Posts Tagged ‘ஜாதி’

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?  இது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (3)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்னஇது செக்யூலரிஸ மாடலா அல்லது கம்யூனலிஸ மாடலா? (3)

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்படுதல்: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வழங்கினார்[1]. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 541 மனுக்கள் பெறப்பட்டன[2]. கோவை மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது[3]. இந்த சங்கங்களின் மூலம் கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள மகளிர் மற்றும் ஆதரவற்ற விதவைகள், சிறுதொழில் செய்யவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிர் மற்றும் பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக பொருளாதார உதவி அளித்தல் செயல்படுத்தப்படுகிறது[4]. இந்த சங்கங்களை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய கோவை மாவட்டத்தில் வசிக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களை சார்ந்த சமூக பணிகளில் ஆர்வம் உள்ள தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணிலும், dbcwo-tncbe@nic.in என்ற அலுவலக இ-மெயில் முகவரி மூலமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்[5]. விண்ணப்பதாரர்கள் சமூகப் பணிகளில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் ஆர்வமுடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, குற்றவியல் நடவடிக்கையோ, நீதிமன்ற வழக்கு நிலுவையிலோ இருக்கக்கூடாது[6].

உலாமா நலவாரியம், நிதியுதவி: உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது. பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் உலமா அடையாள அட்டை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது[7]. தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது[8]. இதன் மூலம் பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன[9].

உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்[10]. வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் 60 வயது அடைந்து ஓய்வுபெற்றிருப்பவர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவதற்கு உலமா அடையாள அட்டை அசல், வக்ஃபு வாரியச் சான்று-எந்தப் பள்ளிவாசலில் ஓய்வு பெற்றவர், ஓய்வு பெற்ற சான்று, வேறு அரசுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறவில்லை என்ற வருவாய்த் துறை சான்று, மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -1 என்ற முகவரியை அணுகி பயன் பெறலாம்.

  1. இந்துத்துவ வாதிகளே, பதில் சொல்லுங்கள். கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்று செயல்படுகின்றன, அதுபோல, இந்து மகளிர் உதவும் சங்கம் உள்ளதா?
  2. இந்த கிறிஸ்தவ / முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது.
  3. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது.
  4. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.
  5. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
  6. தலைசிறந்த உள்ளுர் முஸ்லிம்களிலிருந்து ஒருவர் கௌரவ செயலாளராகவும், இரண்டு நபர்கள் கௌரவ இணைச் செயலாளர்களாகவும், மூன்று நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் ஒரு ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.
  7. அடுத்த ஆண்டில் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து நபர்களை மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு இச்சங்கத்தின் பொதுக்குழு தேர்வு செய்யும்.
  8. இதே போல, ஜைன, பௌத்த, சீக்கிய, பாரசீக மற்ற சிறுபான்மையினர்களுக்கும் சங்கம் உண்டா, நிதியுதவி கொடுக்கப் படுமா?
  9. இதெல்லாம், ஹலால்-ஹராம், ஷிர்க்-ஷிர்க்-இல்லை, காபிர்-மோமின், பாவம்-பாவமில்லை போன்ற வகையறாக்களில் வருமா-வராதா?
  10. செக்யூலரிஸம் கடைபிடிக்கும் அரசு, இவ்வாறு மதரீதியில் சங்கங்களை வைத்து, நிதியுதவி கொடுத்து பரபட்சத்தைக் கடை பிடிக்கலாமா?

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] தினமணி, முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி, By DIN  |   Published On : 30th November 2021 01:42 AM  |   Last Updated : 30th November 2021 01:42 AM.

[2] https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/nov/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-40-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-3745199.html

[3] தினமலர், கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களில் சேரலாம்!, Added : நவ 05, 2021  00:18

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2883664

[5] தமிழ்.இந்து, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தில்அலுவல் சாரா உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல், செய்திப்பிரிவு, Published : 06 Jun 2021 03:14 AM, Last Updated : 06 Jun 2021 03:14 AM.

[6] https://www.hindutamil.in/news/todays-paper/regional01/678910-.html

[7] தினமணி, உலமாக்களுக்கு நலவாரியம் மூலம் அடையாள அட்டை, By DIN  |   Published On : 30th November 2018 04:08 AM  |   Last Updated : 30th November 2018 04:08 AM.

[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/nov/30/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-3048534.html

[9] விகடன், உலமாக்களுக்கு அடையாள அட்டைகலெக்டர் அறிவிப்பு!, துரை.வேம்பையன், Published:24 Oct 2017 9 PMUpdated:27 Nov 2018 11 AM

[10] https://www.vikatan.com/government-and-politics/politics/105816-identity-card-will-be-issued-to-ulamakkal-says-karur-collector

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

ஜூலை 10, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (4)

Adrian Moens, a Governor of Cochin, in 1770

1770ல் இல்லாத செப்பேடுகள் 1881ல் எப்படி வந்தன?: மோடி நெதன்யாகுவிற்கு யூத தாமிர பட்டயங்களின் நகல் / மாதிரி கொடுத்ததால் தான்[1], இப்பிரச்சினைகள் வெளி வந்து, விவாதிக்கப் படுகின்றன[2]. அட்ரியன் மொயீன்ஸ் என்ற கொச்சின் கவர்னர் மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டைரக்டர் 1770ல் மலபார் யூதர்களைப் பற்றி எழுதும் போது, அத்தகைய செப்பேடுகள் இருந்ததாக சொல்லப்பட்டதால், அதை பார்க்க ஆசைக்கொண்டதாகவும், ஆனால், பிறகு, அவை கிடைக்க முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டதாக அல்லது அத்தகைய செப்பேடுகளே இல்லை என்று தெரியவந்ததாகக் குறிப்பிட்டார் என்றும், பச்சனன் 1811ல் குறிப்பிட்டார்[3]. கவர்னருக்கே காட்டப்படவில்லை எனும்போது, அவை இல்லை என்பது தான் உண்மையாகிறது. ஆகவே, பச்சனன் ஆராய்ச்சியின் படி, 1770ம் ஆண்டு, கொச்சின் கவர்னரால் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. பச்சனன் பார்த்தவை போலி என்று அவரே ஒப்புக் கொண்டார். எனவே, இந்த தாமிர பட்டயங்கள் மற்றும் செப்பேடுகளைப் பற்றி மறுபடி-மறுபடி பேசுவது, எழுதுவது, விவாதிப்பதும் போலித்தனமாகும், சரித்திர மோசடி ஆகும்.

Vedaprakash reply dated 02-08-2008 to nasrani.net

கிருத்துவப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது (நஸ்ரனி.நெட் உரையாடல்): பலமுறை குறிப்பிட்டது போல, செக்யூலரிஸ பாரதத்தில், அவரவர் மதநம்பிக்கை, அவரவருக்கு உயர்ந்தது தான், ஆனால், அதற்காக அடுத்த நம்பிக்கையாளரை கேலிபேச, அவதூறு பேச, மோசடிகள் செய்து ஏமாற்ற எந்த உரிமையும் கிடையாது. ஆனால், நஸ்ரனி.நெட் என்ற இணைதளத்தில், சிரியன் கிருத்துவர்கள் தங்களது தொன்மையினை நிலைநாட்டிக் கொள்ள இன்றும் பிரச்சாரம், மோசடி முதலியவற்றில் ஈடுபட்டுள்ளனர். அதில் தாக்கப்படுவது, இந்து மதம் தான். அங்குதான் பிரச்சினை வருகிறது. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ளாமல், உண்மையினை எடுத்துக் காட்டுபவர்கள் அக்கூட்டம் வசைபாடி வருகிறது. இருப்பினும், அக்கூட்டத்தில் இருக்கும் சிலர் உண்மையினை கிரகிக்க வேண்டியுள்ளது. என்னுடைய பதிலை இங்கே காணலாம்[4]. இங்கு நானும், தேவபிரியா என்பவரும் பல உண்மைகள், ஆதாரங்கள் முதலியவற்றை எடுத்துக் காட்டினாலும், அவர்களது குறிக்கோள் பொய்களை பரப்ப வேண்டும் என்ற ரீதியில் தீர்மானமாக உள்ளார்கள். நான் ஆர்ச்பிஷப் அருளப்பா வழக்கு, செப்பேடு-ஆவணங்கள் தயாரிப்பு முதலிய மோசடிகளை ரஎடுத்துக் காட்டினாலும், அவர்கள் வெட்கப்படுவதாக இல்லை. பாரம்பரியம் உள்ளது, அதனை மறுக்க முடியாது என்று அவர்கள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

S N Sadasivan - copper age was not there in Kerala till 8th cent CE

செப்பேடுகளுக்கும் யூதர்களுக்கும் சம்பந்தமே இல்லை: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, தாமிரத்தின் தரம் மற்றும் உற்பத்தித் திறமைகள் முதலியவற்றைப் பார்க்கும்பொழுது, அவற்றை, யூதர்களுடன் தொடர்பு படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. ஏனெனில், கேரளாவில் “தாமிர காலம்” இருக்கவில்லை மற்றும் தாமிரத்தை எட்டாம் நூற்றாண்டு வரை அரசு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மேலும், அவற்றில் காணப்படும் விவரங்களின் படி பார்த்தால், இறையன் சாத்தன், மூகன் சாத்தன் போன்ற பெயர்களைக் கவனித்தால், அப்பொழுது பௌத்தம் இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், முதன் முதலாக கிராங்கனூரில், யூதர்கள் வந்து தங்கிய காலம் 13ம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில், அப்பொழுது தான், அது அனைத்துலக ரீதியில் துறைமுகமாகியது. அதிலும், யூத குறிப்புகளை வைத்துப் பார்த்தால், அப்பொழுது, அங்கு கிருத்துவர்கள் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை. [5].

Copper plates nnthing to do wth the Hews or Christians- S N SAdasivan

யூதர்கள் 16ம் நூற்றாண்டில் வந்திருக்கக் கூடும்: எஸ்.என். சதாசிவம் என்பவர் இந்த செப்பேடுகளைப் பற்றி தொடர்ந்து குறிப்பிடும்போது, 1514ல் ஸ்பெயெனிலிருந்து யூதர்கள் வெயேற்றப்பட்டபோது, யூதர்கள் வந்திருக்கக் கூடும். இரண்டாவது செப்பேட்டில் காணப்படும் “அஞ்சுவண்ணம்”, “மணிகிராமம்” முதலிய வார்த்தைகளும், தனித்தனியாக செயல்பட்டு வந்த வணிகக்குழுமங்கள் ஆகும் என்று ஹெர்மான் கன்டெர்ட் [Herman Gundert] கூறுகிறார். ரெட்கார் தர்ஸ்டென் [Edgar Thruston], இந்த செப்பேடுகளுக்கும் வணிகக்குழுமங்களுக்கும் சம்பந்தமே இல்லை, கிருத்துவர்களுக்கோ சுத்தமாக சம்பந்த இல்லை என்றார். “இரவிகொற்றன் / இரவிகூர்தன்” என்பதும் என்பவனும் நிச்சயமாக கிருத்துவன் இல்லை. ஏ.சி.பெர்னல் [A. C. Burnell] இவற்றை ஆராய்ந்து கூறும்போது, இவற்றில் சிரியன்கள் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை, தேவையில்லாத மதம் மாற்றும் முயற்சிகள் இவற்றின் மூலம் மேற்கொள்ளப் படுவதால், இந்தியர்களிடையே வெறுப்பை வளர்த்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று, எச்சரித்தார். தழக்காடு செப்பேடு விசயமும், இதேபோலத்தான் உள்ளது.  ஏனெனில், சாத்தன் வடுகன் மற்றும் இரவி சாத்தன், பௌத்த மதத்தினைக் குறிப்பதாகும்[6].

Cladius Buchanan and copper plates

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் ஊக்குவிப்பது வளர்ப்பது ஏன்?: சதாசிவன் போன்றோர் வாதங்களில் ஜாதியவாதம், முதலிய கொள்கைகளும் இருப்பதை காணலாம். அதாவது, பௌத்தத்தில் ஜாதிப்பிரிவுகள் இல்லை என்று அவர் வாதிப்பதைக் கவனிக்கலாம். ஆனால், யூதர்கள் என்று வரும் போது, “கருப்பு யூதர்கள்” [Black Jews] மற்றும் “வெள்ளை யூதர்கள்” [White Jews] என்று குறிப்பிட்டு வாதிப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, அவர்களைப் பொறுத்த வரையில் நிறவேறுபாடு அடிப்படையில் உள்ள பிரிவினையையை கவனிக்க வேண்டும். கிருத்துவர்களும் எழவர், கீழ்ஜாதி போன்ற வாதங்களை வைப்பதை காணலாம். முகமதியர்களைப் பொறுத்த வரையில், “மாப்ளாஸ்” அல்லது “மாப்பிள்ளை” முகமதியர் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடமும் ஜாதிவேறுபாடு இருக்கிறது. அதை மறைக்க, எல்லோரும், இந்துமதத்தில் இருக்கும் வர்ணமுறைதான், தங்களை பாதிப்பதாக குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கிருத்துவ-முகமதிய நிறவேறுபாடு, இறையியல் பகுப்பு முதலியவற்றின் அடிப்படையில் உள்ள பிரிவுகள், இந்திய ஜாதியத்தை விட இறுக்கமானது, மாற்றமுடியாதது. அந்நிலையில், மதமாற்றத்திற்கு, இக்கட்டுக்கதைகள் உதவுகின்றன என்றும் மேன்மேலும், மோசடிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

the-constitution-scheduled-castes-order-1950

தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள், மோசடிகள், கள்ள ஆவணங்கள் தயாரிப்பு முதலியவற்றை மெத்தப் படித்த கேரளத்தவர் எதிர்க்காதது ஏன்?: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஆர்ச் பிஷப் அருளப்பா – கணேஷ் ஐயர் வழக்கு, கிருத்துவர்களின் மோசடிகளை முழுவதுமாக வெளிப்படுத்தின.  சூசை வழக்கு, எப்படி தலித் போர்வையில் இந்து எஸ்சிக்களை ஏமாற்ற நினைத்தது தடுக்கப்பட்டது என்பதை அறியலாம். ஆனால், கேரளத்தில் நடந்து வரும் தாமஸ் மற்றும் சேரமான் கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள மோசடிகளை வெளிப்படுத்தப் பட்டுள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.எஸ். நாராயணன் போன்றோர், சில விசயங்களைத் தான் வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவரும் சமீபகாலம் வரை ஒரு மார்க்சிஸ்ட் சரித்திராசிரியராக இருந்து கொஞ்சம் மாறியுள்ளார். “பட்டனம்” மோசடியில் கூட, பி.ஜே.கொரியன் போன்றோரின் அள்வுக்கு அதிகமான செயல்பாடுகளினால் மாட்டிக் கொண்டனர். ஏனெனில், அரசியல் மற்றும் பணபலங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். கேரளாவில் படிப்பறிவு அதிகம் என்று சொல்லிக் கொண்டாலும், இத்தகைய மோசடிகளில் வெட்கம் இல்லாமல் ஈடுபடுவது, பரஸ்பர முறையில், ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்வது என்று தான் நடந்து வருகிறது. ஆக, இப்பொழுது மோடி இத்தகைய பரிசுகளை அளித்துள்ளது மூலம், அவர்களது மோசடி ஆராய்ச்சிகளுக்கு ஊக்குவிப்பு அதிகமாகும் என்று தெரிகிறது. முன்னர், ராஜேந்திர பிரசாதே ஒப்புக் கொண்டார் என்று எழுதியது போல, மோடியே ஒப்புக் கொண்டார் என்று இனிமேல் எழுத ஆரம்பித்து விடுவர். இதை இந்துத்துவவாதிகள் எதிர்ப்பார்களா அல்லது மோடியே செய்து விட்டார் என்பதால் ஆதரிப்பார்களா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-07-2017

kerala-historians-at-loggerheads-the-hindu-3

[1] The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[2] http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[3] Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. மேலே பார்க்கவும்.

[4] http://www.nasrani.net/2007/02/16/the-plates-and-the-privileges/

[5] It cannot be corrpoborated that the grant of the copper plate was in 379 AD either by the quality of its copper or by its manufacturing standards. Kerala never had  an age of copper nor the metal was taken for any official use till the eigth century.

N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.712.

[6] S. N. Sadasivan, A Social History of India, A.P.H. punlishing Corporation, New Delhi, 2000, p.422.

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

ஜூலை 10, 2016

விழுப்புரம் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நடந்த மோதல் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

BJP Villuppuram meeting clash 08-07-2016

வியாழக்கிழமை மோதல் பற்றி அலச மறுக்கும் விசுவாசிகள்: மாநில தேர்தலில் தோல்வி அடைந்து, அதைப் பற்றி கவனமாக அலசி, நிலைமையை சரிசெய்து கொள்வதற்குள், உள்ளாட்சி தேர்தல் வருகின்ற நிலையில், அதிகாரம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால், உட்பூசல் அதிகமாகி, கொதித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், விழுப்புரத்தில் 8-07-2016 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் நிர்வாகிகள் சிலர் தங்களது ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை அழைக்கவில்லை, மற்றும் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கின்ற சமூகத்தினருக்கு உரிய இடம் கொடுக்கவில்லை என்பது அவர்களது ஆதங்கம். ஆனால், அவர்களுடன், மற்றவர் வாதத்தில் இறங்கியதால், சண்டை ஏற்பட்டது. அத்தகைய விரும்பாத சண்டையில், நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக, கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர் என்று செய்திகள் வந்துள்ளன. இதெல்லாம் வருத்தப்பட வேண்டிய விசயங்கள் ஆகும். ஆனால், இந்த விவகாரத்தை அலச “விசுவாசிகள்” தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஊடகங்களில் வெளிப்படையாக வந்து விட்ட நிலையில், சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை.

பாஜக சண்டை விழுப்புரம்

தங்களை ஏன் அழைக்கவில்லை என்று ஒரு சாரார் வாதத்தில் ஈடுபட்டது: விழுப்புரத்தில் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.எஸ்.ஜி என்ற தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் நிர்வாகிகள் சிலர், கூட்டத்துக்கு தங்களை ஏன் அழைக்கவில்லை எனக் கூறி, நாற்காலிகளை தூக்கி வீசி, மண்டபத்திலிருந்த டியூப் லைட், வாயில் பகுதி கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்[1]. 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டது[2]. மோடி உள்ளிட்டவர்களின் படங்கள் கொண்ட மேடை பேனரும் கிழிக்கப்பட்டது[3]. ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன[4].  கற்களை வீசியதில் 15 டியூப் லைட்டுகள், 2 சோடியம் விளக்குகள், 2 மின்விசிறிகள் உடைந்து நொறுங்கின.  மேலும், அங்கிருந்த நிர்வாகிகள் சிலரும் தாக்கப்பட்டனர். இதனால் அந்த மண்டபம் கலவரப்பகுதியாக காட்சியளித்தது.

BJP Villuppuram - Dinathanthi photo- 08-07-2016

வாய்சண்டை, கைசண்டையாக மாறியது: மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தின் மாடிக்கு வேகமாக ஏறிச்சென்றனர். சிலர் கழிவறைக்குள் புகுந்து கதவை தாழ்ப்பாள் போட முயன்றனர். ஆவேசமடைந்த தொண்டர்கள், அந்த நிர்வாகிகளின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்[5]. இதையடுத்து, கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக நிர்வாகிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதெல்லாம் பாஜக கூட்டத்தில் நடக்க முடியுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. மற்ற திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில், வளர வேண்டிய நேரத்தில், அதே திராவிட பாணியில் எல்லாமே அரங்கேறி இருப்பது மிக்க வருத்தத்தைத் தான் கொடுக்கிறது.

BJP Villuppuram - backdrop torn - 08-07-2016

பாதுகாப்புடன் நடந்த கூட்டம்: தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம், உதவி ஆய்வாளர் மருது ஆகியோர், தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது, அங்கு வந்த பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன், மோதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, வெளியே சென்ற நிர்வாகிகளை அழைத்து கூட்டத்தை தொடங்கினார். ஆனால், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் தகராறில் ஈடுபட்ட பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாவட்டத் தலைவர் விநாயகம் தலைமையில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

BJP Villuppuram - torn backdrop - 08-07-2016

வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்: பாஜக முன்னாள் மாவட்டச் செயலர்கள் போலீஸ் சேகர், வேணுகோபால், இளைஞரணி பொறுப்பாளர் ரகு ஆகியோர் கூறியது[6]: விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினர் / வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் / தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு கட்சியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்[7]. இரு மாவட்ட கோட்டப் பொறுப்பாளரான ரமேஷ், கட்சியை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, பணம் கொடுப்பவர்களுக்கு பதவியை வழங்கி வருகிறார்[8]. தேர்தல் பணியாற்றியவர்கள், சிறை சென்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்[9]. கூட்டம் நடைபெற்றால் தகவல் கொடுப்பதில்லை. தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை நியமிப்பதில்லை. தனியார் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்றனர். இங்குள்ள 30 பேர் மட்டுமே கூட்டத்தை நடத்தி விடுகின்றனர். இதைக் கேட்ட போது கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநில நிர்வாகிகளிடமும் புகார் தெரித்துள்ளோம் என்றனர் அவர்கள்[10]. இது உண்மை எனும்போது, மாற்றிக் கொள்ளவேண்டும்.

BJP Villuppuram - chairs broken - 08-07-2016

பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல: பாஜக மாநில செயலர் கே.டி.ராகவன் கூறியது[11]: தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் மாவட்டங்கள் தோறும் பாஜக செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார்படுத்த ஆலோசனை நடத்தினோம். புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில், வாய்ப்பிழந்த சிலர் பிரச்னை செய்துள்ளனர். கூட்டத்துக்கு உரிய நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பதவியில்லை, அழைப்பில்லை என்று நடைபெற்ற மோதல் ஏற்புடையதல்ல. இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமையிடம் வழங்குவோம். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். உண்மையான தொண்டர்களை பாஜக புறக்கணிக்காது என்றார் அவர்.

பாஜக மோத-ல்1

செயற்குழு, பொது குழு என்று வரும்போது, விசுவாசிகளை அழைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை: இருப்பினும் அழைத்தால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. பொதுவாக செயற்குழு கூட்டத்தில் பதவி உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். எக்ஸிகூடிவ் கமிட்டி மீட்டிங் / நிர்வாக கமிட்டி கூட்டத்தில் தான் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளமுடியாது. இதனால், தனிப்பட்ட மனிதர்களின் சுயமரியாதை, கௌரவம், அந்தஸ்து முதலியவற்றை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதை விட அவர்களை அழைத்து உட்கர வைப்பதில், எந்த ஆதிப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், பாஜக கட்சியினர் எப்படி முறையாக, கட்டுப்பாட்டோடு, இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம், புதியதாக வருபவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் அளித்த புகாரின் பேரில், தகராறில் ஈடுபட்டதாக சேகர், வேணுகோபால் உள்ளிட்ட 15 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்[12]. 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[13].

பாஜக மோத-1

அரசியல் கட்சி எனும்போது, அனுசரித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்: தமிழகத்தை மற்றும் இந்தியாவைப் பொறுத்த வரையில், ஜாதியில்லாத அரசியல் இல்லை. எப்பொழுது, தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமூகங்கள் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்து விட்டனவோ, குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏகபோக அந்தஸ்த்தைப் பெற்று அனுபவிக்க ஆரம்பித்து விட்டனவோ, அதே போல, மற்ற சமூகங்கள் ஆசைப்படுவது விதிவிலக்கல்ல. சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து, வெற்றி கிடைக்கவில்லை, முடிவுகள் திருப்திகரமாக இல்லை எனும்போது, சம்பந்தப்பட்டவர்களே அறிந்து கொள்வார்கள், தானாக, விலகி விடுவார்கள். ஆனால், இதை வைத்து, குறிப்பிட்ட நபர்களை ஓரங்கட்டலாம் என்றேல்லான் செயல்படுவது ஒற்றுமையை வளர்க்காது. கட்டுப்பாடு, விதிமுறை, தராதரம், முதலியவை எல்லோரும் நடந்து கொள்வதில் உள்ளது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] நக்கீரன், பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே மோதல், பதிவு செய்த நாள் : 7, ஜூலை 2016 (16:9 IST) ; மாற்றம் செய்த நாள் :7, ஜூலை 2016 (16:9 IST)

[2] தினகரன், விழுப்புரத்தில் பாஜ கூட்டத்தில் கோஷ்டி மோதல் திருமண மண்டபம் சூறை, Date: 2016-07-08@ 00:11:41

[3] புதிய தலைமுறை டிவி, விழுப்புரத்தில் பாஜக செயற்குழு கூட்டத்தில் மோதல்: 15 பேர் கைது, 08 July 2016

[4] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/politics/20/37530/clash-in-bjp-executive-council-meeting-15-arrested

[5] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=168768

[6] தினமணி, பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரகளை:நாற்காலிகள் உடைப்பு; 15 பேர் கைது, By விழுப்புரம் First Published : 08 July 2016 03:31 AM IST

[7] தினத்தந்தி, பா... செயற்குழு கூட்டத்தில் கோஷ்டி மோதல்கல்வீச்சு, பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 1:27 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016, 2:30 AM IST

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559721

[9] தினமலர், பா.., மாவட்ட செயற்குழுவில்மோதல்:திருமண மண்டபம் சூறையாடல், பதிவு செய்த நாள்: வெள்ளி, ஜூலை 08,2016.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559715

[11]http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/article3519127.ece

[12] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=229607

[13] http://www.dailythanthi.com/News/India/2016/07/08012724/BJP-Committee-meeting-of-the-factional-conflict.vpf

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜூலை 3, 2016

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010-1

உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து,  பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.  இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.

Evening_view_of_Har-ki-Pauri,_Haridwar

தருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்?

திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர்.  திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[3].  ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர்.  ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6].  இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.

Sanaracharya statue - valluvar - Tarun issue

சிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா?

உண்மையில் நடந்தது என்ன?: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.

Sadhus oppose Tarun efforts for politicization

திடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்

இரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன?: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.

திருவள்ளுவர் கங்கை சிலை.அவசரம்பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11].  ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்! – சாதுக்கள் எழுப்பிய சர்ச்சை, Posted Date : 18:11 (29/06/2016).

[3] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்புதற்காலிக இடத்தில் சிலை திறப்பு!, By: Karthikeyan, Updated: Thursday, June 30, 2016, 0:14 [IST].

http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[5] http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809        

[7] However, the project had been opposed by the Ganga Sabha and Akhil Bharatiya Teerth Purohit Mahasabha, another body of priests in Haridwar. “If one such statue is allowed to be installed, there will be a number of others queuing up for it, for so many other people and organisations will insist on having statues of their choice put on the Ganga banks,” Ganga Sabha office bearers argued. “Ganga is a goddess herself. Why have other gods or great men on her banks?” said Ganga Sabha president Purushottam Sharma Gandhiwadi.

The Times of India, Thiruvalluvar statue opening deferred after Haridwar ascetics protest, Sheo S Jaiswal| TNN | Jun 29, 2016, 10.36 PM IST

[8] https://www.youtube.com/watch?v=Dpypnlzqh_8

[9] However, as soon as the statue was installed at the spot on Tuesday night, ascetics from various akharas and ashrams arrived and began protesting, on the grounds that with the staue of Adi Shankara already at the spot, there was no need for a statue of “someone else”. District magistrate Harbans Singh Chugh said a fresh date for its unveiling will be fixed after an appropriate place to install it is decided.

http://timesofindia.indiatimes.com/city/dehradun/Thiruvalluvar-statue-opening-deferred-after-Haridwar-ascetics-protest/articleshow/52978525.cms

[10] https://www.youtube.com/watch?v=WQWuS45nH0w

[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை!, June 29, 2016.

[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.

http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94913

[13] http://ns7.tv/ta/thiruvalluvar-statue-not-installed-ganga-banks.html

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

செப்ரெம்பர் 12, 2013

முசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (1)

சாதாரண  “ஈவ்-டீசிங்”  சண்டையில்  (பெட்டி மேட்டர்)  இருவர்  /  மூவர்  கொல்லப்பட்டனர்  என்று  ஆங்கில  ஏடுகள்  விவரிக்கின்றன: ஒருபக்கம் பாலியல் பலாத்காரம் செய்தவனை தூக்கில் போடுங்கள் என்று பெண்கள் முழக்கம் இடுகிறார்கள், போராட்டம் நடத்துகிறார்கள். மறுபக்கம் இப்படி (அதாவது, முசபர்நகர் விசயத்தில்) “ஈவ்-டீசிங்” என்பது சாதாரண விசயம் என்கிறார்கள். ஆனால், எந்த பெண்ணியக்கமும், வீராங்கனைகளும், தேசிய பெண்கள் ஆணையம் முதலியன தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றும் புரியவில்லையே? தில்லியில், மும்பையில் நடந்தால் அத்தகைய பெரிய குற்றமாகிறது, ஆனால், முசபர்நகரில் நடந்தால் சாதாரணமாகி விடுகிறாதா? பிறகு மூவர் கொல்லப்படுவதும் சாதாரணமான விசயமா? படிப்பவர்களுக்கு புத்தியில்லையா அல்லது சொல்பவர்களுக்கு அறிவில்லையா? உண்மையினை, உண்மையாக சொல்வதற்கு ஊடகங்கள் ஏன் பாரபட்சம் காட்டுகின்றன?

முசபர்நகர்  கவரத்தில்  இரு  பெண்கள்  பலாத்காரம்  /  மானபங்கம்: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அதாவது, முஸ்லிம் சம்ப்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.

ஜாதிகலவரமா,  மதக்கலவரமா – இப்படி கேட்கிறார்கள்: வழக்கம் போல, மத்திய-மாநில அரசுகள், ஊடகங்கள் உண்மை நிலையை மறைக்க முயற்ச்சி செய்வது தெரிகிறது. தமிழ் ஊடகங்கள் உண்மை என்ன என்பது கூட அறியாமல், முசபர்நகரில் ஜாதி கலவரம் நடக்கின்றது[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஜாதி கலவரம் என்றால், ஏன் அகிலேஷ் முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டு அலைகிறார்? திடீரென்று அப்பா முல்லாயம் வந்து வக்காலத்து வாங்குகிறார்? ஆனால், வழக்கம் போல இந்துக்கள்-முஸ்லிம்கள் என்று குறிப்பிடாமல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமூக  ஊடகங்களை  ஊக்குவித்து  வருபவர்கள்  அவற்றைக்  குற்றஞ்சாட்டுவது: உதாரணத்திற்கு, “தி ஹிந்து” எப்படி “சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை இவ்விசயத்தில் பிரத்யேகமாக விளக்கியிருக்கிறது[2]. ஆனால், புத்தகயா குண்டுவெடிப்பின் போது அவ்வாறு செய்யவில்லை. இங்குதான் அந்த ஊடக பாரபட்சம் வெளிப்படுகிறது. என்.டி.டிவி-தி ஹிந்து, இவ்விசயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தினமும் நிகழ்ச்சிகளே ஒளிபரப்பி வருகின்றன. ஆகவே, இவை அத்தகைய சார்புடைய கொள்கையைப் பின்பற்றுவது, வாசகர்களை ஏமாற்றுவதாகும். கீழ்கண்ட தலைப்புகளினின்றே, அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை எதிர்க்கிறது மற்றும் ஆதரிக்கின்றது என்று தெரிகிறது. இது ஏன்?

New media presents scope for misuse: Tewari SEPTEMBER 10, 2013

Similarities in communal violence in Akhilesh regimeSEPTEMBER 11, 2013

FIR against several BJP leaders; death toll up to 33 SEPTEMBER 9, 2013

Where Sangh spins narratives of victimhood, belligerenceSEPTEMBER 11, 2013

Riot victims recount tales of terrorSEPTEMBER 9, 2013

MHA calls for more forces to be deployedSEPTEMBER 9, 2013

Manmohan calls up Akhilesh, conveys concernSEPTEMBER 9, 2013

SC declines to entertain plea on Muzaffarnagar riotSEPTEMBER 9, 2013

Mayawati sees SP-BJP conspiracySEPTEMBER 9, 2013

Centre offers to send more forces to Uttar PradeshSEPTEMBER 9, 2013

SP, BJP behind Muzaffarnagar violence: TiwariSEPTEMBER 9, 2013

Left parties accuse UP government of ‘lax’ attitudeSEPTEMBER 9, 2013

காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கே டுவிட்டரில் கண்டபடி பொய்களை பரப்பி வருகிறார், என்பது படிப்பவர்களுக்கு நன்றகவே தெரியும். ஆனால், இந்நேரத்தில் மணீஸ் திவாரி ““சோசியல் மீடியா” துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” என்று சொல்கிறார் என்று “தி ஹிந்து” செய்தி போட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[3]. பிறகு, இவர் ஏன் திக்விஜய் சிங்கைக் கட்டுப்படுத்துவது இல்லை? பெங்களூரு குண்டுவெடிப்பு பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று அந்த காங்கிரஸ்-முஸ்லிம்-தலைவர்- முகமது ஷகீல் டுவிட்டரில் போட்டபோதும் கண்டுகொள்ளவில்லை. அப்படியென்றால், காங்கிரஸ் திட்டமிட்டே இப்படி செய்து வருகின்றது என்றாகிறது. ஊடகங்களும் அவ்வாறே இருக்கின்றன.

வேதபிரகாஷ்

© 12-09-2013


ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

ஜூன் 24, 2013

ஹைதர் அலி – திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன?

Mani-mandapam for Umaruppulavar, Kattapomman, Pattukkoottaiyarமணிமண்டபங்கள்கட்டும்தமிழகஅரசியல்: மணிமண்டபம் கட்டுவது என்பது தமிழகத்தில் ஒரு அரசியல் ஆகிவிட்டது. அது “கலைமாமணி” விருது அளிக்கப்படும் தோரணையில் தான் உள்ளது. யார்-யாருக்குக் கொடுக்கப்படவேண்டும் என்பதில் கட்சி ஆதரவு, சித்தாந்த ஆதரவு, பரிந்துரை என்பதெல்லாம் பார்க்கப்படுகின்றனவே தவிர, தனிமனிதரின் தராதரம், திறமை, பண்டித்துவம் முதலியவையெல்லாம் கண்டுகொள்ளப் படுவதில்லை. ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் முதலிய பேதங்கள் இருந்தும்-இல்லாமல், எந்தவித வேறுபாடுகள் இருந்தும்-இல்லாமல், எல்லோருக்கும் என்று உள்ளவற்றை பகிர்ந்து அளிக்கும் முறையில் இவை கொடுக்கப்படுகின்றன. முதலியார், செட்டியார், பிள்ளை, தேவர், நாயக்கர் என்றுதான் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அதிலும் இடவொதிக்கீடு உள்ளது. தபால்தலை, நாணயம் வெளியீடுகளும் இதில் அடங்கும். இதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், அரசியல் ரீதியில் தான் பரிந்துரை, சிபாரிசு, லாபி எல்லாம் செய்யப்படுகின்றன. மக்களின் விருப்பங்களுக்காக செய்யப்படுவதில்லை. சிலரின் மணிமண்டபங்கள் கட்டப்படும் போது, தபால்தலை-நாணயம் வெளியிடப்படும் போது, யாரிவர் என்று கேட்கப்படுவதிலிருந்தே, அவரது பிரபலம், மக்கள் அறிந்துள்ள நிலை முதலியவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால், வெகுஜன மக்களின் அத்தகைய அறியாமையைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை!

tipu-no-heroமணிமண்டபம் கட்டுவதால் யாருக்கு லாபம்?: எதுஎப்படியாகிலும் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பராமரிக்க, பழுது பார்க்க, மராமத்து பார்க்க, புனரமைக்க முதலியவற்றிற்கும் கான்ட்ராக்ட் கிடைக்கிறது. தோட்டம் அமைக்க, செடிகள் வைக்க, புல்தரை அமைக்க, தண்ணிர் ஊற்ற என்ற இத்யாதிகளுக்கு கான்ட்ராக்ட், பணம் கிடைக்கிறது. ஆகையால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. ஒரு மணிமண்டபம் கட்டிவிட்டு, அடுத்தது கிடைக்குமா என்று பார்ப்பார்கள். நாளைக்கு நூறு மணிமண்டபங்கள் கட்டிவிட்டேன் என்று தனக்கு ஒரு மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லி கட்டப்பாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கருணாநிதி உயிருள்ளபோதே தனக்கு சிலை வைத்துக் கொண்டதை ஞாபகத்தில் கொள்ளலாம்.

Tipu Sultan - opposed by the people of Karnataka2மேமாதத்தில் ஜெயலலிதா எடுத்த முடிவு[1]: தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், மனு நீதிச் சோழன் ஆகியோருக்கு மணி மண்டபங்களை அமைக்கவும், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் ஆணையிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன வீரமங்கை வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்ட வீரத் தாய் குயிலியின் நினைவைப் போற்றும் வகையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு வரும் வளாகத்தில் வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். இதே போன்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்[3]. ஏழை மக்கள் உயர்வு பெற தன் வாழ்வை அர்ப்பணித்தவரும், மக்களின் அறியாமையைப் போக்க கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தி அடிகளை அழைத்து வந்து அறநெறி பரப்பியவரும், சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக பணியாற்றியவரும் ஆன சுவாமி சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த இடமான சிதம்பரத்தில் அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும்இதே போன்று, எனது ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2000ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தினை சிறப்பான முறையில் புதுப்பித்து, புனரமைத்திட வேண்டும் என்று கோரிக்கையை ஏற்று சென்னை, மந்தைவெளி, பசுமை வழிச் சாலையில் அமைந்துள்ள சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது மணிமண்டபம் புதுப்பித்து புனரமைக்கப்படும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tipu 214th Memorial celebration day - PF functionஇந்துக்கள் – முஸ்லிம்கள் இருவரும் திப்புசுல்தான் மணிமண்டபம் எதிர்ப்பதேன்: ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[4]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று ஹெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[5] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[6]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

Tipu 214th Memorial celebration day - Popular front functonபி. ஆர். கௌதமன் இதனை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார்[7]. Photo1212இதைத்தவிர 23-06-2013 அன்று மஹரிஷி வித்யா மந்திர் பள்ளி அரங்கத்தில் இதை எதிர்த்து ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது.

Photo1214

கலந்து கொண்டவர்கள் – கூட்டத்தின் ஒருபக்கம்.

Photo1215

ஹைதர் – திப்பு மணிமண்டபம் முஸ்லிம்கள் எதிர்ப்பதேன்?: ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டாபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[8]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று தொந்தரவுப்பட்டதும் உண்டு[9].

Nagai Mansur - expecting more than Manimandapamநாகை மன்சூர், “ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்” என்று ஒருபக்கம் போட்டுவிட்டு, “வேண்டாம்! மணிமண்டபம் வேண்டாம்….!! 13 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு தற்போது 7 சதவிகித இடஒதுக்கீடு போதும். இதனை மட்டும்தான் இந்த சமுதாயம் உங்களிடம் எதிர்பார்க்கிறது”, என்று ஜெயலலிதா படம் கீழ் போட்டிருக்கிறார். அதாவது, மக்கட்தொகை பெருக்கம், அதற்கேற்றப்படி இடவொதிக்கீடு, ஆதிக்கம் என்ற நிலையில் தான் அவர்கள் சிந்தனை உள்ளது.

Tipu Sultan - opposed by the people of Karnatakaஹைதர்திப்பு மணிமண்டபம் இந்துகள் எதிர்ப்பதேன்?: பால.கௌதமன் “யார் போற்றப்பட வேண்டும்? யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்? தமிழ்த் தாய்க்கும், வள்ளுவருக்கும், சிலைகளும், பூங்காவும், மண்டபங்களும் அமைக்கும் தமிழக அரசுக்கு இந்த இலக்கணம் தெரியாமலா போயிருக்கும்!” என்று ஆரம்பித்து, பாதிரி பார்தலோமாகொ, பார்க்ஹர்ஸ்ட், ஸ்ரீதர மேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், லூயிஸ் ரைஸ்முதலியோரின் விவரங்களைக் கொடுத்து “தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?”, என்று முடித்திருக்கிறார்[10]. “வாய்ஸ் ஆப் இந்தியா” என்ற பதிப்பகம் ஏற்கெனவே இவ்விவரங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறது.

Photo1216ஐ. எம். முத்தண்ணா[11] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.

Photo1217

ஐ.எம். முத்தண்ணா

Photo1220

ஹைதர்-திப்பு – மாயைகளும், கட்டுக்கதைகளும், உண்மைகளும்: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்.

வேதபிரகாஷ்

© 24-06-2-13


[1]

[4] Chief Minister J Jayalalithaa on Wednesday (16th May 2013)  announced that memorials would be raised for Swami Sahajananda of Chidambaram and freedom fighters Hyder Ali and Tipu Sultan. She also announced a memorial for Kuyili, the commander of freedom fighter Velu Nachiyar. Making a suo motu statement in the State Assembly, the CM said CK Thamizharasan (RPI) and S Gunasekaran (CPI) had made requests for raising a memorial for Kuyili.  She said the memorial for her would be established in the complex being constructed for the memorial of Velu Nachiyar. Similarly, the request for raising memorials in honour of Hyder Ali and Tipu Sultan was made by A Soundararajan and K Balabharathi (CPM) and Aslam Basha, TMMK MLA from Ambur[4].  The CM said a memorial would be built for both freedom fighters in one complex in Dindigul district.

http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[7] பால கௌதமன், திப்புசுல்தான்: மணிமண்டபமும்மானங்கெட்டஅரசியலும், http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/

[8] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனைய்ல் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[9] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[11]  I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

ஜூலை 5, 2010

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல்[1]:  “கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,” என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார். தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது[2]:

ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: “நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்[3]. ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்[4]. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர்[5]. தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர். கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது[6]. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்[7]. இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? முஸ்லீம்கள் தங்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடு, 15% இட ஒதுக்கீடு கொடு, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்[8], இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்ற நிலை, அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, எழும் கேள்வி, “முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா?”. மதரீதியில் என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஏனெனில் அத்தகைய முறை இந்திய அரசியல் நிர்ணய சாசனத்தில் இல்லை. ஜாதிரீதியில் என்றால், ஏற்கெனெவே அத்தகைய வசதி அமூலில் உள்ளது.

அரசியல் ஆக்கப் படும் விவகாரம்: காங்கிரஸைப் பற்றி தெரிந்த விஷயம், அது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் தாஜா செய்து கொண்டு “ஓட்டு வங்கி அரசியல்” நடத்தி வருகிறது என்பதாகும். அதேப் போலத்தான் கம்யூனிஸவாதிகளும், மற்ற அரசியல் கட்சிக்களும். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இதனை எதிர்து வருகின்றது.  பிற்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ள ரங்கநாத் மிஸ்ரா பறிந்துரையை அமூலாக்க விடமாட்டோம் என்று பிரதான எதிர்கட்சியான பாஜப கூறுகிறது. “ஸ்வபிமான் சமவேசா” என்ற பிற்பட்டவர்காளுடைய மாநாட்டில் பேசிய பாஜக தலைவர், நிதின் கட்காரி, இது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான சதியாகும் என்றார்[9].

மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது அவர்களுடைய ஒதுக்கீட்டை பாதீபது என்றால் அது நியாயமாகுமா? பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிராக தீங்கிழைக்கும் வகயில் உள்ள இத்தகைய முறைகளை, ஓட்டுவங்கி அரசியல் என்ற வகையில் செயல்படுவதால் எதிர்ப்பதாக விளக்கினார். காங்கிரஸ் மறுபடி-மறுபடி முஸ்லீம்களை தாஜா செய்வது என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு [(other backward classes (OBCs)] மாபெரும் துரோகத்தை செய்ய தீர்மானித்துள்ளது[10]. அவர்களுடைய ஒதுக்கீட்டிலிருந்து, மத ரீதியாக முஸ்லீம்களுக்கு எனத் தனியாக, வட்டிக் கொடுப்பது என்பது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது. இருக்கின்ற மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு என்றுள்ள 27% லிருந்து முஸ்லீம்களுக்கு 8.4% கொடுக்கவேண்டும் என்று ஒரு பரிந்துரை உள்ளது. பிறகு அவர்களுடைய கதி என்னாவது? சமூகநீதி என்று பேசுவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தமிழகத்தில் கூட கருணாநிதி, இதே மாதிரி 3.3% சதவீத இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்து எஸ்.சிக்களை ஏமாற்றியுள்ளார்[11]. “அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியது” – இதைப் பற்றிய முன்னுக்கு முரணான செய்திகள் பல வந்துள்ளன. அவர்கள், மற்றும் கிருத்ததவர்கள் எதிர்த்தும் தெரிகின்றது. மற்றவர்கள் தொடுத்த வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்த்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செய்ல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12].

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும்[13]:  முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.  இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை: அதாவது முஸ்லீம்களே, இவ்வகையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை அலசுகின்றன்ரா அல்லது பேரம் பேசுகின்றனரா என்பதை இந்தியர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், முஸ்லீம்கள், ஜிஹாதி முஸ்லீம்கள் போலத்தான் பலநிலைகளிலும், நேரங்களில் தங்களை அடையாளங்காட்டிக் கொள்கிறார்கள். சிலர் தான் இந்திய தேசிய முஸ்லிம்களாக உள்ளனர்.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது:  இப்படி முஸ்லீம்கள் உண்மையைச் சொல்வது பாராட்டவேண்டும். அதாவது, இந்தியாவைத் துண்டாடியப் பிறகும் எப்படி, இந்த காங்கிரஸும் முஸ்லீம்களும் அதே எண்ணங்களில் உள்ளர்கள் என்பதற்கு இதைவிட ஒன்றும் சான்று தேவையில்லை. இந்தியர்கள் எதிர்ப்பது, இத்தகைய இந்திய விரோத முஸ்லீம்களைத்தான் என்று மற்ற முஸ்லீம்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். காங்கிரஸோ அல்லது எந்த அரசியல் கட்சியோ, இத்தகைய வாக்குறுதி அளிக்கிறது என்றால், தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? அப்படியென்றால், ஆர்களது மாநாடே தேச விரோதமானது தானே?

கிருத்துவர்களும் இதே பாட்டைப் பாடுவது நோக்கத்தக்கது[14]: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது[15].  இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்[16]. இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்: ஆக முஸ்லீம்கள், கிருத்துவர்கள் நெல்லையிலிருந்து ஒரே மாதிரியான அச்சுருத்தலை மிரட்டலை விடுக்கின்றனர். அது காங்கிரஸுக்குத்தான் என்பதும் நோக்கத்தக்கது. எப்படி இப்படி இரு மதத்தினரும் மதரீதியில் மிரட்டுவர், கோரிக்கைகள் இடுவர்…….மற்றவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் அமைதியாக இருப்பர் என்று தெரியவில்லை. ஆக, இதில் சம்பந்தப்பட்டவர்கள், கூடிபேசி, தீர்மானித்து, இத்தகய அரசியல் சூதாட்டங்களை நடத்தி, இந்தியர்களை ஏமாற்றத் தீர்மானித்துள்ளது நன்றாகவேத் தெரிகின்றது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்அளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-07-2010


[1] தினமலர், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32406

[2] ஜெய்னூல் ஆபிதீன் டிவியில் தமிழில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் போதகர். இப்பொழுது அரசியலிலும் ஈடுபடுவது ஆச்சரியமாக உள்ளது.

[3] அம்பேத்கார் சொன்னதை ஏன் குறிப்பிடவில்லை என்று நோக்கத்தக்கது. குறிப்பாக, “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற நூலில் முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மதவாதம், நாட்டைத் துண்டாட செய்யும் செயல்கள் அனைவற்றையும் விளக்கியுள்ளார். ஆகையால், முஸ்லிம்கள், செக்யூலரிஸவாதிகள் இதனை அப்படியே அமுக்கிவிடுவர்.

[4] இதெல்லாம் சப்பைக் கட்டும், சரித்திரத்திற்குப் புரம்பான பேச்சுகள். இந்திய சுதந்திர வரலாறு என்பது 60-80 ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் முஸ்லீம்கள் மதரீதியில் இந்தியாவைத் துண்டாடினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்பொழுதும், மதரீதியில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான், இந்தியர்கள் கவலைக் கொள்கின்றனர்.

[5] இதைவிட பெரிய போய்யை எந்த முஸ்லீமும் சொல்லமுடியாது. கிலாஃபத்தின் கதையை அறியாதவர்போல பேசுவது, பச்சைத்துரோகமான செயல். அதிலும் இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி புளிகு மூட்டைகளை அவிழ்து விடுவது, ஹிட்லரின் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிடும் வகையில் உள்ளது.

[6] ஒரு அரசியல் கட்சியிம் வாக்குறுதி சட்டமாகாது, மேலும் தேர்தலில் இத்தகைய வாக்குறுதி கொடுத்தார்கள் என்றால், தேர்தல் கமிஷனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

[7] இத்தகைய அச்சுருத்தல், மறைமுக உடன்படிக்கைகள், தேர்தல் நேரக்கூட்டு பேரங்கள் முதலியவற்றை தேர்த கமிஷன் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் தான், பெரும்பான்மை இந்தியர்களை இப்படி, ஓட்டுவங்கி மூலம் ஏமாற்றிவருவர் என்பது தெரியவில்லை.

[8] http://tntjsw.blogspot.com/2010/05/tntj_18.html

[9] http://timesofindia.indiatimes.com/City/Bangalore/Misra-panel-suggestions-go-against-culture-Gadkari/articleshow/6129206.cms

[10] http://www.deccanherald.com/content/79277/centre-keen-appeasing-minorities-gadkari.html

[11] http://dravidianatheism.wordpress.com/2009/10/28/திராவிடம்-இஸ்லாம்-தமிழக/

[12] சின்னக்கருப்பன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்,

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20410147&format=html

[13] 10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 20, 2010, 14:12[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/20/tamilnadu-tawheed-jamath-reservation-assembly.html

[14] பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்,

வெள்ளிக்கிழமை, ஜூன் 25, 2010, 15:02[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/25/dalit-christians-sc-agitation-delhi.html

[15] இது மாபெரும் மோசடியாகும், ஏனெனில், உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனெவே ஒரு தீர்ப்பு உள்ளது. அதை மறைத்து இவர்கள் இப்படி வேடம் போட்டுக் கொண்டு ஏசுவை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

[16] இதற்கும் கருணாநிதி வருகிறார் என்றால் அந்த சதிதிட்டம் என்னவென்பது இந்தியர்கள் அறிந்தே ஆகவேண்டும்.