Archive for the ‘கோஷ்’ Category

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

மார்ச் 3, 2013

பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப்முகர்ஜி மாமாமச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

நமது இந்திய அரசியல்வாதிகளின் போக்கே அலாதியாக இருக்கிறது. முன்பு, டிசம்பரில் சுனாமி வந்தபோது, ஐந்து நசத்திர ஓட்டல்களில் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். 26/11 அன்று ராஹுல் காந்தியே ஏதோ பார்ட்டியில் இருந்து, அடுத்த நாளில் பாராளுமன்றத்தில் வந்து உளறியிருக்கிறார்.

இப்பொழுது, பங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணப் முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்!

Pranab visits Bangladesh 2013

பிரணாப் வரவை எதிர்பார்த்து சதார் உபசிலா மாவட்டத்தில் இருக்கும் பத்ரபிலா கிராமமே விழாகோலத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடைய மாமனா அமரேந்துரு கோஷுடைய வீடே 1971 கலவரத்தில் இடித்து விட்டார்களாம்!

பக்கத்தில் இருந்த கோவிலும் அதோகதி!

ஆனால், இப்பொழுது இவர் வருகிறார் என்பதால், அவ்வீடு புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாம்!

இங்கு சுமார் ஒரு மணி நேரம் தங்கியிருப்பாராம்!

Pranab visits Bangladesh 03-03-2013

21 துப்பாக்கி குண்டு முழக்கம் !

சிவப்புக்கம்பள விரிப்பு !!

ஆர்பாட்டமான வரவேற்பு !!!

டாக்டர் பட்டம் வேறு கொடுக்கிறார்களாம்!

பிறகென்ன இருதரப்புப் பேச்சு?

உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு மதமோ, எல்லையோ இல்லை என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், பிரணாப் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை டாக்கா சென்றடைந்தார். ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த அவரை, வங்கதேச அதிபர் முகமது ஜில்லுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தன.

அங்கு வங்கதேச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் அளித்த பேட்டியில், “பயங்கரவாதத்துக்கு மதமோ, எல்லையோ இல்லை. ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மீதும் மனிதகுலம் மீதும் தாக்குதல் நடத்துவதுதான் பயங்கரவாதத்தின் குறிக்கோள்“, என்று பேசியுள்ளது வேடிக்கைதான். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. வளரும் நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தை முறியடிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்“, என்றார் பிரணாப். ஜமாத்-இ-இஸ்லாம் மற்றும் இதர இஸ்லாமிய அடிப்படைவாதம்-தீவிரவாதப் பிடிகளில், இஸ்லாமிய நாடாக இருந்து வரும் பங்களாதேசம் எப்படி பங்களிக்கும் என்று தெரியவில்லை.