Archive for the ‘எண்ணவுரிமை’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

The Hindu-tamil-reports- gov.convoy killed

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].  பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

Ungal news-15-12-2017

கற்பனை செய்தியின் வர்ணனைகருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].

Governor visit to Caddalore- 15-12-2017-Troll trousers

கற்பனை செய்தியின் வர்ணனைநடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].

Ungal news-15-12-2017-2

கற்பனை செய்தியின் வர்ணனைகண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].

Anti Gov, ant-modi to anti-hindu attitude

இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.

© வேதபிரகாஷ்

16-12-2017

Governor visit to Caddalore- 15-12-2017-webduniya

[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published :  15 Dec 2017  21:24 IST; Updated :  15 Dec 2017  21:24 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article21715911.ece

[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[4] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[6] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[8] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

Mathoru bagan compromise -Novel controversy

Mathoru bagan compromise -Novel controversy

பொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தை விற்க யுக்தியா

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா?

பெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

கொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம்   தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ளஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

ரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமலர், திசைமாறும்மாதொரு பாகன்நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.

[2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html

[3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece

[4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/opinion/interview/people-are-looking-to-settle-scores-with-me-perumal-murugan/article6778030.ece?ref=relatedNews

[8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in

[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”

தமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.

[10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article6772652.ece

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

ஜனவரி 17, 2015

மாதொரு பாகன்நாவல்எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

 

One part woman -மாதொருபாகன்

One part woman -மாதொருபாகன் – அர்த்தநாரீஸ்வரர்

2010ல் பதிப்பிக்கப்பட்ட மக்களால் அறியப்படாத நாவல்: “மாதொரு பாகன்” என்ற பெயரில் பெருமாள் முருகன் என்பவரால், ஒரு நவீனம் / நாவல் எழுதப்பட்டு, புத்தகமாக 20010ல் வந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2010, திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, மூன்றாம் பதிப்பு 2012 என்று வெளியிட்டது. அப்பொழுது அதைப் பற்றி எந்த தகவலோ, செய்தியோ, ஒன்றும் கிடையாது. அப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது பற்றி ஊடகங்களில் யாரும் விவரிக்கவோ, விவாதிக்கவோ இல்லை. முற்போக்கு (forward looking, liberal, free) மற்றும் பிற்போக்கு (retrograde, conservative, closed) எழுத்தாளர்கள், முன்னேற்ற (progressive, enlightened, open-minded) மற்றும் பின்னேற்ற (regressive, closed-minded) வகையறாக்கள் படித்து, முன்னவர், பின்னவரை “பாசிஸக்காரர்கள்” (fascist, repressive, oppressive) என்றெல்லாம் ஏசவில்லை. “கவுண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தவில்லை. “கொங்கு தேசிய மக்கள் கட்சி” கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை. யாரும் இந்துத்துவவாதிகள் என்றும் அடையாளம் காணப்படவில்லை, திராவிடத்துவவாதிகள், நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டு வகையறாக்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கவில்லை, ஆர்பாட்டம் நடத்தவில்லை. பிறகு எப்படி பிரச்சினை வந்தது?

 

One part woman -Arthanareswara

One part woman -Arthanareswara

2010, 2011, 2012, 2014களில் இல்லாத பிரச்சினை 2015ல் ஏன் வந்தது?: தமிழில் எழுதப்பட்ட “மாதொரு பாகன்” நாவல் 2010ல் வெளிவந்தது, யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் 2013ல் அநிருத்தன் வாசுதேவன் என்பவரால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப் பட்டு, பெங்குவின் பதிப்பகத்தினரால் “One Part Woman” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் மாதம் 2014 முதல் இப்பிரச்சினை ஆசிரியர் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலமாகத்தான் வெளி வந்தது என்று தெரிகிறது. பேஸ்புக்கில் இதைப் பற்றிய விவாதத்தை சிலர் ஆரம்பித்து வைத்தார்கள். அதனால், அது அப்புத்தகத்தை விளம்பரப் படுத்தும் யுக்தி என்றும் சங்கேகிக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம், ஒரு புத்தகம் அல்லது சினிமா பிரபலமாக்க வேண்டும், நன்றாக வசூல் வரவேண்டும் என்றால், அவர்களே எதிர்மறை பிரச்சாரம் செய்வது வழக்கமாக உள்ளது. சில எழுத்தாளர்களே அதை வெளிப்படையாகக் குறிப்பிடவும் செய்தனர்[1]. ஆனால் இந்து அமைப்பு விளம்பரம் தேடுகிறதா? என்று செய்தி வந்தது[2]. ஆனால், உண்மையைச் சொல்ல ஊடகங்களுக்கு திராணி இல்லை என்றே தெரிந்தது.

 

One part woman -Artha-மாதொரு

One part woman -Artha-மாதொரு

டிசம்பர் 2014ல் ஏற்பட்ட எதிர்ப்புகள், உரையாடல்கள் முதலியன: யுவகிருஷ்ணா என்பவர் டிசம்பர் 29, 2014லேயே, அந்நாவலில் உள்ள சரித்திர ஆதாரமற்ற,  ‘கூட்டுக்கலவி’ போன்ற சித்தரிப்பு உள்ளதை கண்டித்து எழுதியுள்ளர்[3]. “கரிக்குருவி” என்பவர், பெருமாள் முருகனின் வாழ்க்கை பின்னணி, சித்தாந்த தாக்கம் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவரது திரிபுவாதங்களை எடுத்துக் காட்டியுள்ளார்[4]. தனிமனிதரைப் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை என்றாலும், அவரது அப்பின்னணி மப்பாங்கை மனவியல் ரீதியில் எடுத்துக் காட்டுகிறது. ராபர்ட் கால்டுவெல் எப்படி சாணர்களின் மீது தனது வெறுப்பைக் கக்கியுள்ளாரோ, அதே போக்கு இவரது எழுத்துகளிலும் தெரிவதை காணலாம். சாணார்களுக்கு பதிலாக இங்கு தாக்கப்பட்டுள்ளவர்கள் கொங்குசாதியினர். கரிக்குருவி மேலும் அவர் எப்படி சித்தாந்தரீதியில் செயல் பட்டார், நிதியுதவி பெற்றார் முதலியவற்றையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்[5]. பிறகு பேராசிரியர். அ.மார்க்ஸ், எழுத்தாளர். வ.கீதா, பேராசிரியர். வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன், எழுத்தாளர். பாரவி, தோழர். விடுதலை ராஜேந்திரன், ஓவியர். மருது, பேராசிரியர். லட்சுமணன், எழுத்தாளர். வெளி ரங்கராஜன், எழுத்தாளர். சுப குணராஜன், இயக்குநர். அம்ஷன் குமார், இயக்குநர். RP அமுதன் முதலியோர் டிசம்பர் 31 2014 மாலை. 4.30 மணி முதல் மாலை 7 மணி வரை அன்று பனுவல், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41 இப்பிரச்சினைப் பற்றி பேசியுள்ளதாக தெரிகிறது[6]. இவர்கள் எல்லோருமே இடதுசாரி, திராவிட, நாத்திக, கிருத்துவ-முஸ்லிம் ஆதரவுவாதிகள் என்று தெரிகிறது. இணைதளத்தில் சில கருத்து பரிமாற்றங்களும் உள்ளன[7]. எப்படியோ இத்தகைய செயல்களால், இவருக்கு உலக அளவில் செய்திகள் வெளியிடப் பட்டதால், நல்ல விளம்பரமும் கிடைத்துள்ளது[8].

 

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually – அதிமுற்போக்கு எழுத்தாளரான இவரது புத்தகமும் 2014ல் எதிர்க்கப்பட்டுள்ளது!

புத்தகத்தில் உள்ள சில விவரங்கள்: சில பக்கங்களில் உள்ளதை பார்ப்போம். அப்புத்தகத்தில் குழந்தை இல்லாத பெண் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், ஒரு ஆணை தேர்ந்தெடுத்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ளது[9]. யார் யாரை வேண்டுமானாலும்……என்ற ரீதயில் அருவருக்கத்தக்க-கொச்சையான வார்த்தைகள்[10],  தேர்த்திருவிழாவை மிகக்கேவலமாக வர்ணித்தல்[11], 14ம் நாள் யார் யாரை வேண்டுமானாலும்……என்ற…தொடர்கிறது, “வெள்ளப்பாட்டி எப்படி இருக்கிறா பாரு.அவுங்கம்மாவுக்கு அவ அப்பிடிப் பொறந்தா தெரியுமா? பதினாலாத் திருநா தந்த சாமி பிள்ள அவ, பையன் வேணும்ன்னு ரண்டாத் தடவையும் அவுங்கம்மா அங்கதான் போனா. அப்படியே பையன் பொறந்தது. எத்தனையோ வருசமா நடந்துகிட்டு வர்ற வழமதான்….” என்று இப்படியும் உள்ளது[12]. “நீ அந்தகாலத்து ஆனாட்டமே பேசறீடா, ஒரு பும்பள சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டா சாதியோட போனா அவ்வளவு தான். ஊர விட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிடுவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடுதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்ததுல பாதிக்குமேல தீண்டாச்சாதித் தண்டுப்பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ”, போன்றவை[13]. இவையெல்லாம் எத்தகைய அளவுகோலை வைத்து நாகரிகமானது என்பதனை ஆதரிப்பவர்கள் விளக்கவில்லை. இத்தகைய கொச்சையான, ஆபாசமான, அசிங்கமான எழுத்துக்களைக் கொண்டுள்ள இவர்கள் எப்படி “எழுத்தாளர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இவர்களால், தமிழ் என்னாகும் என்றும் புரியவில்லை.

 

Tiruchengode Ratha festival - depicted differently

Tiruchengode Ratha festival – depicted differently

ஊர்மக்களின் உணர்வுகளை மதிக்காத, இரட்டடிப்பு செய்துள்ள ஊடகங்கள்: நாவல் என்றால் கற்பனையாக எதையாவது எழுதலாம், ஆனால், குறிப்பாக திருச்செங்கோடு மக்கள் அவ்வாறுதான் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்பது போல அருவருக்கத்தக்கக் கொச்சையான வசனங்கள் கொண்டு எழுதியது ஆபாசமாக இருக்கிறது. இதனால், உள்ளூர் மக்கள் கோபம் கொண்டதில் வியப்பில்லை. அதனால்தான், “எங்கள் ஊர் மக்களின் மனநிலையை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் எழுத்தாளர்களை மதிப்பவர்கள். பெருமாள்முருகனின் அனைத்துப் புத்தகங்களையும் எதிர்க்கவில்லை. ‘மாதொருபாகன்நாவலில் கோயில் திருவிழா பற்றியும், தேர்த் திருவிழா பற்றியும் அவரது தவறான கண்ணோட்டத்தையும் மாற்றக் கோரிதான் எங்கள் போராட்டம் நடைபெற்றது. எங்களின் கோரிக்கை வெளிப்படையானது. மொத்தம் 44 அமைப்புகள் சேர்ந்தே இந்தப் போராட்டத்தைச் செய்கின்றன. காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களிலும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆக, வெளிப்படையாகவே நாங்கள் செயல்படுகிறோம் .– ‘திருச்செங்கோடு மானம் காப்போம்அமைப்பு”, என்று அறிவித்துள்ளனர்[14]. நடுநிலையோடு நியாமாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால், பெருமளவில், அவ்வூர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், கருத்து சுதந்திரம் போர்வையில் உண்மை விவரங்களை மறைத்துள்ளது. இதற்கு ஆசிரிய கொடுத்த விளக்கம் இவ்வாறுள்ளது.

 

நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது (தினமலர்)[15]: கடந்த, 1940களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், ‘மாதொரு பாகன்!’ குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது தான் இந்நூல். தற்போது, நாடு முழுவதும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி இல்லாத சூழலில், குழந்தை பேற்றுக்காக பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர். அதுபோன்ற சமூக வழக்கத்தை தான், பல்வேறு ஆதாரங்களுடன், கற்பனை கதாபாத்திரங்கள் மூலம், நூலில் விவரித்துள்ளேன். இதற்காக, கற்பனையாக ஒரு ஊரையும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறேன். குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணை, ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு, அவ்வூர் மக்கள் அனுப்புகின்றனர். அந்த திருவிழாவில், தனக்கு பிடித்த ஒரு ஆடவனை தேர்ந்தெடுத்து, அந்த பெண் குழந்தைப் பேறு பெறுகிறாள். இது தான், ‘மாதொரு பாகன்’ கதை. இப்படி பிள்ளைப் பேறு பெற வேண்டும் என்பதற்காக, நாயகியை உறவுக்காரர்கள் திருவிழாவிற்கு அனுப்ப முடிவெடுக்க, நாயகன் மறுக்கிறான். இருந்தும் நாயகி, வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு பிள்ளை பேறு நிலையை எட்டுகிறார். இது பிடிக்காததால், நாயகன் தற்கொலைக்கு முயல்கிறான். ‘பாண்டவர்கள், திருதிராஷ்டிரன் ஆகியோர் பிறந்ததும், இந்த முறையில் தான்’ என, மகாபாரதம் சொல்கிறது[16]. இதையெல்லாம் வைத்துத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. கதையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சான்று உள்ளதோடு, நாட்டார் வழக்கு ஆவணங்களும் உள்ளன[17]. பத்து ஆண்டுகளுக்கு முன், முக்தா சீனிவாசனின், ‘அவன் அவள் அது’ படமும், பாலச்சந்தரின், ‘கல்கி’ படமும் கூட, வாடகைத் தாயின் கதையை சித்தரிப்பவை தான்[18]. எந்த இடத்திலும், சமூகம் பயன்படுத்திய வழக்கத்தை, நியாயம் என்றோ தவறென்றோ, நான் சொல்லவில்லை. ஆனால், நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை தடை செய்யக் கோருவதும், என்னை கைது செய்ய வேண்டும் எனச் சொல்வதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை அல்ல. கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலாம்; இல்லை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டு, போராட்டம் நடத்துவதும், நூலை எரிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை”, என்று வாதிட்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

16-01-2015

[1] மனுஸ்யபுத்திரன், “….நாளைக்கு விளம்பரத்திற்காகவும் சில பதிப்பாளர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது” – தினமலர், 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[2] தினமலர், நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?, 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[3] http://www.luckylookonline.com/2014_12_01_archive.html

[4] http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

[5] http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

[6] http://thiru2050.blogspot.in/2014/12/blog-post_62.html

[7] http://www.jeyamohan.in/69124

[8] http://www.huffingtonpost.in/2015/01/13/perumal-murugan_n_6461194.html

[9] அத்தியாயம்,14, ப.87.

[10] அத்தியாயம்.20, ப.116-117.

[11] பக்கங்கள்.84-85.

[12] பக்கம்.115.

[13] பக்கம்.118.

[14]http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6780445.ece

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=1152801

[16] ஆனால், அங்கு எந்த சாதியைப் பற்றியும் பேசப்படவில்லை, கொச்சையான வார்த்த பிரயோகமும் இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடே தவறானதாகும்.

[17] பிறகு இல்லை என்பதை கவனிக்கவும். சரித்திரரீதியில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்.

[18] இந்த உதாரணங்களுக்கும், இக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடும் தவறானதாகும், திசைத்திருப்புவதாகும்..