Archive for the ‘முஸ்லீம்கள்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம்என்ன? (1)

திசெம்பர் 21, 2022

கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் எல்லாம் இருக்கும் பொழுது, நலவாரியம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? (1)

உள்ஒதுக்கீட்டிலும்உள்ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –

  1. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  2. 1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.

இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

மே 2022ல் கிருத்துக் குழு செஞ்சி மஸ்தானை சந்தித்து கூறியது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட முடிவு செய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம் அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].

ஜூன் 2022 நலவாரியம் ஆமைக்க ஆணை வெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

18-12-2022


[1] நக்கீரன், தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படும் சட்ட விதியை ரத்து செய்ய வேண்டும்” – செபி பேராய தலைவர்!, நக்கீரன் செய்திப்பிரிவு  பி.அசோக்குமார், Published on 09/05/2022 (16:28) | Edited on 09/05/2022 (16:39)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/we-need-repeal-law-denies-permission-build-church-and-gather-people

[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.

[4] தினத்தந்தி, தேவாலய பணியாளர்களுக்கு நலவாரியம்தமிழக அரசு அரசாணை, Jun 1, 7:24 pm.

[5] https://www.dailythanthi.com/News/State/welfare-board-for-church-employees-government-of-tamil-nadu-712597

[6] தமிழ்.இந்து,  கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்களுக்கு நலவாரியம், செய்திப்பிரிவு, Published : 02 Jun 2022 06:39 AM, Last Updated : 02 Jun 2022 06:39 AM

[7] https://www.hindutamil.in/news/tamilnadu/808626-welfare-for-christian-church-preachers-1.html

[8] தினகரன், தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல், 2021-09-09@ 00:11:32

[9] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=703789

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி – அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ஜூன் 16, 2016

ரம்ஜான் கஞ்சிக்கு சிறந்தது எந்த அரிசி அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுமா, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குமா, குடிப்பதற்கு தயாராகுமா?

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது

சந்திரசேகர ராவின் அன்பளிப்புகள்: சரி நாயுடு இப்படியென்றால், அந்த ராவ் சும்மா இருப்பாரா? ஆமாம் தெலிங்கானா முதல்வர், கே. ராஜசேகர ராவும், இரண்டு கோடி ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு ரம்ஜான் கொண்டாட புதிய துணி-மணிகள் கொடுப்பேன் என்று கிளம்பி விட்டார்[1]. ஜூன் 17ல் ஆரம்பித்து 22 வரை இந்த துணி-மணிகள் கொண்ட பேக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும்[2]. 5,000 இமாம்களுக்கு ரூ.1000 இனாம், ரூ 100 குடும்பத்திற்கு என்று ரூ. 26 கோடிகளுக்கு ஒரு திட்டத்தையே அமூல் படுத்தி விட்டார். ஆக இப்படித்தான் ரம்ஜான் ஜல்ஸா செக்யூலரிஸ ரீதியில் நடக்கிறது. சரி, இனி மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள் சும்மா இருப்பர்களா? ஏற்கெனவே தெலிங்கானாவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர், பிரிவினைக்குக் கூட, அதாவது இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆந்திரா-தெலிங்கானா பிரிவினக்களுக்கு, அவர்கள் அதிகம் ஆதரித்தனர், இதனால், தெலிங்கானாவில், அவர்களது ஆதிக்கம் அதிகமாக உள்ளதாம், மேலும் பிரிவினைவாத சக்திகள் தங்களது வேலைகளை தீவிரமாக செய்வார்கள் என்று விவாதிக்கப்படும் வேளையில் இவர்கள் அடிப்படைவாதத்தை ஊக்கும் வரையில், ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்று மற்ற தெலுங்கு பேசும் மக்கள் கவலையுடன் தான் இருக்கின்றனர்.

Ramzan mubarak - Modi wayபிஜேபியும், ரம்ஜானும், இப்தர் பார்டிகளும்: அரசாட்சியில் இருப்பதால், பிஜேபியும் முஸ்லிம்களை வாழ்த்த வேண்டியுள்ளது, வாழ்த்தட்டும், அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முஸ்லிம்களும் இந்நாட்டு மக்கள் தாம், சகோதரர்கள் தாம். ஆனால், “இந்துக்கள் பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் கொடுமைப் படுத்தும் போது, அங்குள்ள முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள், ஆனால், சூஷ்மா ஸ்வராஜ், அத்வானி, சஞ்சய் ஜோஷி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, முரளி மனோஹர் ஜோஷி, வசுந்தராஜே சிந்தியா முதலியோரின் மீது வெறுப்புக் காட்டுகின்றனர்….”, என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டினதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம்[3]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜ்நாத் சிங், கட்கரி போன்றோரே குல்லா போட்டுக் கொண்டு, இபதர் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இப்பொழுதும், அதாவது 2016லும், பாகிஸ்தானின் கராச்சி நகரில், ரம்ஜான் மாதத்தையொட்டி, நோன்புக்கு தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை, விற்று வந்த 80 வயது கோகுல்தாஸ் என்ற கிழவர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்.

hindu-man-attacked in Sindu, Pakistanரம்ஜான் சாக்கில் 80 வயது கிழவர் அடித்து நொறுக்கப்பட்டது (ஜூன் 2016): கோகுல்தாஸ், 80, என்பவர் இப்தார் நோன்புக்கு முன், அவர் வாழைப்பழம் சாப்பிட்டதாக கூறி, அலி உசேன் என்ற போலீஸ்காரர், அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்[4]. இஸ்லாத்திலேயே, வயதானவர்களுக்கு விலக்கு உள்ளபோது, இந்து என்ற முறையில் தான் இவர் வயது கூட பார்க்காமல், முஸ்லிமினால் தாக்கப் பட்டிருப்பது தெரிகிறது. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த ஒருவர், சமூக வலைதளங்களில் அவற்றை வெளியிட்டார்[5]. இல்லையென்றால், இவ்விசயமே தெரியாமல் போயிருக்கும். இதையடுத்து, முதியவருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, ஏராளமானோர் காரசாரமாக விவாதித்தனர். மேலும், கோகுல்தாஸின் பேரன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸ் உயரதிகாரியின் உத்தரவின்படி, அலி உசேனை போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது, இந்துக்கள் முஸ்லிம்களிடன் நட்புடன், அன்புடன், சகோதரத்துவத்துடன் இருந்தால் கூட, அவர்களால் அவ்வாறு பரஸ்பர முறையில், அவற்றை திரும்ப வெளிப்படுத்துவதில், அவர்களது அடிப்படைவாதம் தடுக்கிறது.

BJP ramzan wishes to Pakistan and Bangladeshஅரிசி அரசியலும், செக்யூலரிஸமும்: தேர்தல் நேரத்தில் பிஜேபிகாரர்கள் “அம்மா அரிசி” இல்லை, அது “மோடி அரிசி” தான் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து பார்த்தனர், ஆனால், ஒன்றும் எடுபடவில்லை, அரசியல்-அரிசியும் வேகவில்லை. அரிசி-அரசியல் அறியாத பிஜேபி, புள்ளிவிவரங்களினால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓட்டு வங்கி அரசியல் எனும்போது, எல்லோரும் ஓட்டு வாங்கி வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பார்க்கின்றனர். இன்று உலகளவில் வியாபாரம் நடக்கும் போது, முஸ்லிம்களை விரோதித்துக் கொண்டு, பகைத்துக் கொண்டு வியாபாரம் செய்துவிட முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதி விசயத்தில் மூஸ்லிம்களஸடிக்கும் கொள்ளை சொல்ல மாளாது. ரம்ஜான் பிரச்சினை எப்படி எல்லைகளைக் கடந்து வேலை செய்கின்றது, இந்த அரிசி-கொள்ளை, கடத்தல் விவகாரமும் எல்லைகளைக் கடந்து தான் நடக்கின்றது.

BJP leaders with skull cap for Ifter partiesஇந்தியாவிலிருந்து, இரானுக்கு ரம்ஜானுக்காக ஏற்றுமதி செய்யப் பட்ட அரிசி துபாய்க்குக் கடத்தப் பட்டது: மறுபடியும், அரிசி உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஈரானுக்கு, கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியை, துபாய்க்கு கடத்தியதன் மூலம், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது[6]. இந்தியாவில் இருந்து, ஈரான், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக, ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசியில், 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை, அந்நாட்டின் பந்தர் அப்பாஸ் நகரில் இறக்குவதற்கு பதில், நடுக்கடலில், சட்டவிரோதமாக துபாய்க்கு கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகமான, டி.ஆர்.ஐ., கண்டுபிடித்துள்ளது. இப்படி கடத்தப்பட்ட அரிசியின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இந்த முறைகேட்டில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த, 25 பெரிய ஏற்றுமதியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுபற்றி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விசாரிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு உதவியா என்ற நோக்கில் கூட ஆராயப்படுகிறது.

*              துபாயில் அரிசி இறக்கப்பட்ட போதும், அதற்குரிய விலையை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஈரான் வழங்கியுள்ளது.

*              ‘துபாய்க்கு கடத்தப்படும் அரிசியின் மூலம் கிடைக்கும் தொகை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறதோ’ என, சந்தேகிக்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், இதுபற்றி துபாய் அதிகாரிகளிடம் விசாரிக்கின்றனர்.

*              இந்த முறைகேட்டால், துபாயுடன் உண்மையான வர்த்தகம் நடந்தால் கிடைக்க வேண்டிய அன்னிய செலாவணியை, இந்தியா இழந்துள்ளது. அதேபோல, ஈரானும், சுங்க வரி வருவாயை இழக்கிறது[7]. இதில் சமந்தப்பட்டவர்களில், பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்று சொல்லத்தேவையில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2016

 

Iftar-Party-by-BJP-Minority-Morcha-Karnataka

Chief Minister D V Sadanada Gowda participated & Vished Muslims onthe accassion of Ramjan Festival celebration in Iftar Party arranged by BJP Minority Morcha

[1] Telangana CM KCR would distribute new clothes to 2 lakh poor Muslim families to celebrate Ramzan festival this year. The distribution of the packets would begin on June 17 and end on June 22 in Hyderabad and all other parts of the state. KCR also honored nearly 5,000 Imams across Telangana with Rs. 1000 monthly honorarium, apart from giving a pair of clothes worth Rs 500 to poor families and allotted nearly 26 crores to celebrate Iftar at all the mosques in the state.

gulte.com, KCR’s Ramzan Tohfa, June 15th, 2016, 02:56 PM IST

[2] http://www.gulte.com/news/49905/KCRs-Ramzan-Tohfa

[3] The posters read: “Pakistan, Bangladesh ko Ramzan par dete ho badhai, Sushma, Advani, Sanjay Joshi, Rajnath, Gadkari, Murli Manohar Joshi, Vasundhara ke liye mann mein hai khatai”. (Pakistan and Bangladesh are wished on Ramadan, but ill feelings are harboured against Sushma (Swaraj), Advani, Sanjay Joshi, Rajnath (Singh), (Nitin) Gadkari, Murli Manohar Joshi, Vasundhara (Raje).

http://www.india.com/news/india/poster-criticising-narendra-modi-amit-shah-put-up-sanjay-joshi-supporters-in-delhi-432246/

[4] தினமலர், 80 வயது முதியவரை அடித்த பாக்., போலீஸ்காரர் கைது, ஜூன்.13, 2016: 00.41.

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1541489

[6] தினமலர், ஈரானுக்கு அனுப்பிய அரிசி கடத்தல் ரூ.1,000 கோடி முறைகேடு அம்பலம், பிப்ரவரி.29, 2016: 03.00

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467913

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசி – செக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

ஜூன் 16, 2016

ரம்ஜான் அரிசி, அம்மா அரிசி, நாயுடு அரிசி, ராவ் அரிசி, மோடி அரிசிசெக்யூலரிஸ தீயில் வேகுது, கம்யூனலிஸ நெய்யில் கொதிக்குது!

Ramzan ka tohfa - Naidu way of appeasementரம்ஜான் நோன்பும், இப்தர் பார்டிகளும், செக்யூலரிஸ அரசுகளும்: ரம்ஜான் கா தோஹ்பா [Ramzan ka tohfa], ரம்ஜானுக்குக் கொடுக்கப்படும் பரிசு, இனாம் என்று செக்யூலரிஸ அரசியல்வாதிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள். செக்யூலரிஸம் ஜெயிக்கிறாதோ இல்லையோ, கம்யூனலிஸம் நிச்சயமாக இதனால் ஊற்றி வளர்க்கப் படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திராவிட நாத்திக அரசியல்வாதிகள் கொண்டாடும் இப்தர் பார்ட்டிகளே அலாதிதான். கருணாநிதி போன்றோர் அவற்றில் குல்லா போட்டுக் கொண்டு, கஞ்சி குடித்துக் கொண்டே, இந்துமதத்தை தூஷிப்பது வழக்கமாக இருக்கிறது. காபிர்-மோமின் உறவுகளும் செக்யூலரிஸத்தில் நாறி வருகிறது. ஜெயலலிதா தனக்கேயுரிய பாணியில் அரிசி கொடுத்தது இந்தி ஊடகங்களில் கூட செய்திகளாகப் போட்டுள்ளார்கள்[1]. “இப்தர் பார்டி” என்று அரசு சார்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடபுடலாக பார்ட்டிகள் நடத்துகிறார்கள், கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. ரம்ஜானே “அல்லாவின் பரிசு” எனும் முஸ்லிம்கள், இப்படி காபிர்களிடமிருந்து அரிசி முதல் நெய் வரைப் பெற்றுக் கொள்கிறார்களே, அது சரியா, அதாவது ஹலாலா-ஹரமா என்று ஆசார முஸ்லிம்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால், இதுவரை யாரும் எதிர்க்கவில்லை. அப்படியென்றால், அல்லா ஒப்புக் கொண்டு விட்டார் என்றாகிறாது.

jeyalalita-at-quade-millat-tombமசூதிகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் அம்மா அரிசி டன்டன்னாக இலவசம்: ஜெயலலிதா 4600 டன் அரிசியை மசூதிகளுக்குக் கொடுத்து தனது செக்யூலரிஸத்தை வெளிப்படுத்திக் கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[2]: “சிறுபான்மையின மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படு கின்றன. புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக் கப்படுகிறது. இதற்காக பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதி வழங்க கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி உத்தரவிட்டேன். அதன்படி பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்க, அரிசிக்கான மொத்த அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசியை மொத்த அனுமதி மூலம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப் படுகிறது. இதன்படி, 4,600 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும், இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் [2,14,00,000/-] செலவாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3,000 பள்ளிவாசல்கள் பயனடையும்”, இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்[3].

Ramzan ka tohfa - Naidu way of muslim appeasement.ரம்ஜான் கஞ்சிஅரிசி விசயமாக மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு[4]: ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு தேவைப்படும் அரிசியை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: “ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்துவிண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து உத்தரவிடுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[5]. அதாவது செக்யூலரிஸ அரசு, இவ்வாறு வேலை செய்கிறது, கலெக்டர் முதல் மற்ற அதிகாரிகள், இனி வருடாவருடம் இந்த வேலையை செய்து கொண்டிருப்பார்கள்.

Ramzan ka tohfa - Naidu way of mohammedan appeasementசெக்யூலரிஸத்தில் திளைக்கும் பண்டிகைகள்: தமிழகத்தில், அப்பொழுது சில இந்து இயக்கங்கள், இதே மாதிரி மாரியம்மன் கூழ் ஊற்ற அரிசி கொடுக்கப்படுமா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன. ஆனால், எதுவும் வேகவில்லை. சிறுபான்மையினரை தாஜா செய்வது, கொஞ்சுவது, கெஞ்சுவது எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அரசியல்வாதிகள், ஒருவரை மற்றவர் மிஞ்சுவதில் அதிவல்லவர்கள் என்றே கூறலாம். மசூதிகள், பள்ளி வாசல்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதைப் போல ஆடி மாதத்தில் இந்து கோவில்களில் கூழ் ஊற்றுவதற்கு அரிசி வழங்க வேண்டும் என்று ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்[6]. இந்து கோவில்களுக்கு வரும் வருமானத்தை அந்த கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறை படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 17ம் தேதி ஆர்பார்ட்டம் இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்[7]. ஆர்பாட்டம் நடக்குமா, தொடருமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கவனிக்கும் போது, தெலிங்கானாவில் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆந்திராவில் பொங்கல், தீபாவளி இனாம் கொடுப்பதால், பிரச்சினை இல்லை.

Ramzan ka tohfa - Naidu - chandranna-way of appeasementசந்திரண்ணாவின் காணுகஅதாவது சந்திரபாபுவின் காணிக்கைகள்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா இருப்பாரா, இந்த “ரம்ஜான் கா தோஹ்பா” என்று, ஒரு பையில்

  1. ஐந்து கிலோ கோதுமை மாவு.
  2. இரண்டு கிலோ சக்கரை.
  3. ஒரு கிலோ சேமியா
  4. 100 கிராம் நெய்.

என்று போட்டு விநியோகிக்க ஆரம்பித்து விட்டார்[8].  இதற்காக பிரத்யேகமான பேக்கிங் எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு ஆகிவிட்டது. இவை பத்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு ஜுலை 1 முதல் 7 வரை விநியோகிக்கப்படும்[9]. நாயுடு தன்னுடைய செக்யூலரிஸ பரிசு-இனாம் திட்டத்தில் சந்திரண்ணா சங்கராந்தி காணுக [Sankranthi Kanuka (Pongal gift) –  ‘Chandranna Sankranthi Kanuka’], சந்திரண்ணா ரம்ஜா கா தோஹ்பா [Chandranna Ramzan ka tohfa] மற்றும் சந்திரண்ணா கிறிஸ்துமஸ் காணுக  [Chandranna Christmas Kanuka] என்று காணிக்கைகள கோடிக் கணக்கில் அள்ளி வீசுகிறார்[10]. “சந்திரண்ணா” என்றால் அண்ணா சந்திரபாபு நாயுடு தான், இங்கே “அம்மா” மாதிரி! ஆக, காணிக்கைக்ககளுடன் தன்னுடைய பெயரையும் விளம்பகரப்படுத்திக் கொள்கிறார்[11]. அந்த அளவுக்கு அவர்களது முன்னோக்கு-பின்னோக்கு பார்வைகள், திட்டங்கள் எல்லாம் இருக்கின்றன.  இந்து-முஸ்லிம்-கிருத்துவர் என்று மூன்று சமுதாயத்தினரையும் “அண்ணா” செக்யூலரிஸத்தில் மகிழ்விப்பதால், அங்கு அரிசி நன்றாகவே வெந்து கொண்டிருக்கிறது!

© வேதபிரகாஷ்

16-06-2016

Ramzan ka tohfa - Naidu and KCR

[1] http://navbharattimes.indiatimes.com/state/other-states/bangalore/chennai/jaya-orders-free-rice-to-mosques-for-ramzan/articleshow/52567364.cms

[2] தமிழ்.இந்து, ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 4,600 டன் பச்சரிசி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு, Published: June 3, 2016 08:07 ISTUpdated: June 3, 2016 08:08 IST.

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4600-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8685053.ece

[4] தினத்தந்தி, இஸ்லாமியர்களுக்காக ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு, பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 12:22 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூன் 18,2015, 3:00 AM IST

[5] http://www.dailythanthi.com/News/State/2015/06/18002244/The-government-instructed-the-district-collectors.vpf

[6] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழக அரசைக் கண்டித்து ஜூலை 17ல் இந்து முன்னணி ஆர்பார்ட்டம்ராமகோபாலன் அறிவிப்பு: வீடியோ, By: Mayura Akilan, Published: Monday, June 6, 2016, 15:12 [IST]

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-munnani-protest-on-july-17-says-ramagopalan-255356.html

[8] The gift hamper consisting of 5 kg wheat flour, 2 kg sugar, 1kg vermicelli and 100 gram ghee will be handed over to the beneficiaries from July 1 to 7 through ration shops across the state.

Zeenews, AP govt to give ‘Ramzan Tohfa’ to 10L families, Last Updated: Wednesday, June 15, 2016 – 15:05.

[9] http://zeenews.india.com/news/andhra-pradesh/ap-govt-to-give-ramzan-tohfa-to-10l-families_1896044.html

[10] The Times of India, 10L families in AP to receive Ramzan gift, TNN | Jun 15, 2016, 11.36 AM IST

[11] http://timesofindia.indiatimes.com/city/hyderabad/10L-families-in-AP-to-receive-Ramzan-gift/articleshow/52758594.cms

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா – இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

ஜூன் 12, 2016

காஷ்மீரில் இந்துக்கள் இருக்கக் கூடாது என்றால் மௌனம், பதிலுக்கு முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் கலாட்டாவா இது செக்யூலரிஸமா, கம்யூனலிஸாமா?

காங்கிரஸின் எதிர்ப்பு - சைனிக் காலனி

காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் வாழலாம், இந்துக்கள் இருக்கக் கூடாது: கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீரத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு மிஞ்சியவர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களது வீடுகள், கடைகள், சொத்துகள் எல்லாவற்றையும் முஸ்லிம்கள் அபரித்து விட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தாம் அவ்வாறு செய்தனர். அங்கு அதற்கு பிரிவினைவாதிகளின் ஆதரவு அமோகமாக இருந்தது. எந்த காஷ்மீரில் ஆண் அல்லது பெண், காஷ்மீரத்திற்கு வெளியில் உள்ள பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு, அங்கு சொத்துரிமை கிடையாது என்று ஏற்கெனவே சட்டமும் இயற்றப் பட்டு விட்டது. அதாவது, காஷ்மீரத்தில் முஸ்லிம்கள் மட்டும் தான் இருக்க வேண்டும், அந்நிலையில் பொது கணிப்பு என்று வைத்தால் கூட, மக்கள் ஒன்று சுதந்திரம் கேட்கலாம் அல்லது பாகிஸ்தானோடு இணைந்து விடலாம் என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருந்து வருகிறது. இருப்பினும் ராணுவத்தினர், எல்லைக் காவர் படையினர், மற்ற பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் முதலியோகளின் தாக்குதலுக்கு எதிராக அங்கு வந்து தங்கி தங்களது கடமைகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு கூட நிரந்தர இடம் இல்லாமல் இருக்கிறது.

No land to sainik colony protest - Hiriyat conferenceசைனிக் காலனி விவகாரமும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிர்ப்பும், காஷ்மீர் சட்டசபையில் கலாட்டாவும்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு (சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது[1]. பழைய விமான நிலையம் அருகே ராணுவ காலனி கட்டப்பட உள்ளதாக பத்திரிகையில் செய்து வந்துள்ளது[2].  அதில் வெளியாகியுள்ள போட்டோ காஷ்மீரில் ஏற்கனவே உள்ள ராணுவ பிரிவில் பணியாற்றும் மணமான வீரர்கள் தங்கி பணியாற்றுவதற்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்பு என விளக்கம் அளிகப்பட்டது. இவ்வாறு விதவிதமான செய்திகள் வெளியிடப் பட்டன. ஆனால், அவ்வாறு ஏன் காஷ்மீரத்தில் இடம் கொடுக்கக் கூடாது என்று எந்த அறிவுஜீவியும் எடுத்துக் காட்டவில்லை. எல்லோருமே இந்தியர்கள் என்றால், எந்த இந்தியன், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இடம் வாங்கலாம், வீடு வாங்கலாம், ஆனால், காஷ்மீரத்தில் அவ்வாறு முடியாது என்றால் ஏன் என்று யோசிப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீரத்தில் பிறந்தவர்கள் தாம் அங்கு உரிமைகளுடன் இருக்கலாம், குறிப்பாக முஸ்லிம்கள் தான் இருக்கலாம், மற்றவர்கள் இருக்கக் கூடாது என்றால், அது என்ன ஜனநாயகம் என்று யாரும் கேட்கவில்லை.

J and K assembly debate about sainik colonyமுஸ்லிம் கட்சிகள், காங்கிரஸ் முதலியவற்றின் எதிர்ப்பு: சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது[3]. இதை எதிர்த்து, இது 370 வது பிரிவுக்கு எதிராக அமையும் என்று ஒமர் அப்துல்லா கட்சி மாநில அவையில் ஆர்பாட்டம் செய்தனர்[4]. “சாய்னிக் காலனி” போர்வையில் இந்துக்களைக் குடியமர்த்த அரசு முயல்கிறது, இதனை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கலாட்டா செய்தனர்[5]. ஒமர் அப்துல்லா சமூக வலைதலங்களில் வெளிவந்த விசயங்களை வைத்து, பிடிவாதமாக வாதம் புரிந்தார்[6]. ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்[7]. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசும், சைனிக் காலனி கட்டுவதை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தது தான். பிறகு, காங்கிரசின் இரட்டை வேடத்தையும் யாரும் எடுத்துக் காட்டவில்லை. மற்றவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.

sainik-colony- omar in twitterமுஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்: அந்நிலையில் தான், “இந்துக்கள் இருக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் கலாட்டா செய்கின்றனர்……..முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்” என்று வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி தனது கருத்தை வெளியிட்டார்[8]. உத்தரகாண்ட் மாநிலத்தில், ரூர்கி என்ற இடத்தில், ஒரு “காயலாங்கடை” அகற்றப்பட்ட விசயத்தில், முஸ்லிம்கள்-இந்துக்கள் இடையே தகராறு ஏற்பட்டத்தில் 32 பேர் காயமடைந்தனர்[9]. அப்பொழுது, சாத்வி இவ்வாறு பேசினார்[10]. அந்த வீடியோவில் இருக்கும் முழுபேச்சு விவரங்களைக் கொடுக்காமல், ஆங்கில ஊடகங்கள், வழக்கம் போல, இதை மட்டும் குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டனர். இந்த பெண்ணிற்கு வேறு வேலை இல்லை என்று ஆங்கில ஊடகங்கள் சாடின[11]. ஆனால், இதனையும் எதிர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை  சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்[12]. ஜூன் 8லிருந்து இந்த கலாட்டா நடந்து வருகிறது[13]. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். “”சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, “”சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல” என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

kashmiri-pandit-cries-for-human-rights.2காஷ்மீரப்   போர்வையில்  இந்து பெண்களின்   உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்[14]. அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கு என்று அளிக்கப்பட்டுள்ள சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு அம்மாநிலத்தின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அது அச்சரத்தையே நீர்த்து விடும் ஆகையால்காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்துகொள்ளவேண்டும்,” என்பதுதான்! இப்பொழுது அதே அம்மையார் முதலமைச்சாராகி விட்டார். பிஜேபி கூட்டு வேறு!

© வேதபிரகாஷ்

12-06-2016

[1] தினத்தந்தி, சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் ட்டசபையில் மெகபூபாஉமர் அப்துல்லா வார்த்தை போர், மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST, பதிவு செய்த நாள்: திங்கள் , ஜூன் 06,2016, 4:58 PM IST

[2] தினகரன், ராணுவ குடியிருப்பு விவகாரம்: காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி, Date: 2016-06-07@ 01:43:30.

[3] http://www.dailythanthi.com/News/India/2016/06/06165811/Mehbooba-Omar-in-war-of-words-over-Sainik-Colony-issue.vpf

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=222249

[5] தினமணி, ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா, By  ஸ்ரீநகர், First Published : 10 May 2016

[6] http://indianexpress.com/article/india/india-news-india/sadhvi-prachi-make-india-muslim-free-2839903/

[7]http://www.dinamani.com/india/2016/05/10/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article3424409.ece

[8] http://scroll.in/latest/809537/its-time-to-rid-india-of-muslims-sadhvi-prachi-says-in-communal-strife-torn-roorkee

[9] Furthermore this controversial speech was made while she was speaking in Uttarakhand’s Roorkee, where at-least 32 people were injured last week as a part of a clash between two communities over forcible evacuation of a scrap dealer’s shop.

http://www.storypick.com/sadhvi-prachi-rant/;

[10] https://www.youtube.com/channel/UC9G9oq-mPIo9_Y6iEvTn72wtps://youtu.be/BOZOCYHpeSs

[11] http://www.news18.com/news/politics/time-to-make-india-free-of-muslims-sadhvi-prachi-1253346.html

[12] தினமணி, சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி, By dn, ஸ்ரீநகர், First Published : 10 June 2016 01:22 AM IST

[13]http://www.dinamani.com/india/2016/06/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/article3474687.ece

[14] http://www.indianexpress.com/news/sc-pulls-up-jandk-for-bid-to-justify-ex-gratia-policy/1170131/

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

மே 6, 2013

தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதற்கும், கந்நாடகத்திற்கும் தொடர்பு ஏன்?

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மாறி-மாறி அரசாளும் நிலையில், எதையாவது திசைதிருப்ப வேண்டும், கவனத்தை மாற்ற வேண்டும் என்றால், கோயில்களைத் தாகுவது, சிலைகளை உடைப்பது, உண்டியல்களை உடைத்து பணம் திருடுவது, இந்துக்களை இழிவாகப் பேசுவது, இந்துக்களைத் தாக்குவது என்று சிலர் ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது, நாத்திகப் போர்வையில், பகுத்தறிவு வேடத்தில், இந்துவிரோதிகள் அத்தகைய முகமூடிகளை அணிந்து கொண்டு செய்து வந்தார்கள், வருகிறார்கள். ஆனால், இப்பொழுது தொடர்ந்து இந்து அமைப்புகளின் தலைவர்கள் தாக்கப் படுவதில் ஒரு முறை, அமைப்பு, திட்டம் காணப்படுகிறது எனலாம்.

கோயம்புத்தூர் ஜிஹாதி தலமாக மாறி வருவது: கோவைக் குண்டுவெடிப்புக்குப் பின்னர், கோயம்புத்தூரில் சில பகுதிகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் ஜிஹாதிகளின் புகலிடமாக மாறி விட்டுள்ளன.  கேரள தொடர்புகளும் இதில் தென்படுகின்றன. இந்து பெண்கள் முஸ்லீம் பையன்களைக் காதலித்து சென்று விடுவது, குடும்பங்களை பாதிட்துள்ளன. இதைத்தான், முஸ்லீம்களின் திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பாரம்பரிய ரீதியில் இந்துக்களின் சமய அமைப்புகளும் அங்கு இயங்கி வருகின்றன. இவை, இந்த மாற்றத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வந்துள்ளவை. ஆனால், கோவை குண்டுவெடிப்பிற்குப் பிறகு, அல்-உம்மா, சிமி மற்றும் அவற்றின் மாற்று உருவங்கள், அமைப்புகள் முதலியவை, வெளிப்படையாக இந்து எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இந்து இயக்கங்களில்  ஒற்றுமை இல்லாமை: திராவிடக் கட்சிகளின் ஆளுமை, அதிகாரம், தாக்கம் முதலிய காரணங்களினால், இந்து இயக்கங்களும் பிளவு பட்டுள்ளன. இந்த வேலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளே செய்துள்ளன. இதனால், சில இந்து இயக்கங்கள், இந்து போர்வையில் செக்யூலரிஸ பாணியில் வேலை செய்து வருகின்றன.  குறிப்பிட்ட விஷயங்களில் சும்மா இருந்துவிடலாம், அல்லது கருத்தைக் கூட வெளியிடாமல் இருக்கலாம், ஆனால், ஊடகங்களின் ஆதரவு, விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக, கொள்கையை விடுத்து, இந்து நலன்கள் பாதிக்கும் முறையில் நடந்து கொள்கிறார்கள். ஆட்சி மாறும் போது, அத்தகைய திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள், குறிப்பிட்ட கோணத்திலேயே வேலை செய்து வருகின்றன.

முஸ்லீம் இயக்கங்கள் பிரிந்துள்ளவை போன்று இருந்தாலும் இஸ்லாமில் ஒன்றாக இருக்கின்றன: முஸ்லீம் இயக்கங்களும் திராவிடக் கட்சிகளினால் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறாக தோன்றினாலும், தங்களது மதநலன்களை விட்டுக் கொடுக்காமல் வேலை செய்து, சாதித்து வருகின்றார்கள். இணைதளங்களில், தனிப்பட்ட முறையில், மண்டபங்களில் எதிர்த்துப் பேசி, அறிக்கைகள் விட்டுக் கொண்டு எதிர்கள் போலிருப்பார்களே தவிர, இஸ்லாம் என்று வரும்போது, ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர். இதை திராவிட சார்புள்ள இந்து இயக்கங்கள் அல்லது அவற்றின் ஆதரவுடன் செயல்படும் இந்து இயக்கங்கள் புரிந்து கொள்வதில்லை.

ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது: தமிழ்நாடு, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்சிகளைக் கூர்ந்து கவனித்தால், பிஜேபிக்கு எதிராக நடத்தப் படும் செயல்கள், கங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதைக் காணலாம். மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதா முதலமைச்சாரக உள்ளார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் பேசியும், நடந்து கொண்டும் வருகின்றனர். ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இல்லாத பட்சத்தில் அதிமுக வரவேண்டும் என்ற ஆசை, அதே நேரத்தில் பிஜேபி கூட்டணிக்குச் செல்லக் கூடாது என்ற தீவிரம். இதில் இந்து அமைப்பினரைத் தாக்கினால், ஜெயலலிதாவின் மீது பிஜேபிக்கு கோபம் வரும், கர்நாடகா-தமிழகம் இணைப்பை ஏற்படுத்தினால், மத்தியிலிருந்தும் அழுத்தம் வரும், அதே நேரத்தில் கர்நாடக தேர்தலில், பிஜேபியை தூக்கி விடலாம் என்ற திட்டத்தில் செயல்படுவது போலத்தான் தெரிகிறது. மேலும், குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், செய்த குற்றத்தை மறுபடியும் செய்யும் போக்கு, பல இடங்களில் இருப்பது போல அலிபி உண்டாக்கும் தந்திரம் முதலியவை இவற்றை எடுத்துக் காட்டுகின்றன. ஆக ஜெயலலிதாவிற்கு தொந்தரவு கொடுக்க வேண்டும், கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி வரக்கூடாது என்பது தெளிவாகிறது.

கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்: கர்நாடகத்தில் மதப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளாமல், காங்கிரஸ் ஜாதிப் பிரசினையை எடுத்துக் கொண்டு விளையாடி உள்ளது. இதனால், ஜெயலலிதா அமைதியாக இருக்கிறார். எடியூரப்பாவின் நண்பரான கருணாநிதியும் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர்கள் இதில் மிக்க கவனமாக செயல்படுவதை காணலாம். ஆகவே, ஒருவேளை கர்நாடகத்தில் பிஜேபி தோற்றால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற யேஷ்யத்தில் காங்கிரஸ் உள்ளது. எடியூரப்பாவை சரி கட்டினது மாதிரி, பெங்களூரில் நடக்கும் வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்தால், பதிலுக்கு கூடணிக்கு வந்து விடலாம் என்ற கணக்கிலும் காங்கிரஸ் உள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஏப்ரல் 20, 2013

பகுத்தறிவு என்று பேசி மக்களை திராவிட மாயையில் கட்டுண்டு செய்து, நாத்திக போதையில் இந்துக்களை தூஷித்து, அரசியல் செய்து வரும் செக்யூலரிஸப் பழங்களைப் பற்றிய பதிவு இது.

ஒருவேளை அத்தகைய குணாதிசயத்தைக் கடைப்டிக்கும் இவர்களை “திராவிட ஜிஹாதிகள்” என்றும் அழைக்கலாம் போலும்!

பகுத்தறிவு தீவிரவாதம்

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

View original post 778 more words

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.

ஏப்ரல் 20, 2013

சட்டத்தை மீறும் நீதிகள்

இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.

இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].

ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…

View original post 576 more words

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

ஏப்ரல் 17, 2013

ராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்!

 

இளைஞர்காங்கிரஸ்அடிதடி, வன்முறை: ஏப்ரல் 16, 2013 அன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி திருச்சூருக்குச் செல்ல கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கியபோது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்பட்டுள்ளது, உள்ளுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது[1]. போதாகுறைக்கு காங்கிரஸ்காரர்களே ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளனர்[2]. இளைஞர் காங்கிரஸில் உள்ள உள்பூசல்கள் தாம் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர். இது இளைஞர் ராகுலுக்கு வரவேற்பா அல்லது எதிர்ப்பா என்று தெரியவில்லை.

 

கேரளாவில்பஞ்சாயத்துமுறைஎப்படிசெயல்படுகிறதுஎன்பதைப்பார்க்கவந்தாராம்: கேரளாவில் அதத் என்ற பஞ்சாயத்து இந்தியாவிலேயே தலைச்சிறந்ததாக செயல்படுகிறது என்ற பரிசைப் பெற்றுள்ளது. இதனால், ராகுல் அங்கு சென்றது மட்டுமல்லாது, உபியிலிருந்து, ஒரு காங்கிரஸ் குழு வந்து அவர்களுடன் உரையாடும் மற்றும் முறைகளை அறிந்து கொள்ளும் என்றார். இப்படி இத்தனை வருடங்கள் ஆகியும் கற்றுக் கொண்டே இருந்தால் எப்பொழுதுதான் கூட்டங்களில் பேப்பரைப் பார்க்காமல் பேசுவது?

 

கருத்தரங்கத்தில்கலந்துகொள்ளவந்தராகுல்: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் டில்லியிலிருந்து, கொச்சி விமான நிலையத்தில், நேற்று காலை (16-04-2013) வந்திறங்கினார். திருச்சூரில் உள்ள கேரளா இன்ஸ்டிடியூட் ஆப் லோகல் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பஞ்சாயத்து ராஜ் கல்வி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், பங்கேற்க, அங்கிருந்து காரில், திருச்சூர் சென்றார். குடியாட்சி முறையில் அதிகாரப்பகிர்வு மற்றும் திட்டமிடும் தன்மையில் பங்குகொள்ளல் (Democratic Decentralisation of Power and Participatory Planning) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

 

ராகுல்கேள்விகேட்டது: அங்கு பஞ்சாயத் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அங்கு பங்கு கொண்ட பஞ்சாயத்து அங்கத்தினர்களை, “தேர்தலுக்கு முன்னர் உங்களை அரசியல் கட்சிகள் கலந்தோலோசித்தனவா?”, என்று கேட்டபோது, இல்லை என்று கூறியதும், காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் தலையட்டியது வேடிக்கையாக இருந்தது. உள்ளூர் அபிவிருத்தி நிதியை எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் பஞ்சாயத்து அங்கத்தினர்களை கலந்தாலோசித்துதான் செலவழிக்க்க்க வேண்டும் ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்று எடுத்துக் காட்டினாராம்[3]. மாலையில், மாநில இளைஞர் காங்கிரசாரை சந்தித்த அவர், பின் டில்லி புறப்ப[4]ட்டுச் சென்றார்.

 

உட்சண்டைப்பற்றிகவலைப்படாமல்பறந்துசென்றது: காங்கிரஸில் உள்சண்டை இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான்[5]. ஆனால், இது கம்யூனிஸ்டுகளைப் போல அடித்துக் கொள்கின்ற அளவில் மாறிவிட்டது, அந்த மாநிலத்தின் அரசியல் கலாச்சாரத்தைக் காட்டுகிறது எனலாம்.  இதைப்பற்றியல்லாம் அலசாமல் சென்றது வேடிக்கைதான்.

 

கேரள அமைச்சர் மனைவியைத் துன்புறுத்திய விஷயம்: மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் கே.பி.கணேஷ்குமார் என்ற காங்கிரஸ் அமைச்சர், தனது மனைவி யாமினி தங்கச்சியை வீட்டில் அடித்துத் துன்புறுத்துகிறார் என்ற புகாரினால் ராஜினாமா செய்துள்ளார்[6]. இதற்குள் கட்சியின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் இருவர் மீது ஒருவர் புகார் அளித்து, பிரிந்து செல்ல கேரளா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்[7]. இது ராகுல் வருவதற்கு முந்தைய நாள் நடந்துள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை இல்லாமல் தான் ஆட்சி செய்து வருகின்றது. இந்நிலையில் கேரளா-பி காங்கிரஸ் பிரச்சினை ஆட்சியை கவிழ்க்கும் என்ற நிலை வந்தபோது[8], உமன் சாண்டி இப்படி “அவுட்-ஆப்-கோர்ட் செட்டில்மென்ட்”டிற்கு உதவியுள்ளார் போலிருக்கிறது[9].

 

பி.சி.ஜார்ஜ் என்ற கிருத்துவ அடிப்படைவாத கட்சியின் தலைவர் கணேஷ்குமாருடமன் மோதியது: செக்யூலரிஸம் பேசும் காங்கிரஸ், கேரளாவில் எப்பொழுதுமே அட்டிப்படைவாதம், பழமைவாதம், மதவாதம் என்று ஊறிப்போயுள்ள கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு, சோனியா காங்கிரஸ் பிழைப்பு நடத்தி வருகின்றது. இப்பொழுதும் கேரளா காங்கிரஸ் (ம) என்ற கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ், ஒரு கேரள ஆமைச்சர் யாரோ ஓரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், அப்பெண்ணின் கணவன் அவ்வமைச்சரை நன்றாக அடித்துதைத்துள்ளார் என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டபோது, அவ்வமைச்சர் கே.பி.கணேஷ்குமார் தான் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார். கணேஷ்குமார் அவதூறு வழக்கு போடுவேன் என்று மிரட்டியபோது, அப்படி போட்டால், மேலும் விஷயங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 

அசிங்கமாக, ஆபாசமாக பேசும் பி.சி.ஜார்ஜ்: கிருத்துவக் கட்சியின் தலைவர் பி.சி.ஜார்ஜ் சாதாரணமாக அசிங்கமாக, ஆபாசமாக, பாலியல் பாசைப் பேசி வருவார்[10] என்று பல செய்திகள் வந்துள்ளன[11]. வயலார் ரவி என்ற அமைச்சரும் இதில் சளைத்தர் அல்ல[12]. இதற்கான வீடியோ ஆதாரங்கள் “யூ டியூப்”பில் உள்ளன. கேரள அரசியல்வாதிகள் செக்ஸ் விஷயத்தில் மாட்டிக் கொள்வதும் சகஜமானதுதான்[13]. “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” என்ற வழக்கு மிகவும் பிரசித்தம்[14], ஏனெனில், இதில் பல கேரள புள்ளிகள் சிக்கினர். டிசம்பர் 11, 2011ல் கூட, பி.கே. குன்னாஜக்குட்டி என்ற IUML அமைச்சர் போலீஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளார்[15]. இப்பொழுது 2013ல், அச்சுதானந்தன், “ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ்” விஷத்தைப் பற்றிய ஒரு டைரி கிடைத்துள்ளது என்றும், அதில் குட்டி எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளார்[16].

 

வேதபிரகாஷ்

16-04-2013


[2] Interestingly, Rahul Gandhi’s visit coincided with the escalation of violence in the district after Premlal, a Youth Congress worker, was attacked by armed men. Group fighting within the Youth Congress has been cited as the reason behind the attack. Minor instances of violence were also reported from other parts of the state

[3] Further, he said MPs and MLAs should spend their Local Area Development fund for regional development in consultation with the panchayat members. Currently, it was not being done in accordance with the spirit of decentralisation of power, he added. Gandhi agreed with the members that some central schemes were not suited for all states.

[4] Sitting through an interactive session on ‘Democratic Decentralisation of Power and Participatory Planning’, Gandhi asked panchayat members if political parties consulted them before choosing candidates for elections. Interestingly, both Congress and CPM members answered in the negative.

[9] It’s turning out to be an affair to remember for Kerala Chief Minister Oommen Chandy, but for all the wrong reasons. His United Democratic Front government, which is clinging on to power by a slender majority, has suffered several setbacks in the last two years. But the latest blow has probably been the most lethal of all. An extra-marital affair and allegations of domestic violence littered the exit route of K B Ganesh Kumar, the lone MLA of Kerala Congress B from his Cabinet. Now, the challenge before Chandy is chooosing the right person to fill Ganesh’s shoes

[11] George’s most recent outburst was against T V Thomas, late husband of veteran communist leader K R Gouri. Local newspapers edited out some of his abusive words when they published his comments to the media. This was after his attack on Ganesh but before the minister’s resignation this week.

http://www.indianexpress.com/news/keralas-p-c-george-uncut-and-uncensored/1097825/

[12] There was an outrage in Kerala after Union Minister Vayalar Ravi was caught on video making a personal swipe at a female reporter who wanted his reaction on PJ Kurien’s alleged involvement in the 1996 Suryanelli gangrape case. In the video, Ravi is seen asking the reporter if she has had a personal problem with Kurien. Women journalists in Kerala have expressed outrage over the incident and staged protests. http://www.youtube.com/watch?v=cd7DpiQiwaY

[15] Kerala Industries Minister P K Kunhalikutty has been been questioned by a police team re-investigating the “ice cream parlour” sex scandal case in connection with allegations made against him by a relative. The team led by ADGP Vinson M Paul questioned the Minister at his residence here on Thursday night, police sources said on Friday. Kunhalikiutty, a senior Indian Union Muslim League (IUML) leader, was learnt to have denied the allegations and told the police that ‘unfounded’ accusations were made against him with the motive of destroying his political career

http://zeenews.india.com/news/kerala/kerala-minister-grilled-by-police-in-sex-scam-case_746175.html

[16] Reportedly the opposition leader VS Achuthanandan has gotten hold of the case diary of the sensational “ice-cream parlour case” in which Kunhalikutty was allegedly involved. Also, the case diary apparently shows that the minister had paid off the victims to exclude himself from being investigated.

http://www.firstpost.com/politics/after-kurien-yet-another-sex-scandal-catches-up-with-congress-in-kerala-618856.html