Archive for the ‘ஊன்’ Category

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

நவம்பர் 3, 2015

திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா,எனது உணவு எனது உரிமைஎன்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)?

Tiruvannamalai - beef eating progressive writers.1

Tiruvannamalai – beef eating progressive writers.1

திருவண்ணாமலை என்றாலே, பிரம்மாண்டமான அண்ணாமலையார் கோவில், தீபம், கிரிவலம், ரமண மகரிஷி, ரமணாஸ்ரம், சேஷாத்ரிநாத ஆஸ்ரம், விசிரி சாமியார், ராம்சூரத்குமார் ஆஸ்ரம் என்றெல்லாம் தான் நினைவில் வரும். ஆனால், “முற்போக்கு” என்று பறைச்சாற்றிக் கொண்டு ஒரு கூட்டம் கலவரநிலையை உண்டாக்கி இருப்பது, அதிலும் நடுரோடில் உட்கார்ந்து கொண்டு மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாடுகிறோம் என்று செய்திருப்பது, அந்த புண்ணிய ஸ்தலத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியதாக உள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது. அதாவது, அத்தனை கறவை மாடுகள் இங்குள்ளன. இந்நிலையில், அவ்விடத்தைத் தேர்த்ந்டுத்து, மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாட திட்டமிட்டடு ஏன் என்று தெரியவில்லை. விளம்பரம் வேண்டும் என்றால், சென்னையிலேயே செய்திருக்கலாம். ஆனால், திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால், இதன் பின்னணியை அலச வேண்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட, முரண்பட்ட செய்திகளைக் கொடுத்துள்ளன.

Tiruvannamalai - beef eating progressive writers.2

Tiruvannamalai – beef eating progressive writers.2

போலீஸார் அனுமதி மறுத்தது, சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) ] சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது[1] என்கிறது மாலைமலர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்[2] என்கிறது தமிழ்.வெப்.துனியா. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்[3] என்கிறது மாலைமலர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது[4] என்கிறது புதிய தலைமுறை.  பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது[5] என்கிறது நியூஸ்.7. போலீஸார் அனுமதி மறுத்ததுடன், அதனை வாங்காமல் இருந்ததால் அதனை அவர்களது அலுவலகத்தின் கதவுகளில் ஒட்டப்பட்டது[6]. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[7].  இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ஆக அவர்களது பங்கு இதில் என்னவாக இருக்க முடியும்?

Tiruvannamalai - beef eating progressive writers.3

Tiruvannamalai – beef eating progressive writers.3

உள்ளே கருத்தரங்கம் என்று வெளியே மாட்டிறைச்சி சாப்பிட்டது: 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப் போவது “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா”, திருவிழாவா, அல்லது “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கமா என்பதனை ஊடகங்கள் குறிப்பிட முடியவில்லை. இதனால், ஏற்பாடு செய்தவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றாகிறது. முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது, முறைப்படி அனுமதியளிக்கப் பட்டது, பிறகு மறுக்கப் பட்டது, என்பதெல்லாம் அதனை உறுதி செய்கிறது. மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று அனுமதி வாங்கி விட்டு, பிறகு தெருவில் வந்து “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்” என்று மாறியதால் தான், இந்நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, முதலில் போலீசார் சாதாரணமாக இருந்ததும், பிறகு, தெருவில் மாட்டிறைச்சி பொட்டலங்கள் கொடுத்து சாப்பிடும் போது தான், உண்மை அறிந்து பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, “கேரளா பவன்” போன்றதை, இங்கும் நடத்தி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது தெரிகிறது.

Tiruvannamalai - beef eating progressive writers.5

Tiruvannamalai – beef eating progressive writers.5

திருவிழாவா, ஊர்வலமா?: கருத்தரங்கம் நடத்த வேண்டியவர்கள் தெருவிற்கு வந்தனர். திருவண்ணாமலையில், பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலை சந்திப்புகள் எப்பொழுதும் போக்குவரத்துடன் இருக்கும் என்பது தெரிந்த விசயமே. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், இதனால், விளம்பரம் பெறவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாகிறது. அதனால் தான், தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அதாவது, ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஏற்கெனவே விண்ணப்பதிற்கேணானுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

Tiruvannamalai - beef eating progressive writers.6

Tiruvannamalai – beef eating progressive writers.6

மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக……!: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார்? அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே? எண்னுவதற்குக் கூடவா இவர்களுக்குத் தெரியாதா என்ன?

© வேதபிரகாஷ்

03-11-2015

[1]மாலைமலர், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: 50 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 02, 11:03 AM IST.

[2] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-sudden-cancel-of-beef-eating-program-cpm-officials-arrested-115110100038_1.html

[3] http://www.maalaimalar.com/2015/11/02110352/Struggle-in-Tiruvannamalai-eat.html

[4]  புதிய தலைமுறை, மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை, பதிவு செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:43 AM; மாற்றம் செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:59 AM.

[5] http://ns7.tv/ta/beef-eating-festival-tabloid-tiruvannamalai.html

[6] However, the police denied permission for the event and pasted notices on the doors of the TNPWAA office here intimating them of the same. But the organisers continued to request the police to get some sort of relief viz. permission to hold festival without serving the beef there or conduct the festival at an alternative venue. With the police not budging, the organisers decided to defy the ban.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cops-prevent-beef-biriyani-festival-in-tiruvannamalai/article7831369.ece

[7] http://www.puthiyathalaimurai.tv/tn-police-blocked-the-beef-eating-ceremony-246642.html

[8]  தினமணி, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல், By  திருவண்ணாமலை, First Published : 02 November 2015 02:57 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/Districts/Tiruvannamalai/2015/11/01230708/50-people-arrested-in-the-struggle-to-eat-beef-Tiruvannamalai.vpf

[10]  தினத்தந்தி, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST; பதிவு செய்த நாள்:ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST.

[11] http://www.inneram.com/news/tamilnadu/5008-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html