Archive for the ‘நீராடுதல்’ Category

சேதுக்கரைக்கு நவாஸ் கனி சென்று அமாவாசை காரியங்கள், அய்யர்கள் உட்கார்ந்து காரியம் செய்வது, எல்லாம் பார்க்கும் போது, இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

நவம்பர் 12, 2020

சேதுக்கரைக்கு நவாஸ் கனி சென்று அமாவாசை காரியங்கள், அய்யர்கள் உட்கார்ந்து காரியம் செய்வது, எல்லாம் பார்க்கும் போது, இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

01-11-2010 – சேதுக்கரைக்கு நவாஸ் கனி எம்.பி விஜயம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில்  அமாவாசை நாட்களில்   தங்கள் முன்னோருக் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்கின்றர்.   சேதுக்கரைக்கு வரும் பெண்கள் கழிப்பிடம் இன்றியும், புனித நீராடும் பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் போதியளவு இல்லை என பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சேதுக்கரை மக்களிடம் ராமநாதபுரம் எம்பி., நவாஸ்கனி இன்று குறைகள் கேட்டார்[1]. அவர் கூறுகையில், “சேதுக்கரைக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு குடிநீர், சாலை,  கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக செய்து தர வேண்டும் என  பக்தர்கள்,  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தர இந்து அறநிலைய  துறை, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க இது நாள் வரை  முன்வரவில்லை. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தர்ப்பண மண்டபம், பெண்கள் உடை மாற்றும் அறை  உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்[2].  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில பொருளாளர் எம்எஸ்ஏ  ஷாஜகான்,  மாவட்ட தலைவர் வருசை முகமது, மாவட்  ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பாக்கர் உள்ளிட்டோர்  உடன் சென்றனர்.

நவாஸ் கனி டுவிட்டரில் வெளியிட்டது[3], “இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான சேதுக்கரையில் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். – இந்துக்களின் புனிதத்தலங்களில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை. இங்கு இறந்தவர்களுக்காக திதி கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கானமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் இல்லை, குளித்துவிட்டு உடை மாற்றுவதற்காக வரும் ஆண் பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள் இல்லை என்றும், கழிவறைகள் இல்லை, இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை என்றும் மக்கள் புகார் அளித்த நிலையில், இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு வரும் பொதுமக்களிடமும், சேதுக்கரை குருக்கள் சங்கத்தினரிடமும் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். விரைவில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய தொடர்புடைய அதிகாரிகளை அணுகி உடனடி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்”.

நவாஸ் கனி, அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு விஜயம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகில் உள்ளது புண்ணியஸ்தலம் சேதுக்கரை இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது[4]. இந்துக்களின் புண்ணிய தலமாகவும் இது விளங்குகிறது இங்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் வந்து செல்கிறார்கள் இங்கு வந்து செல்லும் யாத்திரிகர்களுக்கு பயனுள்ள வசதிகள் செய்து கொடுக்க ராமநாதபுரம் எம்பி கே நவாஸ்கனி ஆய்வு மேற்கொண்டார்[5]. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்றாகும் சேதுக்கரை இங்கிருந்து தான் ராமர் இலங்கைக்கு கடலில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்றதாக ஐதீகம் சேது பாலம் என்று கூறுவார்கள் இப்படி இந்துக்களின் பிரசித்திபெற்ற இடத்தை ராமநாதபுரம் எம்பி கே நவாஸ் கனி ஆய்வு மேற்கொண்டு இடங்களை பார்வையிட்டார் எம்பி தேர்தலில் நின்றபோது பகுதி மக்கள் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி குடிநீர் கடலில் யாத்திரீகர்கள் குளித்துவிட்டு வருபவர்களுக்கு உடை மாற்றும் இடம் அய்யர்கள் உட்கார்ந்து காரியம் செய்வதற்கு இடம், உயர் கோபுர விளக்கு இவைகளை செய்து செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.

பிஜேபி தலைவர்கள், இந்துத்துவஆட்கள் முதலியோர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?: நவாஸ் கனிடயுடன் சென்றவர்கள்:

  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.  ஷாஜகான்,  
  • மாவட்ட தலைவர் வருசை முகமது,
  • மாவட்  ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி,
  • மருத்துவ அணி மாவட்ட செயலாளர் பாக்கர் உள்ளிட்டோர்  உடன் சென்றனர், என்று செய்திகள் கூறுகின்றன.

சரி, இந்து அமைப்புகளில், ஏன் ஒருவரும் சென்று, கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

  • கோவில், சம்பிரதாயம், அமாவாசை, புனிதநீர் ஆடுதல், பிண்டம் வைத்தல் அய்யர்கள் உட்கார்ந்து காரியம் செய்வது, முதலியவைப் பற்றி எப்படி ஒரு முகமதியன் அக்கரையாக, உண்மையுடன் விவரங்களை அறிந்து செயலாற்ற முடியும்?
  • அடிப்படை வசதிகள் இல்லாமல் இத்தனை ஆண்டுகள் 1947-2020 வரை மக்கள் எப்படி, அக்காரியங்களை செய்து வந்தார்கள்?
  • முந்தை எம்.பிக்கள் இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • அவர்கள் ஏன் இந்த அடிப்படை விசயங்களில் கவனம் செல்லுத்தாமல், தங்களுடைய பதவ் காலங்களை முடித்துக் கொண்டனர்?
  • எம்.பிக்கு என்று ஒதுக்கப் பட்ட கோடிகள் எங்கு சென்றன? எப்படி செலவழிக்கப் பட்டன?

04-09-2020 அன்று ராமநாதபுரம் வந்த எச்.ராஜா, பிஜேபி: ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த அருண் பிரகாஷ் (24) என்ற இளைஞர் கடந்த ஆக.31-ல் 12 பேர் கொண்ட கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 04-09-2020 அன்று ஆறுதல் கூறினார். பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது[6]: “ராமநாதபுரம் மாவட்டம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனா காலத்தில் இந்தோனேசியா நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார். அப்போதே நவாஸ் கனியை போலீஸார் கைது செய்திருக்க வேண்டும். அவர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதால் எம்பியாக இருக்க அருகதை இல்லாதவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெரியபட்டினத்தில் வெளிமாநிலங்களிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். அவர்களை அப்போது எம்எல்ஏவாக இருந்த ஜவாஹிருல்லா தலையிட்டு விடுவிக்க வைத்தார்,” என்றார்[7].

அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?: இன்றைக்கு முகமதியர், வியாபார ரீதியில், கோவில் சம்பந்தப் பட்ட எல்லா நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் மற்றும் பூஜைகள் பற்றி தெரிந்து கொண்டுள்ளானர். ஏனெனில், அந்தந்த நாட்களில். இந்துக்களுக்கு என்ன வேண்டும் என்பதை சேகரித்து வைத்துக் கொண்டு, 100% முதை 500% வரை லாபம் வைத்து விற்கின்றனர்.  குங்குமம், மஞ்சள், விபூதி, சந்தனம், பன்னீர், வெற்றிலை, சுண்ணாம்பு, கற்பூரம், சாம்பிராணி, பூக்கள், தருப்பைப் புற்கள், பூமாலைகள், பழங்கள், பாத்திரங்கள்…..என்று எல்லாவற்றையும் தயாரிக்கின்றனர், வாங்குகின்றனர், விநியோகிக்கின்றனர், விற்கின்றனர். கோவில்கள், மடங்கள், புண்ணிய ஸ்தலங்கள் அருகில் கடைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். ஒருவேளை புரோகிதர்/ஐயர் இவர்களை அடுத்து, ஒவ்வொரு கிரியை, சடங்கு, பூஜைகளுக்கு என்னென்ன வேண்டும் என்பதை முகமதியர் / துலுக்கர் தான் தெரிந்து வைத்துள்ளனர் எனலாம். அந்நிலையில் இந்துக்கள் ஏன் அந்த அளவுக்கு விசயங்கள் தெரியாமல், ஏமாளிகளாக, அப்பாவிகளாக இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகின்றது. ஏன் மதம் சம்பந்டப் பட்ட இந்த பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள சடங்குகள், மற்ற பூஜை-புனஸ்காரங்கள், கொண்டாட்டங்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை அல்லது அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது திகைப்பாக, வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

11-11-2020


[1] தினமலர்.நெல்லை, சேதுக்கரை மக்களிடம் எம்பி., குறை கேட்பு, பதிவு செய்த நாள் : 01 நவம்பர் 2020 18:48.

[2]http://www.dinamalarnellai.com/web/districtnews/45939/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D–%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

[3] https://twitter.com/knavaskani

[4] தில்.டிவி.நியூஸ், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகிலுள்ள சேதுக்கரையில் உள்ள அருள்மிகு ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலை ராமநாதபுரம் எம்பி நாவஸ்கனி ஆய்வு, November 1, 2020.

[5] http://www.thiltvnews.in/?p=5120 

[6] தமிழ்.இந்து, ராமநாதபுரம் இளைஞர் கொலை வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல், Published : 04 Sep 2020 17:42 pm; Updated : 04 Sep 2020 17:47 pm.

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/574276-ramnad-youth-murder-case-h-raja-demands-nia-inquiry.html