Archive for the ‘சர்ச்சைக்குட்பட்ட கட்டிடம்’ Category

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

ஒக்ரோபர் 3, 2010

ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது!

 

உத்திர பிரதேசத்தில் பிரபலமான ஹுஸைனி புலிகள் என்ற முஸ்லீம் இளைஞர் குழு ரூ.15 லட்சம் ராமர் கோவில் கட்ட கொடுக்க முன்வந்துள்ளது. ஷியா பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லீம்கள், மற்றவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மௌலானா கல்பே சாதிக் என்ற முஸ்லீம் மதத்தலைவரின் உறவினரான, ஷம்ஸில் ஷம்ஸி என்பவர் ஹுஸைனி புலிகள் இயக்கர்த்தின் தலைவர். அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்ட் (AIMPLB) என்ற அமைப்பையும், உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செல்லவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள்-முஸ்லீம்கள் கூடி பேசி, ஒரு சமரசத்திற்குய் வரலாம் என்று சொல்கிறார்.

மௌலானா கல்பே சாதிக் அவர்களின் மகன் மௌலானா கல்பே ஜவ்வாத் என்பவர், உயர்நீதி மன்றத் தீர்ப்பிற்கு முன்பே அத்தகைய சமரச் தீர்விற்கு வரலாம் என்று சொல்லியிருந்தார். மேலும் அந்த அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் போர்டின் உப தலைவராகவும் உள்ளார். இந்துக்களும், முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு செய்தால், மதநல்லுறவோடு நல்ல உறவு ஏற்படும் என்கிறார்.

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

முஸ்லீம்கள்-15 லட்சம் கொடுத்தனர்-ராமர் கோவிலுக்கு

பைசாபாதில் முஸ்லிம்கள் ராமஜென்மபூமிக்கு விரோதமாக இல்லை, ஏனெனில், அவர்களில் பெரும்பாலும், ராமர் கோவிலுக்கும் வரும் இந்துக்களை நம்பிதான் அவர்களது வாழ்வாதாரமே உள்ளது. மேலும், இப்பிரச்சினையால் இந்துக்கள் அவர்களை வேறுவிதமாக கருதுவது கூட தங்களுக்கு சங்கடமாக இருக்கிறது என்கிறார்கள்.

அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது?

செப்ரெம்பர் 27, 2010

அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது?

பதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள்விகளை எழுப்பும் அறிவுஜீவிகள்: அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது? இப்படிப்பட்ட கேள்விகள் ஏற்கெனெவே உச்சநீதி மன்றத்தில் அலசப்பட்டு, அதிகமான அளவில் விவரங்கள் கொடுத்துள்ள போதும், தமிழில் எழுது வரும் சில அறிவுஜீவிகள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஏமாற்றி வருகின்றன. நீதிமன்ற தீர்ப்புகள் விவரங்களையும் கொடுக்காமல் பொய்-பிரச்சாரம் செய்து வருகின்றன.

இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605 தீர்ப்பு: இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605, 1994 SCC (6) 360 என்ற தீர்ப்பில், பல விவரங்கள் உள்ளன. இவற்றை ஒரு முறையேனும் படித்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவிலை ஆனால், பாபர் மசூதியை யார் இடித்தது என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Ismail Faruqui vs Union Of India on 24 October, 1994

http://www.indiankanoon.org/doc/1441422/

Equivalent citations: 1995 AIR 605, 1994 SCC (6) 360

Bench: Verma, J Saran

PETITIONER:

ISMAIL FARUQUI

Vs.

RESPONDENT:

UNION OF INDIA

DATE OF JUDGMENT24/10/1994

BENCH:

VERMA, JAGDISH SARAN (J)

BENCH:

VERMA, JAGDISH SARAN (J)

VENKATACHALLIAH, M.N.(CJ)

AHMADI, A.M. (J)

RAY, G.N. (J)

BHARUCHA S.P. (J)

160 பத்திகள் கொண்ட தீர்ப்பைப் படிக்க வேண்டும். டிசம்பர் 1949 லிருந்து 06-12-1992 வரையிலுள்ள நிகழ்ச்சிகளை அலசுகின்றது.

முழு தீர்ப்பு கீழே, முதல் பதிலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்துக் கொள்ளலாம்.