Archive for the ‘பொன்னார்’ Category

தாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

ஜூன் 23, 2017

தாமஸ் கட்டுக்கதைதிருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்! (6)

deivanayagam-devakala-aravindan-neelakandan-rajiv-malhothra

மு. தெய்வநாயகம் யார்?: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.

arunai-vadivelu-mudaliar-md

தெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்?: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.

deivanayagam-johnson-basakara-dos-devalkaa-alva-edison-sameul

சந்தோசம்ஜான் சாமுவேல்தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.

Sanskrit college- N Mahalingam, I. Mahadevan, Sankaranarayanan

மைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா? முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

Mylapore function 08-06-2017-3

தெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா? ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான்! அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.

© வேதபிரகாஷ்

22-06-2017

Archdiocesan Pastoral Centre, 25, Rosary Church Road, Santhome

[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991

[2] R. S. Narayanaswami, Deivanayagam gets his due, Organiser, November 7, 1991, New Delhi.

https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[3] Rajiv Malhothra and Aravindan Neelakandan, Breaking India: western Interventions in Dravidian and Dalit Faultlines,  Infinity Foundation, Princeton, USA, 2011. இதில் வேடிக்கை என்னவென்றால், வேதபிரகாஷ் மற்றும் ஈஸ்வர் ஷரண் புத்தகன்ங்களைப் பற்றி எந்த குறிப்பையும் காணோம்.

[4] More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I änd it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India.

Gita Ramaswamy, Yankee Hindutva Strikes A study on Bible-thumping activism ignores titular faultlines, concocts plots couched in anti-imperialism, \23 MAY 2011 BOOKS REVIEW.

http://www.outlookindia.com/magazine/story/yankee-hindutva-strikes/271815

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6]  கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.

[7]

https://ontogenyphylogenyepigenetcs.wordpress.com/2009/07/11/the-first-conference-of-micheal-witzel-of-harvard-university/

[8] While coming out I saw Haran and another were distributing four-page handout about Michae Witzel (while entering I saw Haran and Radha Rajan were arguing with the police). So when I enquired with the police, the organizers had given a complaint asking for protection of the speaker.

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

மே 29, 2016

தனி மனித முக்கியத்துவம், உட்பூசல், மற்றும் தவறான பிரச்சாரம் கூடாது – தமிழக பிஜேபி தோல்வி ஏன் (4)!

பிஜேபியை கிண்டல் அடிக்கும் எஸ்.வி.சேகர்

சமூக வலைத்தளங்களிலும் பிரிவுகள், சண்டைகள்: இந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை முன்னிலைப்படுத்தி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், வைபர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட தனி குழுக்களை வைத்து பிரச்சாரம் செய்தது வெளிப்படையாகவே இருந்தது. தலைவரைப் பற்றி அதிக பதிவுகள், அதிக லைக்குள், கமெண்டுகள் முதலியவற்றை அவர்களது ஆட்கள் உருவாக்கினர். இத்தகைய போட்டியில், வரம்புகளை மீறி, ஒவ்வொரு கோஷ்டியும் மற்றவர்களைப் பற்றி சமூக ஊடகங்களில் முரண்பாடான, தவறான செய்திகளை திரித்துப் பரப்பி விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் சமூக ஊடகங்களை கண்காணிக்க தனியாக ஆட்களை நியமித்து, எதிரணிக்கு ஆதரவாக பதிவிடுபவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பிஜேபி நலன் கருதி, பொதுவான மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டவர்களின் மீதும் இவர்கள் பாய்ந்து, தங்களது தன்மையினை வெளிப்படுத்திக் கொண்டனர். பிஜேபியை விட்டுஆதிமுக, திமுக, பாமக தலைவர்களை லைக் செய்வது, பாராட்டி பதிவுகளைப் போடுவது, அந்த தலைவர்களின் சமூகவலைதளங்களியே அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், தாராளமாக செயல்பட்டார்கள்.

துக்ளக் - அட்டைப்படம் - பிஜேபி பற்றிகுமரி மாவட்டத்தில் கோட்டை விட்ட பிஜேபி: 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை ஒப்பிட்டால் பாஜக கட்சி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது[1].

  1. கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம் முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடுமையான போட்டி இருந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றநிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.
  1. கன்னியாகுமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ்குமாருக்கு அடுத்து, பாஜகவின் விஜயராகவன் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. இதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரசின் விஜயதாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிக வாக்குகள் பெற்றார்.
  1. அதே குமரி மாவட்டத்தின், குளச்சல் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பச்சைமாலைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளார், பாஜகவின் ரமேஷ். இத்தொகுதியில் வெற்றி பெற்றது காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ். அவர் பெற்ற வாக்குகள் ரமேஷ் பெற்ற வாக்குகள் 41167., இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 26028.
  1. குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கும் அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பெரும்பான்மையான தொகுதிகளில், திமுக கூட்டணிக்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. பாஜக வெல்லக்கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுகவின் மணியன் வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தை 37,838 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜகவின் வேதரத்தினம், 3,7086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவற விட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்து பார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாமகவும், அதன்பிறகு பாஜகவும்தான் உள்ளது. மக்கள் நல கூட்டணி போன்றவை அதற்கும் கீழே உள்ளன. பெரும்பாலும் அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளைத்தான் பாஜக ஈர்த்துள்ளது கவனிக்கத்தக்கது[2].

தமிழக பிஜேபியில் பொறாமை, போட்டி, கோஷ்டி-அரசியல் என்ற நிலை மாற வேண்டும்50 லட்சம் புதிய உறுப்பினர்கள் பற்றிய பிரச்சினை: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தேர்லை மனதில் கொண்டு அதிக அளவு பாஜக உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். இதனையடுத்து, களத்தில் குதித்த தமிழக பாஜக, மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் புதிய தொண்டர்களை சேர்த்துள்ளதாக மார்தட்டியது. இதைக்கேட்டு, திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டன..தமிழகத்தில், பா.ஜ., வை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு, ஒருவர், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால், அவர்களை உறுப்பினராக சேர்க்கும் எளிமையான திட்டத்தை, கட்சி மேலிடம் அறிமுகப்படுத்தியிருந்தது. டில்லியில் இருந்து இத்திட்டத்தை, பா.ஜ., தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்படுத்தியது. அதன் முடிவில், தமிழகத்தில், 50 லட்சம் புதிய தொண்டர்கள் சேர்க்கப்பட்டதாக, பா.ஜ., அறிவித்தது.  அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதர ராவ், 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார்[3].

தமிழக பிஜேபி - தேர்தல் 50 லட்சம் உறுப்பினர் - 2016செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை “50 லட்சம் உறுப்பினர்சரிபார்க்கவில்லை: ஆனால், தமிழக தேர்தலில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் டெபாசிட் இழந்தனர். தேர்தலில், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ளவர்கள் ஓட்டளிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளதுஇந்நிலையில், இந்த தேர்தலில் வெறும், 12.28 லட்சம் ஓட்டுகளை மட்டுமே, பா.ஜ., பெற்றுள்ளது[4]. செப்டம்பர் 2015லிருந்து மே 2016 வரை இதனை சரிபார்க்கவில்லை என்று சொல்லமுடியாது. அதுவும், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை காட்டிலும், கூடுதலாக, 4.1 லட்சம் மட்டுமே பெற்றுள்ளது.  அப்படியென்றால் மீதமுள்ள, 38 லட்சம் ‘மிஸ்டு கால்’ உறுப்பினர்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால், ‘நிஜமாகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனரா’ என்ற கேள்வி எழுந்து உள்ளது[5].  இதிலிருந்து 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் போலி என தெரிய வந்துள்ளது. அது மட்டும் அல்ல, 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேரத்தாக கூறி, தேசிய தலைவர் அமித் ஷாவையே ஏமாற்றியுள்ளனர் என பாஜகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் குமுறுகின்றனர்[6]. இதனை தமிழ்.வெப்துனியா என்ற இணைதளம், “அமித் ஷா-வுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக” என்று நக்கலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7].

Ramesh BJP Tamil Nadu

Ramesh BJP Tamil Nadu

தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா[8]: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவர்கள் மீது கடும் கோபமடைந்துள்ளனராம். பிரச்சாரக் கூட்டத்திற்கு கூட்டம் சேரவில்லை என்பது ஒரு கோபம். இன்னொரு கோபம், வலிமையான கூட்டணியை அமைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் தவறியது. அதை விட பெரிய கோபம், தமிழக பாஜகவில் நிலவும் மிகப் பெரிய கோஷ்டிப் பூசல். இத்தனை கோஷ்டிகளோடு இருந்தால் எப்படி உருப்பட முடியும் என்று கோபமாக கேட்டாராம் மோடி. அமித் ஷாவுக்கு வந்த கோபத்துக்கு வேறு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. மோடி உள்பட பாஜக தலைவர்கள் யாரையுமே தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை, வரவேற்பு தரவில்லை என்பதே அவரது கவலை கலந்த கோபத்திற்குக் காரணமாம். இது நிச்சயம் லோக்சபா தேர்தலின்போது தங்களுக்குப் பாதகமாக அமையும் என அவர் கவலைப்படுகிறாராம்[9].

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் வளர்கிறதா பாஜக? 4 தொகுதிகளில் 2வது இடம், வாக்கு சதவீதத்தில் 4வது இடம்!, By: Veera Kumar, Updated: Thursday, May 19, 2016, 19:11 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-done-reasonably-well-the-tamilnadu-assembly-election-254085.html

[3]http://www.dinamani.com/editorial_articles/2016/05/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/article3448002.ece

[4] தினமலர், மிஸ்டு கால்உறுப்பினர்கள் பா..,வில்மிஸ்சிங்ஏன்?, மே.21. 2016.02.08.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1526288

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/amit-shaw-bjp-cheating-tamilnadu-116052100023_1.html

[7] தமிழ்.வெப்துனியா, அமித் ஷாவுக்கே அல்வா கொடுத்த தமிழக பாஜக, சனி, 21 மே 2016 (15:14 IST).

[8] தமிழ்.ஒன்.இந்தியா, தாறுமாறாகக் கிடக்கும் தமிழக பாஜக.. காது வரைக்கும் கோபத்தில் மோடி, ஷா!, By: Sutha, Updated: Tuesday, May 10, 2016, 11:06 [IST]

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-amit-shah-upset-over-the-affairs-tn-bjp-253270.html