Archive for the ‘நாவல்’ Category

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)

மார்ச் 9, 2015

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (2)

Periyar statue in front of Sri Rangam Gopuram

திருமாவளவனின் அதிகப்பிரசிங்கத் தனமான பேட்டி: இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்[1],  ‘தாலி பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா அல்லது பெருமைப்படுத்துகிறதா?’ என்ற தலைப்பில் ‘உரக்கச் சொல்லுங்கள்’ என்ற நிகழ்ச்சி உலக மகளிர் தினத்தில் ஒளிபரப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என்று கூறி நேற்று அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்துக்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர்.  இவர்கள் இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி அலுவலகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு இருக்கும்போதே இன்று (08.03.2015) புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்துக்கு எதிரில் அந்தத் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளரை நான்கைந்து லாரிகளில் வந்து இறங்கிய ஒரு கும்பல் தாக்கியிருக்கிறது. அவரது காமிராவும் உடைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிருபரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இந்தத் தாக்குதல் போலிஸ் அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே நடத்தப்பட்டும் அவர்கள் தடுக்கவில்லை. தாக்கியவர்களை இதுவரை கைதுசெய்யவும் இல்லை என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது, என்று சொல்லியிருக்கிறார்.

 Indian soldier beheaded - wife cries demands for head

தாலி மறுப்புத் திருமணங்கள் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன: திருமாவளவன் தொடர்கிறார், தாலி மறுப்புத் திருமணங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தாலி நீக்கும் பொது நிகழ்ச்சிகளும் நடந்துவருவதை நாம் அறிவோம். திருமணமானவர் என்பதன் அடையாளமாகப் பெண் மட்டும் தாலி அணிந்துகொள்ளவேண்டும் ஆனால் ஆணுக்கு எந்த சின்னமும் தேவையில்லை என்பது ஆணாதிக்க அணுகுமுறை தவிர வேறில்லை. இதைப்பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துகள் தெரிவிக்கப்பட்டன என்பது தெரியாமலேயே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சுயமரியாதை / சீர்திருத்தத் திருமணங்கள் சட்டரீதியில் எந்தநிலையை அடைந்து, பிறகு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர் என்பதெல்லாம் அறிந்த விசயமே.

 OLYMPUS DIGITAL CAMERA

தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்: திருமாவளவன் தொடர்கிறார், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மதவாத வன்முறைகளுக்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாக இருக்கிறது. அரசியல் தளத்தில் செல்வாக்கு இல்லாத மதவெறி சக்திகள், பண்பாட்டுத் தளத்தில் வன்முறையை ஏவி தமது இருப்பைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றன.  இத்தகைய மதவெறி வன்முறைக்கு ஜனநாயக அமைப்பில் இடம் கொடுக்கக்கூடாது.  தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.  கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலைக் கண்டித்து மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்[2].

இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது உண்மையா, பொய்யா? செய்திகள் வெளியிடப்பட்டுள்ள விதம், இந்து அமைப்பினர் என்று குறிப்பிட்ட அமைப்பினரை குற்றஞ்சாட்டுதல், விவாதத்தின் தலைப்பு, கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது முதலியன, பாரபட்சத்துடன் இருக்கின்றன என்பதனை, ஒரு சாதாரணமான வழிபோக்கன், பார்வையாளன் அல்லது யாருக்கும் புரிந்த விசயமாகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, போக்கு, திட்டம் உள்ளது என்றும் கூறலாம். அதாவது, இந்துக்களை எதிர்ப்பதாக உள்ளது என்று தெரிகிறது. இந்துக்களைத் தாக்கும் போக்கு ஏன் என்பதை யாரும் விளக்குவதாக இல்லை. அதுதான் செக்யூலரிஸம் ஆகும் என்று இரச்சாரம் செய்து ஏற்புடைய கருத்தாக வைத்திருப்பது முதலியனவும் சரியாகாது. இந்து அமைப்பினரை எதிர்ப்பது வேறு, இந்துக்களை எதிர்ப்பது வேறு என்பது இவர்களுக்கு  தெரிந்திருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இரண்டும் ஒன்றே என்பது போல தாக்குதலில் உட்படுத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல.

மற்ற மதங்களிலிருந்து உதாரணங்களை விவாதத்திற்கு உட்படுத்துவதில்லை: இதே மாதிரி, மற்ற உதாரணங்களை, மற்ற மதங்களிலிருந்து எடுத்து விவாதித்ததில்லை என்பதிலிருந்து, இந்துக்களைத் தாக்கவேண்டும் என்ற திட்டம் தெரிகிறது. தாலி போன்ற அடையாளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மோதிரம், பர்தா, முத்தம் என்ற பலவிசயங்கள் உள்ளன, ஆனால், அவை விவாதிக்கப்படுவதில்லை. இதைப் பற்றி எந்த டிவியிலும் பேசுவதில்லை, விவாதிப்பதில்லை. மேலும், இந்து அமைப்பினர் தாக்கினர் என்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எல்லோருமே கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் சித்தாந்திகளாக இருப்பதும், இந்து-விரோத போக்கை எடுத்துக் காட்டுகிறது. தொடர்ந்து இவ்வாறு இந்து-எதிர்ப்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது, ஒருதலைப்பட்சமான கருத்து திணிப்பு, அதற்கேற்றாற்போல, ஆட்களைக்கூட்டி வந்து பேச வைப்பது, காட்டிய நிகழ்ச்சியை திரும்ப-திரும்ப காட்டுவது, இதனை மறுத்தால், மறுப்புக் கருத்து தெரிவித்தால், அதனை தடுப்பது, மறைப்பது, மேலும் அவை கம்யூனலிஸம் என்பது என்ற போக்கு நடந்த வருகின்றது.

கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால்,  மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே? நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் ஷா பானு வழக்கு, சிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது, சல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை, உஸைன் சித்திரங்கள், பொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேசிய கீதம் பாடுவது, அதற்கு மரியாதை கொடுப்பது, மறுப்பது (ஜெஹோவா விட்னெசஸ்) என்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139195

[2] நக்கீரன், புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம் , 10-03-2015.

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

ஜனவரி 19, 2015

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro  in New Delhi on June 8, 2010.

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro in New Delhi on June 8, 2010.

சிவப்பு கலர் புடவை புத்தகத்திற்கு காங்கிரஸார் எதிர்ப்பு: “தி ரெட் சாரி” [The Red Sari] என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ [Javier Moro] எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை [terror campaign] துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார்[1]. வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன[2]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

காங்கிரஸ் எதிர்ப்பு 2010 முதல் 2015 வரை:  புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார். கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது[3]. அப்புத்தகம் அயல்நாடுகளில் கூட விற்கக்கூடாது என்று காங்கிரஸார் கூக்குரல் இடுகின்றனர்[4].  அபிஷேக் மனு சிங்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் என்று நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறார், அது நாங்கள் அப்புத்தகத்தம் வெளியிடுவதைத் தடுக்க முடியாது, என்று ரோலி பதிப்பகத்தினர் கூரியுள்ளனர். மேலும், ஜாவியர் மாரோ தான் 2014 நடந்த விவரங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்[5]. அதன்படியே 15-01-2015 அன்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது[6].

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

காங்கிரஸ் மெயில் மூலம் ஸ்பெயின் பதிப்பகத்தாருக்கு மிரட்டல்[7]கருத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நேரத்தில், இப்புத்தகத்தை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், பிறகு அமைதியாகி விட்டதும், வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ் (2008), இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர். தேவையில்லாமல், இவ்விசயத்தை காங்கிரஸ்காரர்கள் ஊதிபெரிதாகி விட்டனர், என்று கூறியுள்ளார்[8].

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா பிஸ்ஸா சாப்பிடுவது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லைஜாவியர் மாரோ தொடர்கிறார், “அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள “லா பிஸ்ஸா” என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று. இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான்.  ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?”.

 Sonia picture

விமான பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பிய சோனியா விமானவோட்டியை மணந்து கொண்டது: ஜாவியர் மாரோ விளக்குகிறார், “இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே “தி ரெட் சாரி” என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார். சோனியா உயர்குடியில் [ aristocrat] பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் (“இரவில் கிடைத்த சுதந்திரம்” என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை (சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சோனியாவிடம் சொன்னதாவது, “நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்”, என்றார். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதிலரந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கி போயிருந்தார் என்ற கருத்தில் அவ்வாறு கூறினார். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்[9]; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: “நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை”.

 Sonia angry

ஜாவியர் மாரோ காங்கிரஸ் என்னை ஏன் எதிர்க்கிறர்கள் என்று தெரியவில்லை: சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன. “இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் ” என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது. சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை[10]. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை[11]. இவ்வாறு அவர் கூறியுள்ளார்[12].

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மோடியும், சோனியாவும்: ஒரு ஆங்கில டிவி (ஐ.பி.என்.லைவ்) செனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூட, தானாக, சோனியாவைப் பற்றி எந்தவித விசயத்தையும் தவறாகக் கூறவில்லை, மற்றும் சர்ச்சைக்குரியது என்று சொல்லப்படுகின்ற விசயங்கள் எல்லாம், ஏற்னவே எல்லொருக்கும் தெரிந்தவை மற்றும் புபுல் ஜெயகர் போன்றோரின் புத்தகங்களிலும் அவ்விவரங்கள் அடங்கியுள்ளன. நிருபர்வ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மறுக்க்லாமல், நேரிடையாகவே பதிலளித்தார். “மோடி தனது கீழிருந்து மேலே வந்தநிலையை மறைக்காமல், தான் ரெயில்வே நிலையத்தில், டீ விற்றுக் கொண்டிருந்ததை தெரிவித்தார், ஆனால், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் ஆரம்பத்தை மறைக்க முயல்வது ஏன்”, என்று பதிலளித்தார். “மோடியைப் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?”, என்று கேட்டதற்கு, எழுதுவேன் என்றார்!

 Who-is-qutrochi-dinamalai

ஜாவியர் மாரோவும், பெருமாள் முருகனும்: ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் எதிர்க்கப் பட்டிருக்கின்றன, ஆனால், சோனியா புத்தக எதிர்ப்பு நமது நாட்டிலேயே சிறியதாக்கி, அமுக்கி வாசி, அமுக்கியே விட்டனர். ஆனால், பெருமாள் முருகன் புத்தக விவகாரமோ, பெரியதாக்கி, அனைத்துலக விசயமாக்கப்பட்டுள்ளது. “தி ஹிந்து”வின் இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. சென்னையில், ஏதோ இலக்கிய விழா நடத்துகிறோம் என்று, தினம்-தினம், “மாதொருபாகன்” புத்தகத்தைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால், “சிவப்புப் புடவையை”ப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இருவேளை சிவப்பு நிறம் என்பதனால், அப்படி அனுதாபத்துடன் (கம்யூனிஸ சார்பு என்பதால்) நடந்து கொண்டதா என்று தெரியவில்லை. அவ்விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் மிகசாமர்த்தியமாக அமைதி காத்தனர், ஆனால், பெருமாளைப் பற்றி இன்று வரை “தி ஹிந்து” செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

[1] தினமலர், சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு “யுத்தம்”: எழுத்தாளர் வேதனை, ஜபனவரி.19, 2015.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127575

[3] http://tamil.oneindia.com/news/india/controversial-sonia-gandhi-book-now-in-india-219023.html

[4] http://www.india.com/news/india/the-red-sari-the-story-behind-the-controversial-book-on-sonia-gandhi-251335/

[5] http://www.thehindu.com/news/national/did-not-obstruct-book-on-sonia-congress/article6794558.ece

[6] http://timesofindia.indiatimes.com/india/Moros-controversial-book-on-Sonia-hits-stands-in-India/articleshow/45904070.cms

[7] http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[8] http://indianexpress.com/article/india/india-others/sonia-book-blown-out-of-proportion-by-congs-poor-pr-people-moro/

[9] “She is no aristocrat, but Congress wants to make her royalty .” Moro says he’s met the Congress president once when his uncle, Domnique Lapierre (author of `Freedom at Midnight’), was receiving the Padma Bhushan. He walked up to her and said “I’ve been sleeping with you for four years.” He meant he’d been obsessed with her while writing the book. “She was shocked, then managed to laugh. The only line she ever said to me was: ‘We never read anything that’s published about us.'” She abhors the press, hates being talked about and every time he tried to meet her, she was always totally “closed”.

http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[10] தினகரன், சோனியா புத்தகம் காங். எதிர்ப்பு ஏன் ஆசிரியர் புலம்பல், 18-01-2015,05.56.04, சனிக்கிழமை

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127726

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1164490

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

ஜனவரி 17, 2015

மாதொரு பாகன்நாவல்எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (1)

 

One part woman -மாதொருபாகன்

One part woman -மாதொருபாகன் – அர்த்தநாரீஸ்வரர்

2010ல் பதிப்பிக்கப்பட்ட மக்களால் அறியப்படாத நாவல்: “மாதொரு பாகன்” என்ற பெயரில் பெருமாள் முருகன் என்பவரால், ஒரு நவீனம் / நாவல் எழுதப்பட்டு, புத்தகமாக 20010ல் வந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2010, திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, மூன்றாம் பதிப்பு 2012 என்று வெளியிட்டது. அப்பொழுது அதைப் பற்றி எந்த தகவலோ, செய்தியோ, ஒன்றும் கிடையாது. அப்புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது பற்றி ஊடகங்களில் யாரும் விவரிக்கவோ, விவாதிக்கவோ இல்லை. முற்போக்கு (forward looking, liberal, free) மற்றும் பிற்போக்கு (retrograde, conservative, closed) எழுத்தாளர்கள், முன்னேற்ற (progressive, enlightened, open-minded) மற்றும் பின்னேற்ற (regressive, closed-minded) வகையறாக்கள் படித்து, முன்னவர், பின்னவரை “பாசிஸக்காரர்கள்” (fascist, repressive, oppressive) என்றெல்லாம் ஏசவில்லை. “கவுண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தவில்லை. “கொங்கு தேசிய மக்கள் கட்சி” கடையடைப்பு போராட்டம் நடத்தவில்லை. யாரும் இந்துத்துவவாதிகள் என்றும் அடையாளம் காணப்படவில்லை, திராவிடத்துவவாதிகள், நாத்திகவாதிகள், கம்யூனிஸ்டு வகையறாக்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பேட்டிக் கொடுக்கவில்லை, ஆர்பாட்டம் நடத்தவில்லை. பிறகு எப்படி பிரச்சினை வந்தது?

 

One part woman -Arthanareswara

One part woman -Arthanareswara

2010, 2011, 2012, 2014களில் இல்லாத பிரச்சினை 2015ல் ஏன் வந்தது?: தமிழில் எழுதப்பட்ட “மாதொரு பாகன்” நாவல் 2010ல் வெளிவந்தது, யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் 2013ல் அநிருத்தன் வாசுதேவன் என்பவரால் ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யப் பட்டு, பெங்குவின் பதிப்பகத்தினரால் “One Part Woman” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அப்பொழுதும் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. டிசம்பர் மாதம் 2014 முதல் இப்பிரச்சினை ஆசிரியர் மற்றும் அவர்களது நண்பர்கள் மூலமாகத்தான் வெளி வந்தது என்று தெரிகிறது. பேஸ்புக்கில் இதைப் பற்றிய விவாதத்தை சிலர் ஆரம்பித்து வைத்தார்கள். அதனால், அது அப்புத்தகத்தை விளம்பரப் படுத்தும் யுக்தி என்றும் சங்கேகிக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம், ஒரு புத்தகம் அல்லது சினிமா பிரபலமாக்க வேண்டும், நன்றாக வசூல் வரவேண்டும் என்றால், அவர்களே எதிர்மறை பிரச்சாரம் செய்வது வழக்கமாக உள்ளது. சில எழுத்தாளர்களே அதை வெளிப்படையாகக் குறிப்பிடவும் செய்தனர்[1]. ஆனால் இந்து அமைப்பு விளம்பரம் தேடுகிறதா? என்று செய்தி வந்தது[2]. ஆனால், உண்மையைச் சொல்ல ஊடகங்களுக்கு திராணி இல்லை என்றே தெரிந்தது.

 

One part woman -Artha-மாதொரு

One part woman -Artha-மாதொரு

டிசம்பர் 2014ல் ஏற்பட்ட எதிர்ப்புகள், உரையாடல்கள் முதலியன: யுவகிருஷ்ணா என்பவர் டிசம்பர் 29, 2014லேயே, அந்நாவலில் உள்ள சரித்திர ஆதாரமற்ற,  ‘கூட்டுக்கலவி’ போன்ற சித்தரிப்பு உள்ளதை கண்டித்து எழுதியுள்ளர்[3]. “கரிக்குருவி” என்பவர், பெருமாள் முருகனின் வாழ்க்கை பின்னணி, சித்தாந்த தாக்கம் முதலியவற்றைக் குறிப்பிட்டு, அவரது திரிபுவாதங்களை எடுத்துக் காட்டியுள்ளார்[4]. தனிமனிதரைப் பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை என்றாலும், அவரது அப்பின்னணி மப்பாங்கை மனவியல் ரீதியில் எடுத்துக் காட்டுகிறது. ராபர்ட் கால்டுவெல் எப்படி சாணர்களின் மீது தனது வெறுப்பைக் கக்கியுள்ளாரோ, அதே போக்கு இவரது எழுத்துகளிலும் தெரிவதை காணலாம். சாணார்களுக்கு பதிலாக இங்கு தாக்கப்பட்டுள்ளவர்கள் கொங்குசாதியினர். கரிக்குருவி மேலும் அவர் எப்படி சித்தாந்தரீதியில் செயல் பட்டார், நிதியுதவி பெற்றார் முதலியவற்றையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்[5]. பிறகு பேராசிரியர். அ.மார்க்ஸ், எழுத்தாளர். வ.கீதா, பேராசிரியர். வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன், எழுத்தாளர். பாரவி, தோழர். விடுதலை ராஜேந்திரன், ஓவியர். மருது, பேராசிரியர். லட்சுமணன், எழுத்தாளர். வெளி ரங்கராஜன், எழுத்தாளர். சுப குணராஜன், இயக்குநர். அம்ஷன் குமார், இயக்குநர். RP அமுதன் முதலியோர் டிசம்பர் 31 2014 மாலை. 4.30 மணி முதல் மாலை 7 மணி வரை அன்று பனுவல், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 41 இப்பிரச்சினைப் பற்றி பேசியுள்ளதாக தெரிகிறது[6]. இவர்கள் எல்லோருமே இடதுசாரி, திராவிட, நாத்திக, கிருத்துவ-முஸ்லிம் ஆதரவுவாதிகள் என்று தெரிகிறது. இணைதளத்தில் சில கருத்து பரிமாற்றங்களும் உள்ளன[7]. எப்படியோ இத்தகைய செயல்களால், இவருக்கு உலக அளவில் செய்திகள் வெளியிடப் பட்டதால், நல்ல விளம்பரமும் கிடைத்துள்ளது[8].

 

Susanna Arundhati Roy casually

Susanna Arundhati Roy casually – அதிமுற்போக்கு எழுத்தாளரான இவரது புத்தகமும் 2014ல் எதிர்க்கப்பட்டுள்ளது!

புத்தகத்தில் உள்ள சில விவரங்கள்: சில பக்கங்களில் உள்ளதை பார்ப்போம். அப்புத்தகத்தில் குழந்தை இல்லாத பெண் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், ஒரு ஆணை தேர்ந்தெடுத்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ரீதியில் எழுதப்பட்டுள்ளது[9]. யார் யாரை வேண்டுமானாலும்……என்ற ரீதயில் அருவருக்கத்தக்க-கொச்சையான வார்த்தைகள்[10],  தேர்த்திருவிழாவை மிகக்கேவலமாக வர்ணித்தல்[11], 14ம் நாள் யார் யாரை வேண்டுமானாலும்……என்ற…தொடர்கிறது, “வெள்ளப்பாட்டி எப்படி இருக்கிறா பாரு.அவுங்கம்மாவுக்கு அவ அப்பிடிப் பொறந்தா தெரியுமா? பதினாலாத் திருநா தந்த சாமி பிள்ள அவ, பையன் வேணும்ன்னு ரண்டாத் தடவையும் அவுங்கம்மா அங்கதான் போனா. அப்படியே பையன் பொறந்தது. எத்தனையோ வருசமா நடந்துகிட்டு வர்ற வழமதான்….” என்று இப்படியும் உள்ளது[12]. “நீ அந்தகாலத்து ஆனாட்டமே பேசறீடா, ஒரு பும்பள சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டா சாதியோட போனா அவ்வளவு தான். ஊர விட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிடுவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடுதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்ததுல பாதிக்குமேல தீண்டாச்சாதித் தண்டுப்பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ”, போன்றவை[13]. இவையெல்லாம் எத்தகைய அளவுகோலை வைத்து நாகரிகமானது என்பதனை ஆதரிப்பவர்கள் விளக்கவில்லை. இத்தகைய கொச்சையான, ஆபாசமான, அசிங்கமான எழுத்துக்களைக் கொண்டுள்ள இவர்கள் எப்படி “எழுத்தாளர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இவர்களால், தமிழ் என்னாகும் என்றும் புரியவில்லை.

 

Tiruchengode Ratha festival - depicted differently

Tiruchengode Ratha festival – depicted differently

ஊர்மக்களின் உணர்வுகளை மதிக்காத, இரட்டடிப்பு செய்துள்ள ஊடகங்கள்: நாவல் என்றால் கற்பனையாக எதையாவது எழுதலாம், ஆனால், குறிப்பாக திருச்செங்கோடு மக்கள் அவ்வாறுதான் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர் என்பது போல அருவருக்கத்தக்கக் கொச்சையான வசனங்கள் கொண்டு எழுதியது ஆபாசமாக இருக்கிறது. இதனால், உள்ளூர் மக்கள் கோபம் கொண்டதில் வியப்பில்லை. அதனால்தான், “எங்கள் ஊர் மக்களின் மனநிலையை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் எழுத்தாளர்களை மதிப்பவர்கள். பெருமாள்முருகனின் அனைத்துப் புத்தகங்களையும் எதிர்க்கவில்லை. ‘மாதொருபாகன்நாவலில் கோயில் திருவிழா பற்றியும், தேர்த் திருவிழா பற்றியும் அவரது தவறான கண்ணோட்டத்தையும் மாற்றக் கோரிதான் எங்கள் போராட்டம் நடைபெற்றது. எங்களின் கோரிக்கை வெளிப்படையானது. மொத்தம் 44 அமைப்புகள் சேர்ந்தே இந்தப் போராட்டத்தைச் செய்கின்றன. காவல் துறைக்கு அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களிலும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆக, வெளிப்படையாகவே நாங்கள் செயல்படுகிறோம் .– ‘திருச்செங்கோடு மானம் காப்போம்அமைப்பு”, என்று அறிவித்துள்ளனர்[14]. நடுநிலையோடு நியாமாகத்தான் கூறியிருக்கிறார். ஆனால், பெருமளவில், அவ்வூர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், கருத்து சுதந்திரம் போர்வையில் உண்மை விவரங்களை மறைத்துள்ளது. இதற்கு ஆசிரிய கொடுத்த விளக்கம் இவ்வாறுள்ளது.

 

நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது (தினமலர்)[15]: கடந்த, 1940களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், ‘மாதொரு பாகன்!’ குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது தான் இந்நூல். தற்போது, நாடு முழுவதும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி இல்லாத சூழலில், குழந்தை பேற்றுக்காக பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர். அதுபோன்ற சமூக வழக்கத்தை தான், பல்வேறு ஆதாரங்களுடன், கற்பனை கதாபாத்திரங்கள் மூலம், நூலில் விவரித்துள்ளேன். இதற்காக, கற்பனையாக ஒரு ஊரையும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறேன். குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணை, ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு, அவ்வூர் மக்கள் அனுப்புகின்றனர். அந்த திருவிழாவில், தனக்கு பிடித்த ஒரு ஆடவனை தேர்ந்தெடுத்து, அந்த பெண் குழந்தைப் பேறு பெறுகிறாள். இது தான், ‘மாதொரு பாகன்’ கதை. இப்படி பிள்ளைப் பேறு பெற வேண்டும் என்பதற்காக, நாயகியை உறவுக்காரர்கள் திருவிழாவிற்கு அனுப்ப முடிவெடுக்க, நாயகன் மறுக்கிறான். இருந்தும் நாயகி, வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு பிள்ளை பேறு நிலையை எட்டுகிறார். இது பிடிக்காததால், நாயகன் தற்கொலைக்கு முயல்கிறான். ‘பாண்டவர்கள், திருதிராஷ்டிரன் ஆகியோர் பிறந்ததும், இந்த முறையில் தான்’ என, மகாபாரதம் சொல்கிறது[16]. இதையெல்லாம் வைத்துத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. கதையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சான்று உள்ளதோடு, நாட்டார் வழக்கு ஆவணங்களும் உள்ளன[17]. பத்து ஆண்டுகளுக்கு முன், முக்தா சீனிவாசனின், ‘அவன் அவள் அது’ படமும், பாலச்சந்தரின், ‘கல்கி’ படமும் கூட, வாடகைத் தாயின் கதையை சித்தரிப்பவை தான்[18]. எந்த இடத்திலும், சமூகம் பயன்படுத்திய வழக்கத்தை, நியாயம் என்றோ தவறென்றோ, நான் சொல்லவில்லை. ஆனால், நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை தடை செய்யக் கோருவதும், என்னை கைது செய்ய வேண்டும் எனச் சொல்வதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை அல்ல. கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலாம்; இல்லை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டு, போராட்டம் நடத்துவதும், நூலை எரிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை”, என்று வாதிட்டுள்ளார்.

 

வேதபிரகாஷ்

16-01-2015

[1] மனுஸ்யபுத்திரன், “….நாளைக்கு விளம்பரத்திற்காகவும் சில பதிப்பாளர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது” – தினமலர், 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[2] தினமலர், நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?, 03-01-2013, சனிக்கிழமை, சென்னப் பதிப்பு, பக்கம்.4

[3] http://www.luckylookonline.com/2014_12_01_archive.html

[4] http://www.karikkuruvi.com/2014/06/blog-post.html

[5] http://www.karikkuruvi.com/2014/12/blog-post_29.html

[6] http://thiru2050.blogspot.in/2014/12/blog-post_62.html

[7] http://www.jeyamohan.in/69124

[8] http://www.huffingtonpost.in/2015/01/13/perumal-murugan_n_6461194.html

[9] அத்தியாயம்,14, ப.87.

[10] அத்தியாயம்.20, ப.116-117.

[11] பக்கங்கள்.84-85.

[12] பக்கம்.115.

[13] பக்கம்.118.

[14]http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6780445.ece

[15] http://www.dinamalar.com/news_detail.asp?id=1152801

[16] ஆனால், அங்கு எந்த சாதியைப் பற்றியும் பேசப்படவில்லை, கொச்சையான வார்த்த பிரயோகமும் இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடே தவறானதாகும்.

[17] பிறகு இல்லை என்பதை கவனிக்கவும். சரித்திரரீதியில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்.

[18] இந்த உதாரணங்களுக்கும், இக்கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே, இந்த ஒப்பீடும் தவறானதாகும், திசைத்திருப்புவதாகும்..