Archive for the ‘சர்தார் படேல்’ Category

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

ஓகஸ்ட் 20, 2012

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது – சோனியா எதற்காக அப்படி பொய் சொல்கிறார்?

இந்நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்கி வாழ, வேலை செய்ய உரிமையுள்ளது என்று சொன்னதாக ஆங்கில நாளிதழ்கள் ஒரேமாதிரியாக செய்தி வெளியிட்டுள்ளன[1].

The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[2]
The country belonged to all and people are free to live in any part of the country[3]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[4]
The Congress president stressed that the people of the country living anywhere have all the right to inhabit and work in any part of the country[5]

அதாவது மேடையில் வசதிற்காக, என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ற ரீதியில் பேசியுள்ளார் என்று தெரிகிறது. இல்லையென்றால், காஷ்மீரத்தில் இந்துக்கள் ஏன் வாழ முடியாமல், தில்லியில் முகாம்களில் அகதிகளாக வாழ்கின்றனர்?

அவர்களுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா?

இருக்கிறது என்றால், அங்கு திருப்பியனுப்ப வேண்டியதுதானே?

ஏன் அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவில்லை?

சோனியா எதற்காக அப்படி பொய் சொல்ல வேண்டும்?


சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531