்னைக் கொன்றவள் – காரணம் சொல்கிறாள்

இந்திய வம்சாவளி ஆணைக் கொன்ற அமெரிக்கப் பெண்ணுக்கு 24 ஆண்டு சிறைவாசத் தண்டனை: மதவெறியுடன் இந்தியரை, சுரங்கப்பாதை ரயிலில் தள்ளிக் கொன்ற, அமெரிக்க பெண்ணுக்கு, 24 ஆண்டு சிறை தண்டனை விதித்து, அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது[1]. இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் சுனந்தோ சென், 46 (Sunando Sen). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், தன் நண்பர்களுடன் வசித்து வந்தார். கொலம்பியா பல்கலைக்கழகம் அருகே, சொந்தமாக கம்ப்யூட்டர் மையத்தை நடத்தி வந்த சென், வீடு திரும்புவதற்காக, 2012 டிசம்பர், 27ம் தேதி இரவு, ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.  அப்போது, எமன் போல அங்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த எரிக்கா மென்டஸ் (Erika Menendez ) என்ற பெண், சென்னின் பின்புறம் ஏதுமறியாதவர் போல் நின்று கொண்டிருந்தார்[2]. பின், ரயில் வரும் நேரம் பார்த்து, சுரங்க ரயில் தண்டவாளத்தில், சுனந்தோ சென்னை திடீரென வேகமாக பிடித்து தள்ளினார்[3]. இதை சற்றும் எதிர்பாராத சென், ரயிலில் அடிபட்டு மரணமடைந்தார்.

Maricela Mera, spoke exclusively with CBS 2 about her daughter Erika Menendez,

Maricela Mera, spoke exclusively with CBS 2 about her daughter Erika Menendez,

அமெரிக்காவில் தாய்-மகள் வளர்ப்பு அன்பு-பாசம்-பந்தம் முதலியன மறக்கப்பட்ட நிலை: போலீஸார் இவரைக் கைது செய்தனர். வழக்கு நடைப்பெற்றுவந்தது. மேரிசெலா மேரா (Maricela Mera) என்ற இப்பெண்ணின் தாய், அவளுக்கு மனநிலை சரியில்லை, சரியாக வளர்க்கப்படவில்லை என்றெல்லாம் சொல்லிப் புலம்பினாள்[4]. CBS 2 அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு அவ்வாறே பேட்டியளித்தாள். மேலும் அவள் வளர்ப்புத் தாயார் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, அமெரிக்காவில் இருக்கும் ஆண்கள்-பெண்களின் பெற்றோர்கள் யார் என்று குறிப்பாக சொல்ல முடியாத அளவுக்கு, உறவுகள் முறிந்துள்ளன. திருமணம்-விவாகரத்து மட்டும் அதிகமாக உள்ளது என்பது இல்லாமல், அவையில்லாமலேயே சேர்ந்து வாழ்கின்றனர், குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர், விட்டுச் செல்கின்றனர். அத்தகைய குழந்தைகள் பெரியபர்கள் ஆகும் போது தான் குற்றங்களும் அதிகமாகின்றன. அமெரிக்காவில் தாய்-மகள் வளர்ப்பு அன்பு-பாசம்-பந்தம் முதலியன அந்த அளவில் இருக்கின்றன என்றால், அவற்றை அங்குள்ள மெத்தப் படித்தப் பண்டிதர்கள், அறிவுஜீவிகள், மனோதத்துவ வல்லுனர்கள் முதலியோர் அத்தகைய பிறழ்ச்சிகளை சரிசெய்ய வேண்டும். இருக்கும் இனவெறியை கொலைவெறியாக மாறும் அளவுக்கு அவர்கள் அத்தகைய மனப்பாங்குகளுக்கு தூபம் இட்டு வளர்க்கக் கூடாது.

எரிகா மென்டிஸ் - அமெரிக்கப் பெண் - சென்னைக் கொன்றவள் - 24 வருட தண்டனை

எரிகா மென்டிஸ் – அமெரிக்கப் பெண் – சென்னைக் கொன்றவள் – 24 வருட தண்டனை

அமெரிக்கர்கள் இந்திய வம்சாவளியினரைஇந்தியரைக் கண்டு பொறாமைப் படுவதேன்?: எரிக்கா மென்டஸ் ஏற்கெனவே பலரைத் தாக்கியதற்காக முன்னர் மூன்று முறை கைது செய்யப்பட்டிருக்கிறாள்[5]. தாக்கப்பட்டவர்கள் அவளிடம் ஆயுதம் எதுவும் இல்லையென்றாதால் தப்பித்தோம் என்று கூறியுள்ளனர். அவர் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லப்பட்டு, பரிசோதனை நடந்தது. பிறகு ஒருவழியாக அவள் நீதிமன்றத்தில் ஆஜராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்தது[6]. “அவன் முஸ்லிம் என்று நம்பியதால் தள்ளி விட்டேன்”, என்றும் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[7]. ஆனால், அவர் நல்ல மனநிலையில் தான் இருக்கிறார் என்று தெரிய வந்தது. அமெரிக்க சமூகத்தில் இந்தியர்கள் பெரிய இடங்களில் வேகமாக பதவுகளை வகிப்பது, வீடுகளை வாங்குவது, விலையுயந்த கார்களில் சவாரி செய்வது, குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பது போன்ற விசயங்கள் சராசரி அமெரிக்கனை உருத்தத்தான் செய்கிறது. தான் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தது என்று ஊடகத்தாரிடம் சொல்லிக்கொண்டாள்[8]. “ஆமாம், நான் தான் அவனை ரெயிலுக்கு முன் தள்ளி விட்டேன். எனக்கு வெறுப்பு, கோபம், வெறி……. இருந்தது. எனக்கு வீடில்லை, பாய்பிரெண்டுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தேன்வன் என்னை விட்டு ஓடிப்போகப் பார்த்தான்.  …… ஆனால், இந்த ஆள்……..(சென்) நன்றாக வேலை செய்கிறான், சம்பாதிக்கிறான்…………………………..” என்று நியூயார்க் டைம்ஸுக்கு பேட்டி அளித்தாள்[9]. இவ்விதமாக செய்திகள் வெளிவந்தபோது, அமெரிக்காவில் இருந்த இந்துக்கள் பயந்தனர்.

எரிகா மென்டிஸ் - அமெரிக்கப் பெண் - சென்னைக் கொன்றவள் - 24 வருடம்

எரிகா மென்டிஸ் – அமெரிக்கப் பெண் – சென்னைக் கொன்றவள் – 24 வருடம்

இந்தியர்கள் என்றால் முஸ்லிம்கள் முதலியோர் என்ற எண்ணம் அமெரிக்கர்களிடம் இருப்பது: 9/11 தீவிரவாதச் செயலுக்கும் இந்தியாவுக்கும், இந்தியனுக்கும் அல்லது இந்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இருப்பினும், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்துக்கள் அதிக அளவில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்; பெண்கள் பாலியல் ரீதியின் துன்புறுத்தப்பட்டுள்ளனர்; ஆனால், அவற்றில் பல வெளியே சொல்லாமல் மறைக்கப்பட்டது. சீக்கியர்கள் தாக்கப்பட்டது, ஒரு இந்து ஐ.எப்.எஸ் அதிகாரி / தூதுவர், பெண் என்றும் பார்க்காமல், அவரது புடவை முழுவதும் அவிழ்க்கப்பட்டு சோதனை நடத்தப் பட்டது, சமீபத்தில் பட்டேல் என்பவர் போலீஸாரால் தாக்கப்பட்டது என்றுதான் சில விசயங்கள் வெளிவந்துள்ளன. இந்தியர்களும், இந்திய ஊடகங்களும் கூட அவற்றை மறைத்து விட்டன. ஜிஹாதி-இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இந்துக்களுக்கும் தொடர்பு என்பது, அர்த்தமில்லாதத்தாகும். இருப்பினும், அமெரிக்க இளைஞர்கள் பலர் அவ்வாறிருப்பதாக இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். அதாவது, இந்திய செக்யூலரிஸம் அங்கு அவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கிறது.

சுனந்தோ சென் கொலைசெய்யப்பட்டவர்

சுனந்தோ சென் கொலைசெய்யப்பட்டவர்

எரிக்கா மென்டஸ் அவன் முஸ்லிம் என்று நம்பியதால் தள்ளி விட்டேன்”, என்றதன் மர்மம் என்ன?: இவ்வழக்கில் கூட குற்றம் சாட்டப்பட்டவள், “அவன் முஸ்லிம் என்று நம்பியதால் தள்ளி விட்டேன்”, என்றும் கூறியிருப்பது நோக்கத்தக்கது[10]. அதாவது, அவள் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தாளா அல்லது “செக்யூலரிஸ”ரீதியில் இந்துக்களுக்கும் எதிராக இருந்தாளா என்பதனை ஊடகங்கள் தெளிவாக்கவில்லை. பிறகு ஜைன-பௌத்தர்கள் எல்லோரும் எப்படி தப்பித்துக் கொண்டார்கள்? இப்பொழுது கூட, ஒசாமா பின் லேடனுக்கு, இந்தியர் ஒருவர் பணம் கொடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது[11]. ஆனால், அந்த “இந்திய சகோதரன்”, “மெதினாவில் இருப்பவன்” ஒரு முஸ்லிம் தானேயொழிய இந்து அல்ல! இருப்பினும், இந்தி ஊடகங்களும் அத்தகைய செக்யூலரிஸ பாட்டைப் பாடிக் கொண்டிருக்கின்றன! இது நிச்சயமாக இந்துக்களுக்கு எதிராகச் செய்யப் படும் பிரச்சாரம் ஆகும், ஆனால், முகவும் அபாயகரமானது. ஏனெனில், அதன் விளைவை, ஏற்கெனவே இந்துக்கள் அமெரிக்காவில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Missed-call-to-Vinayaka

Missed-call-to-Vinayaka- typical anti-Hindu?

இதையடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட மென்டஸ், சிறுபான்மையினர் மீது கொண்ட வெறுப்பு காரணமாக[12], இந்துக்களையும், முஸ்லிம்களையும் அறவே வெறுப்பதாகவும், அதனால் தான், இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும், மத துவேஷத்துடன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். “9/11 நிகழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை நான் அறவே வெறுக்கிறேன். முஸ்லிம்களையும், இந்துக்களையும் நான் ரொம்ப நாளாகவே அடித்து வருகிறேன்”, என்று ஒப்புக்கொண்டாள்[13]. கடந்த மார்ச் மாதம் குற்றத்தை மென்டஸ் ஒப்புகொண்டதால், அவருக்கு, 24 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, குவீன்ஸ் உச்சநீதி மன்ற நீதிபதி கிரிகோரி லஸக் (Queens Supreme Court Justice Gregory Lasak) உத்தரவிட்டார். நீதிபதி மேலும் கூறுகையில், ”இது ஒரு திட்டமிட்ட கொடூர கொலை; லட்சக்கணக்கான மக்கள் நியூயார்க் நகர ரயில் சேவையை நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர்; தினமும் வேலைக்கு, பள்ளிகளுக்கு அல்லது தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல உபயோகிக்கின்றனர்; அந்நிலையில், இச்சம்பவம், அவர்களின் மனதில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்த காரணமாகி விட்டது,” என, தெரிவித்துள்ளார்[14].

© வேதபிரகாஷ்

22-05-2015

[1] தினமலர், இந்தியரை கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ’24 ஆண்டு, மே.22.2015:00:27.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1258336

[3] தினத்தந்தி, அமெரிக்காவில் இந்தியரை ரெயிலில் தள்ளி கொன்ற பெண்ணுக்கு 24 ஆண்டு ஜெயில் நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு, மாற்றம் செய்த நாள்:

வெள்ளி, மே 22,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வெள்ளி, மே 22,2015, 1:50 AM IST

[4] http://newyork.cbslocal.com/2013/04/05/mother-of-suspect-in-fatal-queens-subway-push-says-daughter-wasnt-taking-her-meds/

[5] She was also arrested at least three times, according to the police, twice after violent confrontations.

http://www.nytimes.com/2012/12/31/nyregion/erika-menendez-suspect-in-fatal-subway-push-had-troubled-past.html?_r=0

[6] http://www.huffingtonpost.com/2013/01/14/erika-menendez-accused-ny-subway-pusher_n_2472887.html?ir=India&adsSiteOverride=in

[7] A New York City woman accused of shoving a man to his death in front of a subway train because she believed he was Muslim has been found fit to stand trial. Erika Menendez was charged with murder in the death of 46-year-old Sunando Sen. He was shoved off a Queens subway platform on Dec. 29. According to court documents, Menendez told police that she did it because she hates Muslims and thought he observed that faith. Sen was Hindu. A judge announced at a hearing Monday that Menendez had been found fit for trial. She did not appear in court. An attorney hired by her family says she remains hospitalized. Menendez will be arraigned on an indictment Jan. 29.

http://www.huffingtonpost.com/2013/01/14/erika-menendez-accused-ny-subway-pusher_n_2472887.html?ir=India&adsSiteOverride=in

[8] http://www.dailymail.co.uk/news/article-3090570/Self-proclaimed-Muslim-hater-sentenced-24-years-pushing-imm igrant-death-New-York-subway-train.html

[9] Menendez had previously expressed no remorse and told detectives that she heartlessly killed the man because she ‘thought it was cool.’ ‘I’m prejudice,’ she had told the New York Post. ‘I pushed him in front of the train because I thought it was cool.’ In January 2013 she had given an interview from Rikers Island where she is being held in custody, telling the Post that she was furious the day she ended the life of the hard-working Indian man. ‘My mind was just racing that day. I was mad. I was just angry,’ Menendez said. ‘I was homeless. I was hungry. I was fighting with my boyfriend. He came running up the stairs, and I just got up and pushed him.’ Sen hardly had time to react. ‘He was trying to shake me off,’ she said.

http://www.huffingtonpost.com/2013/01/19/erika-menendez-nyc-subway_n_2511104.html?ir=India&adsSiteOverride=in

[10] A New York City woman accused of shoving a man to his death in front of a subway train because she believed he was Muslim has been found fit to stand trial. Erika Menendez was charged with murder in the death of 46-year-old Sunando Sen. He was shoved off a Queens subway platform on Dec. 29. According to court documents, Menendez told police that she did it because she hates Muslims and thought he observed that faith. Sen was Hindu. A judge announced at a hearing Monday that Menendez had been found fit for trial. She did not appear in court. An attorney hired by her family says she remains hospitalized. Menendez will be arraigned on an indictment Jan. 29.

http://www.huffingtonpost.com/2013/01/14/erika-menendez-accused-ny-subway-pusher_n_2472887.html?ir=India&adsSiteOverride=in

[11] http://www.ibtimes.co.in/who-indian-brother-who-donated-lakhs-osama-bin-laden-633197

[12] http://www.dailythanthi.com/News/World/2015/05/22015007/United-StatesIndians-24-years-in-jail-for-killing.vpf

[13] Menendez had said she did not like Muslims and in a jailhouse interview after the attack had said that she “just wanted to hurt Muslims and Hindus ever since [9/11]…I’ve been beating up Muslims and Hindus for a long time.”

http://indiatoday.intoday.in/story/american-woman-jailed-indian-man-pushed-to-death/1/439328.html

[14] http://www.deccanherald.com/content/478857/american-woman-gets-24-years.html