Archive for the ‘பாசிஸம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [2]

PondyLitFest-participants-program

இந்துத்துவ எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் இரட்டை வேடங்கள்[1]: கவிதையின் பெயரில் இப்படியெல்லாம் இருக்கிறது, இலக்கிய விழா விற்பன்னர்கள் கண்டுகொள்ள வேண்டும்.

  1. காளமேகம், ஆறுமுக நாவலர் இருந்திருந்தால், இவன் / இது எல்லாம் இப்படி தமிழில் உளறி, நாறி, கும்பியைக் கொட்டியிருக்க முடியாது.
  2. இவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்ட இந்துத்துவ கவிக்கள், எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு, அவர்களை என்னென்பது. அடையாளம் கண்டு கொண்டால், அவர்களது பரஸ்பர விருப்பங்கள் தெரியவரும்.
  3. அதுகள் கொள்கைக்காக எப்பொழுதும் பாடுபடுகின்றன, ஆனால், புதுக்கவிக்கள் என்.டி.ஏ இல்லாதபோது இருந்திருக்காது, இருக்காது!
  4. பொதுவுடமை, சமத்துவம், சகோதரத்துவ சாராயத்தை அதுகளும்-இதுகளும் தாராளமாக குடித்து, ஆட்டம் போட்டுள்ளன-போடுகின்றன.
  5. புத்தகச் சந்தையில், அச்சு திருட்டில் கைக்கோர்த்து வியாபாரம் செய்யும், இருதலைகளுக்கு, இந்துத்துவம் தேவையில்லை[2].
  6. இடதுசாரி கூடுதல்கள் 70 சண்டுகளாக, தொடர்ந்து நடக்கும் வேளையில், வலதுசாரி குறிஞ்சி மலர்கள் பூக்காமலே இருந்திருக்கின்றனவே?
  7. தஞ்சை மண்ணெடுக்காமல், தாமிரவருணி நீரூற்றாமல், செய்யாத பொம்மைகள், இப்படி வலது-இடது அல்லது அது-இது-எது என்றாக இருக்குமா?
  8. புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளன என்று இந்துத்துவ செகுவேராக்களாக இதுகள் மாறிய-மாறுகின்ற மர்மம் என்னவோ?
  9. இந்துத்துவாவில் சிந்து பாடுவோம் அந்தத்துவாவில் அந்தர் பல்டி அடிப்போம் என்ற சித்த-பித்த-கவியாட்டங்கள் இப்படித்தான் இருக்குமா?
  10. அந்தத்துவாவை அதுகள் பேஸ்புக், டுவிட்டர்களிலிருந்து, புத்தக வெளியீடு, உள்நாட்டு-வெளிநாட்டு பார்ட்டிகள் வரை அறிந்து கொள்ளலாம்.

முன்பெல்லாம் தாசர்கள் என்றால் இப்பொழுதெல்லாம், தமிழச்சி, மனுஷன், மனுஷி, கோணங்கி, குஞ்சு என்றெல்லாம், வழக்கமாக இருப்பதோடு, இப்பொழுது மிருக வகைகளும் சேர்ந்துள்ளன.

PondyLitFest-participants-program-2

இன்றைக்கு கவி எழுதுவதற்கு இலக்கணம் இருக்கிறதா, தேவையா?: இன்றைக்கு எவனும் கவிதை எழுதலாம், எந்த இலக்கணமும் இல்லை, வெங்காயமும் இல்லை, பணம், பரிந்துரை, ஆட்கள் இருந்தால் போதும்[3].

  1. ஒரு வரி எழுதி, அதனை வெட்டி வார்த்தைகளை நான்கு வரிகளில், ஆச்சரியகுறி, ஒற்றைப்புள்ளி, முதலியவற்றைப் போட்டால் புதுகவிதை என்கிறார்கள்.
  2. கடி ஜோக் போன்று, ஒப்புமைகளுடன் இரண்டு வரிகள் எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது.
  3. அரசை, அதிகாரத்தை, ஆளும் நபர்களை, தலைவகளை, சித்தாந்தங்களை எதிர்த்து எழுதினால் கவிதை ஆகிவிடுகிறது[4].
  4. இந்துமதம், இந்துக்கள், அவர்களது நம்பிக்கைகள் முதலியவற்றை கொச்சைப்படுத்தினால் செக்யூலரிஸ கவிஞனாகி விடுகிறான்[5].
  5. காஷ்மீர் தேசத்துரோக பயங்கரவாதிகளை, பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு எழுதினால், அனைத்துலக கவிஞர் ஆகி விடுகிறான். உதாரணத்திற்கு, ஈரோடு தமிழன்பன் படித்த பாடல் வரிகளில் “அஜர் பைஜான் நெருப்பு அசோகச் சக்கரத்தையும் விசாரிக்கும்” என்றது நினைவில் இருக்க வேண்டும். ப.அறிவு மதி என்பவன், சொன்னது – “1947 ஆகஸ்டு 15 நள்ளிரவில் நாங்கள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் மீது ஒரு போர்வையைப் போர்த்திவிட்டனர் அது இந்தியத் தேசியக் கொடி என்ற போர்வை. விடிந்ததும் விழித்துப் பார்த்தோம் போர்வை இருந்தது. கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்குப் போர்வை முக்கியம். விழித்துக் கொண்டவனுக்குக் கோவணம் முக்கியம் வாருங்கள் தேசியக் கொடியைக் கிழிப்போம். அவரவர் கோவணத்தை அவரவர் கட்டிக் கொள்வோம்!

இங்கும் இந்துத்துவ புலவர்க:ள், கவிஞர்கள் இல்லை போலும். ஆதரவாக, கவிதை மழை பொழிந்து, மேடைகளில் வலம் வருவதில்லை. சாகித்திய அகடெமி விருது போன்றவை வேண்டும் என்றால், பிஜேபி அமைச்சர், எம்.பி முதலியோரை தாஜா பிடித்து வாங்கிக் கொள்வதுடன் சரி.

PondyLitFest-participants-program-3

மாதவிடாய் மூன்று நாட்களில் உங்கள் பெண்தெய்வங்கள் எங்கு போயிருந்தன?: இப்படி ஒருவன், கார்ட்டூன் போடுகிறான். பெண்களின் மாதவிடாய், இந்து பெண்கடவுள் முதலியவற்றை தூஷித்தால், பெரிய புரட்சி கவிஞன் ஆகிவிடுகிறான். இவற்றையெல்லாம் சேர்த்து செய்தால், சாகித்திய அகடமி பரிசுக்கு பரிந்துரைக்கப் படுகிறான். அதற்கும், இந்துத்துவவாதிகள், அரசியல்வாதிகள், துணைபோகிறார்கள். இரண்டு அரைவேக்காடு இந்துத்துவ ஆட்களுக்கு பரிசு கொடுக்க வேண்டுமானால், அதற்கு சமரசம் செய்து கொண்டு எட்டு இந்துவிரோதிகளுக்கு பரிசு கொடுக்கப் படுகிறது[6]. இவ்விதத்தில் தான், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விற்ப்பனர்கள், விமர்சகர்கள் உண்டாக்கப் படுகின்றனர். ஆனால், திராணியற்ற இந்த்துவவாதி, சித்தாந்த பற்றோடு, அவனுடன் மோதுவதில்லை, பதிலுக்கு கார்ட்டூன் போட்டு, தனது எண்ணவுரிமை, சிந்தனா வெளிப்பாட்டு உரிமை முதலியவற்றை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அதாவது, இந்துத்துவ கார்ட்டூனிஸ்ட் என்று எவனும் இல்லை போலிருக்கிறது. பேஸ்புக்கில், அவரவர் மேடைகளில், கூடுதல்களில் மட்டும் வீராப்புக் காட்டிக் கொன்டிருப்பர். சரி, ராஷ்ட்ரீய்ய சேவிகா சமிதி போன்ற பெண்கள் அமைப்பு இருந்தாலும், அவர்களில் பெண்ணுருமை பேசும் அளவுக்கு யாரும் இல்லை என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன், தமிழ் டிவி செனல்களில் வந்து செல்கிறார். மற்ற படி, பெண்கள் உரிமைகள் போன்ற விசயங்களில் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை[7].

PondyLitFest-participants-program-4

முடிவுரைஇலக்கிய விழா ஏற்பாடு செய்தவர்களின் கவனத்திற்கு: இதைப் பற்றி கிடைக்கும் அனைத்து செய்திகள், வீடியோக்கள் எல்லாம் படித்து, கேட்டு, கீழ்கண்ட விசயங்கள் கவனத்திற்கு வைக்கப் படுகின்றன:

  1. பாண்டி இலக்கிய விழாவில் இந்துத்துவவாதிகள்377 பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவர்களின் சார்பினை தீர்ப்பிற்கு முன்னரே வெளியிட்ட போக்கைக் காட்டுகிறது.
  2. சரித்திரத்தை ஏன் மறுபடியும் எழுத வேண்டும் பற்றி பேசியவர்கள்,விசயத்தை நேரிடையாக சொல்லாமல், சுற்றி மூக்கைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.
  3. ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா போன்றோர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கிறோ, அது சரியில்லை என்றால், அந்த மேடையில் எதிர்த்திருக்க வேண்டும்.
  4. பலமுறை எடுத்துக் காட்டியபடி IHC, SIHC, TNHC முதலிய மாநாட்டுகளுக்கு வராமல், அவர்களுடன் சேர்ந்து விசயத்தைப் புரிந்து கொள்ளாமல், தனியாக உட்கார்ந்து அவர்களை குறை கூறிக் கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.
  5. சரித்திரம், வரலாற்றுவரைவியல், வரலாற்றுவரைவியல் சித்தாந்தம், கோட்பாடுகள், ஆராய்ச்சி நெறிமுறைகள் முதலியவற்றை அறியாமல் பேசிகொண்டே இருந்தாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.
  6. 1987ல் நாங்கள் பேசியதைத் தான், இவர்கள் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களோ, திறமை, கடின உழைப்பினால் எங்கோ சென்று விட்டனர். அப்பொழுது ஶ்ரீராம் சாத்தே என்பவர் வழிநடத்தி வந்தார்.
  7. பெண்களை எவ்வாறு அதிகாரம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்று பேசியவர் பரவாயில்லை ஆனால், அவர்களுடன் [எதிர்சித்தாந்தவாதிகளுடன்] விவாதிக்க வேண்டும்.
  8. சுகி.சிவத்தை விமர்சித்தால் போறாது, அத்தகைய சிறந்த பேச்சாளரை உருவாக்க வேண்டும், அது போலத்தான் ரோமிலா தாபர், பிபன் சந்திரா, சதிஸ் சந்திரா முதலியோர் போல உருவாக்க வேண்டும்.
  9. நான்கு பேர் சேர்ந்து கொண்டு, 50 பேர் முன்னால் பேசி, கைதட்டி, பெருமை பேசிக் கொண்டால், பொதுமக்களிடம் விசயம் சென்று சேராது.
  10. அரைகுறை, அரைவேக்காட்டுத் தனமாக, ஆத்திரத்துடன் செய்வதால் தான் “காவிமயமாக்கம்” போன்ற சிக்கலில் மாட்டிக் கொள்வது.

© வேதபிரகாஷ்

09-09-2018

PondyLitFest-dates.folder

[1] இத்தகைய இந்துத்துவவாதிகள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில், நல்ல எண்ணத்தில், சுயபரிசீலினை செய்து கொள்ள, கவனமாக பிரச்சினையை அலசி பஹிவு செய்யப்பட்டுள்ளது.

[2] அங்கெல்லாம் தமது இந்துத்துவத்தை மறைத்துக் கொள்வதோடு, வலதுசாரித்துவத்தையும் நீர்த்து உறவாடுகின்ரனர், வியாபாரம் செய்கின்றனர் என்பதனை கவனிக்கலாம்.

[3] விளையாட்டு, சினிமா போன்றவற்றில் உயர்மட்ட ஊழலைப் போல, இதில் இருக்கும் ஊழலை யாரும் கண்டுன்கொள்வ்ச்தில்லை ஏனெனில், பரஸ்பர பலன்கள், தங்களுடைய யோக்கிய அடையாளங்கள் முதலியவற்றை கெடுத்துக் கொள்ள பலன் பெற்றவர்கள் மறைத்து வருகின்றனர்.

[4] இப்பொழுது மோடி ஆதரவு, எதிர்ப்பு என்ற ரீதியில் கண்டு கொள்ளலாம், 2014ற்கு முன்பாக ஒன்றாக இருந்தனர். பிஜேபியை எதிர்த்தவர்கள், இப்பொழுது பிஜேபியில் இருப்பது போல.

[5] எல்லா இந்து-விரோதிகளும், இந்த வழிமுறையினைத் தான் பின்பற்றி வருகின்றனர். சுலபமாக பிரபலம் அடைகின்றனர். பரிச்களையும் பெறுகின்றனர்.

[6] ஆளும் கட்சி, கூட்டணி கடிகள், எதிர் கட்சிகள் என்று எல்லோருக்கும் இத்தகைய பரிசுகள், விருதுகள், சலுகைகள், நியமனங்கள் பிரித்துக் கொடுக்கப் படுகின்றன என்பது அறிந்த விசயமே.

[7] இத்தனை பெரிய இயக்கம், எல்லா அதிகாரங்கள், வசதிகள் கொண்டிருந்தாலும், பெண் சித்தாந்த அறிவுஜீவிகளை உருவாக்காமல் இருப்பது விசித்திரமாக இருக்கிறது.

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஆதாரம் இல்லை - பெருமாள் முருகன்

ஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்

மாதொருபாகன் பிரச்சினையை சார்லி ஹெப்டோவுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்?

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

  1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
  2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
  3. பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
  4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
  5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

பெருமாள் முருகன் - மாதொருபாகன்

பெருமாள் முருகன் – மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லைவெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான்! மேலும், “மாதொருபாகன் நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.

மாதொரு பாகன் ஆதரவு.2

மாதொரு பாகன் ஆதரவு.2

நாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

Madhuru Bagan - Oppopsition for sales increase DM

Madhuru Bagan – Oppopsition for sales increase DM

மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன? இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

தமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது! பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது!”, 10-01-2015.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6785870.ece

[3]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article6772647.ece

[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240

[6]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/01/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2620630.ece

[7] தினமணி, கருத்துரிமைக்காக போராட்டம், By dn, சென்னை First Published : 15 January 2015 04:47 AM IST

[8] The Hindu, “The writer is dead”,  Wednesday, 14-01-2015, p.7.

[9] http://heronewsonline.com/novel-controversy/

[10] http://heronewsonline.com/periyaar/

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6733122.ece

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.

ஏப்ரல் 20, 2013

சட்டத்தை மீறும் நீதிகள்

இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.

இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].

ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…

View original post 576 more words

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

சோனியா ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது ஏன்?

ஜூலை 30, 2010

சோனியா ரகசியமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது ஏன்?

ஒருவேளை, இன்றுதான் தமிழ் நாளிதழில் சோனியாவின் அமெரிக்கப் பயணத்தைப் பற்றிய செய்தி வருகிறது எனலாம். இன்றைய – 03-08-2010 செவ்வாய் கிழமை – தினமலரில் வந்துள்ள செய்தி:

தினமலர், பாட்டியை பார்க்கச் சென்று நாடு திரும்பிய ராகுல்,

ஆகஸ்ட் 03, 2010                                                 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=53390

பாட்டியை பார்க்கச் சென்று நாடு திரும்பிய ராகுல், புதுடில்லி ஆகஸ்ட் 03,2010,: உடல் நலம் இல்லாமல் இருக்கும் பாட்டியை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ராகுல், நாடு திரும்பி விட்டார். அவரின் தாயார் சோனியா இரண்டு நாட்கள் கழித்து வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் துவங்கியது. அது முதல் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரின் மகனும், காங்கிரஸ் பொதுச் செயலருமான ராகுலும் சபைக்கு வரவில்லை. அவர்கள் கலந்து கொள்வதாக இருந்த கூட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. இதனால், சோனியாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என, யூகங்கள் வெளியாகின. ஆனால், அது தவறு என்பது பின்னர் தெரியவந்தது. அமெரிக்காவில் உடல் நலம் இல்லாமல் இருக்கும் தன் தாய் மெய்னோவை பார்க்க சோனியாவும்,  அவருடன் பாட்டியை பார்க்க ராகுலும் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. 80 வயதான மெய்னோ, முதுமையால் ஏற்படும் நோயால் அவதிப்பட்டு வருகிறார். பாட்டியை பார்க்கச் சென்ற ராகுல், டில்லி திரும்பி  விட்டார். அவர்  திங்கள் – 02-08-2020 – அன்று பார்லிமென்ட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதேநேரத்தில், சோனியா இன்னும் நாடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கழித்து (புதன் / வியாழன்?) அவர் வரலாம் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா ரகசியமான அமெரிக்க விஜயம்: பௌலோ மெய்னோ (Paola Maino), சோனியா மெய்னோவின் தாயார் சுகவீனத்தால் நியூயார்க் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், சோனியா தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார்[1]. இதுதான், அவர்கள் பார்லிமென்டிற்கு வராததன் ரகசியம். 80 களில் உள்ள அவர் வயதான காரணங்களுக்காகவும், உடலில் மற்ற பிரச்சைனைகள் உள்ளதற்காகவும் அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்[2].

http://www.thefinancialexpress-bd.com/more.php?news_id=107749&date=2010-08-01

  1. Sonia Gandhi and son Rahul rushed to the US to visit Sonia’s ailing mother Paola Maino who is undergoing treatment at a hospital – அமெரிக்காவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவரும் தாயாரைப் பார்க்க சோனியா அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
  2. The other version is she did not go to US but to Italy where her mother is under treatment – அமெரிக்காவிற்குச் செல்லவில்லை, இத்தாலிக்குத்தான் சென்றுள்ளார். அங்குதான், அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
  3. Ms. Paola spent quite a bit of time with her daughter Sonia in the Indian capital – தில்லியிலேயே பௌலோ மெய்னோ தனது மகளுடன் நேரத்தை கழித்துள்ளார் (அப்படியென்றால், பிறகு என்ன செய்தார்?).

சோனியா மெய்னோ தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள், குறிப்பாக, ராஜிவ் காந்தியை சந்தித்ததற்கு முந்தைய விவகாரங்களை மறைக்க முயல்வதேன்?: சோனியா மெய்னோ தனது குடும்பத்தைப் பற்றிய விவரங்கள், குறிப்பாக, ராஜிவ் காந்தியை சந்தித்ததற்கு முந்தைய விவகாரங்கள் இந்தியர்களுக்குத் தெரியக்கூடாது என்று அதிஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார். ஒருதடவை, ஒரு ஆங்கில டிவி-செனல்-நிருபர் சோனியாவின் ஊருக்குச் சென்று (Orbassano, near Turin in Italy) சிலரை பேட்டிக் கண்டு, சோனியாவின் வீட்டைக் காண்பித்தபோது, அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டராம்[3].

காங்கிரஸ், ஊடகங்களின் மௌனம்: ஆனால், இதைப் பற்றிய விவரங்கள் பத்திரிக்கைகளுக்கு வரவிடாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சோனியா மெய்னோ ஆணையிட்டுள்ளதால், அவரின் உண்மையான விசுவாசிகள் அவ்வாறே பலவழிகளிலும் மக்களை திசைத் திருப்ப முற்பட்டுள்ளனர். பல தேசிய நாளிதழ்கள் மற்ற விஷயங்களில் அளவிற்கு அதிகமாக செய்திகளை அள்ளீவீசும் போது, இப்பொழுது அமைதி காக்கின்றன. அமுக்கி வாசிக்கும் நாளிதழ்கள் ஒருவரி செய்திகளோடு நின்றுகொண்டுள்ளன[4].

மணீஸ் திவாரியின் நாடகம்: மணீஸ் திவாரி அதனால் தான், காங்கிரஸ் கொரடா அனைவரும் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. ஆகையால், அவர்கள் கலந்து கொள்ளாதது தவறுதான், இருப்பினும் அவ்வாறு செய்துள்ளது, இதைவிட முக்கியமான, வேறொரு விஷயம் இருந்திருக்க வேண்டும்”, என்று வழக்கமாக NDTV, TIMES-NOW, Headlines-Today, X தொலைக்காட்சிகளுக்கு விளக்கம் அளித்து மழுப்பிவிட்டார். ஊடகங்களும், “எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் ரகளை” என்று பாட்டுப்பாடிக் கொண்டு வருகின்றன.

“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது– என்ற புத்தகத்தை இந்தியாவில் வெளிவிடப்படப்போகிறது என்றதும், கொதித்துவ்ட்டார் சோனியா மெய்னோ! ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். அனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்!

சோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது[5]: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்[6].

சோனியா மெய்னோ குடும்பத்தினரின் புகைப்படங்களை, இங்கே பார்க்கவும்:

http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2010/01/02/லட்சத்தீவுகளை-மறக்காத-சோ/


[1] PranabDhalSamanta , Her mother ill, Sonia flies to US with Rahul, Posted: Fri Jul 30 2010, 03:09 hrs, http://www.indianexpress.com/news/Her-mother-ill–Sonia-flies-to-US-with-Rahul/653776

[2] Sonia-Rahul in US on personal visit, http://english.samaylive.com/nation/676470101.html

[3] மே, 2004 தேர்தல் வெற்றியின் போது. காங்கிரஸ் ஆணையிட்டதும், அந்த ஒலி-ஒளிபரப்பை அதோடு நிறுத்திக் கொண்டது.

[4] Times of India, Sonia tending to ailing mom in US, TNN, Jul 30, 2010, 10.42pm IST

http://timesofindia.indiatimes.com/india/Sonia-tending-to-ailing-mom-in-US/articleshow/6238676.cms

[5] தினமலர், சோனியா வாழ்க்கை புத்தகம்: தலைவர் மீது வழக்கு? பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:35 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13987

[6] வேதபிரகாஷ், சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?, https://secularsim.wordpress.com/2010/06/03/சோனியா-பற்றிய-புத்தக/

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்!

நவம்பர் 7, 2009

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்ததா? சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்

அயோத்யா ஆப்கானிஸ்தானில் இருந்தது என்ற வதந்தியைப் பரப்ப ஆரம்பித்தது இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ் (Indian History Congress) என்ற மார்க்ஸிஸ்ட்-முஸ்லீம் கூட்டத்தின் திட்டமிட்ட செயல்[1] ஆகும். அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் (Aligarh Muslim University) ஒரு முஸ்லீமை வைத்து அத்தகைய “ஆய்வு கட்டுரை” படிக்கப் பட்டது. ஆனால், எல்லோராலும் அக்கட்டுரை நிராகரிக்கப் பட்டதில்லாமல், கேலிக்குண்டானது.

முன்பு கல்கத்தாவில் நடந்த 51வது மாநாட்டில் 1990 சமரேந்திர நாராயண் ஆர்யா என்பவர் “அயோத்யாவின் சரித்திரத் தன்மை” என்ற கட்டுரை அயோத்யாவை உத்திரபிரதேசத்தில்தான் வைத்து ஆதாரங்களை எடுத்துக் கட்டினார்[2]. அப்பொது அமைதியாக அக்கட்டுரை ஏற்றுக் கொள்லப் பட்டது அல்லாமல், பதிப்பிக்கவும் பட்டது. ஆனால், எந்த ஊடகமும் அதைப் பற்றி சொல்லவில்லை!

“சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு: இதனால், 1997ல் ஸ்யாம் நாராயண் பாண்டே என்பவரை வைத்து 58வது கூட்டத்தில் “சரித்திர ராமரும், கடவுள் ராமரும்” வேறு (“Historical Rama distinguished from God Rama”) என்று எடுத்துக் காட்டி கட்டுரை வாசிக்க வைக்கப்பட்டது. சரித்திர ராமர் என்று பார்த்தால், இப்பொழுதுள்ள அயோத்தி 800 B.C. காலத்திற்கு முன்பு செல்லாது. ஆனால் சரித்திர ராமரின் அயோத்யா, ஆப்கானிஸ்தானிலுள்ள ஹீரத் என்ற நகரத்திற்கு அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில் இருந்தது. “ஹரி ருத்” என்பதுதான் ஹரயு > சரயு என்றாகியது. ராமர் இறந்தபிறகு அந்நகரம் அழிக்கப்பட்டது. பிறகு காஸி அல்லது குஸிலவஸ் இன மக்களால் குஸக் என்ற பெயரில் ஒரு நகரம் கட்டப்பட்டது. அதுதான் பிறகு குஸ என்று ராமரின் மகனின் பெயரில் விளங்கியது. அந்த காலங்களில் காஸி மற்றும் அயோத்யா என்பது ஒரே இடத்தைக் குறிக்கும்.

ஆகவே பாணினி மற்றும் ரிக்வேதம், மற்ற ஆசிரியர்களின் கருத்தின் [பி. சி. லா, ஏ. எஸ். அட்லேகர், ஏ. எல். பாஷம், கே. எஸ். குலிஸ் முதலியவர்கள்] படி சரித்திர ரீதியில் ராமர் என்பவர் ஆப்கானிஸ்தானத்தில் இருந்தார். ஆகவே சரித்திர ராமரைத் தேடவேண்டுமானால் இந்தியாவின் வடகிழக்கே அருகில் “ஹரி ருத்” என்ற நதிக்கரையில்தான் கண்டுபிடிக்க வேண்டும். அவருடைய கருத்தை ஆமோதித்த ஆர். எஸ். சர்மா என்ற பிரபல சரித்திர ஆசிரியர், “ராமர் அயோத்யாவில் பிறக்கவில்லை என்று சொல்லமுடியாது”., என்றும் நக்கலாகச் சொன்னார்!

பாண்டே பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் நிருபரிடத்தில் பேசுகையில்[3], “மனத்தளவில் நினைக்கின்ற ராமர் காலத்தால் மிகவும் முந்தையவர். எப்படி புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்களோ, நாமும் அந்த உன்மைகளை கவனிக்கும்போது, ராமர் உத்திரபிரதேசத்தில் அயோத்யாவில்தான் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது”, என்றார்!

1999ல் ராஜேஸ் கொச்சார்[4] என்ற நட்சத்திர-பௌதிகவியல் விஞ்ஞானி (Astro-physicist), ஆனால் மார்க்ஸீய சித்தாந்தவாதியும், பாப்ரி முஸ்லீம்களை ஆதரிக்கும் கூட்டத்தில் இருப்பதால், மறைமுகமாக ரிக்வேதம் ஆப்கானிஸ்தானில்தான் இயற்றப்பட்டது. வேதகாலத்திற்கு முற்பட்ட மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, அது ஏன் அவ்வளவு தொலைவில் இருந்தது என்றும் கேட்கவில்லை? அதாவது அயோத்யா ஆப்கானிஸ்தானத்திலேயே இருந்திருந்தால், அவன் ஏன் அங்கிருந்தே அங்கு செல்லவேண்டும்?  ஆனால் கொச்சார் கேட்பது, வேறுவழியில் அதாவது வடமேற்கில் இருந்ததால், கங்கைக்கரையின்மீது தேடவேண்டியதில்லை[5]. மேலும் லாஹூர் என்ற லவ்-பூர், ராமனுடைய மகனைக் குறிக்கிறது[6]. அதுவும் வடமேற்கில்தான் உள்ளது!

இதிலிருந்து அறியப்படும் / பெறப்படும் விஷயங்கள்:

    அயோத்யா ஆப்கானிஸ்தானத்தில் தான் இருந்தது என்றால் பிரச்சினையே இல்லையே. பிறகு எதற்கு “”சர்ச்சையில் இருந்த கட்டிடம்” / “பாப்ரி மஸ்ஜித்” இடிக்கப்பட்டது என்றெல்லாம் கலாட்டா செய்யவேண்டும்.
    இது கூடவா பாபருக்குத் தெரியவில்லை. தனது ஊருக்குப் பக்கத்தில் உள்ளதை விட்டு விட்டு பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வந்து உத்திரபிரதேசத்தில் உள்ள “அயோத்யாவிலுள்ள” ராமர் கோவிலை இடிக்கவேண்டும்? அதாவது மாந்ததா என்ற அயோத்யாவின் அரசன் த்ருஹ்யுஸ் என்பவர்களை அடக்க ஆப்கானிஸ்தானிற்கு சென்றபோது, எப்படி அவன் அதிக தூரம் செல்லவேண்டியடில்லையோ, அதுபோல! ஆனால், பாபர் வந்தது இந்தியாவிற்குதான். கோவிலை இடித்தது உபியில் – அயோத்யாவில் இருந்த கோவிலைத்தான்!
    மொஹ்ஹம்மது கஜ்னிவிற்கு அல்-லத் சோமநாதபுரத்தில்தான் உள்ளது என்றறிந்து, அங்கு வந்து அதை இடித்து, தானும் முந்தைய முஹ்ஹம்மதுவை (PBCH) போன்றவனே[7] என்று நிரூபித்தான்! அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா என்பவை (Al-Lat Al-Manat, and Al-Uzzaa) “அல்லாவின் மகள்கள்” என்று குரான் குறிப்பிடுகின்றது[8].
    ஆகவே பாபரைவிட சிறந்த சாட்சி உலகத்தில் இருக்கமுடியாது! பாபர்நாமாவே அதனை ஒப்புக் கொள்கின்றது. அதனால்தான் முஸ்லீம்கள் குறிப்பாக அந்த பக்கங்கள் காணவில்லை என்கின்றனர் போலும்! ஆகவே கருணாநிதியோ, கமலஹாஸனோ பாபரை மிஞ்சமுடியாது!
    பாப்ரி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதி மன்றத்திற்கு முன்பு கொடுத்த அத்தாட்சிகளிலோ, ஆவணங்களிலேயோ இந்த விவரத்தைச் சொல்லவில்லை. அதாவது, அவர்களுக்கு அப்படி அந்த உண்மை தெரிந்திருந்தால் சொல்லியிருப்பார்கள்.
    ஆர். எஸ். சர்மா இங்கு 1997ல் அமோதிக்கிறார். ஆனால், மற்றொரு இடத்தில்[9] 2001ல் எழுதும்போது, “அகழ்வாய்வு ரீதியில் 500 BCE வரை அயோத்யாவில் எந்த அத்தாட்சியும் கிடைக்காததால், அதனை ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான் மற்றும் பலியா, முங்கர் முதலிய மாவட்டங்களில் இருக்கும் என்று தேடுகின்றனர்” ஆகவே, இவர்கள் எப்படியெல்லாம் மாற்றி-மாற்றி பேசுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும்.
    அதாவது சித்தாந்தரீதியில் இந்துக்களுக்கு எதிராக பேசினால் தங்களுக்கு “செக்யூலரிஸ”ப் பட்டம் கிடைக்கும் என்று இங்கு இப்படி பேசுவது, மேலைநாட்டு புத்தகத்தில் தமது கட்டுரை வரவேண்டும் என்றால், அகழ்வாய்வைப் பிடித்துக் கொள்வது. இதில் என்னவேடிக்கை என்றால், அதே புத்தகத்தில் பி.பி.லால் தனது கட்டுரையில் அயோத்யாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்[10]. ஆனால் அவரது கட்டுரை, இவர்களுக்கு சாதகமாக இல்லாததனால், அதைப் பற்றி சொல்வதில்லை. ASIயின் 2003 அறிக்கையின்படி அகழ்வாய்வு அத்தாட்சிகள் 1000 BCE வரை செல்கின்றன.
    ஆகவே, முன்பு ஸ்யாம் நாராயண் பாண்டே, கொச்சார், முதலியோர் அயோத்யா அத்தாட்சிகள் 800 B.C. முன்பாகச் செல்லாது என்ற கருத்த மாற்றிக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களும் தமது தவறை உணர்ந்து மௌனிகளாக இருக்கின்றனர். ஆனால், ஊடகங்கள் கிளப்பிய பொய் பிரச்சாரம், அரசியல்வாதிகள் உளறியது அப்படியே உள்ளன. ஆகையால்தான், கமலஹாஸன் இன்றும் உளறுகிறார், பிதற்றுகிறார் முகமதியர் முன்பு!
    பிரபலமான கமலஹாஸன் அவ்வாறு உளருவதாலும், முதல்வர் கருணாநிதி பிதற்றுவதாலும் ஊதகங்கள் தாராளமாக அசற்றை பரப்புகின்றன. ஆனால், அவை தவறு என்று எடுத்துக் காட்டும்போது, அவ்வாறான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே, மறுபடியும் கமலஹாஸன் சொன்னார், கருணாநிதி சொன்னார் என்று கிளம்பிவிடுவர்!

10. 10. “புத்தர் தாம் முன்பு 16வது ஜென்மத்தில் ராமராக இருந்தார் என்றும், அதுபோலவே கிருஸ்த்துவின் வம்சாவளியில் ராமர் இருக்கிறார் என்று ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்கள் சொல்கிறார்கள்”, என்கிறாரே, இதை சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

11. 11. கௌசல்யாவைப் போல அவர்களது அம்மாக்களையும் அவ்வாறே அனுப்பிவைத்தார்களா, என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா?

சரித்திரத்தில் கூத்தாடி கும்பல் செய்யும் குழப்பங்கள்: முன்பு எம்ஜியாரை கூத்தாடி, கூத்தாடிக்காரன் என்றே கருணாநிது செல்லமாக சொல்லுவார். அதாவது சினிமாகாரர்களை அப்போது அவ்வாறு சொல்வது வழக்கம். ஆகையால், இப்போதும் அவ்வாறு சொல்வது பொருந்தும் போல இருக்கிறது. சினிமா / அரசியல் என்றால் அதோடு இருக்கவேண்டும், ஆனால், அதிகபிரசங்கித் தனமாக எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு, குறிப்பாக இந்துக்களை தாக்குவது, தூஷிப்பது என்றால் முன்னே வந்து செய்வது, அதுவும், முகமதியர் முன்பு செய்வது என்றெல்லாம் ஏதோ தமக்கே உரிய லட்சணங்கள் என்பது போல இவர்கள் செய்து வருகிறார்கள். ஆகவே, இந்த கூத்தாடிகள், இனிமேல், முழுவதுமாக படித்து விட்டு உளரவேண்டும் அல்லது யாராவது முழுவதும் தெரிந்தவர்களிடம் உரு வார்த்தைக் கேட்டுக் கொண்டு உளரவேண்டும். இல்லையென்றால், நிச்சயம், ஒரு நாள் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். பொய்-மேல்-பொய் சொல்லி ஆடுகின்ற ஆட்டமில்லை கோசலையைப் பற்றி அவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தால், எந்த ராஜலட்சுமியும், அஞ்சுகமும் பொறுக்கமாட்டார்கள்.


[1] 1987லிருந்து தொடர்ச்சியாக மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரைகள் வாசிக்கும் ஆயுட்கால அங்கத்தினர்களிடமிருந்து சேகரித்த தகவல்கள் மற்றும் Proceedings of the Indian History Congress புத்தகங்களை பார்த்து தொகுத்த விவரங்கள்.

 

2 Samarendra Narain Arya, Historicity of Ayodhya, Proceedings of the Indian History Congress, 51st session, Calcutta, 1990, pp. 44-49.

[3] http://www.indianexpress.com/ie/daily/19971120/32450403.html

[4] Rajesh Kochhar, The Vedic People, Their History and Geography, Orient Longman, Delhi 1999.

[5] Ibid, p.209.

[6] Ibid, p.210.

[7] அதாவது முஹ்ஹம்மத் காபாவைத் தவிர, சுற்றியிருந்த 360 விக்கிரங்களை இடித்து போட்டார். பிறகு அரேபியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காபா விக்கிரத்தை விட்டுவைத்தார்!

[8] Koran, Surah:53.19

[9] Robert Layton, Julian Thomas, Peter G. Stone (Eds.), Destruction and conservation of cultural property, Routleg Taylor & Francis group, 2001, USA, p.127.

இதில் மற்ற கட்டுரைகளும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்கின்றன. எல்லோருமே அயோத்யாவை உபியில்தான் வைக்கின்றனர்.

[10] B. B. Lal, A note on the excavations at Ayodhya with reference to the Mandir-masjid issue, in Destruction and conservation of cultural property, as mentioned above, pp.117-120.