Archive for the ‘இந்து காதல்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜூலை 16, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (3)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ்: உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் நடக்கும் கூட்டத்தினால், விடுமுறை விடப்பட்டது[1]. இந்த தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் சிலர் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்[2]. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நீலகிரி பள்ளிக்கல்வித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, “ஊட்டி அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு கடந்த ஒருவாரமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது[3]. அந்த பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்[4]. இது அரசு சார்பில் கொடுக்கப் படும் இடையூறு, இடைஞல் எனலாம். இதுவும் திராவிடத்துவம் எப்படி இந்துத்துவத்திற்கு இடையூறு செய்கிறது, மறைமுகமாக எதிர்க்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்றீத்தகைய கூட்டங்கள் நடக்கின்றன என்றால், சட்டத்தை மீறிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள்.

அனுமதியுடன் தான் கூட்டம் நடந்தது – பள்ளி விளக்கம்: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்கள் / சாகா / பயிற்சி நடத்தக் கூடாது என்று வெளிப்படையாக தடை செய்து வருகிறது. மாவட்ட பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், ”மாணவர்களின் பெற்றோர் சிலர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,” என்றார்[5].ஐவருக்கு என்ன அங்கு நடக்கும் நிலைமை தெரியாமலா இருக்கும்? போலீஸார் எல்லாம் என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ”ஆர்.எஸ்.எஸ்., கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது,” என்றார்[6]. பிறகு, இந்த நோட்டீஸ், “பரபர செய்திகள்” எல்லாம் ஏன் என்று தெரியவில்லை. 500-போலீஸார் பாதுகாப்பு எனும் போது போலீஸாருக்குத் தெரிந்திருக்கிறது. போலீஸாருக்கு கன்னத்தில் அறை, ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ், இந்த இரண்டு விசயங்கள் தான் பெரிய செய்திகள் போன்று நாளிதழ்களில், இணைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இதுவும் திட்டமிட்ட செயலா? எப்படி செய்திகளை சேகரிக்கவேண்டும், போட வேண்டும் என்று தெரியாத நிலையிலா ஊடகக் காரர்கள் இருக்கிறார்கள்? ஆக ஊடகக்காரர்களில் பெரும்பாலோர் திராவிடத்துவத்தை ஆதரிக்கும், இந்துதுவவிரோத சக்திகளாக இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

மணிப்பூர் கலவரம் கவலை அளிக்கிறது: பைடக்கின்/ கூட்டத்தின் போது மணிப்பூரின் தற்போதைய நிலை குறித்து தீவிர கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைதி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் தேவையான உதவிகளை வழங்க ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[7]. ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது[8]. பரஸ்பர நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் அமைதியை நிலைநாட்டுவதற்கும் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், நிரந்தர அமைதி மற்றும் மறுவாழ்வுக்காக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட மக்கள் நிச்சயமாக அரசின் மீது பெருமளவில் அதிருப்தியுடன் இருப்பர். இப்பொழுதே ஆப்-கட்சி வெள்ளத்தை அரசியலாக்க ஆரம்பித்து விட்டது. கூட அசாம் வெள்ளமும் சேர்ந்து விட்டது, ஆகவே அரசு எல்லாவற்றையும் கனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வெள்ள நிவாரணம் சங்கம் ஆற்றிய / ஆற்றவேண்டிய பணிகள்: மண்டி, குலு மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் டெல்லியின் பிற மாவட்டங்களில் சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சங்கம் நடத்திய சேவை நடவடிக்கைகளை பைடக் மதிப்பாய்வு செய்தது. எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அற்றியும் பரிசீலிக்கப்பட்டது. சமீபத்திய பேரிடர்களின் போது பல்வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் அனைவருடனும் பகிரப்பட்டன. சங்க சகாக்கள் தங்கள் சமூகப் பொறுப்புகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு சமூக மற்றும் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வலியுருத்தப் பட்டது. பைடக்கில் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவப் பரிமாற்றங்கள் பற்றிய விவாதங்கள் இடம்பெற்றன. இந்த திசையில் ஒவ்வொரு சங்க ஷாகாவின் தீவிர ஈடுபாட்டை அதிகரிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.

சங்கத்தின் சாகாக்கள் முதலியன: 2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலும் இருந்து 21,566 ஷிக்ஷார்த்திகளின் [பயிர்ச்சியார்கள்] பங்கேற்புடன், சங்கத்தின் பிரதம் [முதல்], த்விதியா [இரண்டா]மற்றும் திரிதியா [மூன்றாம்] வர்ஷா உட்பட மொத்தம் 105 சங்க சிக்ஷா வர்கங்கள் [பயிற்சி வகுப்புகள்] நடத்தப்பட்டன[9]. இதில், நாற்பது வயதுக்குட்பட்ட 16,908 சிக்சார்த்திகளும், நாற்பது முதல் அறுபத்தைந்து வயதுக்குட்பட்ட 4,658 சிக்ஷார்த்திகளும் கலந்து கொண்டனர்[10]. பைடக்கில் பெறப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 39,451 இடங்களில் சங்கத்தின் மொத்தம் 63,724 தினசரி ஷகாக்கள் செயல்படுகின்றன, மேலும் 23,299 சப்தாஹிக் மிலன்கள் (வாராந்திரக் கூட்டங்கள்) மற்றும் 9,548 மாசிக் மண்டலிகள் (மாதாந்திர வட்டங்கள்) மற்ற இடங்களில் உள்ளன. பைதக் செயல்பாடுகளின் எதிர்கால விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் நூற்றாண்டு ஆண்டுக்கான சங்கத்தின் சதாபதி விஸ்தாரக் யோஜனா (நூறாண்டு விரிவாக்கத் திட்டம்) ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்தது. 2025 நூற்றாண்டு என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நாத்திகம்-செக்யூலரிஸம்-பெரியாரிஸம்: திராவிடத்துவமா-இந்துத்துவமா என்றால் மக்களிடம் சென்று பேசவேண்டும். திராவிடத்தை, பெரியாரிஸத்தை, பகுத்தறிவு நாத்திகத்தை வைத்துக் கொண்டு 70-100 ஆண்டுகளாக இந்து விரோதமாக இருந்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. இப்பொழுது, திராவிடத்துவவதிகளைத் தவிர, அவர்களது குடும்ப அங்கத்தினர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பதும் தெரிகிறது. கருணாநிதி குடும்பமே வெளிப்பட்டு வருகிறது. அந்நிலையில் கருணாநிதி பாணியில், ஸ்டாலின் வேண்டுமானால், தொடர்ந்து, இந்துவிரோதத்தைப் பின்பற்றலாம், மைனாரிடி / சிறுபான்மையினர் உதவியுடன் ஆட்சி-அதிகாரம் பெறலாம், ஆனால், மக்கள் கவனித்துக் கொண்டே வரும் நிலையில், அறிந்து, புரிந்து கொள்ளும் பொழுது எனாகும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்காக ஒரு வாரம் விடுமுறை: ஊட்டி தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்,, தினத்தந்தி, ஜூலை 16, 6:24 am.

[2] https://www.dailythanthi.com/News/State/one-week-off-for-rss-meeting-ooty-private-school-served-notice-seeking-explanation-1009012

[3] விகடன், ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒருவாரம் விடுமுறைதனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ், சதீஸ் ராமசாமி, Published:Today at 7 PMUpdated:Today at 7 PM

[4] https://www.vikatan.com/education/school-education/rss-ooty-conference-controversy-education-department-notice-to-school

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்துக்கு முறையான அனுமதி: ஊட்டி பள்ளி நிர்வாகம் விளக்கம், Added : ஜூலை 15, 2023  20:23

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3376855

[7] Times of India, RSS takes stock of efforts during Manipur violence, recent floods at annual meeting in Ooty, TIMESOFINDIA.COM / Jul 15, 2023, 19:04 IST.

[8] https://timesofindia.indiatimes.com/india/rss-takes-stock-of-efforts-during-manipur-violence-recent-floods-at-annual-meeting-in-ooty/articleshow/101785131.cms?from=mdr

[9] NewsRiveting, Akhil Bharatiya “Prant Pracharak Baithak” of RSS concludes in Ooty, July 15, 2023 – by Editor

[10] https://newsriveting.com/akhil-bharatiya-prant-pracharak-baithak-of-rss-concludes-in-ooty/

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

ஜனவரி 26, 2012

இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை!

காதல் மதத்தைக் கடந்ததா? விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்லை. குறிப்பாக முஸ்லீம் / கிருத்துவர்கள் காதலில் “ஒரு வழி” பாதைத் தான் கடைப் பிடிப்பார்கள். முதலில் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, மதம் மாறச் சொல்வார்கள். பிறகு, உறவினர்களை மாறச் சொல்வார்கள், அல்லது மாற்றச் சொல்வார்கள். கடவுளை மாற்றியப் பிறகு தான், இந்த வற்புறுத்தலான மாற்றங்கள். பிறகு, ஏகப்பட்ட மன-உளைச்சல்கள். பெற்றோர்களையே மறந்துவிட வேண்டும். சகோதர-சகோதரிகளை பார்த்தால் கூட பேச முடியாது. உற்றார்-உறவினர்கள் ஒதுங்கி விடுவார்கள் அல்லது ஒதுக்கப் படுவார்கள். சம்பிரதாயங்கள், பழக்க-வழக்கங்கள் எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால்,புரியாத இளைஞர்கள் அத்தகைய காதலில் வீழ்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள், மாய்கிறார்கள், மாய்த்துக் கொள்கிறார்கள்.
ஷாஜிதாவை காதலித்த சந்தானம்: சென்னையை அடுத்துள்ள வண்டலூர் கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து வருபவர் ஜியாவுதீன். இவரது மனைவி தவுசிக் நிஷா (39). இவர்களுக்கு ஷாஜிதா (19), ஷர்மிதா (17) என்ற 2

வாலிப வயதில் காதல் போன்ற உணர்ச்சிகள் வருவது, உண்மையான காதல் இல்லை, அது காமத்துடன் கூடிய எண்ணம் தான். இப்பொழுதுள்ள, நண்பர்களின் சகவாசம், சினிமாக்கள் பார்ப்பது, பேசுவது முதலியனத்தான் அச்த்தகைய உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, படிக்கின்ற வயதில் காதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள இன்னொரு கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஷாஜிதாவை அதே கல்லூரியில் படித்து வந்த சந்தானம் (20) என்ற வாலிபர் தீவிரமாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வதற்காக பலமுறை வீட்டுக்கு சென்று சந்தானம் பெண் கேட்டுள்ளார். இதற்கு ஷாஜிதாவின் தாய் தவுசிக் நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த தாய் தவ்ஹீத்நிஷா, மகளை கண்டித்தார். அத்துடன் சந்தானத்துடன் பழகவும் தடை விதித்தார். ஆனால் சந்தானம் காதலை விடவில்லை. ஷாஜிதாவை பின் தொடர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தவுசிக் நிஷாவை தனியாக சந்தித்து சந்தானம் பலமுறை பேசி உள்ளார். இருப்பினும் தவுசிக் நிஷா மனம் மாறாமல் தனது முடிவில் தெளிவாக இருந்தார்.

பேண் கேட்டு வந்த சந்தானம் குடும்பமும், மறுத்த முஸ்லீம் பெற்றோர்களும்: இந்த சூழ்நிலையில் கடந்த 19ம் தேதி சந்தானம், தனது பெற்றோர் மற்றும்

இத்தகைய தடைகள் இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏதோ, ஒரு செக்யூலரிஸ நாட்டிலடீருக்கிறோம் என்று கனவு காண வேண்டாம். இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான். கிருத்துவத்திலும் அதே கதிதான்.

உறவினர்களுடன் கியாஜூதீன் வீட்டுக்கு வந்தார். முறைப்படி சர்மிதாவை திருமணம் செய்து தரும்படி தவ்ஹீத் நிஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாங்கள் வேறு மதம் என்பதால் திருமணத்துக்கு எந்த வகையிலும் உறவினர்கள் சம்மதிக்க மாட்டார்கள். எனவே, மகளை இனி பார்க்க கூடாது, பேசக்கூடாது” என்று கூறியுள்ளார்[1]. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்தானம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயைக் கொலைசெய்த் காதலன்[2]: இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சந்தானம் கல்லூரி வளாகத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த தவுசிக் நிஷாவிடம், ஷாஜிதாவை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். நான் அவளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறியுள்ளார்[3]

காதல், திருமணம் என்று வரும்போது, மதம் குறிக்கிடத்தான் செய்கிறது. இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் “ஒரு வழி” தான், அதாவது, காதலிக்கும் முஸ்லீம் அல்லாதவர், முஸ்லீமாக மாறினால் தான், காதல், இல்லையெனில் சாதல் தான்.

இதற்கு தவுசிக் நிஷா, வேறு மதத்தை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்துக்கு இது ஒத்து வராது. எனவே ஷாஜிதாவை தொந்தரவு செய்வதை விட்டு விடு என்று கூறியுள்ளார். இது சந்தானத்துக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திடீரென ஆவேசமடைந்த சந்தானம் தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து தவுசிக் நிஷாவை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதி உள்ளிட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தப் படியே தவுசிக் நிஷா வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் சந்தானம் ஈவு இரக்கமின்றி வீட்டுக்குள்ளேயே விரட்டிச்சென்று தவுசிக் நிஷாவை துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றார். பின்னர் சந்தானம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்[4].

கொலை செய்த காதலன், தப்பி ஓட்டம்: இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டேரி போலீசார் அங்கு விரைந்து சென்று தவுசிக் நிஷாவின் உடலை கைப்பற்றி செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீடு முழுவதும் ரத்தக் கறையாக

நினைத்தது நடக்கவில்லை, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடையும் போது, மனிதனை இந்த அளவிற்கு கொலை செய்யத் தூண்டுகிறது. அதாவது, காதலைத் தடுப்பது என்ன, யார் என்று அடையாளம் காணும் போது, அத்தடையை நீக முயன்ற காதலனின் விரக்தி கொலையில் முடிந்துள்ளது. ஆனால், சட்டப்படி அவன் தப்ப முடியாது.

காட்சி அளித்தது. சந்தானம் பதட்டத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ஒரு அரிவாளை அங்கு விட்டுச் சென்றுள்ளார். அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். தவுசிக் நிஷாவை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற சந்தானம் சப்-இன்ஸ்பெக்டரின் மகன். இவரது தந்தை பெயர் சந்திரபாபு. இவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். தவுசிக் நிஷாவை தீர்த்துக்கட்ட சந்தானம் திட்டம் போட்டு வேலை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த கொலைக்கு சந்தானத்தின் நண்பர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். தலைமறைவாகி விட்ட அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இன்று காலையில் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள்.

விஜய் டிவி விவாதம் நடமுறைக்கு வராது: விஜய் டிவியில், “நீயா, நானா” என்ற நிகழ்ச்சியில், பல முறை, வாழ்க்கையில் ஒரு சிலர் செய்து வரும் காரியங்களை, ஒட்டு மொத்தமாக அனைவருமே சமுதாயத்தில் செய்து வருகின்ற மாதிரியும், அதனால், சமூகத்தில் ஏதோ பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது போலவும், குறிப்பிட்ட, தேர்ந்தெடுக்கப் பட்டவரளை வைத்துக் கொண்டு, வலிந்து, தங்களது கருத்துகளை பார்வையாளர்களின் / நேயர்களின் மீது திணிக்க யத்தணித்து வருகிறது. அப்படித்தான், ஒன்று / இரண்டு நிகழ்ச்சிகளில், மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

மதம் கடந்து காதல், திருமணத்தால் யாருக்கு லாபம்? அதில் இந்து காதலி தான், முஸ்லீம் / கிருத்துவ காதலனுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளாள். அதே போலத்தான் இந்து காதலன், முஸ்லீம் / கிருத்துவ காதலிக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளான். ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று விவாதிக்கவில்லை. அதாவது, காதல் மதத்தைக் கடந்து என்பது இஸ்லாம் / கிருத்துவ மதங்களைப் பொறுத்த வரைக்கும் பொய் என்றேயாகிறது.

ஏன் முஸ்லீம் / கிருத்துவ காதலன் / காதலி தங்களது மதத்தைத் துறந்து இந்து காதலி / காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது: இதற்கு “முடியாது” என்று முஸ்லீம்கள் / கிருத்துவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், பள்ளியில், கல்லூரியில் படிக்கும் இந்து மாணவ-மாணவியர் முஸ்லீம்-கிருத்துவ மாணவி-மாணர்களுடன் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதே போல பணி புரியும் இடங்களில் வஇருக்கும் இந்துக்கள் முஸ்லீம்-கிருத்துவர்களிடம் அதிக அளவில் நட்பு வைத்துக் கொள்ளவேண்டாம். அதாவது, நட்பு என்ற எல்லைகளை கடந்து காதல் என்று நிலை வரவேண்டாம். ஏனெனில், பிரச்சினைகள் தாம் வரும், குடும்பங்கள் பாதிக்கப் படும், உறவுகள் துண்டிக்கப் படும். அதாவது, பெருமளவில் இந்துக்களுக்குத் தான் எல்லா விதங்களிலும் பாதிப்பு ஏற்படும். அதையும் மீறி காதலித்து, கல்யாணம் செய்து கொண்டால், ஏதோ பெரிய தியாகம் செய்து, எல்லாவற்றையும் துறந்த நிலை தான் ஏற்படும். குறிப்பாக இந்துப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப் படுவார்கள். இவையெல்லாம், அந்த நிகச்ழ்ழிகளிலேயே தெரிய வருகிறது. இருப்பினும், தணிக்கை செய்து, மழுப்பி அத்தகைய எண்ணம் உருவாகாதவாறு நிகழ்ச்சியை அமைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

26-01-2012.


[2]

[4] நக்கீரன், காதலியின் தாயை வெட்டிக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் தப்பி ஓட்டம், http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=69381