Archive for the ‘பெருமாள் முருகன்’ Category

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

ஜனவரி 19, 2015

சிவப்பு கலர் புடவையும், முற்போக்கு எழுத்தாளர் கூட்டமும், புத்தக எதிர்ப்பும்-ஆதரவும், செக்யூலரிஸமும், கருத்துரிமையும் படும் பாடு!

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro  in New Delhi on June 8, 2010.

All India Rajiv Gandhi Brigade activists burn an effigy of Javier Moro in New Delhi on June 8, 2010.

சிவப்பு கலர் புடவை புத்தகத்திற்கு காங்கிரஸார் எதிர்ப்பு: “தி ரெட் சாரி” [The Red Sari] என்ற தலைப்பில் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் ஜாவியர் மாரோ [Javier Moro] எழுதியுள்ள சோனியாவின் வரலாற்று நூலுக்கு எதிராக காங்கிரஸ் பயங்கர பிரசார யுத்தத்தை [terror campaign] துவக்கி இருப்பதாக நூலாசிரியர் மாரோ குற்றம் சாட்டியுள்ளார்[1]. வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சோனியாவின் குழந்தை பருவம், காதல் வாழ்க்கை, இந்திரா காந்தி குடும்பத்தின் மருமகளாக ஆனது, அரசியல் தலைவராக உருவெடுத்தது, பிரதமர் பதவியை உதறியது உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன[2]. டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “சோனியா தொடர்பான இந்த புத்தகம் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகம் இந்தியாவிற்குள் வராமல் தடுக்க காங்கிரசார் பெரும் பகீரத பிரயத்தனம் செய்தனர். ஆங்கில

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

Javier Moro and Publisher Roli Books Pramod Kapoor launch The Red Sari A Dramatised Biography of Sonia Gandhi in New Delh

காங்கிரஸ் எதிர்ப்பு 2010 முதல் 2015 வரை:  புத்தக வெளியீட்டாளர்களை, ஒரு காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாகவே மிரட்டினார். கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் சட்ட நோட்டீஸும் அனுப்பியது[3]. அப்புத்தகம் அயல்நாடுகளில் கூட விற்கக்கூடாது என்று காங்கிரஸார் கூக்குரல் இடுகின்றனர்[4].  அபிஷேக் மனு சிங்வி சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்போம் என்று நோட்டீஸ் தான் அனுப்பியிருக்கிறார், அது நாங்கள் அப்புத்தகத்தம் வெளியிடுவதைத் தடுக்க முடியாது, என்று ரோலி பதிப்பகத்தினர் கூரியுள்ளனர். மேலும், ஜாவியர் மாரோ தான் 2014 நடந்த விவரங்களை சேர்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்[5]. அதன்படியே 15-01-2015 அன்று அப்புத்தகம் வெளியிடப்பட்டது[6].

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

சோனியா புத்தகம் பிரச்சினை 2015

காங்கிரஸ் மெயில் மூலம் ஸ்பெயின் பதிப்பகத்தாருக்கு மிரட்டல்[7]கருத்துரிமை, பேச்சுரிமை என்றெல்லாம் பேசப்பட்டு வரும் நேரத்தில், இப்புத்தகத்தை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், பிறகு அமைதியாகி விட்டதும், வியப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தை அனைத்து கடைக்காரர்களிடமிருந்தும் உடனடியாக திரும்ப பெறுமாறு, ஸ்பெயின் நாட்டு வெளியீட்டாளர்களுக்கு இ-மெயில் மூலம் காங்கிரசார் மிரட்டல் கடிதம் அனுப்பினர். இவ்வளவுக்கும் அப்போது இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகவில்லை; ஸ்பேனிஷ் (2008), இத்தாலி மற்றும் இதர மொழிகளில்தான் வெளியிடப்பட்டிருந்தது. இத்தகைய மிரட்டல் இ-மெயில்களால், 6 மாத காலத்திற்கு நான் இ-மெயில் பார்ப்பதையே நிறுத்தியிருந்தேன். சோனியாவின் இமேஜைப் பாதுகாக்க காங்கிரசார் இத்தகைய பயங்கர நடவடிக்யையில் இறங்கினர். தேவையில்லாமல், இவ்விசயத்தை காங்கிரஸ்காரர்கள் ஊதிபெரிதாகி விட்டனர், என்று கூறியுள்ளார்[8].

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா புத்தகம்- காங்கிரஸ் எரிப்பு

சோனியா பிஸ்ஸா சாப்பிடுவது ஒன்றும் பெரிய விவகாரம் இல்லைஜாவியர் மாரோ தொடர்கிறார், “அவர்கள் சோனியாவை ஒரு ரோபோவாக மாற்றியிருந்தனர். சோனியாவை ஒரு இந்தியர் என்று நிரூபிப்பதில் மிகுந்த அக்கறை காட்டினர். உண்மைக்கு மாறான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தனர். உண்மையில் சோனியா இந்தியராக மாற முயற்சி செய்திருக்கக்கூடும். ஆனால் ஒருமுறை நீங்கள் பிஸ்ஸா சாப்பிட ஆரம்பித்தால், எப்போதும் பிஸ்ஸாவையே சாப்பிடுவீர்கள். நான் ஒருமுறை டில்லியில் உள்ள “லா பிஸ்ஸா” என்ற உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு சோனியாவும் அவருடைய குடும்பத்தினரும் இத்தாலிய உணவை விரும்பி உண்டு கொண்டிருந்ததைப் பார்த்தேன். இது இயற்கையான ஒன்று. இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கலாம்; ஆனால் அவர் அப்போதும் இத்தாலியர்தான்.  ஆனால் காங்கிரஸ்தான் அவருடைய இத்தாலிய தன்மைகளை மாற்ற முயற்சி செய்தது. அவரை கடவுளாக சித்தரிக்கும் முட்டாள்தனமான முயற்சியில், அவரைச் சுற்றியிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். அது சரி இந்த புத்தகத்தில் காங்கிரசாருக்கு பிடிக்காத விஷயங்கள் என்னதான் இருக்கிறது?”.

 Sonia picture

விமான பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பிய சோனியா விமானவோட்டியை மணந்து கொண்டது: ஜாவியர் மாரோ விளக்குகிறார், “இத்தாலிய நகரான டோரினோ அருகே ஒரு விவசாயியாக இருந்து பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிய ஒருவரின் மகளாக பிறந்த சோனியா, அலிடாலியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்ற விரும்பினார். இத்தகைய ஒருசாதாரண இத்தாலிய பெண்ணான அவர் எப்படி இந்தியாவின் ஆட்சியாளராக, உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக மாறினார் என்பதையே “தி ரெட் சாரி” என்ற இந்த புத்தகம் விவரிக்கிறது. சோனியாவை ராஜிவ் திருமணம் செய்து கொண்டபோது, சோனியாவை இந்தியர்கள் புலிகளுக்கு இரையாக்கி விடுவார்களோ என்று சோனியாவின் தந்தையான ஸ்டெபனோ மெய்னோ அஞ்சினார். சோனியா உயர்குடியில் [ aristocrat] பிறந்தவரல்ல; ஆனால் அவரை அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக காட்ட காங்கிரசார் முயற்சி செய்தனர். என்னுடைய உறவினரான டொமினிக் லேப்பியர் (“இரவில் கிடைத்த சுதந்திரம்” என்ற நூலை எழுதியவர்) பத்ம பூஷன் விருது பெற்றபோது, காங்கிரஸ் தலைவரை (சோனியா) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சோனியாவிடம் சொன்னதாவது, “நான் உங்களுடன் 4 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கிறேன்”, என்றார். அதாவது அவர் தொடர்பான இந்த புத்தகத்தை எழுதுவதிலரந்த அளவிற்கு ஆழ்ந்து மூழ்கி போயிருந்தார் என்ற கருத்தில் அவ்வாறு கூறினார். அதைக் கேட்டதும் சோனியா அதிர்ந்து போனார்[9]; பின்னர் சமாளித்துக் கொண்டு சிரித்தார். என்னிடம் அவர் கூறிய ஒரே தகவல்: “நான் எப்போதுமே என்னைப் பற்றி எழுதப்படும் எதையுமே படிப்பதில்லை”.

 Sonia angry

ஜாவியர் மாரோ காங்கிரஸ் என்னை ஏன் எதிர்க்கிறர்கள் என்று தெரியவில்லை: சோனியா எப்போதுமே ஊடகங்களிலிருந்து ஒதுங்கியே இருக்க விரும்பினார்; தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுவதை வெறுத்தார்; அவரைச் சந்திக்க நான் முயன்றபோதெல்லாம், அவருடைய அலுவலக, வீட்டுக் கதவுகள் மூடியே இருந்தன. “இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது, சோனியா தனது குழந்தைகளுடன் இத்தாலிக்கு திரும்ப விரும்பினார் ” என்று நான் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதைத்தான், காங்கிரசார் கடுமையாக எதிர்த்தனர். கோடிக்கணக்கான இந்தியர்களை ஆட்சி செய்யும் தான் ஒரு இத்தாலியர் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. இதைத்தான் காங்கிரஸ் மறைக்க முயற்சி செய்தது. சோனியாவை சாதாரண ஒரு பெண்ணாக பார்த்து எனக்கு தெரிந்த விவரத்தை அனைத்தும் உண்மை மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் தான் எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் அவதூறாக ஏதும் சொல்லப்படவில்லை[10]. சோனியா பற்றி நல்லவிதமாகத்தான் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும், இதனை காங்கிரசார் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை[11]. இவ்வாறு அவர் கூறியுள்ளார்[12].

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மோடியும், சோனியாவும்: ஒரு ஆங்கில டிவி (ஐ.பி.என்.லைவ்) செனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூட, தானாக, சோனியாவைப் பற்றி எந்தவித விசயத்தையும் தவறாகக் கூறவில்லை, மற்றும் சர்ச்சைக்குரியது என்று சொல்லப்படுகின்ற விசயங்கள் எல்லாம், ஏற்னவே எல்லொருக்கும் தெரிந்தவை மற்றும் புபுல் ஜெயகர் போன்றோரின் புத்தகங்களிலும் அவ்விவரங்கள் அடங்கியுள்ளன. நிருபர்வ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மறுக்க்லாமல், நேரிடையாகவே பதிலளித்தார். “மோடி தனது கீழிருந்து மேலே வந்தநிலையை மறைக்காமல், தான் ரெயில்வே நிலையத்தில், டீ விற்றுக் கொண்டிருந்ததை தெரிவித்தார், ஆனால், காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் ஆரம்பத்தை மறைக்க முயல்வது ஏன்”, என்று பதிலளித்தார். “மோடியைப் பற்றி புத்தகம் எழுதுவீர்களா?”, என்று கேட்டதற்கு, எழுதுவேன் என்றார்!

 Who-is-qutrochi-dinamalai

ஜாவியர் மாரோவும், பெருமாள் முருகனும்: ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்கள் எதிர்க்கப் பட்டிருக்கின்றன, ஆனால், சோனியா புத்தக எதிர்ப்பு நமது நாட்டிலேயே சிறியதாக்கி, அமுக்கி வாசி, அமுக்கியே விட்டனர். ஆனால், பெருமாள் முருகன் புத்தக விவகாரமோ, பெரியதாக்கி, அனைத்துலக விசயமாக்கப்பட்டுள்ளது. “தி ஹிந்து”வின் இரட்டை வேடமும் வெளிப்படுகிறது. சென்னையில், ஏதோ இலக்கிய விழா நடத்துகிறோம் என்று, தினம்-தினம், “மாதொருபாகன்” புத்தகத்தைப் பற்றி பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. ஆனால், “சிவப்புப் புடவையை”ப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. இருவேளை சிவப்பு நிறம் என்பதனால், அப்படி அனுதாபத்துடன் (கம்யூனிஸ சார்பு என்பதால்) நடந்து கொண்டதா என்று தெரியவில்லை. அவ்விழாவில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு இதைப் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது. இருப்பினும் மிகசாமர்த்தியமாக அமைதி காத்தனர், ஆனால், பெருமாளைப் பற்றி இன்று வரை “தி ஹிந்து” செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

[1] தினமலர், சோனியாவை விமர்சிக்கும் புத்தகம் ; காங்., பயங்கர எதிர்ப்பு “யுத்தம்”: எழுத்தாளர் வேதனை, ஜபனவரி.19, 2015.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127575

[3] http://tamil.oneindia.com/news/india/controversial-sonia-gandhi-book-now-in-india-219023.html

[4] http://www.india.com/news/india/the-red-sari-the-story-behind-the-controversial-book-on-sonia-gandhi-251335/

[5] http://www.thehindu.com/news/national/did-not-obstruct-book-on-sonia-congress/article6794558.ece

[6] http://timesofindia.indiatimes.com/india/Moros-controversial-book-on-Sonia-hits-stands-in-India/articleshow/45904070.cms

[7] http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[8] http://indianexpress.com/article/india/india-others/sonia-book-blown-out-of-proportion-by-congs-poor-pr-people-moro/

[9] “She is no aristocrat, but Congress wants to make her royalty .” Moro says he’s met the Congress president once when his uncle, Domnique Lapierre (author of `Freedom at Midnight’), was receiving the Padma Bhushan. He walked up to her and said “I’ve been sleeping with you for four years.” He meant he’d been obsessed with her while writing the book. “She was shocked, then managed to laugh. The only line she ever said to me was: ‘We never read anything that’s published about us.'” She abhors the press, hates being talked about and every time he tried to meet her, she was always totally “closed”.

http://timesofindia.indiatimes.com/india/Cong-launched-a-terror-campaign-against-my-book-on-Sonia-Gandhi/articleshow/45918539.cms

[10] தினகரன், சோனியா புத்தகம் காங். எதிர்ப்பு ஏன் ஆசிரியர் புலம்பல், 18-01-2015,05.56.04, சனிக்கிழமை

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127726

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=1164490

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு

சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டவிரோதமானது, அத்திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் நிலையிழந்தது: பிராமணர்-எதிர்ப்பு, சடங்குகள்-இல்லாத, தாலி-கட்டாத, திராவிடத்துவ, பெரியாரிய சுயமரியாதை / சீர்திருத்த திருமணங்கள் நடந்தன. ஆனால், நீதிமன்றங்களுக்கு அவர்கள் வாரிசு உரிமை, சொத்துரிமை, சொத்துப் பிரிப்பு முதலிய வழக்குகளுக்குச் சென்றபோது, அவர்களின் திருமணம் அந்நேரத்தில் / அக்காலத்தில் உள்ள சட்டங்களின்படி செல்லாது என்றாகியது. அதாவது, அப்பொழுதிருந்த எந்த திருமணச் சட்டத்திலும், இத்தகைய முறை இல்லாமல் இருந்ததால், இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தவை என்றாகியது. தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது என்பதனை பகுத்தறிவுகள், திராவிட வீரர்கள் புரிந்து கொண்டனர்.  அதாவது, அவர்களது திருமணங்களும் சட்டங்களுக்குப் புறம்பானவை, பிறந்த மகன்கள்-மகள்களும் அவ்வாறே பிறந்தவை என்றாகியது. பிறகு எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது?

சுயமரியாதை திருமணம்

சுயமரியாதை திருமணம்

திராவிடர்கள் இந்துக்கள் ஆனது, மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.

Self-respect marriage validated under Hindu Marriage Act

Self-respect marriage validated under Hindu Marriage Act

பெருமாள் முருகன் போன்றோர், இக்கருவை வைத்து ஒரு நாவல் எழுதுவார்களா?: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா? எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா? எண்ணும்-உரிமை, கருத்துரிமை, சொல்லுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசிவரும் முற்போக்குவாதிகள், “இந்துத்துவ-வாதிகள்”, இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் மற்ற வகையறாக்கள் இதைப் பற்றி என்ன சொல்வார்கள்?

My rights and the rights of others

My rights and the rights of others

உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் எல்லாமே எல்லைகளுக்குட்பட்டவை: உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் என்றெல்லாம் ஒருவருக்கே, ஒரு சமூகத்திற்கே, ஒரு சித்த்தாந்த கூட்டத்திற்கே  என்று தமதாக உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளவேண்டுமானால், உள்ள உரிமைகட்டுகளையும் உடன் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றுடன் இணைந்த கடமை, பொறுப்பு முதலிய சரத்துகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதாவது –

  1. மனம் ஒரு குரங்கு என்று தத்துவம் பேசலாம், ஆனால் உரிமைகள் என்று வரும் போது, கயிற்றால் கட்டித்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.
  1. ஒருவரது சிந்தனையுரிமை அடுத்தவரது சிந்தனையுரிமையை மீற முடியாது;
  1. ஒருவரது எண்ணவுரிமை, அடுத்தவரது எண்ணவுரிமையை பாதிக்கக் கூடாது;
  1. ஒருவரது கருத்துரிமை, அடுத்தவரது கருத்துரிமையை பரிக்க முடியாது;
  1. ஒருவரது சிந்தனையுரிமை, அடுத்தவரது சிந்தனையுரிமையை மீறமுடியாது;
  1. ஒருவரது பேச்சுரிமை அடுத்தவரது பேச்சுரிமையைக் கொள்ளைக் கொள்ள முடியாது;
  1. ஒருவரது எழுத்துரிமை அடுத்தவரது எழுத்துரிமையை தூஷிக்க முடியாது;
  1. அவரவர், அவரவரது இடங்களில், எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயல்பட வேண்டும், வரம்புகள் மீறமுடியாது.
  1. பஞ்சபூதங்களுக்கு எல்லைகள்-வரம்புகள் இல்லை என்று இருக்கலாம், ஆனால், அவையும் மீறும்போது அழிவு, பேரழிவு ஏற்படுகின்றது. அதுபோலவே,  பஞ்சபூதங்களிலான மனிதர்களும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களே.
  1. கிரகங்கள், அண்டம், பேரண்டம் எல்லாமே,  ஒழுங்காக தத்தம்வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது, நிலையில்லாத மக்கள், தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களையும் அடக்கி-ஒடுக்க முடியாது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

http://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (4)

ஆலவாயன்- பெருமாள் முருகன்

ஆலவாயன்- பெருமாள் முருகன்

திராவிடத்துவவாதிகள் மௌனம் சாதித்தது (தி இந்து வர்ணனை): எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது திணிக்கப்பட்டுள்ள சமூக புறக்கணிப்பை மேலும் உறுதி செய்வதாகவே இருக்கிறது ‘மாதொருபாகன்’ பிரச்சினையில், திராவிட கட்சிகள் மவுனம் சாதிப்பது[1]. தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அறிவித்துள்ளார். அவரது உணர்ச்சிமிகு இந்த அறிவிப்புக்குப் பின்னரும்கூட அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள் தங்களது மவுனத்தை கலைத்தபாடில்லை.  முக்கியப் பிரச்சினைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அறிக்கைகளை அவிழ்த்துவிடும் திமுக தலைவரும், இலக்கியவாதியுமான கருணாநிதிகூட ஒட்டுமொத்த ஊடக உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமாள்முருகன் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காதது ஏனோ? ஆளும் அதிமுகவும் இந்த விஷயத்தைப் பொருத்தவரை பாரபட்சமில்லாமல் மவுனம் காத்துவருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான பின்னர் ஜெயலலிதா எந்த விவகாரத்திலுமே தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[2], என்று முடிக்கப்பட்டது. அரசியல்வாதிகள் இப்பிரச்சினையால் தமக்கு ஆதாயம் வருமா என்று பார்த்துதான், கருத்துத் தெரிவிப்பார்கள்.  ஒருவேளை எதிர்ப்புக் கிளம்பும், ஓட்டுகள் கிடைக்காது என்றால், அமைதியாகத்தான் இருக்கும்.

மாதொரு பாகன் - அத்தியாயம்,13, ப,84-85

மாதொரு பாகன் – அத்தியாயம்,13, ப,84-85

சித்தாந்த ரீதியில் தமிழக எழுத்தாளர்கள் ஈடுபட்டு வருவது: தமிழகத்தைப் பொறுத்த வரையில் முற்போக்கு சிந்தனை, தாராளமான எண்ணங்கள், நவீனத்துவம், முதலிய முகமூடிகளில், நாத்திகர்கள், இடதுசாரி வகையறாக்கள், முஸ்லிம்கள், கிருத்துவர்கள் முதலியோர் சித்தாந்த ரீதியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோருமே பாரபட்சமுறையில் கருத்துகள் தெரிவிப்பது, குறிப்பிட்ட மதங்களுக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை தூஷிப்பது; குறிப்பிட்ட ஜாதிக்கு சார்பாக பேசுவது, அதே நேரத்தில், இன்னொரு மதத்தை விமர்சிப்பது; சில விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்கள் முதலியவற்றை ஆதரிப்பது, மற்றவற்றை எதிர்ப்பது என்று கடந்த 60 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இப்பொழுது கூட சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், ஜோசப், முதலியோர் பற்றி குறிப்பிடுவதில்லை. 1970ல் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டது போன்ற விசயங்களும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால், இன்று அப்படி செய்தால், என்னாகும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை தமிழக மக்களும் கவனித்து வருகின்றனர். முன்பு திராவிட கட்சிகளை எதிர்த்துக் கேட்பவர்கள் அடிக்கப் பட்டார்கள், அவர்கள் உடமைகள் தாக்கப்பட்டன; இதனால் அவர்கள் பயந்து கிடந்தனர்.  இப்பொழுது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கே, தங்களது சித்தாந்தம் இனிமேல் எடுபடாது என்று தெரிந்து விட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை அடிகள் வாங்கி அமைதியாக இருந்தவவர்கள், திரும்பினால் என்னவாகும் என்பதனையும் அவர்கள் உணர ஆரம்பித்திருக்கலாம்.

அர்த்தநாரி- பெருமாள்

அர்த்தநாரி- பெருமாள்

இந்துத்துவவசைபாடல், இந்துவிரோதவாதம் எப்பொழுதும் எடுபடாது: சமீப காலத்தில் அவர்களது அரசியல் மற்றும் சித்தாந்தம் வலுவிழந்து விட்டதால், மக்கள் உண்மையினை உணற ஆரம்பித்து விட்டனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே நிலையை அடைந்து விட்டதால், திராவிட கட்சிகள் போன்று, பல அவதாரங்களைப் பெற்று வேலை செய்து வருகின்றன. மதம், பாரம்பரியம் கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றைப் பற்றிய அவர்களது விளக்கங்களும் திரிக்கப்பட்டவை, பொய்யானவை, சரித்திர ஆதாரமற்றவை என்றும் மக்களுக்குப் புரிய ஆரம்பித்தன. இதனால், தான் மக்கள் கேட்டுள்ளனர். ஆனால், அதனை, ஊடகங்கள் “இந்துத்துவவாதிகளின்” வேலை என்றெல்லாம் இன்னொரு திரிபு விளக்கத்தைக் கொடுத்து திசைத் திருப்பப் பார்த்தார்கள். “பெருமாள் முருகன் இந்துத்துவ மற்றும் சாதி சக்திகளினால் வேட்டையாடப்பட்டதால் எழுதுவதையே விட்டுவிட தீர்மானித்தார்…..” என்று தலைப்பிட்டு “தி ஹிந்து” பிரத்யேகமாக 14-01-2015 அன்று வெளியிட்டுள்ளது. அதில் கூட மக்களின் மனம் புண்பட்டதே, அதனால் தானே அவர்கள் வெகுண்டனர், போராட்டம் நடத்தினர்…என்பதனை மறைத்து, திரித்து இந்துத்துவம் என்றெல்லாம் வாதிப்பது நோக்கத்தக்கது. அதாவது, எல்லாவற்றிற்கும் காரணம் இந்து அமைப்புகள் தாம் என்ற கருத்தைத் திணிக்கப் பார்க்கிறது. கருணாநிதி மௌனமாக இருந்தாலும், இந்த இந்து-எதிர்ப்புவாதத்தை விடுவதாக இல்லை. சாதியத்தை வளர்த்து, கட்டிக்காத்தது திராவிட சித்தாந்தமும், அதனை சார்ந்த அரசியலும் தான் என்ற உண்மையினை அவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். இங்கும் சாதியப் பிரச்சினை சம்பந்தப்பட்டிருப்பதால், இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.ஏனெனில், அதுவும் ஒரு புத்தகம் பற்றியது தான், மார்ச்.2014ல் நடந்த நிகழ்ச்சி! சென்ற 2014ல் அருந்ததி ராய் முன்னுரையுடன் வெளியான ஒரு புத்தகத்தை “தலித்துகள்” எதிர்த்ததைப் பற்றி நமது அறிவிஜீவிகள் மறைத்துள்ளதால், அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறேன்.

Arunthati Roy book - The Doctor and the Saint - released March 2014

Arunthati Roy book – The Doctor and the Saint – released March 2014

தலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்?: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி?” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[3]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[4]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[5] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[6]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[7]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[8]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா, அம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[9]. அருந்தியின் பேட்டி[10] மற்றும் கட்டுரை[11] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[12]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[13].  இதை இங்கு ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், இவ்விசயத்தில் “முற்போக்கு” யார், “பிற்போக்கு” யார், சாதியத்தை எதிர்ப்பது யார், ஆதரிப்பது யார் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளத்தான்! “எழுத்தாளர்கள்” என்று தங்களைத் தாங்களே பற்பல அடைமொழிகளை வைத்துக் கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் “செலக்டிவ் அம்னீஸியா” இல்லாமல் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.  திராவிடம் இத்தகைய ஆண்-பெண் சேர்ப்பு, புனைப்பு, பிள்ளைப் பிறப்பு முதலிவற்றுடன் சம்பந்தப் பட்டிருப்பதால், ஒரு திராவிட உதாரணத்தையும் கொடுக்கலாம்.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[2] http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article6788072.ece?utm_source=vuukle&utm_medium=referral

[3] A Reply To The Mahatma– Excerpted from Annihilation of Caste: The Annotated Critical Edition, published by Navayana, New Delhi.B.R. AMBEDKAR

[4] http://navayana.org/product/annihilation-of-caste/#_amscckbx

[5] “……And yes, the launch was cancelled by Navayana for a number of reasons, including an SMS that was circulated that said: “Save Ambedkar writings. Oppose Navayan publication. Annihilation of Caste is our holy book. Arundhati Roy and Anand. S contaminated it. Participate in the protest on 9th March at Sundaraiah Vigynana Kendram, Hyderabad.” From Arunthati’s letter.

http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7284:arundhati-roy-replies-to-dalit-camera&catid=119&Itemid=132

[6] Strangely, some Dalit radicals and intellectuals have a problem with Arundhati Roy reading, learning from and expounding about Ambedkar. On March 9, Roy was to be in Hyderabad to launch the book. But the event was cancelled because the publisher feared protests from Dalit radicals who have been upset about the book.

[7] http://scroll.in/article/658279/Why-Dalit-radicals-don’t-want-Arundhati-Roy-to-write-about-Ambedkar

[8] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.

[9] In other words, Dalit intellectuals think it is their right, by virtue of their caste, to decide whether a Maoist sympathiser can write on Ambedkar; whether one can write on the Ambedkar debate with Gandhi; or whether one is allowed to write more words in criticism of Gandhi than in praise of Ambedkar.

[10] http://www.outlookindia.com/article/We-Need-AmbedkarNow-Urgently/289691

[11] http://www.outlookindia.com/article/The-Doctor-And-The-Saint/289693

[12]  http://www.newsyaps.com/ambedkar-arundhati-roy-and-the-politics-of-dalit-representation/102338/

[13] http://twocircles.net/2014mar13/dalit_intellectuals_voices_should_be_heard_arundhati_roys_ambedkar_introduction.html#.VKx3evmSynU

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஆதாரம் இல்லை - பெருமாள் முருகன்

ஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்

மாதொருபாகன் பிரச்சினையை சார்லி ஹெப்டோவுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்?

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

  1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
  2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
  3. பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
  4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
  5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

பெருமாள் முருகன் - மாதொருபாகன்

பெருமாள் முருகன் – மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லைவெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான்! மேலும், “மாதொருபாகன் நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.

மாதொரு பாகன் ஆதரவு.2

மாதொரு பாகன் ஆதரவு.2

நாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

Madhuru Bagan - Oppopsition for sales increase DM

Madhuru Bagan – Oppopsition for sales increase DM

மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன? இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

தமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது! பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது!”, 10-01-2015.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6785870.ece

[3]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article6772647.ece

[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240

[6]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/01/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2620630.ece

[7] தினமணி, கருத்துரிமைக்காக போராட்டம், By dn, சென்னை First Published : 15 January 2015 04:47 AM IST

[8] The Hindu, “The writer is dead”,  Wednesday, 14-01-2015, p.7.

[9] http://heronewsonline.com/novel-controversy/

[10] http://heronewsonline.com/periyaar/

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6733122.ece

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (2)

Mathoru bagan compromise -Novel controversy

Mathoru bagan compromise -Novel controversy

பொது மக்களும், ஊடகங்களைப் பின்பற்றுபவர்களும்: படித்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக அவ்வாறு நாவல்களை வாங்கிப் படிப்பார்கள், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆகவே, பொது மக்கள் இவரது நாவலைப் படித்து, விவாதிக்கவோ, மறுப்பு நூல் எழுதுவதோ என்பது ஆகாத காரியம். பொது மக்கள் எல்லோரும் நாவலை வாங்கி படித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதேபோல, அவர்களை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்பதும் இழுத்தடிப்பு வேலைதான் என்று அறிந்து கொள்ளலாம். சாதாரண பொது மக்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருப்பார்களே, தவிர இத்தகைய காரியங்களுக்கு வரமாட்டார்கள். “மாதொரு பாகன்” என்ற சொற்றொடர், சிவபெருமானைக் குறிக்கும் என்பதை இந்துக்கள் நன்றாகவே அறிவர். குறிப்பாக சைவர்களுக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும், பொதுவாக இத்தகையப் புத்தகங்களை அறிவிஜீவிகள் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் வாங்கிப் படிப்பது கிடையாது. அதனால், யாரும் அப்புத்தகங்களைக் கண்டுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பெருமாள் முருகன் என்றவர் எழுதிய அப்பெயர் கொண்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு இவ்வளவு கலாட்டா செய்துள்ளது கூட, நாளிதழ் படிப்பவர்கள், டிவி-செய்தி பார்ப்பவர்கள் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. முற்போக்கு, நவீனத்துவம், சிறகடித்துப் பறக்கும் எண்ணங்கள் கொண்ட எழுத்தாளர்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் குழுக்கள், இருவரையொருவர் பாராட்டி, புகழ்ந்து கொண்டு, இத்தகைய எழுத்துமூட்டைகளைக் குவித்து வருகிறார்கள். வேறு வழிகளில் பணம் கிடைத்து வருவதால், பணத்தை செலவழித்து புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதில் இவர்களுக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தை விற்க யுக்தியா

மாதொருபாகன் ஆங்கில புத்தகத்தின் விற்பனயைப் பெருக்க யுக்தியா?

பெருமாள் முருகன் உள்ளூர் பள்ளிகளை விமர்சித்தது முதலியன: பெருமாள் முருகன் விளக்கம் கொடுத்தது போல, மகாபாரதம், முதலிய கதைகள் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை. நாத்திகர்களுக்கு, ராமாயணம்-மகாபாரதம் முதலிய கட்டுக்கதை என்றெல்லாம் வர்ணிப்பவர்களுக்கு, அதிலிருந்து இப்படி எடுத்துக் காட்டி, திரித்துக் கூறுவதே வழக்கமாகி விட்டது. “வாடகைத் தாய்” விசயம், விஞ்ஞான ரீதியில் செயல்படுகிறது. அதற்காக, குழந்தை இல்லாத ஒரு பெண்னை அவ்வாறு அடுத்தவன் கூட படுத்து, குழந்தைப் பெற்றுக் கொள் என்று கதை எழுதமுடியுமா என்று உள்ளுர்வாசிகளில் விசயம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள். தனக்கு எதிராக கருத்து வலுப்படுகிறது என்றதும், சில பத்திகளை எடுத்து விடுகிறேன், ஊர்பெயரை விட்டுவிடுகிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஆனால், மறுபக்கம் ஊடகங்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் ஊர்களில் உள்ள கல்வி நிறுவனங்களை தான் எதிர்த்ததால், அவை தனக்கு எதிராக செயல் படுகின்றன என்றும் குற்றம் சாட்டினார். மாணவர்களை வைத்து சாதிக்கு எதிராக எழுதவைத்து, அதனைத் தொகுத்து வெளியிட்டார். உண்மையில் மாணவர்கள் இவர் சித்தாந்த ரீதியில் திரிபு விளக்கம் கொடுக்கிறார் என்பது தெரியாது. இங்கிருக்கும் பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழகத்திலேயே முதலிடத்தில் வருகின்றனர், இருப்பினும், அங்கு நடத்தப்பட்டு வரும் கல்விமுறை சரியில்லை என்றெல்லாம் விமர்சித்து எழுதி வந்தார். அந்நிலையில் கவுண்டர் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு எழுதியதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. மேலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று எந்த ஊடகமும் கவலைப்படவில்லை, யாரிடமும் பேட்டி காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

திருச்செங்கோடு மக்கள் கூறுவது

கொங்கு தேசிய மக்கள் கட்சியின் போராட்டம்: இதனால் அவர் மேற்குறிப்பிட்டபடி மன்னிப்பு தெரிவித்த பிறகும் போராட்டம் நடத்த சில இயக்கங்கள் தீர்மானமாக இருந்தன[1]. இதனால், உள்ளூர் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கொங்கு தேசிய மக்கள் கட்சி செயலர் ஈஸ்வரன் அப்புத்தகம்   தடை செய்யப்படவேன்டும் என்றார், என்று ஊடகங்கள் எழுதித்தள்ளின. “திருச்செங்கோட்டை சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள ‘‘மாதொரு பாகன்’’ என்ற புத்தகம் தமிழக பெண்களை மிகவும் கொச்சையாக இழிவாக சித்தரித்துள்ளது. அதே ஆசிரியர் எழுதியுள்ளஆளண்டா பட்சி’, ‘அர்த்தநாரி’ ‘ஆலவாயன்போன்ற புத்தகங்களிலும் பெண்களை இழிவுபடுத்துவதையே நோக்கமாக கொண்டு எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எழுத்தாளர்களுடைய எழுத்து உரிமைக்கும், பேச்சுரிமைக்கும், தமிழர்கள் என்றைக்கும் எதிரானவர்கள் அல்ல. அநாகரீகமாக எழுதுவதையோ, பேசுவதையோ யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே பெருமாள் முருகன் எழுதிய புத்தகங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இந்த பிரச்சனையை தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கின்ற லலிதா குமாரமங்கலத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். எழுத்தாளர் என்று அந்த ஆசிரியருக்கு ஆதரவு கரம் நீட்டுகின்ற தமிழக அரசியல் தலைவர்கள் அவர் புத்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார் என்று படித்து விட்டு பேச வேண்டும்”, என்று விளக்கம் கொடுத்தார்[2]. அதையும், பெருமாள் முருகனும், அவரது நண்பர்களும், ஊடகங்களும் புரிந்து கொண்டது மாதிரி தெரியவில்லை. நாங்கள் செய்திகளை இப்படித்தான் போட்டுக் கொண்டிருப்போம், காட்டிக் கொண்டிருப்போம், நீங்கள் கேட்டுக் கொண்டே இருங்கள், பார்த்துக் கொண்டே இருங்கள் என்ற போக்கில் தான் அவர்கள் செயபட்டார்கள். இதற்கு பெயர் என்ன என்பதை அந்த ஞானிகள், மேதாவிகள், எழுத்தாளர்கள் முதலியோர் தான் சொல்லவேண்டும்.

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

புத்தகத்தை எதிர்த்து கடையடைப்பு அறிப்பு பேனர்

ரஜினி பாணியில் எல்லோருக்கும் காசு கொடுத்து விடுகிறேன் என்றது: 09-01-2015 அன்று திருச்செங்கோட்டில் கடையடைப்பு முழுவதுமாக இருந்தது. ஆனால், எழுத்தாளர்களும், படிப்பாளிகளும் ஆசிரியருக்குத் துணையாக இருக்கின்றனர் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது[3]. கொங்கு சரித்திரநயகனை ஆதரித்து ஏ. ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரையும் வெளியிடப்பட்டது[4]. திராவிடக் கட்சிகளின் மௌனம் ஏன் என்றும் கேட்டு இன்னொரு கட்டுரை வெளியிடப்பட்டது[5]. பதிப்பாளர்களுக்கு நான் இழப்பீடு கொடுத்துவிடுகிறேன், புத்தகத்தை வாங்கியவர்கள் கூட அதனை எரித்து விடலாம், அவர்களுக்கு காசு கொடுத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்[6]. தான் சாதியத்தை சாடுவதால், சாதி இயக்கங்கள் தனக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் கூறியுள்ளார்[7]. தாங்கள் எழுதியுள்ள விவகாரத்திற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு, சரித்திர ஆதாரம் எதுவுமே இல்லை என்று ஒப்புக் கொண்டார்[8]. இவர்களது நண்பர்கள் ஆதாரங்களுடன் எழுதினார் என்றெல்லாம் சொன்னதை இங்கு நினைவு கூறவேண்டும்[9]. போலீஸார் தன்னை மறைந்து வாழும் படி ஆலோசனை கூறியுள்ளனர் என்றும் கூறினார். அதாவது, இவரை யாரோ கொன்று விடுவர் போன்ற பீதியைக் கிளப்பி விட்டது போல செய்தி வெளியிடப்படுகிறது. 12-01-2015 அன்று நடந்த பேச்சு வார்த்தை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் நடந்தபோது, ஆசிரியர் மன்னிப்பு கேட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும்[10], ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவற்றைக் குறிப்பிட்டு பேசிக் கண்டித்துள்ளது வியப்பாக உள்ளது. தமிழ் இந்துவும் விட்டுவைக்கவில்லை, “தமிழகத்தில்தான் இருக்கிறதா திருச்செங்கோடு?”, என்று விவரித்து எழுதியது[11]. சுருக்கமாக சொல்வதானால், திருச்செங்கோட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஏதோ “தலிபன்களை”ப் போன்று சித்தரித்தது. அவர்களது உணர்வுகள் சிறிது கூட எங்களுக்குக் கவலையில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டன. ஆனால், இந்த அளவிற்கு இவை இப்படி நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமலர், திசைமாறும்மாதொரு பாகன்நாவல் எதிர்ப்பு போராட்டம், 11-01-2015.

[2] http://www.maalaimalar.com/2015/01/13094115/Srirangam-election-BJP-candida.html

[3] http://www.thehindu.com/news/cities/chennai/writers-and-academics-support-perumal-murugan/article6773811.ece

[4] http://www.thehindu.com/opinion/op-ed/in-defence-of-the-chronicler-of-kongu/article6778031.ece?ref=relatedNews

[5] http://www.thehindu.com/news/national/tamil-nadu/what-is-behind-dravidian-parties-silence-in-perumal-murugan-issue/article6787696.ece?ref=relatedNews

[6] http://www.thehindu.com/news/national/will-compensate-publishers-perumal-murugan/article6786144.ece?ref=relatedNews

[7] http://www.thehindu.com/opinion/interview/people-are-looking-to-settle-scores-with-me-perumal-murugan/article6778030.ece?ref=relatedNews

[8]  The Hindu, ‘People are looking to settle scores with me’, 12-01-2015, Interview with Kolappan, kolappan.b@thehindu.co.in

[9] ஏ. ஆர். வெங்கடாசலபதி கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்,”நாவலில் இடம் பெற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”

தமிழ்ச் செல்வன் என்பவர், “ரத்தன் டாடா அறக்கட்டளை நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது ” – தினமலர், 03-01-2015, சனிக்கிழமை, சென்னை.

[10] The Hindu, RSS, BJP say they are not behind protests, Tuesday, 13-01-2015

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article6772652.ece