Archive for the ‘ஸ்வபந்தாஸ் குப்தா’ Category

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழா – தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

ஒக்ரோபர் 7, 2019

பாண்டி லிட் பெஸ்ட்  2019  / புதுச்சேரி இலக்கிய விழாதேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம்வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]

Pondy Lit Fest -Tavleen singh, RAW, Kiran Bedi inaguration

சித்தாந்தத்தில், நிபுணர்களை மதிக்காமல் இருப்பது: இங்கு வெங்கட ரகோத்தம், பெரிய சரித்திராசிரியர். சென்ற வருடம், இவரது தலைமையில், ஆரிய-இனவாத சித்தாந்தம் அலசப் பட்டது. அப்பொழுது, ஆராய்ச்சி நெறிமுறை பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்னதை, அந்த போலி சித்தாந்திகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், இம்முறை அவருக்கு, சரியான இடம் கொடுக்கவில்லை. அதாவது, தமது “சித்தாந்தத்திற்கு” ஒத்துப் போகவில்லை என்றால், அவர், ஒதுக்கப் படுவார். மறைக்கப் படுவார். உண்மையில், அது, இவர்களுக்கு நஷ்டமே தவிர அவருக்கு இல்லை. ஏனெனில், அவர்கள் தங்களது ஆராய்ச்சி, ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டது, புத்தகங்கள் எழுதியது முதலியவற்றை வைத்து மதிக்கப் படுவது. அவர்கள் மற்ற எந்த மேடைக்கு சென்றாலும் போற்றப் படுவர்.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within-photo

வலதுசாரிகளின் ஆழமற்ற சிந்தனை மற்றும் வாதங்கள்: வலதுசாரி சித்தாந்திகளான, ஸ்வபந்தாஸ் குப்தா, தவ்லீன் சிங், ஆனந்த் ரங்கநாதன், ஆர்த்தி டிக்கூ சிங் முதலியோர் பசு, காஷ்மீர், முதலியவற்றைப் பற்றி விவாதித்தாலும், “வலதுசாரிகளின் உரிமைகள்” என்ன என்று அவர்களால் சொல்ல முடியவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை. பிரச்சினைக்கு வழிமுறைகளை சொல்லவும் முடியாமல், ஏதோ கற்பனையாக, தத்துவர்த்த ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்கள்[1]. உண்மையில், சவர்க்கரை இவர்கள் புகழ்வதாக, ஏற்றுக் கொள்பவர்களாக இருந்தால், அவரை சிங்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர பசுவாக அல்ல என்று தவ்லின் சிங் எடுத்துக் காட்டினார்[2]. நிச்சயமாக, பசுவைப் பற்றி, இந்துத்துவவாதிகள் குழப்பமாகத்தான் இருந்தனர். அவர்களுக்குள் வாதிட்டுக் கொண்டது, அவர்களது முரண்பாட்டை எடுத்துக் காட்டியது. தமிழகத்தைப் பற்றி தெரியாதவர்கள், தமிழகத்தைப் பற்றிப் பேசியது கேலுக் கூத்தாக இருந்தது. விசயங்களை களப்பணி செய்து, சம்பந்தப் பட்டவர்களை நேர்காணல், முட் முதலியவற்றை செய்யாமல், புத்தக ஞானத்தை வைத்து, கருதுகோள் போல பேசித் தள்ளியது தமாஷாக இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரிந்தால் போதும் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப் பட்டது வேடிக்கையாக இருந்தது.

Pondy Lit Fest - left, right ideological struggle

வலது, வலதுசாரி, வலதுசாரி சித்தாந்தம் முதலியன: வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல், சொற்றொடர், பிரயோகம் பிரஞ்சு புரட்சியின் பொழுது 1789-1799 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். போலித்தனமாக மதசார்பின்மை என்று அப்பொழுது பேசினாலும், மதசார்பு, ஆதிக்கம் முதலியன இருந்தன. இதனால், அறிவுஜீவித்தனப் போர்வையில், நாத்திகம், மறுக்கும் சித்தாந்தம், விஞ்ஞானம் முதலிய போர்வைகளில் கடவுள் மறுப்பு சித்தாந்திகள் செயல்பட்டனர். இருப்பினும், கடவுளை ஏற்றுக் கொண்டு விஞ்ஞானத்டையும் ஏற்றுக் கொண்டவர் பலர் இருந்தனர். அன்றைய நிலையில், சித்தாந்திகள் வலது, மத்தியம் மற்றும் இடது என்று பிரிக்கப் பட்டனர்,  அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும்.

Pondy Lit Fest -Tavleen singh, and others

சித்தாந்த போலித்தனம் தோல்வியில் முடியும்: கம்யூனிஸ்டுகள் பலவித முகமூடிகளில் செயல்பட்டு மக்களை ஏமாற்றிக் குழப்பினாலும், விஞ்ஞான-தொழிற் வளர்ச்சி, பொருள் உற்பத்தி, அவற்றின் பலன், சந்தை பொருளாதாரம், உண்மையாக உழைத்தால் கூலி-சம்பளம் கிடைக்கும் என்ற நிதர்சனம்  முதலியவற்றைக் கவனித்த, நவீன நுகர்வோர், உண்மையினைக் கண்டு கொண்டனர். அவர்கள் நடுநிலையில் இருக்க விரும்புகிறார்கள். இந்நிலையில் தா, இந்தியாவில், பிஜேபி ஆட்சி-அதிகாரம் அதிகமாக-அதிகமாக, புதியதாக முளைத்து, கட்சியில் சேர்ந்து, மற்றவரை அமுக்கி, மேலே செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். அந்நிலையில் வலதுகளிலேயே போட்டி, பொறாமை, பூசல் சண்டை முதலியன வெளிப்படையாக வந்துள்ளன. பணம் கிடைக்கிறது என்றதால், இத்தகைய தமாஷாக்கள் நடத்தப் படுகின்றனர். பொது / வெகுஜன மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. ஆனால், “அவுட்-ஸ்ரோசிங்” மூலம், மற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, பிரச்சாரங்களால் சாதித்துக் கொள்ளலாம் என்று சமூக குளறுபடிகளை சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பலிக்காது.

Empty chairs, but no mind toaccommodate

தேர்ந்தெடுக்கப் பட்டவர் தவிர மற்றவர்களை வரவிடாமல் தடுத்தது: சென்ற வருடமே, இக்கூட்டம், ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் பதிவு செய்த போது, வரவிடாமல் தடுத்தனர். இவ்வருடமும், முன்னமே பதிவு செய்து [மூன்று முறை], ஈ-மெயில் மூலம் ஞாபகப் படுத்தியப் பிறகும், எந்த கதவலும் வரவில்லை. பிறகு, வேறு வழியில் கேட்ட போது, மறுபடியும் பதிவு செய்யுங்கள் என்று ஒரு லிங்கை அனுப்பினார்கள்! இப்பொழுது, விவரங்கள் பின்னால் சொல்லப் படும் என்ற குறிப்போடு “கலந்து கொள்பவர்” [participant] என்ற ரீதியில், அனுமதித்துள்ளார்கள். ஆக, இதென்ன, குறிப்பிட்டவர்களுக்கு, ரகசியமாக நடத்தப் படுவதா? அதுமட்டுமல்லாது, எங்கு வரவேண்டும், எங்கு தங்குவது. பங்கு கொள்வோர், முனைவர் போன்றோர் எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்று எதையும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும், பதில் இல்லை. ஆகவே, இவையெல்லாமே, மற்றவர்களைத் தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் நடத்தப் பட்ட கூட்டம் என்றாகியது.

Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within

வலதுசாரிகளில் உண்டான பிரிவுகள்: இத்தகைய செயற்கையான, வற்புருத்தப் பட்ட, குறுகிய எண்ணங்களுடன், சுயநலத்துடன், பாரபட்சங்களுடன் செயல்படும் சித்தாந்திகளின் கூடுதலாக இருந்ததால், அவர்களுக்குள்ளேயே வேறுபாடுகள் வெளிப்பட்டன:

  1. சமூகத்தில் முற்போக்காக இருந்து பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  2. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் வலதுசாரியாக இருப்பது
  3. சமூகத்தில் தங்களது அந்தஸ்தை ஸ்திரமாக வைத்துக் கொண்டு, பொருளாதார ரீதியில் இடதுசாரியாக இருப்பது, அவர்களது போலித் தனத்தைக் காட்டுகிறது.

சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயற்கையாக இருந்தது.சித்தாந்த ரீதியில் விவரிப்பது, எல்லாமே, ஒரே ஒரு கற்பனையான, அமானுஷ்ய வலதுசாரித்துவ கட்டமைப்பில் அடக்குவது செயயற்கையாக இருந்தது. புதுச்சேரி இலக்கிய விழா மறுபடியும், குறிப்பிட்ட கூட்டம், தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டாளிகள், பாரபட்சம் கொண்ட திடீர் சித்தாந்திகள் சேர்ந்து நடத்தப்படும் குறுகிய-விழாவாகி விட்டது. புதுச்சேரி இலக்கிய விழா, உண்மையிலேயே “பாண்டி லிட் பெஸ்ட்” ஆகி, இந்தியில் பாட்டு என்ன, பேச்சு என்னா என்று போய் கொண்டிருக்கிறது! காலியாக இருந்த நாற்காலிகள், நான்கு சுவர்களில், “நான் பேசுகிறேன், கேட்டு ஜால்றா போடு” என்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியிலே பாட்டு, ஆங்கிலத்திலே உரையாடல், எலைட்-ஆண்-பெண்கள், என்ற ரீதியில், தேசியம்: யார் தேசவிரோதி, இந்துத்துவம்: வாழ்க்கை முறையா, இந்துயிஸத்திம் புதுவுருவமா, போன்ற தலைப்புகளில் பேச்சு, ….முன்பு, தாஜ் கோரமண்டல் ஓட்டலில், “வறுமையின் உள்-கூறியல்” என்ற தலைப்பில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தில் கருத்தரங்கம் தான் ஞாபகம் வந்தது! நன்றாக வகைவகையாக சாப்பிட்டிக் கொண்டு, ஒருவர் “மிமிக்ரை” வேறு செய்து கொண்டிருந்தது வேடிக்கையாக இருந்தது!

© வேதபிரகாஷ்

07-10-2019

Pondy Lit Fest -audience

[1] The Print, Pondy Lit Fest shows India’s Right-wing has more disagreements within, Abhijit Iyer-Mitra

Updated: 29 September, 2019 4:01 pm IST

[2] https://theprint.in/opinion/pondy-lit-fest-shows-indias-right-wing-has-more-disagreements-within/298483/