எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?
அறிவுரை யாரை நோக்கி சொல்லப் பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.
இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’ நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும்[1]. வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன[2]. அவற்றுடன் நாம் அப்போது சண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இந்தியர்கள் அந்நியர்களின் கலப்பினை மறந்து ஒன்றுபட வேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]
வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன, ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான். எனவே, நாம் வெளியில் இருந்து வந்தவர்களுடன் உள்ள தொடர்பை மறந்து வாழ வேண்டும். இங்குள்ள அனைவரும், நமது அங்கத்தினர். அவர்களது சிந்தனையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அவர்களிடம் பேச வேண்டும். | இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது. |
இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது. அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும். நமது தனித்துவ அடையாளங்களே, இந்தியாவை பாதுகாப்பதாக உள்ளது. வெளியில் இருந்து அல்ல. நமது நாட்டுடனான நமது உறவு பரிவர்த்தனை சார்நதது அல்ல. நாம் வேறுபாடுகளை கொண்டாடுகிறோம்[5]. ஒன்றாக வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிப்போம். ஒன்றாக வாழ்வதற்கும், நல்லிணக்கத்திற்கும் பேச்சுவார்த்தை முக்கியம். ஒவ்வொருவரும் சமுதாயத்திற்காக விட்டு செல்ல வேண்டும்[6].
புறத்தோற்றங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டிக் கொள்பவர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை, இந்தியர்களே: நல்லிணக்கத்திற்கு ஒரு தலைபட்சமான முயற்சிகள் பலிக்காது. ஒவ்வொருவரும் தியாகங்கள் செய்ய வேண்டும். அது பழக்கவழக்கம் மற்றும் மதிப்புகள் மூலம் மட்டுமே வரும். இது தான் நமது தாய்நாடு.
நமது வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். சில வெளியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில், நமது முன்னோர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். சில படையெடுப்பாளர்கள் வந்து சென்றுள்ளனர். பலர் தங்கி உள்ளனர். தாய்நாட்டுடன் இணைந்தால் நமது அடையாளம் அழிந்துவிடும் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. சிலர் தாங்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என நினைத்ததால், 1947 ல் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது. | பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை. |
இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு இடமில்லை. ஹிந்து சமூகம் அதன் சொந்த மதிப்புகள் மற்றும் லட்சியங்களை மறந்துவிட்டது. இதனால் தான் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு பலியாகிவிட்டது.
ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது:நமது முன்னோர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களின் கடனையும் அடைப்போம். இந்தியா ஜனநாயக நாடு. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகள் மத்தியில் போட்டி இருக்கலாம்.
ஆனால், அரசியலுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் அது, சமூகத்தில் பிளவை உண்டாக்கக்கூடாது என்ற விவேகம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இந்தியாவில் பிளவுகளை விரும்பும் சக்திகள் குறித்து மக்கள் அறிந்து வைத்துள்ளனர்[7]. | இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம். |
நமது பழங்கால பெருமைகளை புத்துயிர் பெற செய்வது முக்கியம். இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையமாக கொண்டு, நாட்டில் தேசிய உணர்வு ஏற்பட்டு உள்ளது[8]. கோவிட் போன்ற சவால்களை எதிர்கொள்வதையும், சமாளிப்பபையும் உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது[9]. ஜி20 அமைப்பின் தலைமைப்பதவி நம்மை த் தேடி வந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].
© வேதபிரகாஷ்
04-06-2023
[1] தினமலர், இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஜூன் 02,2023 13:33;
[2] https://m.dinamalar.com/detail.php?id=3337052
[3] காமதேனு, எல்லையில் எதிரிகளிடம் பலத்தை காட்டாமல், நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!, Updated on : 2 Jun, 2023, 1:40 pm
[4] https://kamadenu.hindutamil.in/politics/outsiders-have-gone-now-everyone-is-insider-rss-chief-mohan-bhagwat
[5] Indian Express, ‘Where is Islam safe other than India?’: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.
[6] https://indianexpress.com/article/cities/mumbai/where-is-islam-safe-other-than-india-rss-chief-mohan-bhagwat-in-nagpur-8642270/
[7] தினத்தந்தி, எதிரிகளிடம் நமது வலிமையை காட்டுவதற்கு பதில் நமக்குள்ளே நாம் சண்டையிட்டு வருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர், தினத்தந்தி Jun 2, 8:42 am
[8] https://www.dailythanthi.com/News/India/fighting-among-ourselves-instead-of-showing-strength-to-enemies-at-border-rss-chief-mohan-bhagwat-977491
[9] Hindustan Times, ‘Islam is safe in India…forget foreign connections’: RSS chief Mohan Bhagwat, By HT News Desk, Jun 02, 2023 10:52 AM IST
[10] https://www.hindustantimes.com/india-news/islam-is-safe-in-india-forget-foreign-connections-rss-chief-mohan-bhagwat-101685676872813.html