Archive for the ‘போலீஸ் நடவடிக்கை’ Category

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531