Archive for the ‘சட்டமீறல்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

ஒக்ரோபர் 27, 2019

இந்து, முகநூல் விமர்சனம் செய்ததால் தலா முன் ஜாமீன் பெற ரூ.25,000/- முஸ்லிம்-கிருத்துவர்களுக்கு நன்கொடை! நூதன நிபந்தனை!

Hindu has to donate 25,000 to muslim and christian trursts-news cutting

இந்து கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப் பட்டுள்ளதால், முஸ்லிம்கடைகளில் பொருளை வாங்காதே என்ற முகநூல் பதிவு: மத நல்லிணக்கத்துக்கு எதிராக, முகநுாலில் பதிவை வெளியிட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், வித்தியாசமான நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கியது[1]. நாகை மாவட்டம், மணல்மேடு பகுதியை சேர்ந்த செல்வகுமார், முகநுாலில் ஒரு பதிவை வெளியிட்டார்[2]. அதில், ‘மத மாற்றத்துக்கு எதிராக பேசிய ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். ‘அதை கண்டித்து நடந்த போராட்டத்துக்கு எதிராகவும், கொலைக்கு ஆதரவாகவும் செயல்படும், துணிக்கடையை புறக்கணிப்போம். ஹிந்துக்களே விழித்து கொள்வோம்’ என, கூறப்பட்டு உள்ளது. இந்த பதிவுக்காக, செல்வகுமாருக்கு எதிராக, மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர், முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘இந்தப் பதிவை நான் தயார் செய்யவில்லை; முகநுாலில் வந்த பதிவு அது. போலீஸ் எச்சரித்த உடன், அதை நீக்கி விட்டேன்’ என, கூறியுள்ளார்.

Hindu has to donate 25,000 to muslim and christian trursts

செக்யூலரிஸ ரீதியில் முன் ஜாமீன் நிபந்தனை: மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சண்முக ராஜேஸ்வரன் ஆஜராகி, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், நிபந்தனை விதித்து, முன்ஜாமின் வழங்கினார். மத நல்லிணக்கத்துக்கு எதிராக கருத்து பதிவிட்டதால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் அறக்கட்டளைக்கு, 25 ஆயிரம் ரூபாய்; மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்துவ ஆதரவற்றோர் அமைப்புக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார். அதே போல பணத்தை கொடுத்து, ஜாமீன் பெற்றார் என்றாகிறது. ஆனால், மேல்முறையீடு சென்றாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. இந்துத்வவாதிகளும் இதில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

Hindu has to donate 25,000 -news cutting

மதசார்பற்ற நாட்டில், செக்யூலரிஸ போர்வையில் கம்யூனல் தீர்ப்புகள் கொடுக்கப் படுவது: ஜூலை மாதத்தில் ரிச்சா பட்டேல் என்பவர் இது போன்று ஒரு பதிவு செய்த போது, மசூதிக்குச் சென்று குரான் புத்தகத்தை விநியோகம் செய்ய வேண்டும், என்று நீதிபதி ஆணையிட்டார். பிறகு அது சுமூகமாக இரு கூட்டத்தாரும் பேசிய சமரசம் செய்யப்பட்டது. ஏற்கெனவே முகநூலில் உள்ள பதவியை பகிர்ந்ததற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது/ பிரச்சனை இருபுறமும் ஆராய்ந்து கட்டுப்பாடு இருக்க வேண்டிய அவசியம், முக்கியத்துவம் மற்றும் நிர்பந்தம் உள்ளது. இது மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாக அணுகப் பட்டு, ஏதோ ஒரு செக்யூலரிஸம் ரீதியில் தீர்வு காண்பது போல உள்ளது. முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு தலா 25,000 கொடுக்க வேண்டும் என்பது மதசார்பற்ற தீர்ப்ப்பா இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், தமிழகத்தில் இதைவிட மோசமான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பள்ளிகளில், குறிப்பாக கிருத்துவ பள்ளிகளில், இந்து மாணவ மாணவிகள், விபூதி-பொட்டு வைக்கக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக்கூடாது, தீபாவளி போன்ற பண்டிகைக் கொண்டாடக் கூடாது, போன்ற சரத்துகள் நடைமுறைப் படுத்தப் பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் செய்திகளாக வந்திருக்கின்றன. மதசார்பற்ற செக்யூலரிஸ தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்றால், அவ்வாறே முந்தைய தீர்ப்புகள் இருந்திருக்கவேண்டும் அதாவது சட்டத்திற்கு முன்பு எல்லாம் நம்பிக்கையாளர்களும் ஒன்றுதான் என்று இருந்தால் எல்லாருக்கும் அதே மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நீதிமன்றங்கள் அத்தகைய ஒரு முன்மாதிரியை எடுத்து வைக்கும் படி நடந்து கொள்ளவில்லை. சட்டங்கள் செக்யூலரிஸ மயமாக்கப் படவில்லை. இவ்வாறிருக்கும்பொழுது, இத்தகையதீர்ப்பு வந்திருப்பது திகைப்பாக இருக்கிறது.

Richa Patel case July 2019

19 வயது மாணவி கைது – பேஸ்புக் பதிவிற்காக[3]: ஜார்கண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் குலைக்கும் விதமான பதிவுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ஜூலை 12ம் தேதி, 2019 ரிச்சா பட்டேல் என்னும் மாணவி கைது செய்யப்பட்டார்[4]. இவ்வழக்கு கடந்த திங்களன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனிஷ் குமார் 5 குரானை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கினார்[5]. ரிச்சா பட்டேலுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மன்சூர் கலிஃபா, ரிச்சா இப்போது வரை குரான் விநியோகிக்கவில்லை என பிபிசியிடம் கூறினார்[6]. மேலும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் அந்த பெண்ணின் வீட்டாரும் மற்றும் வேறு சிலரும் அவரின் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு என்னை சமாதானம் செய்ய வந்தார்கள்[7]. அதனால் தான் நானும் ஒப்புக்கொண்டேன், இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைப்பது எளிதாக இருந்தது என்று கூறினார்[8].

Richa Patel case - quran-July 2019

சமரசமாக முடிந்த பிரச்சினை[9]: “ஃபேஸ்புக் பதிவிற்காக இன்னொரு மதத்தின் வழிபாட்டிடத்துக்கு சென்று குரானை விநியோகிப்பது எனக்கு சங்கடமாகத் தோன்றுகிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு செல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றம் என்னுடைய அடிப்படை உரிமையில் எப்படி தலையிடமுடியும்? என்னுடைய மதத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எவ்வாறு தவறாக முடியும். நான் ஒரு மாணவியாக இருக்குபோதும் என்னை திடீரென்று கைது செய்தார்கள்,” என பிபிசியிடம் கூறினார் ரிச்சா பட்டேல். ரிச்சா பட்டேல் அல்லது ரிச்சா பாரதி ராஞ்சி மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்[10]. இப்போது வரை எனக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆவணம் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு என்ன செய்யலாம் என்பதை நான் முடிவெடுப்பேன்” என கூறினார். அதன்பிறகு இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. திங்கள் கிழமை ராஞ்சி உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனீஷ் குமார், 5 குரானை வாங்கி அஞ்சுமன் கமிட்டி மற்றும் புத்தகசாலையில் விநியோகிக்க வேண்டும் என்னும் நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும்போது ரிச்சாவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Richa Patel case - quran-distribution, July 2019

செக்யூலரிஸ நீதிமன்றங்களில் கம்முனல் தீர்ப்புகள் ஏன்?: கடந்த ஆகஸ்ட் மாதம், கிருத்துவ கல்லூரி பேராசிரியர்களின் பாலியல் குற்றங்க்களுக்கு, தீர்ப்பு கொடுக்கும் போது, கிருத்துவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடக்கிறது, போன்றவை இடம் பெற்றபோது, அழுத்தம் கொண்டு வந்து, அவ்வரிகள் நீக்கப் பட்டன. அதாவது, தீர்ப்பும் வளைக்கப் பட்டது. பிறகு, இப்பொழுது, இவ்வாறான நிபந்தனை எப்படி விதிக்கப் பட்டது என்று தெரியவில்லை. என்னத்தான், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், அவர்கள் தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன என்றெல்லாம் பிரச்சாரம் செய்தாலும், இத்தகைய, சிறிய வழக்குகளில், நீதிபதிகள் விசித்திரமாக நடந்து கொள்வது, வியப்பாகத் தான் இருக்கிறது. அதாவது, இந்துத்துவ வாதிகளுக்கு, எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன எனலாம்.

© வேதபிரகாஷ்

27-10-2019.

Richa Patel case - quran-distribution, July 2019-news cutting

[1] தினமலர், முகநுாலில் சர்ச்சை பதிவு, Added : அக் 26, 2019 19:49.

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=2397791&Print=1

[3] பிபிசிதமிழ், ஃபேஸ்புக் பதிவுக்காக கைது: ஜார்கண்ட் மாணவி ரிச்சா பட்டேலை குரான் விநியோகிக்க சொன்ன நீதிமன்றம், 17 ஜூலை 2019

[4] https://www.bbc.com/tamil/india-49013910

[5] The Hindu, Court ordeers Teenager to donate Quran over offensive Facebook post, PTI, RANCHI, JULY 16, 2019 21:20 IST, UPDATED: JULY 17, 2019 14:49 IST

[6] https://www.thehindu.com/news/national/other-states/donate-quran-courts-bail-condition-to-woman-arrested-for-offensive-post/article28491887.ece

[7] Indian Express, Donate Quran, court’s bail condition to Jharkhand woman arrested for offensive Facebook post targeting Muslims, Published: 16th July 2019 11:46 PM | Last Updated: 17th July 2019 12:51 AM.

[8] http://www.newindianexpress.com/nation/2019/jul/16/donate-quran-courts-bail-condition-to-jharkhand-woman-arrested-for-offensive-facebook-post-targeti-2004857.html

[9] Times of India, Ranchi court withdraws order to distribute Quran for bail over ‘communal’ FB post, Jaideep Deogharia | TNN | Updated: Jul 19, 2019, 13:29 IST.

[10] https://timesofindia.indiatimes.com/city/ranchi/ranchi-court-withdraws-order-to-distribute-quran-for-bail-over-communal-fb-post/articleshow/70267057.cms

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

ஜூலை 11, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் [2]

National songs - initially sung by a group

தேசிய பாடல்கள் பாடப்பட்டது.

C. P. Radhakrishnan

பிஜேபி-பொறுப்பாளர்கள் கூட்டம் 09-07-2018 மாலை 5.50ற்கு ஆரம்பித்தது. கருப்பு முருகானந்தம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.

6.07 to 6.12 pm – சி.பி. ராதாகிருஷ்ணன்: துவக்க உரையாக சி.பி. ராதாகிருஷ்ணன் 6.00க்கு ஆரம்பித்து 6.07க்கு முடித்தார். காவியை கருணாநிதியே ஏற்றுக் கொண்டு விட்டார் என்று எடுத்துக் காட்டினார்.

Stage-Karuppu, LG, Lakhsmanan

6.07 to 6.12 pm –இல கணேசன்:  இல. கணேசன், “எவ்வாறு ரக்ஷா பந்தன் விழாவுக்கு வந்த 120 எம்.பிக்களும் கோடானுகோடி மக்களுக்கு சமமாக இருந்தனரோ, அதே போல, வந்துள்ள பிரதிநிதிகள் லட்சக்க்கணக்கான மக்களுக்கு சமம், மோடி வந்தால், இக்கூட்டம் இரண்டு லட்சங்களாகும், மோகன் குமாரமங்கலம் சிகிச்சைப் பெறும் போது, கண்கள், மூக்கில் ரத்தம் வந்தபோது பயந்தனர். ஆனால், மருந்து வேலை செய்த அறிகுறியாக இருந்தது, அதுப்போல, மோடியின் திட்டங்கள் மருந்தாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆகையால் தான் மோடியை எதிர்க்கிறார்கள், போராட்டங்கள் நடத்துகிறார்கள்,”..….என்று பேசினார்.

Karuppu, Raja, LG, Amit Sha, Tamilisai, Pon.R,Muralidhar

6.13 to 6.19 pm – எச். ராஜா: [பேச அழைக்கப்பட்ட போது கரகோஷம்] மோடியின் திட்டங்களை விவரித்தார். 40 ஆண்டுகளில் தீர்வாகாமல் இருந்த, “ஒரு ராணுவ வேலை, ஒரு பென்சன்” மற்றும் 100 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த “காவிரி மேளாண்மை திட்டமும்” முடிவுக்கு வந்ததை எடுத்துக் காட்டினார்.

09-07-2018 - Amit Shah Meeting- on stage

6.19 to 6.31 pm – தமிழிசை சௌந்தரராஜன்: காணொளி மூலம், ஓட்டு எண்ணிக்கையை எப்படி பெருக்குவது என்பதைப் பற்றி பேசினார். காணொளியில், > 100 – A; > 50 – B; > 25 – C; < 10 –D, என்ற ரேஞ்சில் தான் போவதாக தெரிவித்தார்! பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுகள் 100க்கு கீழ், 50க்கு கீழ் என்றிருந்தால், அவற்றை பெருக்க வழிதேட வேண்டும் என்றார். ஸ்யாம் பிரசாத் முகர்ஜி, வாஜ்பாய் போன்றோரின் பிறந்த நாள் முதலியன கொண்டாட வேண்டும். ஒவ்வொரு தொகுதியில், எந்த ஜாதியினர் அதிகமாக இருக்கின்றனர் என்றறிய வேண்டும். மகளிர் சுயயுதவி குழு, சங்கப்பரிவார் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, பேசி வர வேண்டும்……

LG, Amit Sha, Tamilisai, vgp stage

6.31 to 6.38 pm – முரளீதர ராவ்: பொதுவாக, பொறுப்பாளர்களின் கடமைகளைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார். “Mission BJP 2019” திட்டம் என்று செயல்பட வேண்டும் என்றார்.

09-07-2016 - Amit Shah Meeting.speaker-1

6.38 to 6.43 pm – சுவாமிநாதன்: பாண்டிச்சேரி, பிஜேபி தலைவர், எவ்வாறு இன்றளவில், தமிழகத்தில், பிஜேபியை எல்லா கட்சிகளும் எதிர்க்கின்றன என்பதை எடுத்துக் காட்டினார். அவ்விதத்தில், பிஜேபிகாரர்கள் தாம் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறர்கள். காமராஜுக்குப் பிறகு, பலமுள்ள தலைவராக, அமித் ஷா உள்ளார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Vansthi came with Amit Shah

6.43 to 6.51 pm – பொன் ராதாகிருஷ்ணன்: பொறுப்பாளர்களின் கூட்டமே இவ்வளவு என்றால், ஆதரவாளர்களின் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம்…தமிழகத்திற்கு 11,000 லட்சம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று துறைமுகங்கள்;, மதுரையில் எய்ம்ஸ் முதலியன வருகின்றன்ன…தமிழக மீனவர்களுக்கு தேவையான படகுகள் கொச்சியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன…மோடி முதலமைச்சர் மாநாட்டில், 100 தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்…சமஸ்கிருதத்தை விட, தமிழ் தொன்மையானது என்றும் கூறியிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி ஆட்சி செய்வது போல, தமிழகத்திலும் ஆட்சி வரும்….

09-07-2016 - Amit Shah Meeting

6.51 to 6.52 pm – தமிழிசை சௌந்தரராஜன்: மறுபடியும் பேச ஆரம்பித்த போது, அமித் ஷா மேடைக்கு வந்தார். மேடைக்கு வந்ததும், அவருக்கு பொன்னாடை போர்த்துவது, நினைவு பரிசு கொடுப்பது போன்று சில நிமிடங்களில் முடிந்தவுடன், பேச ஆரம்ப்பித்தார். எச். ராஜா தமிழில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார்.

Amit SHAH with others 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: “வந்தே மாதரம்” மற்றும் “பாரத் மாதா கி ஜே” என்று உரக்கச் சொல்லி, தமது உரையைத் தொடங்கினார்ரிரு கைகளையும் உயர்த்தி, மற்றவர்களையும் அவ்வாறே உரக்க சொல்லச் சொன்னார். தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள். விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பொன். ராதாகிருஷ்ணனை அமைச்சராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Meeting-LG, Amit Sha, Tamilisai, vgp stage

மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. ஏழை தாய்ய்மார்களுக்கு கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பிஜேபி உள்ளது. 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது, 330 எம்பிக்களைக் கொண்டுள்ளது, 1700 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதே போல, ஆயிரக்கணக்கில் மேயர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று பல மாவட்டங்களில் இருக்கின்றனர். இவ்வாறு பிஜேபி வளர்ச்சியடைந்துள்ளது.

Amit SHAH meeting- 09-07-2018-5

மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. 13வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு முந்தைய அர்ரசாங்கம் ரூ 94,540 கோடிகள் தான் கொடுத்தது, ஆனால், 14வது நிதி கமிஷன் கீழ், தமிழகத்திற்கு 1,99,996 கோடிகள் கொடுத்துள்ளது. அதாவது, 1,04,000 கோடிகள் அதிகம். முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பிறகு,ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது / ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்டியலிட்டுக் காட்டினார்:

திட்டம் ரூ கோடிகளில் திட்டம் ரூ கோடிகளில்
சிறுநீர் பாசனம் 332 ஸ்மார்ட் சிடி 820
மெட்டரோ 2,875 மதுரை எய்ம்ஸ் 1,500
மோனோ ரெயில் 3,267 தஞ்சை, திருநெல்வேலி மருத்துவமனைகள் 350
3200 கி.மீ ரெயில்வே லைன் அதிகப்படுத்த 20,000 பாரம்பரிய கிராம உன்னதி 45
வரட்சி நிவாரணம் 1,750 தேசிய நெடுஞ்சாலை 23,700
வார்தா புயல் 265 பாரத் மாலா – மத்திய சாலை 2,100
பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா 3,700 மாநிலங்களை இணைக்க 200

இப்படி அடுக்கிக் கொண்டே போனார். பிஜேபியை எதிர்ப்பவர்கள், இவ்வுண்மையினை அறிய வேண்டும். இதே போல, யு.பி.ஏ அரசாங்கமும் தமிழக்கத்திற்கு என்ன கொடுத்தார்கள் என்று பட்டியல் இட்டு, கணக்குக் கொடுக்கட்டும், ஆவணங்களுடன் அத்தகைய விவரங்களைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான், யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது தெரியும். கணக்கு கேட்பீர்களா என்று பொறுப்பாளர்களை கேட்டார்.

© வேதபிரகாஷ்

11-07-2018

Amit SHAH meeting- 09-07-2018-4

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

ஜூலை 3, 2016

கங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)!

திருவள்ளுவர் கங்கை சிலை

தருண் விஜய் அரசியல் செய்கிறாரா?: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது.   மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.

திருவள்ளுவர் ஓவியங்கள்திருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தாபிரச்சினை என்ன?: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[1] என்றது விகடன்.  ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3].   ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்!’ – தருண் விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்பு தள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையை கிளப்புகின்றனர் தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர் கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரை பெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்து கொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட் முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம் எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.

கருணாநிதி, தருண் விஜய்தருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாக இருக்கிறது: தருண் விஜய்,என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.

திருவள்ளுவர் ஓவியம் - கே.ஆர். வேணுகோபால சர்மாதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படிகருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”.  ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].

Valluvar sttue - DK response - Viduthalai - 02--07-2016சிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுது மறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா?: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்? அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809

[7] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

[8] http://www.dinamalar.com/news_detail.asp?Id=167478&Print=1

 

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

பிப்ரவரி 12, 2016

சமஸ் கட்டுரை – சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை (2)!

ஆதாம் ஏவாள், ஏசு நிர்வாண சித்திரம்

“ஷூ” போட்டுதான் ஓட்டலில் நுழைய வேண்டும் எனும் போது, கோவில் பற்றி கேள்வி எழுப்புவது ஏன்?: எத்தனையோ ஓட்டல்கள், கிளப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் “டிரஸ் கோர்ட்” இருக்கத்தான் செய்கிறது. பணம் இருந்தால் மட்டும் அவற்றில் நுழைந்து விட முடியாது. “ஷூ” போடாவிட்டால், அனுமதி மறுத்து, வெளியேற்றும் ஓட்டல்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து ஏன் குரலெழுப்புவதில்லை? அங்கேயெல்லாம் “நுழைவு போராட்டங்கள்” நடத்தலாமே? உள்ளே நுழைய எங்களுக்கு உரிமை உண்டு என்று போராடுவார்களா? கோவாவில் சில இடங்களுக்கு போகக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும்? ஜம்மு-காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எல்லா இந்தியர்களும் செல்ல முடியாதே? அதனைத் தட்டி ஏன் கேள்விகளைக் கேட்கவில்லை? கோர்ட்டில் ஜட்ஜ் வந்தால், ஹாலில் பெரிய மனிதர் நுழைந்தால் எழுந்து கொள்ள வேண்டுமா? இம்மாதிரி கேள்விகளையும் கேட்கலாம்! “இடம், பொருள், ஏவல்” என்ற ரீதியில் கட்டுப்பாடுகள் இருக்கும் போது, அவற்றை ஏன் எதிர்ப்பதில்லை?

Christian eroticaஎதை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்யலாமா?[1]: உடலுறவு கொள்வது உள்ளே என்றுள்ளதை மறுத்து வெளியே செய்ய முடியுமா? “ஒன்னுக்கு” அல்லது “இரண்டுக்கு” எல்லாம் எல்லா இடங்களிலும் போகலாமா? தெருக்களில் செல்லும் போது நடப்பவர்கள், வாகன ஓட்டிகள் முதலியோர் குறிப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் செயல்படவேண்டும். இல்லை நான் எப்படி வேண்டுமானலும், நடப்பேன், எப்படி வேண்டுமானாம் ஓட்டுவேன் என்னை யாரும் ஒன்றும் கெட்க முடியாது என்று ஓட்டிச் செல்ல முடியுமா? குழந்தை வளரும் போது, “இப்படி செய், அப்படி செய்யாதே” என்று கற்றுக் கொடுக்கும் போது, ஏன் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முதலியவற்றை வைக்க வேண்டும்? “நீ என்ன வேண்டுமானாலும் செய்” என்று விட்டுவிடலாமே! அது-அது அங்கங்கு இருக்க வேண்டும்முட்கார வேண்டும், நடக்க வேண்டும் என்ற நியதி தேவையில்லையே?

commandment God gives Adam and Eve in the Garden is to have sex- Pru vehravu, be fruitful and multiply.சமத்துவம் இல்லாத சமோசா கட்டுரை: சமநிலை, சமத்துவம் பற்றி சமசித்தால் (பரிசோதித்தால்) தால் தான் சமசி (நிறைவு) உண்டாகும். அம்மணத்தால் சமணமாகியவர்களை இன்று நிர்வாணத்தை ஆதரிக்கும் திகவினரே கற்களால் அடிக்கிறார்கள். சமத்துவப் போராளிகள் அதனை தடுக்கவில்லை. சமதை, சமானம், சமத்காரம் பார்க்க அவர்களால் முடியவில்லை. சமஸ்தம் சமம் என்ற சமத்துவம் பேசினாலும், சிந்தாந்த சமஸ்தானத்தில், சமட்டிகள் எல்லாவற்றையும் சமநிலையில் வைத்திருக்கவில்லை. சமர்த்தாக, சமதரிசிகள் வேடத்தில், சமபேதங்களை உண்டாக்கித் தான் வைத்திருக்கிறார்கள். சிந்தாந்தச் சிதறல்களை, மோதல்களை தடுத்து சமன்படுத்தவோ, சமரசம் செய்யவோ இயலாமல் தான், புதிய சமன்பாடுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறர்கள். இப்பினும் இவர்கள் வர்க்கம், கர்க்க பேதங்கள், வர்க்க போராட்டங்கள் என்று கூட விவாதிப்பார்கள். இனி இந்த பழைய சொற்விளையாட்டை விட்டு, நவீனகாலத்திற்கு வந்தால் கூட, “சமோசா” என்றால், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, இருக்கிறதோ அவற்றை கலந்து, “மசாலா”வாக்கி, உள்ளே திணித்து சமைப்பது தான் என்றுள்ளது. “சம்சாக்கள்” என்றால், “ஆமாம் சாமி” என்று சமர்த்தாக சரிந்துவிடும் சமரசங்களைக் காட்டுகிறது.

Erotic Roman Bas Relief Sculpture of a man and woman having sex Pompeii. 1st Centசாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?[2]: இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்[3].

Pan and Goat- Roman Mythical erotic sculpture from Pompeii.ஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.

ஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்?

Semi nude Joseph and Maryதிருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே!”, “அமைதியாக வரிசையில் வரலாமே!” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே!” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை!

என்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா? பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா!). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்? கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை[4].

இந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்’.

எந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.

எனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!

© வேதபிரகாஷ்

12-02-12016

[1]  வீடுகளில் பெட் ரூம், கக்கூஸ், பாத்ரூம் முதலிய தேவையில்லையே, பிறகு வீடு கூட வேண்டாம் என்ற நிலைக்குக் கூட வந்து விடலாமே?

[2] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[3]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[4] சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

பிப்ரவரி 12, 2016

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ என்று கேட்டவர்கள் எல்லா சாமிக்கும் டிரஸ்கோட் உண்டா சாமீ என்று ஏன் கேட்கவில்லை (1)?

சமஸ் எழுத்தாளர் - சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” – தி இந்து கட்டுரை: இப்பொழுது ஒர் நண்பர், “தி இந்து”வில் 29-12-2015 அன்று வெளியான ஒரு கட்டுரைப் பற்றி எனது கவனத்தைஈழுத்துள்ளார். உண்மையிலேயே அக்கட்டுரை வந்தது எனக்குத் தெரியாது. நேற்று (11-02-2016) தான் படித்து பார்த்தேன்.  “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்ற கட்டுரை, அதற்கு வெளியான பதில்கள், அவரது “பிளாள் ஸ்பாட்டி”ல் உள்ள கட்டுரைகள் முதலியவற்றையும் பொறுமையாகப் படித்துப் பார்த்தேன். “இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!”, என்று ஒரு கட்டுரைக்கு முஸ்லிம்கள் தான் அதிக அளவில் எதிர்த்துள்ளார்கள்[1] என்பதையும் கனித்தேன். அதாவது அதில் கூட இணை வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. மற்றவற்றைப் பற்றி (நல்லகண்ணு, ஜெயலலிதா, மோடி பற்றிய) விமர்சித்தால், இங்குள்ள விசயத்தை விட்டு விலக நேரிடும். கொஞ்சம் பிரபலமடைந்து விட்டால், எதை எழுதினாலும் பதிப்பித்து விடும் நிலை இன்றுள்ளது. பொதுவாக, கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் கொண்டு எழுதினால் அவை ஏற்புடையாகவே இருக்கிறது. அதிலும், இந்தியா, இந்தியர்களை குறைகூறி, இந்திய நலன்களுக்கு எதிராக இருந்தால், உடனடியாக ஏற்கப்படும்[2].

sami - சமஸின் படம்

கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்களின் கலவையின் வெளிப்பாடு: இக்கட்டுரைக்கு வரும் போது, அதில் ஒன்றும் விசயம் இல்லை, ஏனெனில், என்றுமே கேள்விகளை எழுப்புவது சுலபம். மேலும், மறைப்புவாதம் செய்யும் சித்தாந்திகளிடம்[3], எல்லாவற்றையும் எடுத்துரைத்து விளக்க முடியாது. மேலும் “சமஸ்” யார் என்று கூட எனக்குத் தெரியாது. இப்பொழுது “கூகுள் செர்ச்சில்” பார்த்து விகிபீடியா மற்றும் “பிளாக் ஸ்பாட்” மூலம் அவர் எழுத்தாளர் என்று தெரிய வந்தது. வழக்கம் போல நவீன இந்தியனுக்குள்ள சந்தேகங்களின் குழப்பமாகத் தான் அக்கட்டுரை உள்ளது. கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், இத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. மேலும், எழுத்தாளர் எனும் போது, வெறும் செய்திகள் மூலம் மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்பவற்றைத் தொகுத்து கருத்துருவாக்கம் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஒருவருக்குண்டான எண்ணங்களே சார்புடையவையாக இருக்கும் போது, சித்தாந்தக் குழப்பங்களின் கலப்பாக உள்ளபோது, அதில் சமநிலை சிந்தனைகள் இல்லாமல் போகின்றன.

sami_தி இந்துவில் சமஸ் படம்

அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது?: தமிழகத்தில் கோவில் நிர்வாகம் சரியாக இல்லை என்றால், அதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ச்சி செய்து பார்த்தால், கடந்த கால திராவிட அரசியல்வாதிகள் ஆட்சி, சுரண்டல்கள், கொள்ளைகள் முதலிய என்று அறிந்து கொள்ளலாம்[4]. ஆக மூலகாரணமாக உள்ள அத்தகையை அழிக்கும் கிருமிகளை உருவாக்கும், வைரஸைத் தோற்றுவித்துப் பரப்பும், சமூகத்தை சீரழித்து வரும் சித்தாந்தம் எது என்பதனை கண்டுகொள்ளாமல், கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை வைத்து, மனிதர்களின் ஆடைக் கட்டுப்பாடு பற்றி தாராளமாக விமர்சிப்பது, கோவணத்துடன் சென்று கொண்டிருக்கும் பரதேசியின் கோவணத்தை உருவி விட்டது போல உள்ளது. சமீபத்தில் பிறந்து வளர்ந்துள்ளவர்களுக்கு 1940-50, 1950-60 மற்றும் 1960-70 அரசியல், கட்சிகளின் உருமாற்றங்கள், இந்தியதேசிய ஆதரவு-எதிப்பு, நாட்டுப்பற்று-மொழிப்பற்று, முதலியவற்றில் உள்ள நெளிவு-சுளிவுகள் எல்லாம் தெரிந்திருக்காது.

A semi-nude winged Roman Victory holding a victors wreath in her right hand and victors palm-branch in her left.நிர்வாண சினிமா நடிகைகளுக்கு படுதா போட்டு மூடி விட முடியுமா?: சினிமாவில் நடிகைகள் அரைகுறை ஆடைகளில் ஆடி, இப்பொழுது நிர்வாணமாக தோன்றும் அளவுக்கு தாராளமயமாக்கப்பட்ட சமூக சுதந்திரங்களில் திரிந்து வந்தாலும்[5], தெருக்களில் நிர்வாணமாக வரக்கூடாது என்று தானே நவீனத்துவவாதிகள் சொல்கிறார்கள்? போர்ன்-படப்புகழ் சன்னி லியோனிக்கு[6] படுதா போட்டு மூடவா முடியும்? ஆகவே, “திருச்சியில் பெண்களுக்கு மேலே துப்பட்டா போட்டு விடுவதைஎவ்வளவு பெரிய வன்முறை!” என்று கேட்டிருப்பது தமாஷாகத்தான் இருக்கிறது. “முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள்”, எனும் போது படு-தமாஷாக இருக்கிறது[7]. ஏன் இக்கால பெண்களால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை? சமகால நாரிமணிகளுக்கு சகிப்புத் தன்மை ஏற்படவில்லையா? பெண்களிலும் சிலர் அவ்வாறு இருக்கலாமே? அவர்களை யாரும் அவ்வாறு விமர்சிப்பதில்லையே? இங்கு சமநிலை ஏன் பிறழ்கிறது? சரி, பெண்கள் மார்பகங்களைக் காட்டிக் கொண்டு சென்றால் என்னாகும், அதை அனுமதிக்கலாமா?

a close-up of the halos about the heads of Amphitrite and Neptune.ஆழ்வார்கள்நாயன்மார்களுக்குத் தெரியாதவை, இப்பொழுதுள்ள அறிவிஜீவிகளுக்கு எப்படி தெரிகிறது?: கோவில் சிற்பங்கள் மற்றும் அச்சிற்பங்கள் கொண்ட கோவில்களை உருவாக்கியவர்கள் முட்டாள்களா, மடையர்களா, அல்லது அவற்றை அவ்வாறு வழிபடும் ஸ்தலங்களில் வைத்திருப்பது கேவலமான செயல் என்றெல்லாம் எப்படி இத்தனை ஆண்டுகள் யாரும் உணராமல் இருந்து, திடீரென்று, முகமதியர், ஆங்கிலேயர், முதலியோர் வந்து எழுதி வைத்தப் பிறகு தெரிகிறது? அத்தகைய “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களிடமிருந்தும் தப்பித்து வந்துள்ளனவே? கோடிக்கணக்கில் சிற்பங்கள் இருந்துள்ள; அவற்றில் பல “உருவ-எதிர்ப்பு, மறுப்பு, ஒழிப்பு” ஆட்களான துருக்கியர், முகமதியர், முகலாயர் மற்றும் ஐரோப்பிய கிருத்துவர்கள் உடைது, அழித்து, ஒழித்துள்ளனர். அவற்றில் மிஞ்சியவை கடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான அந்நிய அருங்காட்சியகங்களில் அலங்கரித்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறி தப்பித்தவை தான் இன்றுள்ளன. தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்புடையதாக இருந்தவை, ஆழ்வார்கள்-நாயன்மார்கள் எல்லோரும் பார்த்தவை, இப்பொழுது இவர்களுக்கு எப்படி ஆபாசமாக தோன்றுகிறது? அவர்களை விட இவர்கள் பெரிய அறிவுஜீவிகள் ஆகி விட்டார்களா? ஆனால், இன்று, அவை இது போல சஸ்ஸுகளுக்கு உறுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

Bare-breasted goddesses on the Augustan Altar of Peaceசமஸ்த-செக்யூலரிஸ ரீதியில் விவாதிக்கப்படாத நிர்வாணம்: ஆதம்-ஏவாள் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது, தெய்வீக அடிப்படை ஏற்புச் சிந்தனை, முக்கியமான நம்பிக்கை, மற்றும் இறையியல் கட்டாயம், ஆனால், இந்து மதத்தில் அவ்வாறு இல்லை. இதிலிருந்தே நிர்வாணம் அவசியம் எங்கு தேவை, தேவையில்லை என்ற உண்மையினை அறிந்து கொள்ளலாம். முற்றும் துறந்த நிலையை ஆரம்பகால கிருத்துவம் நம்பியது, ஆனால், பிறகு சாத்தானைப் புகுத்தி, மூலங்களை மறைத்தது. சாத்தான் பாம்பாக வந்தபோது, கனி தின்க தூண்டியபோது, வெட்கப்பட்டு, இலைகளால் தங்களது உறுப்புகளை மறைத்துக் கொண்டார்களாம்! இரண்டாம் ஆதம் என்று போற்றிய கிருத்துவ இறையியல் வல்லுனர்கள், ஏசு கிருத்துவையும் அவ்வாறே கண்டறிந்தனர். ஏசு கிருத்துவையும் நிர்வாணமாகவே சித்திரங்களில் தீட்டி மகிழ்ந்தனர். இடைக்காலத்தில், முகமதியர்களின் கொக்கோக சிந்தனைகளால் அத்தகைய சித்தரிப்புகள் உருவாகின. உண்மையில், ஜைன-பௌத்த நிர்வாணங்கள், கிருத்துவ-முகமதிய மதங்களில் தொடர்ந்தன. இஸ்லாத்தில் இன்று வரை காபாவைச் சுற்றும் சடங்கில் நிர்வாணம் இருக்கிறது, ஆனால், ஒற்றை ஆடையால் மறைத்திருக்கிறார்கள். அந்த நிலை இடைக்காலத்திலும், மேற்கத்தைய நாகரிகங்களில் தொடர்ந்தது. எகிப்திய, கிரேக்க நிர்வாணங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியல் இல்லை. ஆகவே, தேவையில்லாமல் தி இந்து போன்ற நாளிதழ்கள், இந்து கடவுளர்களின் நிர்வாணத்தைப் பற்றி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது என்றாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-12016

[1] http://writersamas.blogspot.in/2016/02/blog-post.html#more

[2] ஷேக் தாவூத் ஜிலானி ஜிஹாதைப் பற்றி விவரங்களை வெளியிடும் நேரத்தில் ஜே.என்.ஏவில், அப்சல் குருவைப் போறுவது எங்கள் உரிமை என்று கிளம்ப்பியுள்ளது நோக்கத்தக்கது!

[3] தெரிந்தே மறைக்கிறார்களா, அல்லது தெரிந்தும் அப்படி எழுதினால் ஏற்கப்படாது, பணம் கிடைக்காது என்று மறைக்கிறார்களா என்பதை அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.

[4] இவற்றைப் பற்றியெல்லாம் கூட தெரியாது என்றால், அந்நிலையை என்னவென்பது. சுதந்திர தினத்தில் தேர் எரிந்தது என்றால், ஓடாத தேரை நான் ஓட்டினேன் என்ற கதைகளையும் அறிந்திருக்க வேண்டுமே? தேரில் நிர்வாண சிற்பங்கள் இருந்ததால் எரித்தேன் என்றால் சரியாகிவிடுமா?

[5] எத்தனை நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார்கள். நான் உடுப்பதைப் பற்றி யாரும் ஒன்றும் தீர்மானிக்க முடியாது என்று தீபிகா இதைப்பற்றி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளாரே?

[6]  இப்பொழுது கோவில் உள்ளே கான்டம் பற்றி பேசியதால் வழக்கு போட்டுள்ளதாக செய்தி, சரி செக்யூலரிஸ ரீதியில் சர்ச், மசூதி முதலியவற்றிலும் அத்தகைய காட்சிகளை சேத்திருக்கலாமே?

[7]  பெண்களின் நிர்வாணத்தை ஆண்கள் விரும்பும் போது, ஆண்களின் நிர்வாணத்தை ஏன் பெண்கள் விரும்பவதில்லை? இதுவும் குழப்பவாதமோ?

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

ஜனவரி 17, 2016

மால்டாவில் “குழந்தைகள் இறப்பு” போர்வையில் சிறுமிகள் திருமணம், சிசுவதை முதலியவை மறைக்கப்படுவது – சட்டமீறல்கள் பற்றி இந்திய வரலாற்றுப் பேரவை மால்டாவில் துடித்தது!

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 2012

2011லிருந்து மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது (2011 முதல் 2015 வரை): நவம்பர் 2011 முதல் மால்டாவில் பச்சிளம் குழந்தைகள் இறந்து வருகின்றன. ஜனவரி 2012 வாக்கில் 37 குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது[1]. மேற்கு வங்காள மாநிலத்தில் பரவி வரும் இனம் தெரியாத மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது[2]என்று ஜூன்.2014லிலும் செய்திகள் வெளியாகின. மால்டா மாவட்டத்தின் காலியாசக் பகுதியை சேர்ந்த இந்த குழந்தைகள் திடீர் வாந்தி மற்றும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மால்டா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் பலியாகினர். சுமார் ஒன்று முதல் 6 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளின் நோய்க்கான காரணம் என்ன? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், இதே போன்ற கோளாறுகளுடன் இன்றும் 3 குழந்தைகள் மால்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொல்கத்தாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு காலியாசக் பகுதியை பார்வையிட விரைந்துள்ளது[3]. இருப்பினும் கடந்த ஐந்தாண்டுகளாக மம்தா அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. சரி, இதற்கு என்ன காரணம்?

Dreams die young in horror hospital where 37 children have died in less than a week- 25-01-2012குழந்தைகள் இறப்பையும், முஸ்லிம் பிரச்சினை என்று உண்மைகளை மறைக்கும் போக்கு:

  1. மால்டாவில் 57% முஸ்லிம்கள், அதில் 92% கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். அவர்களில் 12-13 வயதுகளிலேயே திருமணம் நடந்து விடுகின்றது.
  2. ஏழ்மையில் உழலும் அத்தாய்கள், தங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடிவதில்லை.
  3. பர்துவான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, மால்டாவில் உள்ள பெண்களுக்கு 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் நடந்து விடுகிறது என்பதனைக் காட்டுகிறது. முஸ்லிம்களிலோ இந்நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.
  4. ஆனால், தேசிய ஊடகங்கள் இதைப் பற்றி எடுத்துக் காட்டுவதில்லை. பெண்ணியக் குழுக்களும் கவலைப்படவில்லை.
  5. முஸ்லிம்கள் பிரச்சினை என்று செக்யூலரிஸ கோணத்தில் மறைக்கப்படுகிறது.
  6. இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் குறைவாகவே இருக்கின்றனர். எல்லைப்புறத்தில் பலவித குற்றங்கள் நடக்கும் இடமாக இருப்பதால், இங்கு வேலை செய்வதற்கும் அஞ்சுகிறார்கள்.
  7. மேலும்முஸ்லிம்கள் எனும் போது தவிர்க்கவே செய்கிறார்கள்.
  8. ஜார்கென்ட், பீஹார், ஏன் பங்காளதேச பெண்களும் இன்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[4]. மேலும், மிகவும் மோசமான, இறக்கும் நிலையில் குழந்தைகளை எடுத்து வருவதால், டாக்டர்கள்-நர்சுகள் அஞ்சுகிறார்கள்.
  9. பழுக்காத லிச்சிப்பழம், விளாச்சிப்பழம் சாப்பிடுவதால் குழந்தைகள் இறக்கின்றன என்றும் விவாதிக்கப்பட்டது[5].
  10. ஆரோக்கியம் மற்றும் நலத்துறை பொறுப்பு மம்தாவின் பொறுப்பில் இருக்கிறது. இதை ஒரு செக்யூலரிஸப் பிரச்சினையாக இருப்பதால், அமைதியாகவே இருப்பதாகத் தெரிகிறது. ஒருநிலையில் மம்தா இதெல்லாம் வெறும் வதந்தி என்று கூட சொல்லியது வியப்பாக இருந்தது[6].

ஆக பங்காளதேச முஸ்லிம்களின் ஊடுருவல், சிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் மறைக்கப்படுகின்றன. இதே வேறு மாநிலமாக இருந்தால், தினமுன் இதைப்பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருப்பர்.

Malda Kaliachak polic stationசிறுமிகளின் திருமணம், சிசுவதை போன்ற பிரச்சினைகள், ஏன் மறைக்கப்படுகின்றன?: சேலத்தில் பெண்சிசுக்கள் இறந்தபோது, அனைத்துலக செய்தியாக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் குழந்தைகளைக் கொல்கின்றனர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. திரைப்படங்களில் கூட விவஸ்தையில்லாமல் காமெடியாக்கப்பட்டது. ராஜஸ்தானில் சிறுமிகள் திருமணம் நடந்தாலும் அவ்வாறே செய்திகள் வாரி இறைக்கப்படுகின்றன. ஆனால், மால்டாவில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளின் திருமணம், சிசுவதை முதலியன நடந்து வருகின்றன, ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இவ்வாறு மாநிலத்திற்கும் மாநிலம் பாரபட்சம் காட்டும் அறிவிஜீவிகளை என்னென்பது? சேலம், ராஜஸ்தான் பிரச்சினைகள் பற்றி ஏகப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள், ஆனால், மால்டா பற்றி, ஒன்றுமில்லை. மால்டாவில் 2011 மற்றும் 2015 இரண்டு முறை இந்திய வரலாற்றுப் பேரவை நடத்தி, ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களைக் கூட்டி, ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கச் செய்த போதும், இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அப்படியென்றால், அவர்களும் இதனை முஸ்லிம் பிரச்சினை என்றே கருதி அமைதியை கடைப்பிடிக்கின்றனரா அல்லது உண்மைகளை மறைக்கப் பார்க்கின்றனரா?

Malda map, IHC, poppy cultivationமால்டாவும், அயோத்தியாவும் (டிசம்பர் 2015): மால்டாவில் என்ன நடந்தாலும், அங்கு டிசம்பர் 28 முதல் 30 வரை மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, திடீரென்று மால்டாவில் மாநாடு நடத்தும் இந்திய வரலாற்றுப் பேரவை கூட்டத்திற்கு தெரிய வந்ததும், ஐயோ இதுவும் மிகவும் ஆபத்தானது, சட்டத்திற்கு புறம்பானது என்று ஓலமிட்டது திகைப்பாக இருக்கிறது. “1984லிலிருந்து பாபரி மஸ்ஜித் காக்கப்படவேண்டும் என்று சொல்லி வருகிறது. இடைக்கால 1528ல் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் ஷார்கி கட்டிட அமைப்பு என்ற ரீதியில் அது காக்கப்பட வேண்டியாத இருந்தது. ஆனால், 1992ல் இடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அது தேசம் முழுவதும் கண்டிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட அக்கட்டிடம், அங்கு ஒரு நவீன கோவில் கட்டுவதற்காக, அப்புறப்படுத்தப் பட்டது. அயோத்தியாவில் கற்கள் குவிக்கப்படுவது இன்னொரு சட்டமீறலாகும். அதனால், இந்திய வரலாற்றுப் பேரவை மத்திய மற்றும் மாநில அரசு, இவ்வாறு கட்டிடங்களை இடிப்பது, சட்டங்களை மீறுவது, அதனால், மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது முதலிவற்றை தடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது”, என்று தீர்மானம் போட்டுள்ளது[7]. இர்பான் ஹபீப், ஆதித்திய முகர்ஜி, ஷெரீன் மூஸ்வி, பி.பி.சாஹு, இந்து பங்கா போன்ற பிரபலமான சரித்திராசிரியர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றும் போது இருந்தனர்.

14-ramjanmabhumi-naya-mandir-pillars-are-readyபல ஆண்டுகளாக வெளிப்படையாக நடந்து வரும் கட்டிட வேலை எப்படி சட்டமீறல் ஆகும்?: கடந்த ஆண்டுகளில் யு.பி.ஏ மத்தியிலும் சமஜ்வாதி ஜனதா மாநிலத்திலும் ஆட்சி செய்து வந்தன. ஆனால், அயோத்தியாவில் கற்கள் வருவது, சிற்பங்கள், தூண்கள் முதலிய தயாரிக்கப் பட்டு வருவது, முதலியவை நடந்து கொண்டுதான் இருந்தது. 1989ல் கோவிலுக்கான பூமிபூஜை நடந்தடிலிருந்து இவ்வேலைகள் நடந்து வருகின்றன[8]. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. கோடிக்கணக்கில் பல நாடுகளிலிருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர். இதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத்தான் இருந்து வருகிறது. அதில் சட்டமீறல், முதலியவை இருப்பதாக யாரும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. உண்மையில் அவ்விதமாக எதுவும் இல்லை. அயோத்தியா வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. அதிலும், யாரும் இவையெல்லாம் சட்டமீறல் என்ரு சொல்லவில்லை. பிறகு இந்த அறிவிஜீவிகளுக்கு மட்டும் எப்படி அவ்வாறு தோன்றியுள்ளது? இவர்கள் என்ன சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர்களா, சட்டங்ககளை, நீதி மன்றங்களை மதித்தவர்களா? அதிலும் மால்டாவுக்கு வந்த பிறகு அவ்வாறு தீர்மானம் போடவேண்டும் என்று தீர்மானித்தது ஏன்? மால்டாவில் என்ன சட்டமீறல்கள் நடக்காத புண்ணிய பூமியாக இருந்து வருகிறதாமப்படியென்றால், இவர்களின் உள்நோக்கம் தான் என்ன?

© வேதபிரகாஷ்

17-01-2016

[1]  Soudhriti Bhabani, Dreams die young in horror hospital where 37 children have died in less than a week, UPDATED: 09:17 GMT, 25 January 2012.

[2] மாலைமலர், மேற்கு வங்காளத்தில் மர்ம நோய்: 8 குழந்தைகள் பலி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 07, 2014, 1:07 PM IST.

[3] http://www.maalaimalar.com/2014/06/07130751/8-children-die-in-West-Bengal.html

[4] Sources said women in labour were admitted to the Malda hospital from the block healthcare units and from neighbouring states, such as Jharkhand and Bihar, and even Bangladesh.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2091391/Malda-crib-deaths-37-children-died-West-Bengal-hospital-week.html

[5] http://timesofindia.indiatimes.com/city/kolkata/Unripe-litchis-harmful-for-children-Bengal-minister-says-after-Malda-deaths/articleshow/36401764.cms

[6] Even as West Bengal Chief Minister Mamata Banerjee recently called the spurt in infant death cases  in state hospitals a “rumour”, 10 more children were reported dead in Malda sub-divisional government hospital in the last 48 hours.

http://indiatoday.intoday.in/story/infant-deaths-continue-in-malda-hospital-10-more-die-in-48-hours/1/171845.html

[7] http://indianculturalforum.in/index.php/2016/01/11/indian-history-congress-dont-break-monuments-dont-incite-religious-sentiments/

[8] http://ayodhyatourism.com/karsevak-puram/

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

நவம்பர் 3, 2015

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா,எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

Tiruvannamalai - beef eating progressive writers.1

Tiruvannamalai – beef eating progressive writers.1

திருவண்ணாமலை என்றாலே, பிரம்மாண்டமான அண்ணாமலையார் கோவில், தீபம், கிரிவலம், ரமண மகரிஷி, ரமணாஸ்ரம், சேஷாத்ரிநாத ஆஸ்ரம், விசிரி சாமியார், ராம்சூரத்குமார் ஆஸ்ரம் என்றெல்லாம் தான் நினைவில் வரும். ஆனால், “முற்போக்கு” என்று பறைச்சாற்றிக் கொண்டு ஒரு கூட்டம் கலவரநிலையை உண்டாக்கி இருப்பது, அதிலும் நடுரோடில் உட்கார்ந்து கொண்டு மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாடுகிறோம் என்று செய்திருப்பது, அந்த புண்ணிய ஸ்தலத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியதாக உள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது. அதாவது, அத்தனை கறவை மாடுகள் இங்குள்ளன. இந்நிலையில், அவ்விடத்தைத் தேர்த்ந்டுத்து, மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாட திட்டமிட்டடு ஏன் என்று தெரியவில்லை. விளம்பரம் வேண்டும் என்றால், சென்னையிலேயே செய்திருக்கலாம். ஆனால், திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால், இதன் பின்னணியை அலச வேண்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட, முரண்பட்ட செய்திகளைக் கொடுத்துள்ளன.

Tiruvannamalai - beef eating progressive writers.2

Tiruvannamalai – beef eating progressive writers.2

போலீஸார் அனுமதி மறுத்தது, சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) ] சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது[1] என்கிறது மாலைமலர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்[2] என்கிறது தமிழ்.வெப்.துனியா. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்[3] என்கிறது மாலைமலர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது[4] என்கிறது புதிய தலைமுறை.  பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது[5] என்கிறது நியூஸ்.7. போலீஸார் அனுமதி மறுத்ததுடன், அதனை வாங்காமல் இருந்ததால் அதனை அவர்களது அலுவலகத்தின் கதவுகளில் ஒட்டப்பட்டது[6]. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[7].  இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ஆக அவர்களது பங்கு இதில் என்னவாக இருக்க முடியும்?

Tiruvannamalai - beef eating progressive writers.3

Tiruvannamalai – beef eating progressive writers.3

உள்ளே கருத்தரங்கம் என்று வெளியே மாட்டிறைச்சி சாப்பிட்டது: 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப் போவது “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா”, திருவிழாவா, அல்லது “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கமா என்பதனை ஊடகங்கள் குறிப்பிட முடியவில்லை. இதனால், ஏற்பாடு செய்தவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றாகிறது. முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது, முறைப்படி அனுமதியளிக்கப் பட்டது, பிறகு மறுக்கப் பட்டது, என்பதெல்லாம் அதனை உறுதி செய்கிறது. மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று அனுமதி வாங்கி விட்டு, பிறகு தெருவில் வந்து “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்” என்று மாறியதால் தான், இந்நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, முதலில் போலீசார் சாதாரணமாக இருந்ததும், பிறகு, தெருவில் மாட்டிறைச்சி பொட்டலங்கள் கொடுத்து சாப்பிடும் போது தான், உண்மை அறிந்து பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, “கேரளா பவன்” போன்றதை, இங்கும் நடத்தி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது தெரிகிறது.

Tiruvannamalai - beef eating progressive writers.5

Tiruvannamalai – beef eating progressive writers.5

திருவிழாவா, ஊர்வலமா?: கருத்தரங்கம் நடத்த வேண்டியவர்கள் தெருவிற்கு வந்தனர். திருவண்ணாமலையில், பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலை சந்திப்புகள் எப்பொழுதும் போக்குவரத்துடன் இருக்கும் என்பது தெரிந்த விசயமே. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், இதனால், விளம்பரம் பெறவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாகிறது. அதனால் தான், தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அதாவது, ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஏற்கெனவே விண்ணப்பதிற்கேணானுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

Tiruvannamalai - beef eating progressive writers.6

Tiruvannamalai – beef eating progressive writers.6

மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக……!: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார்? அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? எண்னுவதற்குக் கூடவா இவர்களுக்குத் தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

03-11-2015

[1]மாலைமலர், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: 50 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 02, 11:03 AM IST.

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-sudden-cancel-of-beef-eating-program-cpm-officials-arrested-115110100038_1.html

[3] http://www.maalaimalar.com/2015/11/02110352/Struggle-in-Tiruvannamalai-eat.html

[4]  புதிய தலைமுறை, மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை, பதிவு செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:43 AM; மாற்றம் செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:59 AM.

[5] http://ns7.tv/ta/beef-eating-festival-tabloid-tiruvannamalai.html

[6] However, the police denied permission for the event and pasted notices on the doors of the TNPWAA office here intimating them of the same. But the organisers continued to request the police to get some sort of relief viz. permission to hold festival without serving the beef there or conduct the festival at an alternative venue. With the police not budging, the organisers decided to defy the ban.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cops-prevent-beef-biriyani-festival-in-tiruvannamalai/article7831369.ece

[7] http://www.puthiyathalaimurai.tv/tn-police-blocked-the-beef-eating-ceremony-246642.html

[8]  தினமணி, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல், By  திருவண்ணாமலை, First Published : 02 November 2015 02:57 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/Districts/Tiruvannamalai/2015/11/01230708/50-people-arrested-in-the-struggle-to-eat-beef-Tiruvannamalai.vpf

[10]  தினத்தந்தி, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST; பதிவு செய்த நாள்:ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST.

[11] http://www.inneram.com/news/tamilnadu/5008-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html