Archive for the ‘மங்களம்’ Category

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக சோனியா கூறிக்கொள்கிறார்!

ஏப்ரல் 3, 2014

செக்யூலரிஸத்தை வளர்க்கவும், முஸ்லிம் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்கவும் இமாம் புகாரியைப் பார்த்ததாக  சோனியா கூறிக்கொள்கிறார்!

 

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

sonia-gandhi-rahul-gandhi-hawan-2014

சோனியா  மிகவும்  சர்ச்சைக்குள்ள  மதவாதியான,   தில்லி  இமாம்  புகாரியை,   முஸ்லிம்  தலைவர்கள்  முதலியோர்  அடங்கிய  குழுவோடு  01-04-2014  அன்று  சந்தித்து   40  நிமிடங்கள்  அரசியல்  ரீதியாக  பேசி,   பிறகு  அத்தகைய  சந்திப்பு  ஒன்றும்  மக்களை  மதரீதியில்  பிரிக்காது  என்றும்,   அதற்கு  மேல்  தான்  ஒன்றும்  சொல்ல  முடியாது  என்று  செய்தியாளர்களிடம்  அவசர-அவசரமாக  சொல்லி  வண்டியேறிச்  சென்று  விட்டார்.   ஜஹித்  ரேஜா  இஸ்வி [Zahid Reza Khan Rizvi, an Islamic scholar from Uttarakhand], ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி [activist Rahat Mehmood Choudhury from Delhi], பிலால்  நூரானி [ UP’s  activist], அனீஸ்  ஜமாய் [journalist Anees Jamai] மற்றும்  பலர்  அக்குழுவில்  அடங்கியிருந்தனர்.  ஆகவே  இந்த  சந்திப்பு  திட்டமிட்டதாகும்  என்று  தெரிகிறது.   மேலும்  முதலில்  தாயும்,   மகனும்,  நெற்றியில்  குங்குமம்  வைத்துக்  கொண்டு,   கட்சி  அலுவகலகத்தில்  ஹோமத்தை  வளர்த்து  பூஜை  செய்தார்கள்.   ஆனால்,   இமாமைப்  பார்க்கச்  சென்றபோது,   நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள். ஆகவே  அவர்கள்  இட த்திற்கேற்றவாறு  வேடம்  போடுகிறார்கள்  என்றாகிறாது.

 

onia cheating Indian woman erasing kumkum

onia cheating Indian woman erasing kumkum

சச்சார்   மற்றும்  ரங்கநாத்  மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்  படுத்த  வேண்டும்:   புகாரியின்    செய்தி  தொடர்பாளர்  ரஹ்மத்  மெஹ்மூத்  சௌத்ரி  கூறியதாவது, “தீவிரவாதம்  பெயரால்  முஸ்லிம்  இளைஞர்கள்  அனுபவிக்கும்  துயரங்கள்,  அநீதிகள்  முதலியவற்றை  சோனியா  ஒப்புக்  கொண்டார்.   செக்யூலரிஸ  ஓட்டுகள்  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளவேண்டும்.   மதவாதசக்திகளுக்கு  எதிராக  ஒன்றாக  திரள  வேண்டும்  என்று  கூறினார்”.   சச்சார்  மற்றும்  ரங்கநாத்மிஸ்ரா  அறிக்கைக்களின்  பரிந்துரைகளை  அமூல்படுத்த  வேண்டும்  என்று  முஸ்லிம்கள்  தரப்பில்  கேட்டுக்  கொண்டதாகவும்  விளக்கினார்[1].   இவையெல்லாம்  ஏற்கென வேர   ஹ்மான்  கான்  சொல்லிவருபவை  தான்.   ஷிண்டே  கூட  இதைப்  பற்றி  பேசியிருக்கிறார்.   ஆகவே,   அதற்கும்  மேலாக  முஸ்லிம்கள்  என்ன  எதிர்பார்க்கிறார்கள்  அல்லது  சோனியா  செய்து  விடப்போகிறார்  என்று  தெரியவில்லை.

 

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

முஸ்லிம்  ஓட்டுகள்   பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்….சோனியா  வேண்டுகோளால்  சர்ச்சை[2]:  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்த  காங்கிரஸ்  தலைவர்  சோனியாகாந்தி,   செக்யூலரிஸத்தை  வளர்க்க  வாக்குகளை  பிரியாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  கூறியதாக[3]  வெளியான  செய்திகளால்  சர்ச்சை  எழுந்துள்ளது.   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தி  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  உள்ளிட்ட  முஸ்லிம்  மதத்தலைவர்களை  சந்தித்துப்   பேசினார்.   அப்போது  லோக்சபா  தேர்தலில்  முஸ்லிம்  வாக்குகள்    பிரிந்துவிடாமல்  பார்த்துக்  கொள்ளுமாறு  சோனியா  கேட்டுக்கொண்டதாக  செய்திகள்  வெளியாகின[4].   காங்கிரஸ்  தலைவர்  சோனியா  காந்தியை  சையது  அகமது  புகாரி  தலைமையில்,   முஸ்லிம்  தலைவர்கள்  நேற்று  சந்தித்து  பேசினர்.  பின்னர்   செய்தியாளர்களிடம்  பேசிய  சையது  அகமது  புகாரி,   முஸ்லிம்களின்  வாக்குகளை  சிதறவிடக்  கூடாது  என  சோனியா  கேட்டுக்  கொண்டதாக  கூறினார்[5].   இவர்கள்  எப்படி  அவ்வாறு  செய்யப்  போகிறார்  என்று  தெரியவில்லை.   வழக்கம்  போல  விவாதங்களை  வைத்து  சில  ஊடகங்கள்  மழுப்பப்  பார்த்துள்ளன[6].

 

Sonia playing secularism with kumkum

Sonia playing secularism with kumkum

முஸ்லிம் களிடம்  சோனியா  வேண்டுகோள்  விடுத்தது  விதிமீறல்: பா.ஜ.க. கண்டனம்[7]: ஆனால்  சோனியா  விடுத்த  இந்த  வேண்டுகோள்  தேர்தல்  நடத்தை  விதிகளை  மீறிய  செயல்  என  பா.ஜ.க.   கண்டனம்  தெரிவித்துள்ளது.   இதுகுறித்து  பா.ஜ.க.  செய்தித்தொடர்பாளர்  பிரகாஷ்   ஜவடேகர்  கூறுகையில்,   மதத்தின்   அடிப்படையில்  அல்லாமல்  அவரவர்  விருப்பப்படி   சுதந்திரமாக  வாக்களிக்க  ஒவ்வொருவருக்கும்  உரிமை உண்டு.  சோனியா  காந்தி  சிறுபான்மையினரை  இவ்வாறு  கேட்டுக்கொள்வது  அவர்களை  அவமானப்படுத்துவது  போன்றதாகும்.  இது  காங்கிரசின்  மதவாத  அரசியலை  தெளிவாக  காட்டுகிறது.   இதை  ஒரு  போதும்  ஏற்றுக்  கொள்ளமுடியாது  என்றார்.    வாக்காளர்களை  சந்தித்து  குறிப்பிட்டமதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்க  சொல்வது  தேர்தல்  நடத்தைவிதிகளுக்கு  எதிரானது.   இது  குறித்து  தேர்தல்  ஆணையம்  தானாகவே  முன்வந்து  விசாரித்து  நடவடிக்கை   எடுக்க  வேண்டும்.   காங்கிரஸ்  மதச்சார்பின்மைக்கு  தவறான  புதிய  வரையறையை  கூறுகிறது.   நாங்கள்  முன்னேற்றத்தையும்,   நல்லாட்சியையும்   வலியுறுத்தி  நாட்டின்  பெயரில்  வாக்குகளை  கேட்கிறோம்.   எங்களை  மதவாதகட்சி  என்கிறார்கள்.   ஆனால்  மதம்  மற்றும்  ஜாதியின்  அடிப்படையில்  வாக்களிக்குமாறு  கேட்பவர்களை  மதச்சார்பற்ற கட்சி  என்கிறார்கள்.  இது  முற்றிலும்  முறையற்ற  வரையறையாகும்.   அவர்கள்  மதச்சார்பற்றவர்கள்  அல்ல.   மதச்சார்பற்றவர்கள்  என்று  போலியாக  காட்டிக்  கொள்பவர்கள்.  இவ்வாறுஅவர்குற்றம்சாட்டினார்[8].

 

kumkum sported Sonia to deceive Indians 2014

kumkum sported Sonia to deceive Indians 2014

சோனியாவி  ன்மறுப்பும்,   பிஜேபியின்  புகாரும்: முஸ்லிம்கள்  ஓட்டு  பிரியக்கூடாது  என்பதை  எப்படி  தில்லி  இமாம்  பார்த்துக்  கொள்வார்  என்று  தெரியவில்லை.   ஆனால்,   புகாரி  முகமது  நபி  வழிவந்தவர்கள்  என்றும்  அவர்  சொன்னால்,   முஸ்லிம்கள்  கேட்பார்கள்  என்றும்  கருத்துச்  சொல்லப்  படுகிறது.   ஆனால்,   சாதாரணமாக  இதனை  கவனிக்கும்  போது,   மதத்தின்  பெயரால்  ஓட்டுக்கேட்கும்  முறை  எப்படி  ஜனநாயகம்  ஆகும்,  அதிலும்  செக்யூலரிஸமுறை  ஆகும்  என்று  வியக்கின்றனர்.   மற்றவர்கள்  செய்தால்  செக்யூலரிஸம்  என்று  சொல்லிக்  கொண்டு,   அதே  நேரத்தில்  பிஜேபியை  மட்டும்  மதவாதிகட்சி  என்று  சொல்வதையும்  மக்கள்  கவனித்து  வருகின்றனர்.   இதனால்  தான்  பிஜேபி  புகார்  கொடுத்துள்ளது.   ஆனால்  இதை  சோனியா  காந்தி  நிராகரித்துள்ளார்.   பாரதிய  ஜனதாவின்  இந்த  புகார்  ஒரு  நல்ல  ஜோக்  என்றும்  குறிப்பிட்டிருக்கிறார்.

 

காங்கிரஸுக்கு  ஆதரவு – புகரி  அறிவித்துள்ளாராம்!: இதனிடையே  லோக்சபா  தேர்தலில்  காங்கிரஸையே  ஆதரிப்போம்  என்று  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  இமாம்  சையத்  அகமது  புகாரி  அறிவித்துள்ளார்.   இது  குறித்து  டெல்லி  ஜூம்மா  மசூதியின்  செய்தித்  தொடர்பாளர்  ரஹத்   மெக்மூத்  செளத்ரி,   சோனியாவுடனான  சந்திப்பின்   போது  இஸ்லாமிய  இளைஞர்கள்  கைது,   கல்வியில்  இடஒதுகீட்டு,   சச்சார்  கமிட்டி   பரிந்துரைகள்  நிறைவேற்றம்,  ரங்கநாத்   கமிஷன்  பரிந்துரைகள்  அமலாக்கள் ப ற்றி  விவாதித்தோம்  என்றார்.   புகாரியின்  ஆதரவு  அறிவிப்பு  காங்கிரஸுக்கு  பெரும்பலமாக  அமையும்  என்று  கூறப்படுகிறது.  

 

புகாரியின்  சகோதரரின்  எதிப்பு:   புகாரின்   இளையச  கோதரர்  சையது  யாஹ்யாபுகாரி [Syed Yahya Bukhari] காங்கிரஸை  நம்ப  முடியாது  என்று  சொல்லியிருக்கிறார்[9].   காங்கிரஸுக்கு  ஆதரவு  கொடுப்போம்  என்று  சொல்வது  தவறானதாகும்,   இதை  மற்ற  அமைப்புகளிடமும்  நாங்கள்  தெரிவிப்போம்”,   என்றார்[10].   “எங்கள்  குடும்பத்தவர்   என்று  மேயாருடைய வீட்டின்  கதவுகளுக்கு  அருகில்  கூட  சென்றதில்லை.  இந்திராகாந்தி,  சரண்சிங்,  வி. பி. சிங்,    போன்றோர்  எல்லோரும்  ஆதரவு  கேட்க  வந்துள்ளார்கள்.   ஆனால்  என்னுடைய  சகோதரர்  இவ்வாறு  சோனியாவைச்  சென்று  சந்தித்துள்ளார்.   எது  அவரை  அவ்வாறு  தூண்டியது  என்று  எனக்குத்  தெரியது,   ஆனால்,   இது   ஜமா மஸ்ஜித்தின்  பெருமைக்கே  இழுக்காகும்”,   என்றெல்லாம்   கூடபேசினார்[11].

 

சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா?: தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா மற்றும் ராகுல் திடீர்-திடீரென்று விதவிதமாக காட்சியளிப்பது தமாஷாக இருக்கிறது எனலாம். சோனியா எப்பொழுதுமே நெற்றியில் ஒன்றுமே இல்லாமல் காணப்படுவார். இந்தியமுறையில் சொல்வதானால், ஒரு மங்களகரமான முகம் போலவே, அவரது முகம் இருக்காது. ஆனால், திடீரென்று முக்காடு போட்டுக் கொண்டு, குங்குமம் வைத்துக் கொண்டு காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. இந்திரா காந்தி மாதிரி நடிக்கிறார் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. மேலும் 01-04-2014 அன்று முதலில்தாயும், மகனும், நெற்றியில்குங்குமம்வைத்துக்கொண்டு, கட்சிஅலுவகலகத்தில்ஹோமத்தைவளர்த்துபூஜைசெய்தார்கள். அதாவது, ஒடு புரோகிதர் செய்ய இவர்கள் உட்கார்ந்து கொண்டு அதில் பங்குக் கொண்டனர். கூட உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். இது நேரு குடும்பத்தினரின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது[12]. அப்புகைப் படத்தை கட்சியினரே டுவிட்டரில் வெளியிட்டனர். சாதாரணமாக சோனியாவைப் பற்றிய எந்த விவரங்கள், புகைப்படங்கள் எல்லாம் வெளியே வராது. ரகசியமாகவே வைக்கப் படும், ஆனால் இம்முறை இவ்வாறு வெளியிட்டது விளம்பரத்திற்காகத்தான் என்று தெரிகிறது. ஆனால், இமாமைப்  பார்க்கச்  சென்றபோது, நெற்றியில்  குங்கும்  இல்லை, அதாவது  அழித்து  விட்டார்கள்.   ஆகவே  அவர்கள்இடத்திற்கேற்றவாறுவேடம்போடுகிறார்கள்என்றாகிறது. இதனை சோனியாவின் இரட்டை வேடமா, செக்யூலரிஸ அல்லது கம்யூனலிஸ வேடமா என்னென்பது என்று தெரியவில்லை.

 

 

வேதபிரகாஷ்

03-04-2014

 

[1] http://indiatoday.intoday.in/story/jama-masjids-shahi-imam-bukhari-announces-support-for-congress/1/352544.html

[2] http://tamil.oneindia.in/news/india/sonia-gandhi-meets-shahi-imam-bukhari-says-secular-votes-should-not-197134.html

[3]In a strong appeal to minorities on Tuesday, Congress chief Sonia Gandhi told a Muslim delegation that she had decided to embrace politics after initial hesitation to help nurture secularism.

http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx

[4] http://www.hindustantimes.com/india-news/joined-politics-to-safeguard-secularism-sonia-tells-bukhari/article1-1203087.aspx.

[5] http://www.dailythanthi.com/2014-04-02-bjp-accuses-congress

[6] http://www.ndtv.com/video/player/left-right-centre/sonia-imam-bukhari-meeting-stirs-row-politics-of-polarisation/315619

[7] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[8] http://www.maalaimalar.com/2014/04/02203407/Sonias-appeal-to-Muslim-leader.html

[9] http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[10] “Mai iss faisle ki sakht mukhalfat karta hun. Bhai ka faisla hai, bhai hun, pur mai iss faisle ko galat tahrata hun. Yeh sarasar galat hai aur mai iski har tarah se mukhalfat karta hun (The decision to support Congress is highly objectionable. Though it is a decision taken by my brother, my elder brother, but even then I strongly oppose it and will continue to oppose it at all forums)”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[11] “No body ever walked into doorsteps of a leader, howsoever, mighty that leader might have been. Indira Gandhi, Charan Singh, VP Singh and a host of other leaders they all had come to Jama Masjid to seek support. But my brother suddenly decides to meet Sonia Gandhi on his own, go to her place and pledge his support. I can’t imagine what prompted him but by doing so he has certainly not glorified the prestige of Jama Masjid. He has in fact damaged the honour of Jama Masjid”, Yahya Bukhari said.

http://www.firstpost.com/politics/congress-cant-be-trusted-says-shahi-imams-brother-about-sonia-meeting-1462583.html

[12] Mrs Gandhi also participated in a havan (religious ceremony) at the Congress office, which has been a Gandhi family tradition for years.

http://www.ndtv.com/elections/article/election-2014/rahul-gandhi-chauffeurs-mother-sonia-gandhi-in-raebareli-503327?curl=1396511252