Archive for the ‘அமர் சோனார் பங்க்ளா’ Category

இந்தியதேசிய கீதத்தை பாட மறுத்தக் கிருத்துவர்களும், வங்கதேச தேசியகீதம் பாடும் இந்திய குழந்தைகளும்!

ஜூன் 16, 2010

இந்தியதேசிய கீதத்தை பாட மறுத்தக் கிருத்துவர்களும், வங்கதேச தேசியகீதம் பாடும் இந்திய குழந்தைகளும்!

முன்பு கேரளாவைச் சேர்ந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், நாங்கள் இந்தியதேசிய கீதத்தைப் பாடமாட்டோம் என்று மறுத்தனர்.

உயர்நீதி மன்றத்தில் அவ்வழக்குச் சென்றபோது, அவர்களுக்கு அப்படி நம்பிக்கையிருந்தால், விட்டுவிடுங்கள் என்று திர்ப்பு அளிக்கப் பட்டது.

யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இப்பொழுது, இதோ இந்த செய்தி!

வங்கதேச தேசியகீதம் பாடும் இந்திய குழந்தைகள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19926

வேலை வேண்டும் என்றால் இந்தியாவில் நுழையும் வங்கதேச முஸ்லீம்கள், அவர்களுக்கு பர்மிட் கொடுக்கும் கம்யூனிஸ காவாலிகள்: பலுர்காட் (மே.வங்கம்) : ஒரு நாட்டின் குடிமக்கள், அந்நாட்டின் தேசிய கீதத்தைப் பாடுவதுதான் உலக வழக்கம். ஆனால் இந்தியக் குழந்தைகள், வங்கதேச தேசிய கீதத்தைப் பாடுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நிச்சா கோவிந்தபூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் இந்தியாவின் வேலி போடப்பட்ட எல்லைக்கும், வங்கதேசத்தின் எல்லைக்கும் நடுவில் அமைந்துள்ளது. இதுதான் இந்த ஊரின் தீராத தலைவலியாக இருக்கிறது. இங்குள்ள நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்களின் குழந்தைகள், பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால், மிக நீண்ட தூரம் நடந்து இந்திய எல்லையைக் கடந்து, இந்தியப் பகுதிக்கு வரவேண்டும். ஆனால் மிக அருகில், வங்கதேச பள்ளிக் கூடங்கள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் தொலைவு கருதி, இந்த ஊரிலுள்ள குழந்தைகள் வேறு வழியில்லாமல் வங்கதேசத்திலுள்ள பள்ளிக் கூடங்களுக்குச் செல்கின்றனர். குழந்தைகள் சிலர் மட்டும், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அனுமதி பெற்று, இந்திய எல்லைக்குள் வந்து படிக்கின்றனர். வங்கதேசக் கல்விமுறை தரமற்றதாக இருப்பதால், அங்கு அனுப்ப இந்தியக் குடும்பங்களுக்குச் சம்மதம் இல்லை தான். ஆனாலும் படிக்காமல் இருப்பதை விட ஏதாவது படிப்பது மேல் என்று நினைத்து அனுப்புகின்றனர்.

இந்திய எல்லைக்கருகில் பள்ளிக்கூடம் இல்லாதது தான் இப்பிரச்னைக்கு மூல காரணம்: இந்திய எல்லைக்கருகில் பள்ளிக்கூடம் இல்லாதது தான் இப்பிரச்னைக்கு மூல காரணம், என்றால், இத்தனை ஆண்டுகளாக அந்த கம்யூனிஸ்டுகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? . “பள்ளி கட்டித் தருவதாக அரசியல்வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் பலமுறை உறுதியளித்து விட்டன. ஆனால் இதுவரை ஒரு பள்ளி கூட கட்டப்படவில்லை’ என்கிறார் குழந்தைகளின் காப்பாளர். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அபுர்பா சென், இப்பிரச்னையில் சர்வதேச எல்லைச் சிக்கல் இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். மாவட்ட மாஜிஸ்திரேட் விரைவில் அப்பகுதியில் ஆரம்பப் பள்ளிகள் கட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார்.இப்போது இந்தியக் குழந்தைகள், வங்கதேசப் பள்ளிகளில், “அமர் சோனார் பங்க்ளா’ என்ற வங்கதேச தேசிய கீதத்தைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த கீதத்தை இயற்றியவர், ரவீந்திர நாத் தாகூர்.